Wednesday 30 May 2018

The Jainism and Valli Malai, Vellore District, Tamil Nadu.

27th May 2018.
After Visiting Thirupanmalai, we headed towards Valli Malai. Even-though I had been to this hill temple earlier for Sri Murugan's darshan, this  visit was exclusively planned to see the Jain cave with Tirthankaras, after I took some interest on learning Jainism. The hill has two routes to climb. But normally the Jain Cave route will be used for descending the Hill by very few people. On Climbing the hill we had taken the regular route used by majority of people.

 Mahavir

After darshan  of Sri Murugan on the top of the hill, started climbing down on the side Jain's cave route. Noticed that the route branched in to two of which, one towards Sri Sachidananda Swamigal Ashram and the other  to the base via Jain caves.  Since I had not visited the Ashram earlier, visited this time.  Then I, took the  steps towards Jain’s cave. The cave is about 150 steps  from the base of the hill. If any body wishes to see the Jain cave alone must take this steps.

 Tirthankaras with Devasena the disciple of Bavanandhi

திருபான்மலை ஏற்றத்திற்க்குப் பிறகு எங்கள் அடுத்த பயணம் வள்ளி மலையை நோக்கி. காட்பாடி வழியாக செல்லாமல், ராணிப்பேட்டை மேல்பாடி வழியாக சென்றோம். வள்ளி மலை ஸ்ரீமுருகன் தரிசனத்திற்காக முன்பே சென்று வந்து இருந்தாலும், சமண மதத்தைப் பற்றி மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் மேற் கொண்டதுதான் இப்பயணம். வள்ளி மலைக்கு இரண்டு வழிகளில் செல்லலாம். பெரும்பாலன மக்கள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஒரு வழியை மட்டுமே பயன்படுத்துகின்றனர். மற்றொன்று சமணர் குகை வழியாக மேலிருந்து கீழே இறங்குகின்றது. 

ஸ்ரீமுருகன் தரிசனத்திற்குப் பின்பு சமணர் குகை வழியாகச் செல்லும் படிகள் வழியாக இறங்கினேன். ஓரிடத்தில் பாதை இரண்டாகப் பிரிந்து ஒருபாதை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகளின் ஆசிரமத்தை நோக்கியும் மற்றொரு பாதை சமணர் குகை வழியாக கீழ் நோக்கியும் இறங்குகின்றது. சென்ற முறை வந்த பொழுது, ஆசிரமம் செல்லாததால் இம்முறை சென்று வந்தேன். சமணர் குகை மலையின் அடிவாரத்தில் இருந்து சுமார் 150 படிகள் தான். சமணர் குகையை மட்டும் காண விரும்புபவர்கள் மலை அடிவாரத்தில் இருந்து இப்பதையை உபயோகிப்பதே சாலச் சிறந்தது.
     
JAIN CAVE, TIRTHANKARAS AND JAIN BEDS
This natural cave has the Jain’s beds and Tirthankaras images. There are three group of images carved at two levels. On the upper level, a group of 5 Tirthankaras  in a row are carved on the face of the inner cave with the inscriptions. These inscriptions speaks about the persons who had  contributed for this carving. Out of 5 Tirthankaras, the centre Tirthankara is carved little above the other four with Mukkudai.  The other two groups are on the lower level. In one group of the lower level, there are  Two similar Tirthankaras with lion symbol on the base & samaratharis, most probably both are Mahavir. Mukkudai are not projecting and shown like lines. In the other group there are two Parshvanath bas reliefs in sitting posture, Two Tirthankaras with mukkudai and Devasena, the disciple of Bhavanandhi, who was the Jain spiritual Guru to Bana King. These images are carved by another  Jain spiritual guru Arya Nandi.

As per the inscriptions these Tirthankara images are  done during  early Ganga and Bana Kings period.  The King Ganga Rajamallan ( 816 – 843 CE ) was responsible for  carving some of the  bas-reliefs and beds, who was the great grand son of Ganga Sivamaran  ( 679- 725 CE ),  grand son of Sri Purushan (725- 788 CE )  and son of Rana Vikrama.

 Pallava period inscriptions

It was told that the famous Jain monk Ajjanadhi also Visited this learning center/ school.  As per hearsay,  the hill was called as Palli Malai and latter turned to Valli malai connecting Sri Valli and Sri Murugan of Hindu gods. Also it was told that the existing Murugan shrine belongs to jain Gods.

சமணர் குகை ஒரு இயற்கையாக அமைந்த தங்குமிடம் ஆகும். இதில் கங்கர் மற்றும் பாணர் காலத்தில் வெட்டப்பட்ட சமணர் படுக்கைகளும் தீர்த்தங்கரர் புடைப்பு சிற்பங்களும் உள்ளன. தீர்த்தங்கரர் புடைசிற்பங்கள் இரு நிலைகளில் மூன்று தொகுதியாக வெட்டப்பட்டுள்ளன. மேல் நிலை, குகையின் உள் முகப்பில் 5 தீர்த்தங்கரர் புடைசிற்பங்கள் ஒரே வரிசையில் செதுக்கப்பட்டுள்ளன. அதில் நடுவில் இருப்பவர் மட்டும் முக்குடையுடன் சற்று உயர்ந்த இடத்தில் காணப்படுகின்றார். அதன் கீழ் அந்த சிற்பங்களை வெட்டு வித்தவரின் பெயர்கள் கல்வெட்டாக வெட்டப்பட்டு உள்ளது. கீழ் நிலையின் ஒரு தொகுதியில் இரண்டு ஒரே மாதிரியான தீர்த்தங்கரர்கள் புடைப்பு சிற்பங்களாக வடிக்கப்பட்டு உள்ளன. கீழே சிம்மாசனத்தில் சிங்கம் லாஞ்சனம் இருப்பதால் இவர்களை மஹாவீரர் எனக்கொள்ளலாம். முக்குடை கீரலாகவும் சாமரதாரிகளும் காட்டப்பட்டு உள்ளனர். மூன்றாவது தொகுதியில் இரண்டு பார்சுவநாதர் சிற்பங்கள் அமர்ந்த நிலையிலும், இரு தீர்தங்கரர்கள் முக்குடையுடனும, மற்றும் பாண அரசரின் மத குருவான பவநந்தி அடிகளின் மாணவி தேவசேனாவின் புடை சிற்பங்களும் செதுக்கப்பட்டு உள்ளன. இந்த புடைப்பு சிற்பம் சமணத்துறவி ஆர்யநந்தியால் வெட்டுவிக்கப்பட்டது என கல்வெட்டு மூலம் அறியப்படுகின்றது

கல் படுக்கைகளும், புடைப்புசிற்பங்களும்  அரசன் கங்க ராஜமல்லன் ( 816 – 843 கிபி) காலத்தில் வெட்டப்பட்டன என கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகின்றது. மேலும் கல்வெட்டு வாசகங்கள் ராஜமல்லன், கங்க சிவமாறனின்  ( 679 – 725 கிபி ) கொள்ளுப்பேரனும், ஸ்ரீபுருசனின் (725 – 788 கிபி ) பேரனும், ரன விக்ரமனின் மகனுமாவான் என்பதையும் தெரிவிக்கின்றது.

சமண மதத்தின் முக்கிய துறவிகளுள் ஒருவரான அஜ்ஜ நந்தி இங்கு செயல் பட்டு வந்த கல்விக்கூடத்திற்கு வந்ததாக தகவல். மேலும் இந்த சமணப்பள்ளியின் பெயராலேயே இம்மலை பள்ளி மலை என அழைக்கப்பட்டதாகவும் பிற்காலத்தில் சமணர் குகையில் முருகன் சிலையை நிறுவிய பின்பு வள்ளி முருகன் திருமணத்தைப் பின்னனியாகக் கொண்டு இம்மலை வள்ளி மலையாக பெயர் மாற்றம் அடைந்தது என்பதும் ஒரு செவி வழி செய்தி.

LOCATION: CLICK HERE



 The Upper level Tirthankaras
 Jains beds 

---OM SHIVAYA NAMA---

9 comments:

  1. உங்கள் கூற்று சரியே.மலை மேல் உள்ள முருகர் பின் புறம்,தலைக்கு மேல் தீர்த்தங்கரர் கல் சிற்பம் காணலாம்

    ReplyDelete
  2. அருமையானதொரு பதிவு, நேரில் சென்று பார்த்தது போன்றதொரு விளக்கம். எனக்கு ஒரேயொரு ஐயம் மட்டும்.. இந்தக் கல்வெட்டில் சமணர்படுக்கைகள் பற்றிய குறிப்பு உள்ளதா? சமணர் படுக்கை காலத்தால் பழையது என்றும்,
    பின்னர் கற்படுக்கையின் அருகே கங்க ராஜமல்லன் ( 816 – 843 கிபி) காலத்தில் கல்வெட்டுச் செய்தி வெட்டப்பட்டுள்ளதோ? என்ற ஐயம் எனக்கு.

    ReplyDelete
    Replies
    1. இருக்கலம் ஐய்யா... கல்படுக்கைகள் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் இருந்தாலும் கல்வெட்டுக்கள் பிற்காலத்தையாக இருக்கலாம்..

      Delete
  3. கல்வெட்டு வாசிக்கக் கிடைக்குமா? அன்புடன் கல்வெட்டின் வாசகங்களைப் பதிவு செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ASI, வெளியிட்டு உள்ளது என்று கூறுகின்றனர்.. தேடிக்கொண்டு இருக்கின்றேன். கிடைத்த உடன் தங்களுக்கும் பகிர்கின்றேன்..

      Delete