Thursday, 31 May 2018

The Jainism and Valli Malai, Vellore District, Tamil Nadu.

27th May 2018.
During my visit to the Jain cave at Valli Malai, when I asked about another Jain Tirthankaras sculptures place on the same hill  to a Sadhu. He directed us to this hill after crossing the cremation ground and we couldn’t find the hill and right path to trek. Ventured twice in to the forest and climbed up to the top of the hill, to our bad luck, we couldn’t locate the cave with Tirthankaras.  When we are about to loose our hope, decided to get help from the local herder.  Mr Ramesh picked up a herder near the temple and he showed us the steps cut on the rock.

Since Mr Ramesh couldn’t climb, I started my trekking alone. Throughout the trekking route arrow marks are painted. The route was steep on some places and found difficult to trek on the pathless route. Finally reached the 3/4th of the hill where the Tirthankaras  bas-reliefs are carved. Amazing.. couldn't believe my eyes, such a wonderful carvings.. wow.. An unforgettable day in my life...Thrilled to see the Yakshi, Mahavir, Parshvanath and Tirthankaras in three groups.  Since the carved places are not easily accessible by the human beings, the bas-reliefs are found in excellent condition even after 1200 years.


A group of three bas-reliefs are carved  on a rock facing east. In the first group bas-relief  an  Yakshi is shown sitting in sukhasana under a tree with samaratharis on both sides. The samarathari on the left side was found damaged.   In the Middle group bas-relief  Mahavir with Yakshan, Yakshi, Samaratharis and devars / angels are shown.   In the third group bas-relief, Parshvanath is standing at the centre, 4 Tirthankaras are shown on both sides. And on the top two devas with garlands are shown.  On the south side there is a Mahavir bas- relief and a miniature bas-relief of Parshvanath are carved.  In side the cave there are beds and bas-relief of Pon Iyaki / Yakshi very much similar to the Yakshi of Thirupanmalai. 

 Yakshi

The beds are carved in the natural cave and a herbal grinding pit also found near the east entrance of the cave. The cave was encroached by the miscreants and damaged the beds 
partially by erecting a wall on the east & west. This cave is not under the care of either Central or State Archaeological department. If due care is taken it may helpful for the future generations to know the Jainism and their culture.

 Parshvanath, Tirthankaras and Devas

LOCATION:CLICK HERE  
  
வள்ளி மலையின் கீழ் நிலையில் இருந்த சமண தீர்தங்கரர் புடைப்பு சிற்பங்களையும், சமனர் படுக்கைகளையும் கண்ட பின்பு, அங்கு இருந்த ஒரு சாதுவிடம், இதுபோல சமணர் குகையும் சமனர் சிற்பங்களும் இதே மலையில் வேறு எங்காவது இருக்கின்றதா என்ற என் வினாவிற்க்கு விடையாக இதே மலையில் சுடு காட்டைத்தாண்டி உள்ள மலைமீது உள்ளது என்று கூறினார். நானும் ரமேசும் இரன்டு முறை தேடி மலை உச்சிவரை சென்று ஏமாற்றத்துடனே திரும்பினோம். சரி இன்றைய இப்பயணத்தை இத்துடன் முடித்துக்கொள்ள வேண்டியது தான் என்று முடிவுக்கு வந்தோம். ஆனாலும் வலைத்தளத்தில் வேலூர் வரலாற்று குழுவின் பதிவில் கண்ட தீர்த்தங்கரர் சிற்பங்கள் மனதை உறுத்திகொண்டே இருந்தது. காணாமல் செல்ல மனமும் ஒப்பவில்லை. கடைசியாக ஆடு மாடு மேய்பவர்கள் மூலமாக வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கோவிலின் அருகில் இருந்த இடையர் ஒருவரை அணுகி வழி கோர, அவர் கருணையுடன் வந்து  வழி காட்ட, நன்றி தெரிவித்து விட்டு நான் மட்டும் மீண்டும் மாலை ஏறத் தொடங்கினேன்.

மலையின் உச்சிவரை சுண்ணாம்பால் அம்புக்குறி வரையப்பட்டு இருந்தது. பாறை சில இடங்களில் செங்குத்தாக ஏறுவதற்க்கு சிரமமாகவும் சோதனையாகவும் இருந்தது. மலையின் முக்கால் பகுதியை அடைந்த உடனே நான் கண்ட காட்சி, மேலே ஏறி வந்த சிரமம், பசி, தாகம் அனைத்தையும் மறக்கடிக்கச்செய்தது. ஒரு நிமிடம் அப்படியே  என்னை நகர விடாமல் உறைய வைத்தது. வார்தைகளால் வர்ணிக்க முடியாத கண்கொள்ளாக் காட்சி அது. வாவ்.. அமேசிங்...!!! கண்களையே நம்ப மறுக்கச் செய்த காட்சி எனலாம்.,. என் வாழ்வில் மறக்க முடியாத.. மறக்கக்கூடாத தருணங்களில் இதுவும் ஒன்று....

மூன்று தொகுதி தீர்த்தங்கரர் புடை சிற்பங்கள் செங்குத்தான பாறையில் கிழக்கு நோக்கி செதுக்கப்பட்டு இருந்தது. முதற் தொகுதியில் யக்ஷி ( தரும தேவி ஆக இருக்கலாம் ) மரத்தின் அடியில் சுகாசனத்தில் அமர்ந்த நிலையில் செதுக்கப்படு இருந்தது. இருபுறமும் சாமரதாரிகள் காட்டப்பட்டு இருந்தனர். அடுத்துள்ள சிற்பத்தொகுதியில் மகாவீரர் அமர்ந்த நிலையிலும், இருபுறமும் இயக்கன் இயக்கியரும், சாமரதாரிகளும், மேலே தேவ தூதர்களும் செதுக்கப்பட்டு இருந்தனர். கடைசி சிற்பத்தொகுதியில் நடுவே பார்சுவநாதரும் இருபுறமும் 4 தீர்த்தங்கரர்களும் மேலே இரு தேவர்கள் மாலையுடன் செதுக்கப்பட்டு இருந்தனர். தெற்குப்புற செங்குத்தான பாறையில் மகாவீரர் முக்குடையுடன் அமர்ந்த நிலையிலும், அருகே குறுஞ்சிற்பமாக பார்சுவநாதர் புடை சிற்பமாக செதுக்கப்பட்டு இருந்தது.. இந்த புடைசிற்பங்கள் மனிதர்களால் சுலபமாக அணுகமுடியாத இடத்தில் செதுக்கப்பட்டு இருந்ததால் சுமார் 1200 வருடங்கள் கடந்த பின்பும் மிகவும் நல்ல நிலையிலேயே உள்ளன..

குகையில் யக்ஷி ( தருமதேவியாக இருக்ககூடும் ) அமர்ந்த நிலையில் திருபான் மலையில் கண்டது போலவே செதுக்கப்பட்டு இருந்தது. குகையின் உள்ளே சமண முனிவர்களுக்கு படுக்கைகளும் வெட்டப்பட்டு இருந்தன. 

சமூக விரோதிகளால் குகையின் மேற்கு புறமும், கிழக்குபுறமும் கற்கள்கொண்டு சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. இந்த இடம் சமணர்களும், வரலாற்று ஆர்வளர்களும் அவசியம் காண வேண்டிய ஒன்று. இது யாருடைய பாராமரிப்பிலும் -- மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறை -- இல்லை போலக் காணப்படுகின்றது. இனிமேலாவது பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தால் வரும் சந்ததியினர் நமது சமண மத பாரம்பரிய சின்னங்களை அறிந்துகொள்ள ஏதுவாகும்.
  
 Mahavir with Yakshan, Yakshi, samaratharis and Devas 
 Mahavir 
 Parshvanath
 Yakshi
 Beds  

 herbal  Grinding pit  




--- OM SHIVAYA NAMA--- 

Wednesday, 30 May 2018

The Jainism and Valli Malai, Vellore District, Tamil Nadu.

27th May 2018.
After Visiting Thirupanmalai, we headed towards Valli Malai. Even-though I had been to this hill temple earlier for Sri Murugan's darshan, this  visit was exclusively planned to see the Jain cave with Tirthankaras, after I took some interest on learning Jainism. The hill has two routes to climb. But normally the Jain Cave route will be used for descending the Hill by very few people. On Climbing the hill we had taken the regular route used by majority of people.

 Mahavir

After darshan  of Sri Murugan on the top of the hill, started climbing down on the side Jain's cave route. Noticed that the route branched in to two of which, one towards Sri Sachidananda Swamigal Ashram and the other  to the base via Jain caves.  Since I had not visited the Ashram earlier, visited this time.  Then I, took the  steps towards Jain’s cave. The cave is about 150 steps  from the base of the hill. If any body wishes to see the Jain cave alone must take this steps.

 Tirthankaras with Devasena the disciple of Bavanandhi

திருபான்மலை ஏற்றத்திற்க்குப் பிறகு எங்கள் அடுத்த பயணம் வள்ளி மலையை நோக்கி. காட்பாடி வழியாக செல்லாமல், ராணிப்பேட்டை மேல்பாடி வழியாக சென்றோம். வள்ளி மலை ஸ்ரீமுருகன் தரிசனத்திற்காக முன்பே சென்று வந்து இருந்தாலும், சமண மதத்தைப் பற்றி மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் மேற் கொண்டதுதான் இப்பயணம். வள்ளி மலைக்கு இரண்டு வழிகளில் செல்லலாம். பெரும்பாலன மக்கள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஒரு வழியை மட்டுமே பயன்படுத்துகின்றனர். மற்றொன்று சமணர் குகை வழியாக மேலிருந்து கீழே இறங்குகின்றது. 

ஸ்ரீமுருகன் தரிசனத்திற்குப் பின்பு சமணர் குகை வழியாகச் செல்லும் படிகள் வழியாக இறங்கினேன். ஓரிடத்தில் பாதை இரண்டாகப் பிரிந்து ஒருபாதை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகளின் ஆசிரமத்தை நோக்கியும் மற்றொரு பாதை சமணர் குகை வழியாக கீழ் நோக்கியும் இறங்குகின்றது. சென்ற முறை வந்த பொழுது, ஆசிரமம் செல்லாததால் இம்முறை சென்று வந்தேன். சமணர் குகை மலையின் அடிவாரத்தில் இருந்து சுமார் 150 படிகள் தான். சமணர் குகையை மட்டும் காண விரும்புபவர்கள் மலை அடிவாரத்தில் இருந்து இப்பதையை உபயோகிப்பதே சாலச் சிறந்தது.
     
JAIN CAVE, TIRTHANKARAS AND JAIN BEDS
This natural cave has the Jain’s beds and Tirthankaras images. There are three group of images carved at two levels. On the upper level, a group of 5 Tirthankaras  in a row are carved on the face of the inner cave with the inscriptions. These inscriptions speaks about the persons who had  contributed for this carving. Out of 5 Tirthankaras, the centre Tirthankara is carved little above the other four with Mukkudai.  The other two groups are on the lower level. In one group of the lower level, there are  Two similar Tirthankaras with lion symbol on the base & samaratharis, most probably both are Mahavir. Mukkudai are not projecting and shown like lines. In the other group there are two Parshvanath bas reliefs in sitting posture, Two Tirthankaras with mukkudai and Devasena, the disciple of Bhavanandhi, who was the Jain spiritual Guru to Bana King. These images are carved by another  Jain spiritual guru Arya Nandi.

As per the inscriptions these Tirthankara images are  done during  early Ganga and Bana Kings period.  The King Ganga Rajamallan ( 816 – 843 CE ) was responsible for  carving some of the  bas-reliefs and beds, who was the great grand son of Ganga Sivamaran  ( 679- 725 CE ),  grand son of Sri Purushan (725- 788 CE )  and son of Rana Vikrama.

 Pallava period inscriptions

It was told that the famous Jain monk Ajjanadhi also Visited this learning center/ school.  As per hearsay,  the hill was called as Palli Malai and latter turned to Valli malai connecting Sri Valli and Sri Murugan of Hindu gods. Also it was told that the existing Murugan shrine belongs to jain Gods.

சமணர் குகை ஒரு இயற்கையாக அமைந்த தங்குமிடம் ஆகும். இதில் கங்கர் மற்றும் பாணர் காலத்தில் வெட்டப்பட்ட சமணர் படுக்கைகளும் தீர்த்தங்கரர் புடைப்பு சிற்பங்களும் உள்ளன. தீர்த்தங்கரர் புடைசிற்பங்கள் இரு நிலைகளில் மூன்று தொகுதியாக வெட்டப்பட்டுள்ளன. மேல் நிலை, குகையின் உள் முகப்பில் 5 தீர்த்தங்கரர் புடைசிற்பங்கள் ஒரே வரிசையில் செதுக்கப்பட்டுள்ளன. அதில் நடுவில் இருப்பவர் மட்டும் முக்குடையுடன் சற்று உயர்ந்த இடத்தில் காணப்படுகின்றார். அதன் கீழ் அந்த சிற்பங்களை வெட்டு வித்தவரின் பெயர்கள் கல்வெட்டாக வெட்டப்பட்டு உள்ளது. கீழ் நிலையின் ஒரு தொகுதியில் இரண்டு ஒரே மாதிரியான தீர்த்தங்கரர்கள் புடைப்பு சிற்பங்களாக வடிக்கப்பட்டு உள்ளன. கீழே சிம்மாசனத்தில் சிங்கம் லாஞ்சனம் இருப்பதால் இவர்களை மஹாவீரர் எனக்கொள்ளலாம். முக்குடை கீரலாகவும் சாமரதாரிகளும் காட்டப்பட்டு உள்ளனர். மூன்றாவது தொகுதியில் இரண்டு பார்சுவநாதர் சிற்பங்கள் அமர்ந்த நிலையிலும், இரு தீர்தங்கரர்கள் முக்குடையுடனும, மற்றும் பாண அரசரின் மத குருவான பவநந்தி அடிகளின் மாணவி தேவசேனாவின் புடை சிற்பங்களும் செதுக்கப்பட்டு உள்ளன. இந்த புடைப்பு சிற்பம் சமணத்துறவி ஆர்யநந்தியால் வெட்டுவிக்கப்பட்டது என கல்வெட்டு மூலம் அறியப்படுகின்றது

கல் படுக்கைகளும், புடைப்புசிற்பங்களும்  அரசன் கங்க ராஜமல்லன் ( 816 – 843 கிபி) காலத்தில் வெட்டப்பட்டன என கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகின்றது. மேலும் கல்வெட்டு வாசகங்கள் ராஜமல்லன், கங்க சிவமாறனின்  ( 679 – 725 கிபி ) கொள்ளுப்பேரனும், ஸ்ரீபுருசனின் (725 – 788 கிபி ) பேரனும், ரன விக்ரமனின் மகனுமாவான் என்பதையும் தெரிவிக்கின்றது.

சமண மதத்தின் முக்கிய துறவிகளுள் ஒருவரான அஜ்ஜ நந்தி இங்கு செயல் பட்டு வந்த கல்விக்கூடத்திற்கு வந்ததாக தகவல். மேலும் இந்த சமணப்பள்ளியின் பெயராலேயே இம்மலை பள்ளி மலை என அழைக்கப்பட்டதாகவும் பிற்காலத்தில் சமணர் குகையில் முருகன் சிலையை நிறுவிய பின்பு வள்ளி முருகன் திருமணத்தைப் பின்னனியாகக் கொண்டு இம்மலை வள்ளி மலையாக பெயர் மாற்றம் அடைந்தது என்பதும் ஒரு செவி வழி செய்தி.

LOCATION: CLICK HERE



 The Upper level Tirthankaras
 Jains beds 

---OM SHIVAYA NAMA---

Tuesday, 29 May 2018

The Remains of Jainism Thirupanmalai also called as Panchapandavar malai at Vilapakkam, near Arcot, Ranipet District, Tamil Nadu. NEAR ARCOT, TAMIL NADU

27th May 2018.
When I posted my intention of visiting Vallimalai, on Facebook, Mr Ramesh Krishnamoorthy from Arcot, came to my rescue  and promised me to take to Valli Malai. In addition to that he promised to take a small hill called “Thirupanmalai” at Vilapakkam, near Arcot, with the remains of Jainism and Pallava & Chozha period inscriptions. Considering the trekking of both hills under the scorching sun, we want to finish off before noon. As planned, I was able to reach Arcot around 08.00 hrs from Chennai. Mr Ramesh  first took me to Thirupanmalai at Vilapakkam also called Panchapandavar malai. It is common practice that villagers used to call the rock-cut caves with 5 – 6 cells Panchapandavar caves and the hill Panchapandavar malai. The Thirupanmalai is about 8 km from Arcot and 30 Km from Vellore.

சென்ற வாரம் வள்ளி மலைக்கு செல்லாம் என்று முகநூலில் விருப்பம் தெரிவித்து பதிவிட்டபோது நண்பர் திரு ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி, ஆற்காட்டில் இருந்து கூட்டிச் செல்வதாகக் கூறினார், மேலும் திருபான் மலையில் பல்லவர் மற்றும் சோழர் கால கல்வெட்டுக்களுடன் சமண மத்தின் எச்சங்களையும், ஒரு பல்லவர்கால குடைவரை மண்டபத்தையும் காட்டுவதாகவும் கூறினார். மதியம் ஆக ஆக வெய்யில் அதிகமாகி மலைகள் ஏற சிரமப்பட நேரிடும், என்பதால் மததியத்திற்கு முன்பே இரண்டு மலைகலையும் பார்த்து விடலாம் எனவும் அதற்கு காலை 8 மணிக்குள் ஆற்காடு வந்து விடமாறும் கூறினார். சென்னையில் இருந்து ஆற்காடு அடைந்த உடன், காலையில் முதலில் என்னை திருபான் மலைக்கு அழைத்துச் சென்றார். சாதாரணமாக தமிழ் நாட்டில் 5 அல்லது 6 சன்னதிகளுடன் கூடிய குடைவரைக்குகையை பஞ்சபாண்டவர் கோவில் எனவும் அம்மலையை பஞ்சபாண்டவர் மலை என அழைப்பர். திருபான் மலை ஆற்காட்டில் இருந்து 8 கிமி தொலைவிலும் வேலூரில் இருந்து 30 கிமி தொலைவிலும்.. ஆற்காட்டில் இருந்து கண்ணமங்கலம் சாலையில் உள்ளது. திருபான் மலை உயரம் அதிகம் இல்லாமல், பாறைகளை அடுக்கு வைத்ததைப்போல இருக்கும் ஒருமலை. மலையின் மீது சமணச்சின்னங்களும், குடைவரைக் குகை தரை மட்ட நிலையிலும் உள்ளன.

JAIN’S BAS-RELIEFS & JAIN BEDS
Thirupanmalai consists of two parts. Jain’s monuments are on the top of the hill and a rock-cut cave is on the ground level.  Steps are chiseled on the rock and handrails are erected by the Archaeological Survey of India  (ASI ) to trek to the top. On top of the hill, there are  Jain beds, a standing Tirthankara bas-relief, and an animal (maybe a  Lion). In addition to this, there is a Yakshi’s bas-relief in sitting posture under a tree with 4 people around her, above a natural pond. It is believed that the man standing near Yakshi is Naganadhi, a Jain monk.  From the inscriptions, we may presume that the beds and the reliefs were chiseled during the Pallava period.

From the 8th century Pallava Period inscription, one by the name Naranan, under the Pallava King  Nandhipotharasan, created this Pon Iyaki bas-relief for his guru Naganandhi.  From the 10th century  Rajaraja – I, period inscription, a Jain learning center was functioning on the top of the hill. A gift of “Pallisantham “ was given by the Laadarasan Veera Chozhan of Padavoor Kottathu Perunthimiri nattu Thirupanmalai, who worked under Chozha King  Rajaraja-I. From the word Palli, it is understood that a learning center was functioning here.

After the fall of Jainism in Tamil Nadu,  during the 17th century, the hill was occupied by a Muslin Saint called, Hazrath Syed Sha Meeran vali Baba (rakh), whose Samadhi was built on the Jain beds. The new dargah was also constructed in recent years with the graves of the Saint’s followers. 

பல்லவர் கால சமணத்தீர்தங்கர், சமணர் படுக்கைகள் மற்றும் இயக்கி சிற்பம்
மலைமீது ஏற பாறையில் படிகள் செதுக்கப்பட்டு இரும்பு கைபிடி கம்பிகளுடன் மத்திய தொல்பொருள் துறையால் அமைக்கப்பட்டு இருந்தது. மலை ஏற்றம் அவ்வளவு சிரமாகப்படவில்லை. மலையின் மேல் சிறிய அளவிலான நின்ற நிலையில் உள்ள ஒரு தீர்த்தங்கரர், ஒரு மிருகம் ( சிங்கம் போன்று ) புடைச்சிற்பங்களாகச் காணக்கிடைக்கின்றன. மேலும் குகையில் சில வெட்டுவித்த படுக்கைகளும் காணப்படுகின்றன. அதே இடத்தில் தென்புறமாக இயற்கையாக அமைந்த நீர் நிலையின் மேற்பகுதியில் ஒரு பெண் அமர்ந்த நிலையிலும், அருகே நால்வர் நின்ற நிலையிலும் புடைச்சிற்பமாகச் செதுக்கப்பட்டு உள்ளது. சமணர்கள், தீர்தங்கரர்களுக்கு சேவை செய்த அம்பிகா, பத்மாவதி, சித்தாகியா, சக்கரேசுவரி, ஜூலாமாலினி போன்ற இயக்கியர்களை பெண் தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர். அவற்றுள் ஒரு இயக்கியருக்கான புடைப்பு சிற்பமாக கருதப்படுகின்றது.

புடைசிற்பத்துக்கு மேலே பாறையில் உள்ள 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவர்கால கல்வெட்டின்படி இயக்கிக்கு அருகே நிற்பவர், சமண துறவியான நாகநந்தியாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. பல்லவர் கல்வெட்டு. “நந்திப் போத்தரசற்கு ஐம்பதாவது நாகநந்தி குரவர் இருக்க பொன்னியாக்கியார் படிமம் கொத்துவித்தான் புகழாளை மங்கலத்து மருத்துவன் மகன் நாரணன்”. இதன் படி நந்திப்போத்தரசன் என்ற பல்லவ மன்னன் காலத்தில் நாகநந்தி என்ற குரவருக்காக / துறவிக்காக நாரணன் என்பவன் பொன் இயக்கியை வெட்டுவித்தான் என்று பொருள் கொள்ளலாம்.   தீர்த்தங்கரர் புடைச் சிற்பத்தின் மேலே சோழமன்னன் இராசராசன் பெயர் கொண்டு  ஒரு கல்வெட்டு. வெட்டப்பட்டு உள்ளது. இக்கல்வெட்டு கூறும் செய்தி. படவூர் கோட்டத்து பெருந்திமிரி நாட்டைச் சார்ந்த இந்த திருபான் மலையில் .லாடராசன் வீர சோழன் என்பான் இச்சமணப் பள்ளிக்கு  பள்ளிச்சந்தமாக கொடை கொடுக்கப்பட்டதைக் தெரிவிக்கின்றது. இச்செய்தியின் படி இங்கு ஒரு சமணப் பள்ளியும் கல்வி போதிப்பதற்கு நிறைய சமணத்துறவிகளும்  இங்கு இருந்திருக்க வேண்டும்  என்ற முடிவுக்கு வர முடிகின்றது.

தற்போதைய நிலை: இந்த சமணர் படுக்கைகள் இருந்த ஒரு பகுதியில் சமண மத  வீழ்ச்சிக்குப் பின்பு 17ம் நூற்றான்டில் இம்மலையில் வாழ்ந்த ஹசரத் சையத் ஸா மீரான் வலி பாபா என்ற இஸ்லாம் மத துறவியின் சமாதியும், அவரைச் சார்ந்த சிலரின் சமாதிகளும் இருக்கின்றன. இத்துடன் சமீபத்தில் ஒரு  தர்காவும் கட்டப்பட்டு உள்ளது.

 Tirthankara
 An animal near Tirthankara
 Pon Iyakkai / Yakshi with Naganandhi bas relief

8th CENTURY PALLAVA PERIOD INSCRIPTION
The Nandivarman Pallava’s 5th year rule inscription facing south. The inscription is in 4 lines. (நந்திவர்மனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டின் வாசகம்)

நந்திப் பொத்தரசர்க்கு ஐம்பதாவது நாகணந்தி குரவர்
இருக்க பொன்னி இயக்கி படிமம் கொட்டுவித்தான்
புகழைமங்கலத்து மருத்துவர் மகன் நாரணன்

கல்வெட்டின் பொருள்:
  1. புகழைமங்கலத்தை சேர்ந்த மருத்துவர்* மகனான நாரணன் என்பவர் இங்கே சிலையாக அமர்ந்த கோலத்தில் இருக்கும் இயக்கியையும் நின்றகோலத்தில்  இருக்கும் நாகநந்தி* சிலையையும் வடித்துள்ளார்.
  2. *மருத்துவர் என்பதை தனிநபரின் பெயராக கொள்ள வேண்டும்
  3. *நாகநந்தி என்பார் இங்கே வாழ்ந்த சமண ஆசானாக இருக்கக்கூடும் நாகணந்தி குரவர் என்று கல்வெட்டில் இருக்கின்றது.

Meaning of the inscription:
This Pon Yakshi who is in sitting posture and the Naganandhi, a Jain monk was carved made by the Pukazhai Mangalam Village Maruththuvar’s (a person’s name and may not be a Doctor)  son Naranan. This was done during Pallava King Nandhivarman’s ( Pallavamalla (732 – 796 CE) fiftieth-year rule.
   

10th CENTURY RAJARA CHOZHA PERIOD INSCRIPTION.
The Chozha King Rajarajans 8th year Rule (993 CE) inscription. This inscription is on the western side of the bolder. The inscription is in 11 lines. ( சோழ அரசர் ராஜராஜனின் எட்டாவது ஆட்சி ஆண்டு கல்வெட்டு ).

ஸ்வத்ஸ்திஸ்ரீ

  1. கொவிராஜராஜகெஸரிவர்மர்க்கு யாண்டு அ ஆவது படுவூர் கோட்டத்துப் பெருந்திமிரி நாட்டுத் திருப்பான்மலைப் பொ
  2. கமாகிய கூறக்கன்பாடி இறையிலி பள்ளிச்சந்தத்தை கீழ்பாகலான்ட இலாடராஜர்கள் கற்பூரவிலை கொண்டு இத்தர்மம் கெ
  3. ட்டுப் பொகின்றதென்று உடையார் இலாடராஜர் புகழ்விப்பவர் கண்டர் மகனார் வீரசொழர் திருப்பான்மலை தெவரைத் திருவ
  4. டீத்தொழுதெழந்தருளி இருக்க இவர் தெவியார் இலாடமஹாதெவியார் கற்பூரவிலையும் மனன்யிவாவதண்டவிறையுமொ
  5. ழிந்தருளி வேண்டுமென்று விண்ணப்பஞ்செய்ய உடையார் வீரசொழர் கற்பூரவிலையும் மன்னையவாவதண்ட விறை
  6. யுமொழிஞ்சொமென்று செய்ய அரியூர் கிழவன் ஆகிய வீரசொழ
  7. இலாட பெயரையனுடையார் கன்மியேய
  8. (ந்த..?)தியாகவிந்த கற்பூரவிலையும் மன்னயிவாவதண்ட விறையு மொழிஞ்ச சாஸனம் செய்தபடி இதுவ
  9. ல்லது கற்பூரவிலையும் மன்னியவாவதண்ட விறையும் இப்பள்ளிச்சந்தத்தை கொள்வான் கங்கையி
  10. டை குமரியிடை செய்தார் செய்க பாவஞ்கொள்வான் இது வல்லடிப் படிச்சந்தத்தை கெடுப்பார் வல்லவரை
  11. --ந்ருவ இத்தர்மத்தை ரக்ஷிப்பான் என்றலை மெலன அறமவர்கறமல்ல துணையில்லை.

கல்வெட்டின் பொருள்.
படுவூர் கோட்டத்தில் பெருந்திமிரி நாட்டில் உள்ளது திருபான்மலை. திருபான்மலைக்கு  போகமாக உள்ள கூறகன்பாடி என்ற ஊர் வரி நீக்கிய பள்ளிச் சந்தமாக இருந்துள்ளது. முன்னர் ஆட்சி செய்த இலாட ராஜாக்கள் வரி நீக்கிய விலையில் இருந்து கற்பூர விலையை மட்டும் எடுத்துவிட்டனர். உடையார் கண்டனின் மகன் வீர சோழர் என்பவர்.  வீரசோழர் திருபான்மலை தேவர் திருவடியைத் தொழுத வேளையில் முன்னர் இக்கற்பூரவிலையக் கொண்டதால் இப்பள்ளிச்சந்தத்துக்குரிய தர்மம் கெட்டுப் போகிறதென்று சுட்டிக்காட்டி கூறியவர் வீரசோழனின் மனைவியான இலாட மஹாதெவியார் என்பவர். முன்னர் கொண்டு கற்பூர விலையையும் அதனுடன் அன்னயிவாவதண்ட இறையையும் மீண்டும் இத்தர்மத்துக்கே தொடர வேண்டுமென இந்த அரசியார் வீர சோழனிடம் வேண்டிக் கொள்கிறார்.  வீர சோழரும் இதற்கு உடன்பட்டு இதை அரியூர் என்ற ஊருக்கு தலைவனாக உள்ள கிழவன் வீரசேது இலாட போரையன் என்பாருக்கு ஆணையாக கூற அவர் திருப்பான்மலை கன்மியுடன் இணைந்து இத்தர்மத்திற்கு முன்னர் கொண்ட கர்பூரவிலையும் அதனுடன் அன்னயிவாவதண்ட இறையும் தொடரும் என சாசனமாக கல்லிலே வெட்டுகிறான். இத்தர்மத்திற்கு தீங்கிழைத்தால், அது கங்கைக்கும் குமரிக்கும் இடையே யாரேனும் பாவம் செய்தால் அந்த பாவங்களைக் கொள்பவராக போகக் கடவார்கள். இந்த தர்மத்தை காப்பவர்கள் யாரோ அவரின் பாதங்களில் உள்ள தூசியை என் தலை மேல் தாங்குபவனாக ஆவேன். 

MEANING OF THE INSCRIPTION
This inscription is engraved in the eighth year (993 CE) of the Chola king Raja Raja, which is referred to as Rajaraja-Kesarivarman. A vassals king under Rajaraja Chozha, by the name of Ladaraja Vira Chola who was the son of Kandan and his wife Lada Mahadevi came to worship Thirupanmalai god. As per the request of his wife and queen, he directed the head of the Ariyur Village, Kizhavan Veerasethu Lada Poorairan to continue the collection of taxes on the sale of Camphor, of Kooraganpadi village, which was stopped. The Kooragambadi village belongs to the Perumthimiri Nadu of Paduvur Kottam. The Collection of the taxes is to be done along with Thirupanmalai Kanmi and the same is to be given to this Thirupanmalai God. The Curse is those who obstruct this will get the sin between Ganga and Kumari ( Kanyakumari). The person who does, he holds the dust of their feet on his head.  Please note that God’s name is not mentioned. The presence of Jain beds with Tirthankaras reliefs, we may presume that the mentioned god is Tirthankara.

Ref: Epigraphia Indica Vol. IV (1896-97), Archaeological Survey of India, and the notes issued by The Vellore History group during our recent Heritage walk on 28th November 2018.

 Chozha Period Inscriptions
 Jain beds
 Jain beds
 Mountain view with steps

 Dargah
Muslims graves
Hazrath Syed Sha Meeran vali Baba (rakh),  

A PALLAVA PERIOD ROCK CUT CAVE.
The rock-cut cave is on the east side of the hill. The cave was excavated for 7 shrines with a front mandapam. The mandapam  is supported by 12 pillars and 4 Pilasters. The Pillars are square in shape with a very simple capital.  The shrines are not so deep. No god or dwarapalaka images are carved. A Tirthankara’s image is chiseled in the center above the cave can be seen faintly.  From the present status, it seems that the cave must be an unfinished one. 

பல்லவர் கால குடைவரைக் குகை / மண்டபம்
அடுத்து நாங்கள் சென்றது மலையின் கிழக்குப் பகுதியில் உள்ள குடைவரைக் குகை. இக்குகை ஆறு கருவறை, , மண்டபம் என  குடையப்பட்டுள்ளது. 12 சதுர வடிவ தூண்களும், 4 அரை தூண்களுடன் குடையப்பட்டு உள்ளது. வேலைப்பாடு எதுவும் இல்லாத போதிகைகள் தூண்களின் மீது காணப்படுகின்றன. கருவறைகளில் கடவுளர்கள் சிற்பமோ அல்லது வாயில் காவலர்களோ எதுவும் செதுக்கப்படவில்லை. வெளிப்புறம் மேலே ஒரு தீர்த்தங்கரின்  யோக நிலை புடைப்பு  சிற்பம் தெளிவாக இல்லாமல் காணப்படுகின்றது.  குகையின் தற்போதைய நிலையைக் காணும்போது இக்குகை முழுதும் முடிக்கப்படாத ஒன்று என்ற முடிவுக்கு வரமுடிகின்றது. 

 Tirthankara




---OM SHIVAYA NAMA--- 

Tuesday, 22 May 2018

Tirthankaras and the remains of Jainism in Chennai Museum, Egmore, Chennai, Tamil Nadu.

19th May 2018
The sculptures on display in this Chennai (Madras) Museum (established in the year 1851 CE) are grouped into three categories 1. Brought from North Arcot district of Tamil Nadu, 2. Present Andhra Pradesh and 3. Present Karnataka State. (During the British period all three states are under the Madras Presidency). These are brought to this museum during the 19th and 20th Centuries. 

சென்னை அரசு அருங்காட்சியகக் கூடத்தின் சமணச் சிற்பங்களை கீழ்காணும் மூன்று வகைகளுக்குள் அடக்கலாம்.
  1. தற்காலத் தமிழ்நாட்டுப் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட சமணச்சிற்பங்கள்
  2. தற்காலக் கர்நாடகப் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட சமணச் சிற்பங்கள் மற்றும்
  3. தற்கால ஆந்திரப் பகுதியிலிருந்து பெறப்பட்ட சமணச் சிற்பங்கள்.
TAMIL NADU: The majority of the Tirthankara statues are brought from the North Arcot district. Two are from in and around Chennai and two are from Thanjavur. They recently found out that Tirthankaras from fields are kept under worship in the Villages. 
  
தமிழ்நாடு மாநிலம்: இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சமண தீர்தஙகரர் சிற்பங்கள் பெரும்பாலானவை வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்டவைகளே. அது தவிர  மூன்று சிற்பங்கள் சென்னைக்கும் சென்னைக்கு அருகில் இருந்தும், மேலும் மூன்று சிற்பங்கள் தஞ்சாவூருக்கு அருகிலிருந்தும் கொண்டு வரப்பட்டது. பெரும்பாலான சிற்பங்கள் வயல் வெளிகளிலும், வயல்களைச் சீர் செய்தபோது அகழ்ந்து எடுக்கப்பட்டவைகளே ஆகும். சமீப காலங்களில் வெளிப்படுத்தப்பட்ட தீர்தங்கரர்கள் ஆங்கங்கே அதே ஊர் மக்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.




ANDHRA PRADESH: The majority of the  statues and the heritage sculptures are brought from a Village called Dhanavulappadu of Kadapa district of Andhra Pradesh. These Tirthankara statues are unearthed from the Village while excavating for the bricks protruding from the place where a 10th-century Jinalaya exists. This was mentioned in a Devakudi village temple inscription. The Sculptures belong to the 10th-century Rashtrakuta King Nithyavarsh Indian period and 14th-century Nishitha Pillars with and without inscriptions.

ஆந்திர மாநிலம்: இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெரும்பாலான சிற்பங்கள் ஆந்திரப்பிரதேசம் கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு வட்டத்தில் பெண்ணையாற்றின் இடது கரையின் உயர்ந்த விரிவான மேட்டின்  மீது அமைந்துள்ள தானவுலப்பாடு எனும் குக்கிராமத்திலிருந்து கொண்டுவரப்பட்டவையாகும். ஆந்திர மாநிலம் தானவர் அல்லது இராட்சசர் என இந்துக்களால் குறிப்பிடப்பட்ட புத்த / சமண சமயத்தினர் வாழ்ந்த ஊர் எனும் பொருளில் இவ்வூர் தானவுலபாடு எனப்படுகிறது. இவ்வூரை அடுத்துள்ள தேவகுடி எனும் ஊரில் உள்ள 13ம் நூற்றாண்டுக் கோவில் கல்வெட்டு தானவுலபாடு கிராமத்தில் சமணக் கோவில் இருந்ததைச் சுட்டுகின்றது.

இப்பகுதியைச் சார்ந்த சில நில உரிமையாளர்கள் இங்கு செங்கற்கள் புதைந்துள்ளமையை அறிந்து அவற்றைத் தோண்டியெடுக்கத் தலைப்பட்டபோது வெளிப்பட்டதே 10ம் நூற்றான்டைச் சார்ந்த ஜீனாலயமும் அதன் தொடர்பான தீத்தங்கரர் சிற்பங்களும். இவற்றுள் சில இராஷ்டிரகூட அரசரான மூன்றாம் நித்யவர்ஷ் இந்திரன்  ( கிபி 10ம் நூற்றாண்டு ) காலத்திய இராஷ்டிரகூட கலைப்பாணியையும், : எழுத்துப் பொறிப்புடைய தூண்கள் கிபி 14ம் நூற்றாண்டைச் சார்ந்த விஜயநகர் கலைபாணியை சார்ந்தவையாகக் கருதப்படுகின்றது. இவற்றுள் சில சமண தீர்தங்கரர் தொடர்புடைய யக்ஷிகள் மற்றும் பக்தர்கள் உருவங்களைக் காட்டுகின்றன.




NISHITHA PILLARS ( SALLEKHANA PILLARS): These Pillars are erected in memory of the person who undertook the sallekhana. As per the Jain’s Vedha scripts to attain mukthi Jain’s used to practice this Sallekhana – fast until death.   From the inscription of these pillars, the temple excavated  was constructed for Santhi Nath and Parshvanath Tirthankara.

நிஷீதி தூண்கள் – ஆந்திரா மாநிலம் : நினைவுக்கல் தூண்கள் நிஷீதி வகையைச் சார்ந்தவை. முக்தி அடைவதற்கென  அறிவறுத்தப்பட்டுள்ள அறநூல்களின்படி உண்ணா நோண்பிருந்து உயிர் துறந்த சமணர்களுக்காக எழுப்பப்பட்ட நினைவுக் கற்களே நிஷீத தூண்கள். பேரளவிலான சமயச் சடங்குடன் சல்லேகனை விரதம் ( சாகும் வரை உண்ணா நோன்பு) கடைப்பிடித்து இந்தச் சமணர்கள் ஒழுகினர்.  சிற்பத் தொகுதிகளையும் கல்வெட்டுப் பொறிப்புக்களையும் நிஷீதிகை தூண்கள் கொண்டுள்ளன. இந்தக் கல்வெட்டுப் பொறிப்புகளிலிருந்து சாந்திநாதர் மற்றும் பார்சுவநாதர் தீர்த்தங்கரர்களுக்குக் கட்டப்பட்ட கோவில்களே இந்த இடத்தில் புதையுண்டுள்ள கோவில்கள் என அறிகிறோம்.





KARNATAKA STATE: The 10th-century Tirthankara sculptures brought from Mysore belong to the Rashtrakuta heritage style and the Vijayanagara sculptures match with the Shravanabelagola heritage style.

கர்நாடக மாநிலம் :  கர்நாடகத்திலிருந்து திரட்டப்பட்ட சிற்பங்கள், குறிப்பாக மைசூரிலிருந்து பெறப்பட்ட கிபி 10ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இராஷ்டிரகூட வேலைபாட்டினை வெளிப்டுத்துகின்றன. பிற்கால விஜயநகர் காலச்சிற்பங்களோ தென் கனரா மையங்களுடன் ஒன்று கலந்த சிரவணபெலகோலா மரபுத் தொடர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட கூட்டுருவாக்கத்தைக் காட்டுகின்றன.




--- OM SHIVAYA NAMA---
For More Photographs on GOOGLE+:CLICK HERE