மண்ணார் மழவதிரு
மாடவீதி
வயல்
காழி ஞானசம் பந்தனல்ல,
பெண்ணா கடத்துப்
பெருங்கோயில் சேர்
பிறை
உரிஞ்சும் தூங்கானை மாடமேயான்
கண்ணார் கழல்பரவு பாடல்
பத்தும்
கருத்துணரக்
கற்றாரும் கேட்டாரும்போய்
விண்ணோர் உலகத்து மேவி
வாழும்
விதியது
வேஆகும் வினை மாயுமே. 362
--- திருஞானசம்பந்தன்
என சம்பந்தர்
தொன்மையான தூங்கானைமாட கோவில்களை (பெண்ணாடக் கோயில் இவ்வகையைச் சார்ந்த்து) குறித்து பாடுகிறார். யானை
ஒன்று அமர்ந்திருந்தால் அதன் பின்புறம் எவ்வாறு இருக்குமோ, அவ்வாறு
தோற்றத்தில் அமைந்திருப்பதால் இந்த வகை கோவிலுக்கு இப்பெயர். இவ்வகை கோவிலை
வடிவமைப்பது கடினம், ஏனெனில் வட்ட வடிவில் கற்களை செதுக்கி
பொருத்த தனித்திறமை வேண்டும். கஜபிருஷ்டக் கோவில் அமைப்பைச் சேதியகிருஹம் என்று
பௌத்த நூல்கள் கூறுகின்றன. பிராகிருத மொழியில் இது 'சேதியகர
என்று கூறுப்படுகிறது. தமிழில் இது தூங்கானை மாடக் கோயில் அல்லது யானைக் கோவில் என்று பெயர் கூறப்படுகிறது.
சிற்பசாஸ்திர நூல் இந்தக் கோயில்களை
கஜபிருஷ்டம் என்றும் ஹஸ்தி பிருஷ்டம் என்றும் குஞ்சர பிருஷ்டம்
என்றும் கூறுகின்றன. கஜம், ஹஸ்தி, குஞ்சரம்
என்னும் சொற்களின் பொருள் யானை என்பது. யானையைப் பக்கங்கள், பின்புறம்
மற்றும் மேல்புறத்திலிருந்து பார்த்தால் எவ்விதமான தோற்றமாகக்
காணப்படுகிறதோ அப்படிப்பட்ட வடிவமுடையது, இக்கோயில் விமானங்கள். ஆகவேதான் இக்கோயில்களுக்கு கஜபிருஷ்ட விமானக் கோவில், ஹஸ்திபிருஷ்டவிமானக்
கோவில், குஞ்சரக்கோவில் என்று பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
குஞ்சரக்கோவில் என்பதை
மணிமேகலை காவியத்தில் குச்சரக்குடிகை என்று கூறப்படுகிறது. குச்சரம் என்பது
குஞ்சரம் என்பதன் வலித்தல் விகாரம்.
காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த பௌத்தக்
கோவிலாகிய சம்பாபதிக் கோவில் இந்த அமைப்பாக இருந்தது எனப்பாடல் வரிகள் மூலம்
அறியமுடிகின்றது. ஆகவே இக்கோவில் குச்சரக்குடிகை என்று பெயர்
பெற்றிருந்தது. சாஞ்சி ஸ்தூபி ஒன்றின் அருகே 18 ஆம் எண் என்று அடையாளப்படுத்தப்பட்ட
பொயுமு-1 முதல் பொயு-1 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட பௌத்த கோயிலும் கஜபிருஷ்ட விமான
வகையைச் சார்ந்த்தே. தொண்டை மண்டலத்தில் காணப்படும் கஜபிருஷ்ட விமானக் கோயில்களின்
முன்னோடி பௌத்தக் கோயில்களே எனலாம். (தகவல் உதவி திருச்சி பார்த்தியுடன் அடியேனும்).
இப்படி ஒரு பட்டியலைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். மிக்க நன்றி. செங்கல்பட்டு மாவட்டக் கோயில்களுக்கு தொடர்பு கொடுத்துள்ளீர்கள். மற்ற கோயில்களுக்கும் தொடர்பு (LINK) கொடுத்தால் நன்றாய் இருக்கும், ஐயா.
ReplyDeleteநன்றி ராஜேந்திரன்... இன்னும் 5 கோயில்கள் காண வேண்டி உள்ளது அதையும் பார்த்துவிட்டு லிங்க் கொடுக்கலாம் என்று இருந்தேன்... பல காரணங்களால் தட்டிச் செல்கின்றது... இந்த மாத இறுதிக்குள் கொடுத்து விடுகின்றேன்...
Deleteகுன்னத்தூர் என்ற ஊர் மட்டும் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை
Deleteஐயா, திருமழிசை சென்னை, திருவள்ளூர் இரண்டிலும் பட்டியலிடப்பட்டுள்ளது,
ReplyDeleteநன்றி சுட்டிக்காட்டியமைக்கு... திருத்தி விடுகின்றேன் .. இன்று இரவு கொஞ்சம் பதிவுகளுக்கு லிங்க் கொடுத்து விடுகின்றேன் ராஜேந்திரன்..
Delete