Monday, 27 January 2025

Shri Kagholapureeswarar Temple/ஸ்ரீ காஹோலபுரீஸ்வரர் திருக்கோயில், Thirukolakudi, Sivaganga District, Tamil Nadu.

பொன்னிமா சலக்கோன் பெற்ற
        பூவையைப் பாகம் வைத்தோய்!
சென்னிமீ திருக்கும் கங்கா
        தேவிமஞ் சனமாத் தாம்ப்ர
பன்னிமா முனிவ னான
        பலாத்தரு நிழலில் சத்த
கன்னிமார் பூசித்(து) ஏத்தும்
        ககோளபு ரேச போற்றி!
……திருக்கோளபுரப்புராணம்


கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கத்தினரால் 2024, டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அன்று ஏற்பாடு செய்யப்பட்ட காரைக்குடி மரபு நடையின் ஒருபகுதியே இந்த சிவகங்கை மாவட்டம் திருகோலக்குடி குடைவரைக் கோயில் மற்றும் கட்டுமான கோயில்களின் பதிவு.  

The visit to the temples on Thirukolakudi Hills, in Sivagangai District was a part of the Karaikudi Heritage Walk, on 14th December 2024, organized by Kumbakonam Vattara Varalatru Aayvu Sangam.

திருக்கோலக்குடி, திருப்புத்தூருக்கு 16 மைல் வடமேற்காகவும், திருமையத்திற்கு 13 மைல் மேற்காகவும், பூலாங்குறிச்சிக்கு 4 மைல் கிழக்காகவும் அமைந்துள்ளதுதிருக்கோலக்குடி என்ற பெயர் மருவி திருக்காலக்குடி என ஆயிற்று. குன்னக்குடியில் உள்ள அஞ்சு கோயில் தேவஸ்தானத்தை சேர்ந்த கோயில் இஃது.

There are three Shiva temples, in three stages, ie Base (Bhoomi), Middle (Andharam), and Top (Swargam) in this Thirukolakudi Hill.

BASE TEMPLE - BHOOMI
Moolavar:    Sri Poyyamozhi Eswarar aka Sathya Vaheeswarar
Consort    :  Sri Maragathavalli

Some of the salient features of this temple are…
திருகோளக்குடி என்ற, இவ்வூரின் தரைத்தளத்தில் கட்டுமானக்கோயில் தான் சத்திய வாகீஸ்வரன் என்ற பொய்யாமொழீஸ்வரர் மற்றும் மரகதவல்லி கோயில். இக்கோயில் கோட்டைக்குக் கீழே நுழையும் வாயிலில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கல்வெட்டுக்கள் மூலவரை பொய்யாமொழீசுவரமுடைய நாயனர் என்று குறிப்பிடுகின்றன.

This temple is on the base level and on the right side of the steps. The temple, Vinayagar, and Moolavar are facing west. Ambal Maragathavalli is in a separate sannidhi facing south. Ambal is in a standing posture with abhaya varada hastam. Usual Chandikeswarar and Kosta images are missing in this temple. Thiruvarut Boulder is near the temple. It is believed that this boulder will answer for the prayers.

Apart from Sri Poyyamozhi Eswar temple, Thirunal Mandapam, Sanghu Theertham, Nagars, Twi Vinayagar,  Gnaniyar Mutt established by Narayana Swamy (Sri Pazhaniandavar and Arunagirinathar are in the Mutt), Naganar Kulam on the west of Sanghu Theertham, Chariot of Shiva and Ambal, Kundrakudi Thiruvannamalai Adheena Mutt, and Paddy Storage Godown are on the base of the Hill.   

ARCHITECTURE
The temple consists of sanctum Sanctorum, antarala, and ardha mandapam. The sanctum sanctorum is on a pada bandha adhistanam with jagathy, three patta kumudam, and Pattikai. The Bhitti starts with vedikai. The Pilasters are Brahma kantha pilasters with kalasam, kudam, palakai, and Vettu pothyal. The Prastaram consists of valapi, kapotam with nasi kudus and Vyyalavari. The eka tala brick nagara vimana was constructed in recent years. Greevam is not found separately. 





MIDDLE LEVEL - ANTHARAM
Moolavar  : Sri Siva Dharmapureeswarar
Consort    : Sri Sivakamavalli

Some of the salient features of this temple are…
திருகோலக்குடி மலையின் நடுவே அமைந்த கட்டுமானக்கோயில் அந்தரம் என அழைக்கப்படுகின்றது. இப்பகுதியை அடைய தரைத்தளத்தில் இருந்து 108 படிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இத்தளத்தில் சிவதர்மபுரீஸ்வரர் சிவகாமி அம்பிகை ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள பதாஞ்சலி முனிவர் விக்கிரகம் பல வேலைப்பாடுகளுடன் அமைந்ததாகும்.

This temple is at the middle level also called Antharam.  
To reach the middle level 108 steps are constructed. In this middle-level Sri Siva Dharmapureeswarar (Moolavar is of Swayambhu), Vinayagar, Sri Valli Devasena Subramaniar, Dakshinamurthy in a separate mandapam, Chandikeswarar, Nagars with Natarajar, Thavalaipada Sunai (a Natural spring, without frogs) and Ver Pala (Jackfruit tree and Amla Tree) and Sivakami Sannidhi. Ambal Sivakami is in a separate Sannidhi facing south. Ambal is in a standing posture with Abhaya Varada Hasta.

As per the inscriptions, Shiva is called Siva Dharmeeschuramudaiya Mahadevar, Siva Dharmeechuramudiaya Nayanar, Thirukolakudi Siva Dharmeeswaramudaiya Nayanar, and Ambal was called as Thirukamakotta Nachiyar and Sivakamavalli.  

ARCHITECTURE
This Siva Dharmapureeswarar Temple consists of Sanctum sanctorum, antarala/ardha mandapam and a open mukha mandapam. The sanctum sanctorum is on a pada bandha adhistanam with jagathy, three patta kumudam, and Pattikai. The Brahma kantha pilasters with kalasam, kudam, palakai, and vettu pothyal. An eka tala vesara vimana is on the prastaram. Stucco images of Shiva, Dakshinamurthy, Maha Vishnu, and Brahma are in the Greeva Kostam.





TOP-LEVEL - SWARGAM
Moolavar: Sri Kolapureeswarar  
Consort:   Sri Athmanayaki or Avudainayaki

Some of the Salient features of this temple are…
This temple faces east. Few steps are provided from the middle level. The Sanctum Sanctorum is a Rock Cut Cave Temple. Moolavar is scooped out of Mother Rock with square avudayar. The Rishabam is also scooped out of Mother Rock in front of Sanctum Sanctorum. Agasthiyar and Pulathiyar are on the south and south side walls of the mandapam in front of the Sanctum Sanctorum. Utsava Murthis, Bairavar, and Nataraja are in the Mandapam in front of the rock-cut cave.

Pazhani Andavar, Dwajasthambam, Balipeedam, Bairavar, Naganathar, and Saptamatrikas are in the middle level, i.e. little below the top level.

இக்கோயிலின் வலப்புறம் வலம்புரி விநாயகர் குடைவரை சந்நிதியும், இடப்புறம் ஏழு தேவதையான சப்தமாதர்கள் வினாயகர் மற்றும் சிவனுடன் உள்ளது.  

Shiva as Rishabanthigar in a sitting posture, Vinayagar are along with Saptamatrikas. Saptamatrikas group along with Shiva and Vinayagar are scooped out of Mother Rock. In addition to Saptamatrikas, a Shiva Lingam is also scooped out of the mother rock.

The Valampuri Vinayagar in a rock-cut cave is on the Southwest corner, near the Thavalaipada Sunai. The Vinayagar is scooped out of Mother Rock. The Vinayagar is with 4 hands measuring 164 Cm tall and 150 Cm wide. Vinayagar is also called as Malaimoorthy Vinayagar.

On top level praharam, Vinayagar, Sri Valli Devasena Subramaniar and Ambal Athmanayaki are in this level. Ambal Temple faces east with Sanctum Sanctorum, antarala and open mukha mandapam. The Vimanam is of two tiers Salakara style.


நாக தேவர்


ARCHITECTURE
தென்மாவட்டங்களிலேயே மிகப்பெரிய குடவரை கோயில் லிங்கத்துடன் இங்கு உள்ளது. இயற்கை வெளிச்சம் உட்புறம் வரும் வகையில் சிவன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் வெளிப்புற கல் சுவரில் அகஸ்தியர், புலஸ்தீயார் (Pulasthiar) ஆகிய சந்நியாசி சிலைகள் மிக நேர்த்தியாக செய்விக்கப்பட்டுள்ளது.  இக்குடைவரை 6.00 x 6.2 என்ற அளவுடன் முன் மண்டபமும், கருவரை 3 X 3 மீட்டர், 2.2 மீட்டர் உயரம் என்ற அளவிலும் குடையப்பட்டு உள்ளது.

The top level consists of a sanctum sanctorum, a rock-cut cave, a mandapam, and a built-up mandapam. The Moolavar Shiva Lingam is chiseled out of mother rock. The sanctum sanctorum measures 3 X 3 meters and 2.2 meters high. A brick Vimanam is built on the rock just above the sanctum sanctorum. The Rishabam is chiseled out of the mother rock and measures 140 cm long and 80 cm tall. Agasthiyar and Pulathiyar images measure 2.2 meters tall and are chiseled out of mother rock on the south and north sides of the mandapa walls. The mandapam in front of the sanctum sanctorum measures 6.00 meters X 6.125 meters and is 5.9 meters tall. The built-up mandapam is joined with the Rock Cut Cave mandapam, with pillars at a later period.   

 Rock Cut Cave 
 Mandapa




Vimanam over the Rock Cut Cave Sanctum Sanctorum

TOPMOST LEVEL.
மலையின் உச்சியில் உள்ள சுப்பிரமணியர் கோயிலில் உள்ள சுப்பிரமணிய கடவுள் ஆறு முகத்துடனும் பன்னிரண்டு கைகளுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.  மேலும் அன்னலிங்க சன்னிதி, கார்திகை தீபம் ஏற்றும் பாரை ஆகியவைகளும் உள்ளன. மலை உச்சியை அடைய பாறையில் படிகள் வெட்டப்பட்டு இரும்பு குழாய்களால் கைபிடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

To reach the topmost level, steps are cut on the boulders, and handrails are provided for easy trekking. Subramaniar in the form of Arumuga temple, Anna Lingam and a builder to lit Karthigai Deepam are on the topmost level. Arumuga with 6 heads, and 12 hands, in a standing posture. The vahana Peacock is on the back side of Arumugar. Sri Valli Devasena is standing on both sides of Arumugar.



The boulder where the karthigai Deepam will be lit
 Anna Lingam

ARCHITECTURE
The Arumugar Temple was built on a rocky surface. The temple consists of Sanctum Sanctorum, antarala, and ardha mandapam. The sanctum sanctorum is on an upana, Pada bandha adhistanam with jagathy, three patta kumudam, and pattikai. The Bhitti starts with vedikai. The Pilasters are of Brahma kantha pilasters with vettu pothyal. The prastaram consists of valapi and Kapotam with nasi kudus. The one tala brick nagara vimanam is on the prastaram. Murugan’s various forms are in the greeva kostam.


Steps to climb to Sri Subramaniar Temple 

HISTORY AND INSCRIPTIONS
நம்பிராகனால் இக்கோயில் கட்டுவிக்கப்பட்டது எனவும் பிற்காலத்தில் சுந்தரபாண்டியனால் பிற்சேர்க்கைகள் கட்டப்பட்டது எனவும் அறியமுடிகிறது. சண்பையர் கோனால் உயர்ந்த சவுந்தர பாண்டியன் திருக்கோளநாதருக்குத் திருப்பணிகள் பல செய்து இன்புற்றான். திருக்கோளபுரீசர் குடைவரைக் கோயில் பொயு. 8ஆம் நூற்றாண்டுக் கால அமைப்புடையது எனக் கருதப் பெறுகிறது.  இங்குள்ள குடைவரைக் கோயிலிலும், கற்றளிக் கோயில்களிலும் 83 கல்வெட்டுகள் அரசினரால், பொயு. 1916இல் படியெடுக்கப் பெற்று அவற்றின் சுருக்கம் வெளியிடப்பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்கன் (பொயு. 1133-1150) இரண்டாம் இராசராச சோழன் (பொயு 1146-1163) இரண்டாம் இராசாதிராசன் (பொயு.1163- 178) காலக் கல்வெட்டுகளும் சோணாடு கொண்டு வழங்கியருளிய சுந்தர பாண்டியன் (பொயு.1216-1238) காலக் கல்வெட்டு முதல் தொடர்ந்து பாண்டியர்கள் பலரது காலக்கல்வெட்டுகளும் உள்ளன.
It is believed that the Rock Cut Cave temple was scooped in the 8th Century after the Saiva religious revolution in the 7th Century. There are about 83 inscriptions are recorded from this temple by the Archaeological Department. The inscriptions belong to Kulothunga Chozha-II, Rajaraja-II, Rajathirajan-II, and Sonadu Vazhangiyaruliya Sundara Pandyan. 

19.061994 அன்று இக்கோயில் கல்வெட்டுகளை ஆய்வு செய்ய வந்த திருச்சிராப்பள்ளி டாக்டர் மா.இராச மாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா.கலைக்கோவன் அவர்கள் தளத்தால் மூடப் பட்டிருந்த சுருங்கை போன்ற ஓர் இடத்தில் முதற் குலோத்துங்க சோழனின் 41-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளார். இதுவரை அறியப் பெற்றுள்ள கல்வெட்டுகளில் இதுவே பழைமையானது. இந்தக் கல்வெட்டு பொயு.1112ஆம் ஆண்டுக்குரியது இக்கல்வெட்டு குடைவரைக் கோயிலின் பாறையிலேயே அமைக்கப் பெற்றுள்ள களிற்றுப்படியில் உள்ளது.  
Kulothunga Chozha-I’s 41st reign year 1112 CE, inscription, found on the Rock Cut Cave wall inside a closed chamber steps handrail wall believed to be the earliest, identified by Dr R Rajamanickanar of Dr. M Rajamanikanar Varalatru Aayvu Maiyam.    

குடவரையின் மறைக்கப்பட்டுள்ள படிகளின் பிடிச்சுவரில் முதலாம் குலோத்துங்கனின் நாற்பத்தோராம் ஆட்சியாண்டு பொயு 1111 கல்வெட்டு ஒன்று கோயிலில் உவச்சக் காணியாக நிலமிருந்தும் உவச்சர்கள் இல்லாமையின் கோயில் நிர்வாகிகளான ருத்ரமாகேசுவரர்கள் கூடிக் குலோத்துங்க சோழ வாத்ய மாராயருக்கு அக்காணியைப் பராசவக் காணியாக நிச்சயத்து தந்தனர். கோயிலில் பேரிகைக் கொட்டவும் கை மணிக் கொட்டவம் பணியாளர் இருந்தனர். மீத கல்வெட்டு சரிவர அறியப்படவில்லை.
The Kulothunga Chozha-I’s 41st reign year 1111 CE, a damaged inscription on the hidden handrail wall of the steps records the gift of land /Uvacha kani to Kulothunga Chozha Marayar by the managing committee Rudramaheswaras. Persons are appointed to continue the beating of Perikai and the bells during service.

மறைக்கப்பட்டுள்ள படிக்கு எதிர்புற சுவரில் கி.பி. 12-அம் நூற்றாண்டு இவ்வூரின் முன்னாலுள்ள ஊருணி மூவேந்தன் என்னும் பிசாசின் பெயரால் அழைக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.
The 12th-century inscription hidden at the opposite side wall of the steps records that the Orrani/Tank was called in the name of a ghost –Mooventhan.

இரண்டாம் குலோத்துங்க சோழனின் 14ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக் (பொயு.1147 (48/1916) இத்திருத்தலத்தின் அந்தரத்தலத்தில் உள்ள இறைவனைச் சிவதர்மேஸ்வரமுடைய மகாதேவர் என்று குறிக்கிறது. ஆதலால் சிவதர்மபுரீசுவரர் திருக்கோயில் கி.பி.12ஆம் நூற்றாண்டுக்கு முன்போ, 12ஆம் நூற்றாண்டிலோ அமைக்கப் பெற்றது எனலாம்.
Kulothunga Chozha-II’s 14th reign Year, 1147 CE inscription records the Middle-level Temples Moolavar name as Siva Dharmeswaramudaiya Mahadevar. Hence it is concluded that the temple was constructed in the 12th Century or earlier. 

திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியனின் 6-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (பொயு 1259) (117/1916) பொய்யாமொழீசர் திருக்கோயிலின் கிழக்குச் சுவரில் பொய்யாமொழி ஈசுவரமுடைய நாயனார் என்று இத்திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவனைக் குறிக்கிறது.  பொய்யாமொழீசுவரர் திருக்கோயில் பொயு. 1147-க்கும் பொயு.1259க்கும் இடையே அமைந்த திருக்கோயில் எனக் கருதலாம்.
Tribhuvana Chakravarthy Veerapandya’s 6th reign year 1259 CE inscription records the base temple’s Moolavar name as Poyyamozhi Eswaramudaiya Nayanar.

மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகர தேவன் என்னும் பாண்டிய மன்னனின் 4-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (பொயு. 1272) (109/1916) கோயிலுக்குக் கற்கள், தூண்கள், பணம் வழங்கியவர்களைத் தெரிவிக்கிறது. எனவே, அக்காலத்தில் இத்திருக்கோயிலின் ஒரு பகுதித் திருப்பணி நடந்திருக்கிறது என்று கருதலாம். இவ்வாறு மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகரன் காலத்தில் இத்திருக்கோயில் முழு வடிவம் பெற்று விளங்கியிருந்ததாகக் கொள்ளலாம்.
The Pandya king Maravarman Tribhuvana Chakravarthy Kulasekara Thevan’s 4th reign year 1272 CE inscription records the names of the persons who donated the stones, Pillars, and Money for the temple (Maybe for Thirupani).

திருக்கோளநாதர் திருக்கோயில் மகாமண்டபத் தூண்களின் அமைப்பு 15-ஆம் நூற்றாண்டு அமைப்பு எனக் கருதப்பெறுகிறது. இந்த மண்டபத்தின் சுவர்களில் 15-ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலக் கல்வெட்டுகள் உள்ளன. இதுபற்றிச் சிந்தித்தால் 15-ஆம் நூற்றாண்டுக்கு முன்பே தூண்கள் அமைப்போடு மண்டபம் இருந்து, பிற்காலத்தில் தூண்கள் சிதைவுற்று மீண்டும் தூண்கள் அமைக்கப் பெற்றதாகக் கருத வேண்டியுள்ளது. இந்தக் கருத்து வரலாற்று நிகழ்வாலும் இங்குள்ள கல்வெட்டு ஒன்றின் செய்தியாலும் உறுதிப்படுகிறது.
From the Thirukolanathar Maha Mandapam wall inscriptions, it is concluded that the mandapam was built before the 15th Century. 

குலசேகர பாண்டியன் மகன் சுந்தரபாண்டியன் தந்தை மீதிருந்த தீராச் சினத்தால் கி.பி. 1310இல் குலசேகர பாண்டியனும், மற்றொரு பாண்டியனான வீரபாண்டியனும் ஒரே காலத்தில் பாண்டிய நாட்டில் வெவ்வேறு இடங்களில் இருந்து ஆட்சி புரிந்தனர். இவ்விருவருக்கும் நிகழ்ந்த போரில் தோல்வியுற்ற சுந்தரபாண்டியன் டெல்லியில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த மாலிக்காபூரைத் தமிழ்நாட்டின்மீது படையெடுத்து வருமாறு அழைத்தான். இந்தப் படையெடுப்பு கி.பி.1310ஆம் ஆண்டின் இறுதியில் நிகழ்ந்ததென மகமதிய சரித்திர ஆசிரியன் "வாசப்"என்பவன் கூறியுள்ளான் என்பர். வரலாற்றாசிரியர்.  "அந்நாளில் பாண்டிய நாடு முகமதிய வீரர்களால் கொள்ளையிடப் பெற்றமையின் அது தனது  செல்வத்தையும் சிறப்பையும் இழந்து வறுமையுற்றது. நாட்டில் அமைதியாக வாழ்ந்து வந்த மக்களெல்லோரும் தம் வாழ்நாளில் என்றும் கண்டறியாத பல்வகை இன்னல்களுக்கு உள்ளாயினர். அறநிலையங்களும் கோயில்களும் அழிவுற்றன" என்பார் அறிஞர் தி.வை. சதாசிவப்பண்டாரத்தார். (பாண்டியர் வரலாறு ப152)  

முன்னாள் இராசராசன் சுந்தரபாண்டியத் தேவர்
துலுக்கருடன் வந்தநாளில் ஒக்கூருடையாரும்
இவர் தம்பிமாரும் அனைவரும் அடியாரும்
செத்தும் கெட்டும்போய் அலைந்து ஊரும்
வெள்ளத்தாலும் கலகத்தாலும் பாழாயிருக்கிற அளவிலே

(South Indian Inscriptions Volume. VIII, No.247). The Parijathavaneswarar Temple, Thirukalar, Mannargudi Taluk inscription records that the temples of Tamil Nadu were burgled and destroyed by Muslim invaders. This was confirmed by the Muslim Historian Vasap.
விஜயநகரப் பேரரசராகிய குமாரகம்பண உடையாரின் பொயு 1363 ஆம் ஆண்டு கல்வெட்டு பெரும்படையுடன் வந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லீம் மன்னர்களை வென்று மக்களையும் நமது சமயத்தையும் பாதுகாத்தார் என்ற செய்தியடங்கிய பொயு 1371 ஆண்டு அருமையான கல்வெட்டு ஒன்று (64/1916) இத்திருக்கோயிலில் உள்ளது. கல்வெட்டு வாசகம் பின்வருமாறு

"ஸ்வஸ்திஸ்ரீ கோமாற பன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீவீரபாண்டிய தேவர்க்கு யாண்டு 31- ஆவது கன்னிநாயற்று, பூர்வ பக்ஷத்துத் திரிதியையும், சுக்ர வாரமும் பெற்ற சோதிநாள்... காலம் துலுக்கற் காலமாய், நாயனார் தேவதான பற்றுகளுக்கு குடிமை பூண்டு இருக்கையாலும், இந்நாயனாருக்கு அமுதுபடி சாத்துபடி குறைவற நடத்திட வேண்டினபடியாலும் இந்த (வடவாப்) பலர்க்கும் உழவு தவணை வைத்து நடத்திப் போதுகைச்சதே கம்பண உடையார் வந்து துலுக்கர்களை அழியச் செய்து தேசங்களும், நெறிப்பாடு உண்டாக நடத்தித் தேவாலயங்களும், முற்காலங்கள் போலவே பூசையும் நடந்து கோயில் பிறகரங்களும் ஆள வேணும் என்று சொல்லிப் பல ஊர்களில் நாயக்கன்மார்களை ஆட்சியாக விட்டு நடத்தி..."

என்பது கல்வெட்டுப்பகுதி. இந்தவரலாற்றுப்போக்கினை சிந்திக்கும்போது இத்திருக்கோயில் ககோளநாதர் குடைவரைக் கோயில் முன்னுள்ள மகாமண்டபத் தூண்கள் கி.பி. 1363க்கு முன் இடிபாடுற்றிருக்கக் கூடும் என்று கருதுவது தவறாக மாட்டாது. அவ்வாறு இடிபாடுற்ற இந்த மண்டபம்- மண்படத் தூண்கள் கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் புனரமைக்கப் பெற்றது எனலாம். இதனை மெய்பிக்கும் வகையாக பொயு 1455 (சகஆண்டு 1377) க்குரிய ஒரு கல்வெட்டு.. "கீழவெம்ப நாட்டின் தச்சனூரைச் சேர்ந்த ஒரு மழவராயனால் கோயில் மண்டபம் கட்டப்பட்டது" (54/1916) என்று  உறுதிப்படுத்துகின்றது.
The Vijayanagara King Kumara Kampanna’s inscription records the re-establishment of worship in this temple with discontinued poojas and Naivedyam offerings during Muslim invasions. During the Muslim invasion, the temple and the mandapas might have been destroyed. It may be confirmed by the 1455 CE inscription. This inscription records the construction of the Mandapam was, by Keezhavemba Nattu Thachanur Mazhavarayar.   

கல்வெட்டுக்களின் அடிப்படையில் குடைவரைக் கோயிலில் பொயு. 8ஆம் நூற்றாண்டினது என்றும், சிவதருமபுரீசுவரர் திருக் கோயில் பொயு. 12ஆம் நூற்றாண்டினது என்றும், பொய்யா மொழீசர் திருக்கோயில் பொயு. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியினது என்றும், திருக்கோளநாதர் கோயில் மகாமண்டபம் பொயு. 12ஆம் நூற்றாண்டில் அமைந்து, பிற்காலத்தில் முகமதியர்களின் படையெடுப்பின் போது இடிபாடுகளுக்குள்ளாகி பொயு. 15ஆம் நூற்றாண்டில் புனரமைக்கப் பெற்றது என்றும் கருதலாம்.
From the inscriptions it may be concluded that the rock-cut cave was scooped in the 8th century, Shiva Dharmapureeswarar temple was constructed in the 12th century, the Poyyamozhi Eswarar temple was constructed in the 13th Century, the Thirukolanathar rock-cut cave mandapa was constructed in the 12th century and the same was reconstructed after the Muslim’s invasion in 15th Century.  

பொயு. 18-ஆம் நூற்றாண்டு மகாமண்டபத் தெற்கு நுழைவுவாயிலின் மேற்கு நிலையில் உள்ள கல்வெட்டு கருப்பன் வயிராவியின் மகன் வயிரன் கொடையளித்த திருநிலைக்கால் என குறிக்கிறது.
The 18th-century inscription on the Maha mandapa south entrance door frame records that the door was established by Karuppam Vayiravi’s son Vayiran.

இதேபோல கி.பி.18-ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் மகாமண்டபத் தெற்கு நுழைவாயிலின் கிழக்கு நிலை, மகாமண்டப கிழக்கு நுழைவாயில், மகாமண்டப நுழைவுவாயில் அருகில் முன்மண்டப கூரை, குடவரை நுழைவுவாயில் வலப்புறச் சுவரில் உள்ளது.
Another 18th-century inscription is also available on the Maha Mandapa south entrance east door near the Mandapa ceiling and right side wall of the Rock Cut Cave entrance.

17-18 ஆம் நூற்றாண்டு அளவுகோல் ஒன்று நாகநாதர் முன்பு பாறையில் வெட்டப்பட்டு உள்ளது. அதன் மீது ஸ்ரீ அவணி பு.4.. ரகுநாத திருமலை.. என்ற எழுத்துபொறிப்பு காணப்படுகின்றது. இந்த அளவுகோல் ஒரு யானை யின் ஒரு நடைக்கு சமம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
A Vijayanagara period measurement scale is engraved in front of Naganathar. The inscription on the scale reads as.. Sri avani … Pu...4…Raghunatha Thirumalai….  

பாண்டிய மன்னர் சுந்தர பாண்டியரின் 22 ஆம் ஆட்சியாண்டு (ARE 89/1916) அம்மன் கோயிலின் தெற்கு புறசுவரில் உள்ள கல்வெட்டு நாட்டின் நன்மைக்காக திருவிழா நாட்களில் இறைவனை எழுந்தருளிவிக்க குறிப்பிட்ட நிலத்திலிருந்து வரும் வரிகளை தானமாக மன்னரே அளித்த செய்தியைப்பதிவு செய்கின்ற்து.  
Sri Pandya king Sundara Pandya’s 22nd reign year (20+2) inscription (ARE 89/1916) on the south side wall of the Ambal Temple records the endowment of celebration for the benefit of the Country and its people. For the same, the Taxes received from the lands were gifted by the King to this temple.  

பொயு 17-ஆம் நூற்றாண்டில் தொடங்கிய புதுக்கோட்டை அரசர் தொண்டைமான் ஆட்சியில் ''திருக்கோளக்குடி நாடு" இருந்ததென ஒரு பழம்பாடல் போற்றுகின்றது.

ஆலங் குடிநாடு அமரா பதிநாடு
கோலங் கடுவன் குடிநாடு - மேலான
செங்காட்டு நாடு திருப்பேரை யூர்நாடு
மங்காத வல்ல வளநாடு - கொங்காரும்
மெய்யமலை நாடு மேவுசந்த்ர ரேகைநாடு
ஐயன் கொடுங்குன் றணிநாடு - செய்யதிருக்
கோளக் குடிநாடு கோனா டெனப்புரந்தே
ஆளப் பிறந்த அரசர்கோன்"

The 17th-century poem records that Thirukolakudi Nadu existed during Thondaiman rule.

கல்வெட்டுக் கருத்துகள். (1916-இல் அரசினர் எடுத்து வெளியிட்டுள்ள கல்வெட்டுச் சுருக்கத்திலிருந்து அறியப்படும் முக்கியமான செய்திகள்)
  1. இத்திருக்கோயிலுக்கு திருவாதவூர் நாயனார் திருமேனி சுந்தரபாண்டிய பட்டர் என்பவரால் செய்து வைக்கப் பெற்றுள்ளது (30/1916 பொயு. 1306 கல்வெட்டு)
  2. திருக்கோளக்குடியில் வணிகப் பெருமக்கள் (நகரத்தார்) வசித்துள்ளனர். இவர்கள் வசித்த தெரு "சுந்தரபாண்டியன் பெருந்தெரு'' என வழங்கப் பெற்றது.
  3. மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியாண்டு 4 இல் (பொயு.1272) தேர்த்திருவிழா நடைபெற்றுள்ளது. (108/1916) இத்திருக்கோயில் பழுதுபட்டபோது இளையாத்தக்குடி நகரத்தார் இத்திருக்கோயிலுக்கு ஒரு தேர் செய்து அளித்துள்ளனர். (51/1916 கல்வெட்டு ஆண்டு பொயு1551)
  4. பொயு. 1579க்குரிய கல்வெட்டு (மையக்கோயில் மகா மண்டப வடபுறச்சுவர்) முன்பு இளையாத்தங்குடி நகரத்தார் செய்து வைத்த தேர் பழுதுபட்டு மீண்டும் புதிய தேர் செய்து தந்தனர் எனக் குறிப்பிடுகிறது. (டாக்டர் இரா. கலைக்கோவன் தந்த கல்வெட்டுப்படி)
  5. இளையாத்தங்குடி நகரத்தார்களால் சம்பந்தப் பெருமான் திருவுருவம் செய்யப் பெற்றுள்ளது. (52/1616 கல்வெட்டு ஆண்டு பொயு 1507).
  6. அரசனால் (மாறவர்மன் குலசேகரனால் ஆளுடைய பிள்ளையார் சந்நிதி நிறுவப்பெற்றுள்ளது அரசன் பெயரால் செய்யப்படும் "புவனேசுவரன் சந்தி" என்ற சேவைக்காக வடபறம்பு நாட்டில் உள்ள சிறுகுடி என்ற கிராமத்தில் நிலக்கொடை வழங்கப்பட்டுள்ளது (100/1916  பொயு 13ஆம் நூற்றாண்டு).
  7. திருவானித் திருநாளுக்காக அரசனால் (மாறவர்மன் குலசேகரனால் ஏற்படுத்தப்பட்ட "செண்பக குலசேகரன் சந்தி" எனும் சேவை நடைபெற்றது. (106/1916 கல்வெட்டு ஆண்டு பொயு.1272)
  8. கோயிலுக்குக் கற்கள், தூண்கள், பணம் வழங்கியவர்களின் பெயர்கள் குறிப்பிடப் பெறுகின்றன. (109/1916 கல்வெட்டு ஆண்டு பொயு.1312)
  9. இத்திருக்கோயில் இறைவனை "திருவகஸ்தீசுர முடையார்” என்று குறிப்பிடுகிறது. (119/1916 கல்வெட்டு ஆண்டு பொயு 1443)

Ref:
  1. Sivagangai Mavatta Tholliyal Kaiyedu
  2. திருக்கோளக்குடி தல வரலாறு
  3. South Indian Inscriptions Volume VIII, No.247.
  4. Annual Report on South Indian Epigraphy Year 1916.




 Measurement Scale
 Measurement Scale

LEGENDS
The Sthala Purana was written by Madurai Thirugnanasambandar Adheenakarthar Thiruvarul Thiru Velayutha Desika Paramacharya Swamigal in the year 1825 CE. This Purana calls this Thirukolakudi Temple Adhi Kailash and is more sacred than Kailash. Once the Tharukavana munis believed that there is no God and only Yaga can give everything they want. Shiva destroyed the Yaga taught a lesson and stayed in this temple. Maha Vishnu took care of Shiva in the form of Mohini. Maha Vishnu requested Shiva to give him a temple where he would stay and bless his devotees. For the same Nandi Devar suggested that Thirumeyyam would be suitable, and Shiva also agreed and said “Appadiye aguha”. On hearing this Maha Vishnu Shiva as Kolesan. From then onwards Shiva is called  Kolesar and this place is called Kolapuram.

This Kolakudi is called in different names like Thirukolapuram, Thirukolakudi (The hill and the outside are in the form of ball/sphere), Kakolapuram (Kakola Muni worshipped Shiva of this temple), Kakolagiri, Nellivanam (This place was once with Pandu/Nelli/Amla tree forest), Shivadharmapuram (Shiva Taught Shiva Dharma to Brahma from this temple), Kannipuram (The Saptakannis/ Saptamatrikas worshipped Shiva after vanquishing the Demon Sandan), Kannima Nagar. Kannimalai, etc. Legends are associated with each name.

POOJAS AND CELEBRATIONS
Apart from regular poojas, special poojas are conducted on Aani Thiruvizha, Margazhi Thiruvathirai, Thaipoosam, pradosham, Maha Shivaratri, Vinayagar Chaturthi, etc. 

TEMPLE TIMINGS
The temple will be kept open between 06.00 hrs to 12.30 hrs and 17.00 hrs to 20.00 hrs.

CONTACT DETAILS
The mobile number +919345191870 may be contacted for further details.

HOW TO REACH
To reach Thirukolakudi, on Pudukkottai to Ponnamaravathi road, take the left on Chewlur to Thirukolakudi after Kuzhipirai.
Thirukolakudi is 32 KM from Pudukkottai, 37 KM from Karaikudi, and 57 KM from Sivagangai.
Nearest Railway Station is Pudukottai.  

LOCATION OF THE TEMPLE: CLICK HERE


Sri Valli Devasena Arumugar
Sri Valli Devasena Arumugar

 Vinayagar 
 Chandikeswarar
 Saptamatrikas group
Saptamatrikas group
 Saptamatrikas group
 Saptamatrikas group
 Saptamatrikas group
 Saptamatrikas group

May be a Nattukottai Nagarathar - Donor
 Cupules / Megalithic period Stone grinding place
 Cupules / Megalithic period Stone grinding place

---OM SHIVAYA NAMA---