Showing posts with label Tirunelveli District. Show all posts
Showing posts with label Tirunelveli District. Show all posts

Monday, September 14, 2026

Vinayagar worship. Vinayagar Chaturthi 2026. Chozha and Pandya period, Vinayagar images from as individual to bas reliefs in Rock Cut Caves, Tamil Nadu and Karnataka.

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே! 


LEGEND OF GANESHA
Vinayagar (Lord Ganesha) was created by Goddess Parvati from turmeric paste to guard her door while she took a bath. Goddess Parvati wanted privacy during her bath, so she shaped a boy out of turmeric paste and gave him life. She told the boy to stand at the door and let no one enter. Lord Shiva returned home and tried to go inside. The boy stopped him because he did not know Shiva, and Shiva did not know the boy. Angry at being blocked, Lord Shiva fought the boy and cut off his head.
  
Goddess Parvati became very upset and angry when she saw what happened. Lord Shiva promised to fix his mistake and told his helpers to bring the head of the first living creature facing north that had passed away. The helpers found a baby elephant. Shiva placed the elephant head on the boy's body and brought him back to life.
 
Lord Shiva blessed him and said people would worship Vinayagar first before any prayer, new beginning, or journey. He is known as Vighneshvara, the lord who removes all obstacles and brings good fortune. People celebrate his birthday during the Ganesh Chaturthi festival by installing clay idols and later immersing them in water. After the celebration, the clay idol dissolves in water. It is believed that the Vinayagar idol made out of clay, i.e., earth, goes back to earth.

The different sects of worship in Hinduism are Vaishnavism, Shaivism, Shaktism, Sauram (Sun worship), and Kaumaram (worship of Karthikeya)
Ganapatyam (also spelled Ganapatya) is a highly significant historic sect of Hinduism that centers on Ganesha (Ganapati) as the supreme, all-encompassing deity. While it is often grouped today under the broader umbrella of mainstream Hinduism or alongside Smartism, it historically stood as its own distinct and powerful denomination. In Ganapatyam, Ganesha is not just the elephant-headed god of new beginnings or the remover of obstacles. He is worshipped as Brahman—the supreme, absolute reality, creator, sustainer, and destroyer of the universe. Adherents primarily rely on these two sacred texts, which detail Ganesha's mythology, philosophy, and cosmic significance. Followers believe that meditating on Ganesha and reciting his mantras leads to liberation (moksha) from the cycle of rebirth.
 
In the 8th century CE, the philosopher Adi Shankara established the Shanmata system to unify various warring factions of Hinduism. He synthesized Ganapatyam into one of the six primary systems of worship alongside Vaishnavism, Shaivism, Shaktism, Sauram (Sun worship), and Kaumaram (Murugan/Kartikeya worship. The sect reached its peak popularity between the 10th and 21st centuries, finding its strongest roots in western India, particularly in Maharashtra.
 
Vinayagars are worshipped in the form of Idols and bas-reliefs in rock-cut caves, as early as the 8th century in India, especially in Tamil Nadu.


Vinayagar Periyanai Ganapathy in the Southwest corner of the prakara is large, and a legend is associated with Vinayagar. When Avvaiyar knew that Sundarar was going to Kailash, she also wanted to go there and do pooja hurriedly. Knowing her urgency, Vinayagar asked her to do the pooja slowly, and he would lift her to Kailash before Sundarar reached Kailash. So Avvayar sang the hymns as "Seetha kalaba Senthamarai poo..."



சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசைப் பாடப்
பொன் அரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்,


Vatapi Ganapati, Thiruvarur Thiyagesar Temple, brought from the north as a war trophy
Kasukalanju Vinayagar at Thiruvarur

In addition, there are some big temples exclusively dedicated to Vinayagar, with a Rajagopuram, Temple Chariot, etc. The details are written in a separate post on our blog, and links are given below.


--- OM SHIVAYA NAMA ---

Monday, October 27, 2025

Hero Stones/ Veerakallu/ Nadukarkal, at Ambalavanar Kovil /அம்பலவாணர் கோவில், Manur, Tirunelveli District, Tamil Nadu.

The visit to these Hero stones installed in front of Sri Amabalabvanar temple at Manur, Tirunelveli was part of “Tirunelveli Heritage Walk”, organised by the Culture Circuits, from 11th to 13th July 2025. Thanks to Balakumaran GS and  Krishnakumar TK for arranging this walk.


This Hero stone group consists of 4 Hero Stones, of which two have inscriptions. The Hero stones and inscription details are given below. Thanks to Saravanamanian. P. A. 

நடுகற்தொகுப்பு...
முற்காலப் பாண்டியர்களின் (முதல் இராஜசிம்ம பாண்டியன், பராந்தக நெடுஞ்சடையன்) அமைச்சர்களாகவும் படைத் தலைவர்களாகவும் விளங்கிய, வைத்திய குலத்தவர் என அழைக்கப்பட்ட, சிற்றரசர்கள் ஆட்சி செய்த பகுதி களக்குடி நாடு எனவும் அவர்களின் தலைநகரம் கருவந்தபுரம் (இன்றைய உக்கிரன் கோட்டை) என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றது.

திருநெல்வேலி மாவட்டத்து இன்றைய மானூர், உக்கிரன் கோட்டை ஆகிய பகுதிகளே அன்றைய களக்குடி நாடாக இருந்துள்ளது. சைவம், வைணவம், சமணம் ஆகியவை இவ்விடத்தில் சிறப்புற இருந்துள்ளன. பராந்தக நெடுஞ்சடையன் களக்குடியில் அரண்மிகு பெரிய மாளிகைகள் கட்டியதையும் பராந்தக வீரநாராயணன் இவ்விடத்திலே உக்கரனை வென்றதையும் பாண்டியர் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. இந்த தொகுப்பில் உள்ள நடுகற்கள் அப்போரில் இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்டு இருக்கலாம். இந்த நடுகற்தொகுப்பில் நான்கு நடுகற்களும், அதில் இரண்டு நடுகற்கள் கல்வெட்டுக்களுடனும் மற்ற இரண்டு நடுகற்கள் கல்வெட்டுக்கள் இன்றியும் காணப்படுகின்றது.

நடுகல் - 1
இந்த நடுகல் தொகுப்பில், முதலில் உள்ள நடுகல், ஏறத்தாழ முற்றிலும் புதைந்த நிலையில் தலையின் ஒரு பகுதி மட்டுமே காணப்படுகின்றது.


நடுகல் – 2
இந்த தொகுப்பில் இரண்டாவதாக உள்ள நடுகல்லில், வீரன் வலது கையில் கேடயமும், இடது கையில் வாளும் காணப்படுகின்றது. இடுப்புவரை புதைந்து காணப்படும் இவ்வீரன் போரின் போது இறந்துபட்டு இருக்கலாம் என்பதை வாளும் கேடயமும் காட்டுகின்றது. மேலும் வீரனின் வலது விலாப்பகுதியில், அம்பும் காட்டப்பட்டு இருக்கின்றது.  இடது கையில் வாள் காட்டப்பட்டு உள்ளதால், இவ்வீரன் இடதுகைப் பழக்கும் உள்ளவனாக இருக்கலாம்.  

இந்த நடுகல்லில் வாளின் அருகே வட்டெழுத்து எழுத்துகளில் இரு வரிக் கல்வெட்டு காணப்படுகின்றது.  இந்த நடுகல் வீரன் கையில் வாளேந்தியவாறு காணப்படுகிறது. கல்வெட்டு வாசகம் வீரனின் பெயராக இருக்கலாம்.

“..மதிவாகம்
யாசகன்”


நடுகல்- 3.
நடுகல் தொகுப்பின் மூன்றாவது நடுகல்லில் உள்ள வீரன் திரிபங்க நிலையில், கையில் ஒரு ஆயுதத்தைத்(?) தாங்கியவாறு காட்டப் பட்டுள்ளான். மேலும் இடுப்புக்கு கீழ் ஆடை அதில் குறுவாள் ஒன்றும் செருகி காணப்படுகின்றது. தலையில், கொண்டை இடது புறமாகவும், காதில் குண்டலங்களுடனும். காட்டப்பட்டு இருக்கின்றார். இவ்வீரனின் இடது வயிறு மற்றும் விலாப்பகுதியில் எதிரியின் அம்பு தைத்து காணப்படுகின்றது.

12-13ம் நூற்றாண்டு எழுத்தமைதியுடன் தமிழ் கல்வெட்டு இந்நடுகல்லின் மேற்புறத்தில் மூன்று வரிகளில் வெட்டப்பட்டுள்ளது. வளைஞ்சிலன் இளையன் என்பான் ஊர் அழியாது காக்கும் பொருட்டு தன்னுயிர் நீத்தான் எனும் தகவலைத் தருகிறது.  

“ஶ்ரீ இவ்வூரழியா
மல் பட்ட வளைஞ்
 (சி)ல னி(ளை)யாந் காடந்”


நடுகல் – 4.
இந்த நடுகல் வீரனின் தொடை வரை புதைந்து காணப்படுகின்றது. வீரனின் இடது புறமாக கொண்டை, கழுத்தில் அணிகலன்கள், இடுப்பில் ஆடையுடனும் வீரன் காணப்படுகின்றான். இடது கையில் வில் மற்றும் வலது கையில் அம்புடனும் காட்டப்பட்டு இருக்கின்றான் கல்வெட்டு எதுவும் காணப்படவில்லை. எதிரியின் அம்பு, வீரனின் இடதுபுற இடுப்பில் தைத்து காணப்படுகின்றது.  


Ref
Mr. Saravanamanian.

HOW TO REACH
The temple is about 500 meters away from Sankarankoil, Puliangudi, to Tirunelveli.
The temple is about 17.3 km from Tirunelveli Junction, 40.5 km from Sankarankoil, 52.8 km from Tenkasi, and 57.5 km from Kovilpatti.
The nearest Railway Station is Tirunelveli Junction.

LOCATION OF THE HERO STONES: CLICK HERE



The hero stones are in this shed
--- OM SHIVAYA NAMA---

Saturday, October 25, 2025

Ambalavanar Kovil /அம்பலவாணர் கோவில், & Merchants inscriptions, Manur, Tirunelveli District, Tamil Nadu.

The visit to Ambalavanar Kovil, at Manur, Tirunelveli District, was a part of “Tirunelveli Heritage Walk”, organised by CultureCircuits, on 11th to 13th July 2025. Thanks to Balakumaran GS and  Krishnakumar TK for arranging this walk.


Even though the temple is dedicated to Shiva, called as Ambalavanar Temple.

Moolavar  : Sri Nellaiappar
Consort    : Sri Gomathi Ambal

Some of the Salient features of this temple are….
The temple faces east with an entrance from the south. Balipeedam, Dwajasthambam, and Rishabam are in the mandapam opposite to Shiva Sri Nellaiappar sannidhi. Moolavar is at an elevated level. Dakshinamurthy is in koshtam.

Sri Nellaiappar and Sri Gomathi Ambal are in separate sannidhis facing east. Balipeedam and Rishabam are in front of Shiva and Ambal Sannidhis. Ambal is in a standing posture with two hands, holding a lotus bud in the right hand, and the left hand is in dola hastam.

Ambalavanar is in a separate sannidhi facing south. A Painting of Natarajar, a small Natarajar in metal, Manikavasagar, Natarajar, and Sivakami are in the Ambalavanar.


In praharam Vinayagar, Sri Valli Devasena Subramaniar, Karuvur Siddhar, Shiva Linga banas, Saniswarar, Chandikeswarar, Bairavar, Chandran, and Suryan.




Karuvur Siddhar

Four Hero stones and an inscription pillar are installed under a metacolour sheet shed, written as Thiruvazhi Pothi. Details of the Hero Stones will be written as a separate post. 

ARCHITECTURE
The temple consists of three small sannidhis dedicated to Ambalavanar, Shiva, and Ambal. Maybe 200 to 300-year-old paintings are on the mandapa ceiling.

In the mandapam, the old chariots’ 4-panel sculptures are fixed between the pillars. The sculptures consists of Hanuman Carrying Rama, Krishna with Bama & Rukmani, Manmatha, A Tribel lady, Garuda carrying Maha Vishnu, Maha Vishnu with Sridevi & Bhudevi, Maha Vishnu as Trivikrama, Kali, Three ladies with their below the hip (Erotic Sculpture), Shiva as Natarajar, Shiva and Parvati as Rishabaroodar, Maha Vishnu with Lakshmi, Couple (erotic sculpture), Rama holding a bow and arrow, A man and Lady (Erotic sculpture), Lady Musicians, A saint under meditation, Kurathi, Bairavar, Ravana anugrahamoorthy, Narasimha with Hiranya kasibu, Veerabhadra, A Mohini, Nataraja with Sivakami, Veerabhadra(?), Lingothbava, A man and Woman (Erotic sculpture), Rama Pattabhisheka, Three women (Erotic sculpture), Shiva Linga under a tree, Parvati, and A man with lady (Erotic sculpture)














HISTORY AND INSCRIPTIONS
There are inscriptions on almost all pillars of the 8th-century Pandya King Maran Sadyan’s period inscriptions. These inscriptions record the detailed constitution of the village Sabas, the Election of members, the contestants' qualifications, etc. This is a very good example and specimen of efficient administration, though one could not understand exactly the meaning of some words, for the understanding of the constitution of the sabha. The above resolution fixed the procedure to be followed in the meetings of the sabha by laying down the minimum qualifications in terms of property, education, and character that would entitle persons to take part.

Since the original character of the village had undergone changes, it became necessary for the sabha to deliberate and decide about the constitution of the sabha, taking into consideration the future changes as well. The interests of the descendants of original shareholders were safeguarded, as well as those who came as new settlers. This particular inscription contains 51 lines, inscribed on all the sides of the pillars.

கிராம நிர்வாகம், குறிப்பாக மானூர் கிராமத்தின் மகாசபையின் செயல்பாடுகள் மற்றும் உறுப்பினர்களின் தகுதிகள் போன்றவை பற்றிய தகவல்களை இந்த கல்வெட்டு வழங்குகிறது. இக்கல்வெட்டில், களக்குடி நாட்டு மானநிலை நல்லூர் பிரம்ம தேயத்து சபையினர் கோவர்த்தனமெனும் விண்ணகரத்தில் கூடி எடுத்த முடிவுகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Lines 1-14. Hail! Prosperity! The year thirty-five, and day four hundred and sixty-nine of (the reign of King Marañjadaiyan, on this day, we, (the members of) the mahasabhä of Mapanilainallür, a brahmadčya in Kajakkudi-naļu, having proclaimed a general body meeting by beat of drum; and, having assembled in the sacred Govardhana, made the following resolution (vyavasthai) for conducting deliberations in the meetings of the mahasabha of this village:

LL. 14-30. In the matter of the shareholders of this village taking part in the deliberations of the assembly, only those who are conversant with Mantra-brāhmana, inclusive of one Dharma, and are of good conduct shall take part in the discussions of the sabha, only one person (representing a share;

LL. 20-26. of those who own (shares) by purchase, gift, or dowry, only such as are conversant with Mantra-brahmaņa, inclusive of one Dharma, and are of good conduct shall take part in the deliberations;

Ll. 26-35. In the future, those who exercise their right of property (aravanai-puguvar) (acquired) by purchase, gift, or dowry, shall not, except by (possessing) full sravanai, exercise their right and vote (merely) in virtue of a quarter, half, or three-quarters of a śrāvanai;

Ll. 35-45. among those who acquire shares by purchase, the śravanai shall be awarded only to stich as have passed an examination in an entire Veda together with the Parisishta; and those who enter upon a śrāvaņai, by means other than the above, shall take part in the discussions only in accordance with the terms of this settlement (bachcham);

LL. 46-51. in virtue of this arrangement, those who do not possess a full sravanai shall not be selected to any kind of variyam; 
The original inscription reads as
  1. “ஸ்வஸ்தி ஶ்ரீ கோமாறஞ் ச
  2. டையற்க்கு யாண்டு
  3. முப்பத்தைஞ்சு
  4. நாள் நானூற்றறு
  5. பத்து ஒன்பது இ
  6. ந்நாளால் களக்குடி
  7. நாட்டு ப்ரஹ்மதேயம் மான
  8. நிலை நல் ஊர் மஹா ஸ
  9. பையோம் பெருங்குறிச் சா
  10. ற்றி ஶ்ரீ கோவர்த்தனத்துக் கூடி
  11. இருந்து இவ்வூர் ம
  12. ஹாஸபையோம் கூடி மன்றா
  13. டுவதனுக்கு செய்த வ்யவஸ்தை
  14. யாவது இவ்வூர் பங்குடை
  15. யார் மக்கள் ஸபையில் மன்
  16. றாடுகிறது ஒரு தர்மம் உட்ப
  17. ட மந்திர ப்ரஹ்மாணம் வல்லார் ஸு
  18. வ்ருத்தராய் இருப்பாரே ஒரு பங்
  19. கினுக்கு ஒருத்தரே ஸபையில்
  20. மன்றாடுவதாகவும் விலையும்
  21. ப்ரதிக்ரஹமும் ஸ்த்ரிதநமமுடை
  22. யார் ஒரு தந்மமுப்ப
  23. ட மந்திர ப்ரஹ்மாணம்
  24. வல்லாராய் ஸுவ்ருத்தராய்
  25. இருப்பாரே மன்றாடு
  26. வதாகவும் இதன் மேற்
  27. பட்டது விலையாலு
  28. ம் ப்ரதிக்ரஹத்தாலும் ஸ்த்ரி
  29. தநத்தாலும் ஶ்ரவணை
  30. புகுவார் முழு சிராவ
  31. ணை அன்றி கால் சிராவ
  32. ணையும் அரைச் சிராவணை
  33. யும் முக்கால் சிராவணையு
  34. ம் புகவும் பணிக்கவு
  35. ம் பெறாதாறாகவும் ப
  36. ங்கு விலைக்கு கொள்வ்
  37. வார் ஒரு வேதம் எல்லா
  38. இடமும் ஸபரிசிஷ்ட
  39. ம் பரிக்ஷை தந்தார்க்கே
  40. ஶ்ராவணை பணிப்பதா
  41. கவும் இப்பரிசு அன்
  42. றி ஶ்ராவணை புக்காரையும்
  43. பின்னையும் இக்கச்
  44. சத்தில் பட்ட பரி
  45. சே மன்றாடுவதாக வ
  46. வும் இப்பரிசினா
  47. ல் முழுச் சிராவணை
  48. இல்லாதாரை எவ்வகை
  49. ப்பட்ட வாரியமு
  50. ம் ஏற்றப் பெறாதாராகவு
  51. ம் இப்பரிசு செய்கின்
  52. றாரும் அன்றென்று குத்து
  53. க்கால் செய்யப் பெறாதா
  54. ராகவும் குத்துக்கால் செய்
  55. வாரையும் குத்துக்கால் செ
  56. வ்வார்க்கு உபோக. நி
  57. ப்பாரையும் வெவ்வெற்று
  58. வகை ஐய்யஞ்சு காசு தண்
  59. டங் கொண்டு பின்னையும்
  60. இக்கச்சத்தில் பட்ட பரி
  61. சே செய்வ்வதாகவும் இ
  62. ப்பரிசு பணித்து வ்யவ
  63. ஸ்தை செய்தோம் மஹாஸபை
  64. யோம் மஹாஸபையார் பா”

Ref:
Epigrapica Indica Volume XXII.
Mr. Saravanamanian

மானூர் இராஜராஜனின் வட்டெழுத்து மற்றும் தமிழ் கல்வெட்டுகள்
மானூர் அம்பலவாணர் கோவிலின் மேற்புறத்தே கோவிலின் அடிப்பகுதியில் முதலாம் இராஜராஜ சோழனின் வட்டெழுத்து மற்றும் தமிழ் கல்வெட்டுத் துண்டுகள் நிரம்பக் காணப்படுகின்றன. இவற்றுள் ஒன்று இராஜராஜனின் 20+ ஆட்சியாண்டினைக் குறிப்பிடுகிறது.

கல்வெட்டுகள் கோவர்த்தனம் எனும் விண்ணகரில் மானநிலை நல்லூர் மகா சபையினர் கூடியிருந்தது மற்றும் அக்கோவிலுக்கு வேறு நிவந்தங்கள் வழங்கியது பற்றிக் குறிப்பிடுகின்றன. கல்வெட்டுகளில் இராஜராஜ விண்ணகர் என்றொரு விண்ணகரமும், ஜவலஸ்வரம் எனும் சிவன் கோவிலும் குறிப்பிடப்படுகிறது. இக்கோவில்களின் இன்றைய நிலை பற்றி தெரியவில்லை.

இராஜராஜனின் வட்டெழுத்து மெய்க்கீர்த்தியின் பகுதி ஒன்று “….தடிகை வழியும் நுளம்பபாடியும்…” எனக் குறிப்பிடுகிறது. கொடும்பாளூர் ஐவர் கோவில் இராஜராஜன் கல்வெட்டிலும் தடிகை பாடியல்லாது தடிகை வழியென குறிப்பிடப் பட்டுள்ளது.
 
முற்காலப் பாண்டிய மன்னனான பராந்தக வீரநாராயணின் கல்வெட்டு போன்றே இராஜராஜனின் கல்வெட்டும் இதனை ஶ்ரீ கோவர்த்தனமென்று குறிப்பிடுகிறது. மாறவர்மன் சுந்தர பாண்டியனின் 11 + 1 ஆவது ஆண்டுக் கல்வெட்டு உகந்தருளுவித்த குறி உடைய பாண்டிய விண்ணகரெனக் குறிப்பிடுகிறது. ஒரு கல்வெட்டு குலசேகர விண்ணகரெனக் குறிப்பிடுகிறது.

இன்று மூலவராக சிறு ஆடவல்லான் திருமேனி இருக்கும் இக்கோவில் ஒரு விண்ணகரமாக இருந்திருக்கலாம். அதற்கு மேலும் வலு சேர்பது படியில் உள்ள திருவாழிக் கல் கீரல் சிற்பம். 

Thiruvazhi Symbol in petrigliphs

Ref:
Epigrapica Indica Volume XXII.
Mr. Saravanamanian











Merchant’s Inscriptions, at Ambalavanar Kovil /அம்பலவாணர் கோவில், Manur, Tirunelveli District, Tamil Nadu.
Four Hero stones and a Merchant inscription pillar are installed under a metacolour sheet shed, written as Thiruvazhi Pothi. As per the legend, this pillar was brought from Mecca. The inscription details are given below... 

மானூர் வணிகக் குழு கல்வெட்டு
மானூர் அம்பலவாண சுவாமி கோவில் முன்புள்ள சதுர வடிவிலான தூண் ஒன்று காணப்படுகிறது. இதன் இரு முகங்களில் வணிகக் குழுவினரின் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஐய்யபொழில் புர பரமேஸ்வரியின் புத்திரர்கள் எனக் கூறிக்கொள்ளும் வெவ்வேறு ஊர்களில் இருந்த திசையாயிரத்து ஐந்நூற்றுவர் குழுக்கள் பற்றிய செய்தியைத் தரும்இக்கல்வெட்டின் மீதம் தரை மட்டத்திற்கு கீழிருப்பதால் கல்வெட்டுச் செய்தி அறிய முடியாதவாறு உள்ளது.

வடமொழி, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் காணப்படும் இக்கல்வெட்டின் வடமொழிப் பகுதி கிரந்த எழுத்துகளாலும் தமிழ் பகுதி தமிழ் எழுத்துகளாலும எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் காலம் 12-13ம் நூற்றாண்டாயிருக்கலாம்.

  1.  “ஸ்வஸ்தி ஶ்ரீ ஆரோக்யமஸ்து
  2. ஸமஸ்த புவநா ஶ்ரீய ப
  3. ஞ்ச தவிர ஶாஸந அ
  4. நேக குண குணாலய லக்ஷ
  5. ண லமிலங்க்ரதவக்ஷஸ்தம
  6. லபுவந பராக்ரம ஶ்ரீ வாஸுதே
  7. வ கண்டலி மூல பத்ரோப்
  8. பவ ஶ்ரீ ஐய்யபொழில்
  9. புர பரமேஶ்வரிக்கு மக்க
  10. ளாகி நிகளா நின்ற திருவழுதிவள
  11. நாட்டுத் திருக்கோளூரான ஒ
  12. லோக சிந்தாமணி புரத்துத்
  13. திசை ஆஇரத்து அஞ்ஞூற்
  14. றுவரும் கண்ணனூரான கரி
  15. கால சோழபுரத்து திசை ஆஇ
  16. ரத்து அஞ்ஞூற்றுவரும் பட்ட
  17. ண மருதூரான கேரளாந்தக புர
  18. த்துத திசை ஆஇரத்து அஞ்ஞூற்று
  19. வரும் மானவீர பட்டணமான
  20. தேசி உத்தம சோள பட்டணத்து
  21. த்திசை ஆஇரத்தஞ்ஞூற்றுவரு
  22. ம் வீரபாண்டியபுரமான தே
  23. சி அய்யப்பட்டணத்துத் திசைஆ
  24. இரத்தஞ்ஞூற்றுவரும் வெள்ளூரா
  25. ன ராஜராஜபுரத்துத் திசை ஆயிரத்
  26. தஞ்ஞூற்றுவரும் அழகிய சேகர
  27. வளநாட்டுப் புவேந்திய சோழபு
  28. ரத்துத் திசை ஆயிரத்தஞ்ஞூற்று
  29. வரும் கீள் வெம்ப நாட்டுச் சிவச
  30. ரண சேகரப் பெருந்தெருவில் திசை
  31. ஆயிரத்தைஞ்ஞூற்றுவரும் திருக்கா
  32. மக் கோட்டம் பெருந்தெருவான நூறு
  33. நூறாயிர தேசம்பித் தேசி உய்யவ
  34. ந்த பட்டணத்துத் திசையாயிரத்
  35. தஞ்ஞூற்றுவரும் இராஜவல்ல
  36. பபுரமான சோறுடைய திண்ண….”
Ref
1. South Indian Inscriptions Volume 22.





Maha Kumbhabhishekam was conducted on 08th September 2024.

LEGENDS
A Sage Ambalavanar did a penance of Shiva for the Natarajar darshan. Satisfied with the penance, Shva gave Natarajar darshan to Sage Ambalavanar. Hence the the temple is called as Ambalavanar temple.

In another legend, Karuvur Siddhar prayed to worship Tirunelveli Nellaiappar at this temple. Tirunelveli Nellaiappar with Kanthimathi gave darshan at this place. Hence, Shiva and Ambal are called Nellaiappar and Kanthimathi.

POOJAS AND CELEBRATIONS
Apart from regular poojas, special poojas are conducted on Avani Moola Thiruvizha (September), Arudra, etc.

TEMPLE TIMINGS
The temple will be kept open from 06.00 hrs to 12.00 hrs and from 16.00 hrs to 19.00 hrs.

CONTACT DETAILS
The priest Sivan Perumal may be contacted on his mobile number +919750787401 may be contacted for further details.

HOW TO REACH
The temple is about 500 meters away from Sankarankoil, Puliangudi, to Tirunelveli.
The temple is about 17.3 km from Tirunelveli Junction, 40.5 km from Sankarancoil, 52.8 km from Tenkasi, and 57.5 km from Kovilpatti.
The nearest Railway Station is Tirunelveli Junction.

LOCATION OF THE TEMPLE: CLICK HERE








Temple tank with the old temple Chariot's rope
--- OM SHIVAYA NAMA---