Tuesday, 1 May 2018

Sri 1008 Adinath Bhagwan Digambar Jain Temple at Arpakkam & Tirthankara at Kanikilluppai, Kanchipuram District, Tamil Nadu.

9th April 2018
After seeing the photo of a Tirthankara posted by Dr Ma. Selvapandiyan, contacted him to get more details. He told me the details of this Tirthankara and advised me to visit the Arpakkam, Sri Adinath Digambar Jinalaya also, which is very close to the place I intended to Visit. He also gave the route to reach these places. Visited this temple second times as a part of REACH Epigraphic field Visit on 26th February 2023. Some of the details like architecture, Inscription details are added after the second visit. 


When I grazed google map, I could spot 3 Jinalayas at Magaral, Kanikilluppai and Arpakkam. Planned to visit all the three temples but could not visit Magaral for want of time. When I reached Kanchipuram it was around 07.30 hrs. Visited Sri Abiramesuvarar Temple, Sri Kamakshi Amman Temple and Sri Ekambareswarar temple. Due to Chitra pournami, there were heavy crowd in all the temples and vehicle traffics were diverted. The vehicles moved in snail space. So Visited all the temples by walk. 

It was around 11.00 Hrs took a Uthiramerur bus to Arpakkam. Got down at Arpakkam Bus stop and started walking towards the temple assuming the Jeenalayam might be  very near. Already the sun showed its harsh face and my chapel also gave trouble. Under the scorching sun, without any trees shade on the side of the road to rest and problem in the legs found very difficult to walk the distance of 1.5 KM. Managed to reach the Jeenalayam around 12.00 hrs. Luckily the temple was not closed and Abhishekam to Sri Adinath was in progress. Had the darshan of Sri Adinath. The same story continued  on return also.


மீபத்தில் முனைவர் ம. செல்வ பாண்டியன் அவர்கள் கனிகிளுப்பை கிராமத்தில் இருக்கும் தீர்தங்கரர் மற்றும் புத்தர் சிற்பங்களைப் பதிவிட்டு இருந்தார். அதுபற்றிய விபரம் செல்லும் வழி ஆகியவற்றையும் அவரைத் தொடர்புகொண்டு அறிந்து கொண்டேன். ஒரு வாரத்திற்கு முன்பே 29ந் தேதி ஞாயிறு செல்வதென்றும், அப்படி செல்லும் போது காஞ்சியில் உள்ள புத்தர் சிலைகலையும் காணுவது என்றும் தீர்மானித்து இருந்தேன். 29ந்தேதி ஞாயிறு அன்று சித்திரை மாத பௌர்ணமி தினம் ஆனதால் காஞ்சியில் உள்ள எல்லா கோவில்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. அதன் விளைவாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டு நத்தை வேகத்தில் ஊர்ந்து சென்றன. ஸ்ரீஅபிராமேசுவரர் கோவில், ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் அனைத்திற்க்கும் கால் நடையாகவே சென்று விட்டு சுமார் 11 மணியளவில் ஆர்பாக்கம் ஆதிநாதரை தரிசிக்க உத்திரமேரூர் பேருந்தில் ஏறினேன். 

ஆர்பாக்கம் பேருந்து நிறுத்ததில் இருந்து ஸ்ரீ ஆதிநாதர் ஜீனாலயம்  அருகே தான் இருக்கும் என நான் கணித்தது தவறாகிவிட்டது. சுட்டெரிக்கும் வெய்யில், சாலை ஒரத்தில் நிழலுக்கு ஒதுங்க மரங்கள் எதுவும் இல்லாதது, தாகம், காலனி கடித்ததால் ஏற்பட்ட வலி அனைத்தும் 1.5 கிலோ மீட்டர் பயணத்தை மிகவும் சோதனைக்கு உள்ளாக்கியது. ஒரு வழியாக ஜீனாலயத்தை அடைந்தபோது மணி 12. நான் பயந்து சென்றபடி கோவில் மூடப்படவில்லை. ஆதி நாதருக்கு அபிசேகம் நடந்துகொண்டு இருந்தது. நான் கொடுத்து வைத்தவன் ஆதிநாதரின் தரிசனம் பெற. ஆதி நாதரின் தரிசனத்திற்குப் பின்பு கனிகிளுப்பை தீர்த்தங்கரைக் காண தொடர்ந்தது என் பயணம். நீங்களும் வாருங்களேன் ஒன்றாக பயணிப்போம் அவரைக் காண….. 

SRI 1008 ADINATH BHAGWAN DIGAMBAR JAIN TEMPLE AT ARPAKKAM
Once this place was called as “Ariya Perumbakkam”, which got corrupted to the present name as Arpakkam. Also in hymns this place was  called as ‘Pakai”. The Jain monk Uthisi devar who composed “Thirukalamban” in Tamil belongs to this place Arpakkam.

Moolavar : Sri Adinath or Rishabanath or Adhipattarakar.


Some of the important details are…
The temple is facing east with a recently built 3 tier Rajagopuram. The Rajagopuram has the Stucco images of Tirthankaras in sitting posture, Yakshis, Rishabam, Dwarapalakis and Vimanam supporters. An open ground is in front. Dwajasthambam, balipeedam ( Alter ) and Manasthambam are immediately after the Rajagopuram.

The Sanctum sanctorum consists of sanctum, Artha mandapam and a mukha mandapam. There are flight of steps on south and north side of mukha mandapam. On the top of mukha mandapam there is a tirthankara with samaratharis on both sides. The ardha mandapam has the old pillars.


Statues of 24 Tirthankaras, Yakshan, Yakshi are kept in the artha mandapam. Yakshi Dharma Devi is in a separate sannadhi facing south. Moolavar Sri Adinath is about 4 feet tall.

This Photo was taken during my second Visit


There is a statue for  Munisuvirathar, one of the navagraha Tirthankara. It was believed that worshiping Munisu virathar will get relieved from Shani dosham. It was told this Tirthankara statue was donated by one Mr M T Rajendran. In addition to Daily poojas, Maha Shivaratri is being celebrated in a grand manner and devotees from various religions will participate. The Tamil jains also performing the tonsuring and ear boring of their children in this temple. 

ARCHITECTURE
The Temple is constructed with sanctum sanctorum antarala, ardha mandapam and mukha mandapam. The sanctum sanctorum is ona pada bandha adhistanam with 3 patta kumudam. There is no images in kaoshtas. The prastaram consists of valapi, kapotam with nasis and vyyalavari. Eka tala vesara vimanam is on the sanctum sanctorum. Stucco images of Tirthankara images with their attenders are in the greeva koshtam. 

Sanctum Sanctorum adhisthanam

HISTORY AND INSCRIPTIONS
As per the inscriptions, the jinalaya belongs to 10th century CE, got grand / pallichantham of Land & gold coins  from the Kings. A 11th to 12th Century inscription is found on the Adhisthanam.

A 1929, inscription on the sanctum sanctorum wall records gift of land situated in the same village under survey no 61-1 for Akshayathirithiyai pooja to Arpakkam Sri Adhipattakarar, by Annamangalam ParsuSakara Swamyar.
  
Akshayathirithiyai pooja Gift inscription
Iraththa miNdan...?
A 11th to 12th Century inscription 

HOW TO REACH:
This place Arpakkam is about 15 KM from Kanchipuram.
Kanchipuram to Uthiramerur buses pass through this place.
The temple is about 1.5 Km from Arpakkam bus stop.

LOCATION:CLICK HERE

REFERENCE: A book on “Arivom Samanam” in Tamil by VijiChakravarthy. ( Thanks ma..)

ஆதிபட்டாரகர் ஜீனாலயம் – ஆற்பாக்கம்.
இவ்வூர் முதலில் ஆரியப் பெரும்பாக்கம் என்று அழைக்கப்பட்டு மறுவி தற்போது ஆர்பாக்கம் என்று அழைக்கப்படுகின்றது. தோத்திர நூல்களில் பாகை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழில் திருக்கலம்பகம் எழுதிய உதீச சமண முனிவர் இந்த ஊரைச் சார்ந்தவர்.

மூலவர்: ஸ்ரீ ஆதிபட்டாரகர், ஸ்ரீ ஆதிநாதர் மற்றும் ஸ்ரீ ரிஷபநாதர் 

இந்த ஜீனாலயத்தைப் பற்றிய முக்கிய தகவல்கள்..
கோவில் கிழக்கு நோக்கி மூன்று நிலை ராஜகோபுரத்துடன் உள்ளது. கோபுரத்தில் சுதை சிற்பங்களாக தீர்தங்கரர்கள், ஆதிநாதரின் லாஞ்சனமான ரிஷபம், துவாரபாலகிகள், விமானம் தாங்கிகள். ராஜகோபுரத்தை தாண்டிய உடன்  கொடிமரம், பலிபீடம், மானஸ்தமபம். ஜீனாலயம் கருவரை, அர்தமண்டபம் மேலும் முகமண்டபம் என்ற அமைப்பில் கட்டப்பட்டு உள்ளது. முகமண்டபத்தின் மேல் முகப்பில் சாமரதாரிகளுடன் தீர்தாங்கரர் உருவமும் பதிக்கப்பட்டு குடைவறை அமைப்பில் உள்ளது. முக மண்டபத்திற்கு மேல்  செல்ல தெற்கு மற்றும் வடக்கு புறங்களில் இருந்து படிகள் அமைக்கப்பட்டுள்ளது.  மூலவர் சுமார் 4 அடி உயரம். அர்த்த மண்டபத்தில் 24 தீர்த்தங்கரர்கள், இயக்கர், இயக்கிகளின் உலோக சிலைகள் உள்ளன. தருமதேவிக்கு சிறப்பான பூசைகள் நடத்தப்படுகின்றது.

  

நவகிரக தீர்த்தங்கர்களில் ஒருவரான முக்குடைமாதவன் முனிசுவிரதர் பகவான் சிலை எம் டி ராஜேந்தரன் என்பவரால் அர்பணிக்கப்பட்டதாக கூறுகின்றனர். இந்த தீர்த்தங்கரரை வணங்க சனியின் ஆட்சியில் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சமண சமயம் சார்ந்த அன்பர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு முடிஇறக்குதல் ( மொட்டை அடித்தல் ), காது குத்து போன்ற சுப நிகழ்வுகளை இங்கு நடத்துகின்றனர். மஹாசிவராத்திரி இங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அவ்விழாவில் எல்லா மதத்தினரும் கலந்து கொண்டு “ஒற்றுமை வேற்றுமை ஒன்றிலே கண்கொனா சொற்றவர்! பாகைவாழ் சோதியே! ஆதியே! செற்றமும் பற்றுமே சீர்கெடச் செய்திடும் அற்றமே நோக்கிலேன் ஆதி பட்டாரகா!” என போற்றுகின்றனர்.

கல்வெட்டு தகவல்கள்
கல் வெட்டு தகவல்களின் படி இந்த ஜீனாலயம் 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது எனவும், அரசர்களால் நிலங்களும் தங்க காசுகளும் நிவந்தமாக பள்ளிச்சந்தமாக  அளிக்கப்பட்டது எனவும் அறிய முடிகின்றது. 11-12 ஆம் நூற்றாண்டு  கல்வெட்டு அதிட்டானத்தில் காணப்படுகின்றது.

1929.. வருடம் ஜனவரி மாதம் 24ந்தேதி அண்ணமங்கலம் பார்சுசாகரசுவாமியார் அவர்களால் ஆர்பாக்கம் ஸ்ரீஜிநாலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீஆதிபட்டாலகர  சுவாமியாருக்கு அக்ஷயதிரிதியை பூஜைக்காக ஷை யூர் சர்வே நம்பர் 61-1 ல் ஏர்-33 செண்டு நிலத்தை ஷை சுவாமியாருக்கு ஷை பூஜைக்கு தானமாக விடப்பட்டது

ஜீனாலயத்தை அடைய…
ஆர்பாக்கம் காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலையில் 15வது கிலோமீட்டரில் உள்ளது.
ஜீனாலயம் ஆர்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவு.




   
  (Pic Courtesy : Ahimsaiyathirai.blogspot)
 (Pic Courtesy : Ahimsaiyathirai.blogspot)

After darshan of Sri Adhinathar at Arpakkam returned to Arpakkam bus stop and took a bus to Kuruvimalai. ( Spotted some share autos while I was travelling to Arpakkam from Kanchipuram. ). After negotiation a share auto driver agreed  to took me to Kanikilluppai. Since the driver didn’t know the route and Google map  helped us to reach the place. The person, who takes care of the Vinayagar temple was kind enough to open the doors of the temple. Had the darshan of Tirthankara and Buddha ( Buddha will be covered in a separate post ). After Dharshan the same auto driver dropped me at Kanchipuram to catch bus to Chennai.

ஆர்பாக்கம் ஸ்ரீ ஆதிநாதர் தரிசனத்திற்க்கு பின்பு என்னுடைய அடுத்த பயணம் கனிகிளுப்பை தீர்தங்கரரை நோக்கி. ஆர்பாக்கத்தில் இருந்து பேருந்து மூலம் குருவிமலை என்ற இடத்தை வந்தடைந்தேன். ஏற்கனவே இந்த வழியாக சென்றபோது பகிர்வு ஆட்டோக்கள் ஒடியதைக் கவனித்து இருந்தேன். ஒரு ஆட்டோ ஓட்டுனர் கனிகிளுப்பை வர சம்மதித்தார். கூகுல் வரைபடத்தின் மூலம் நான் வழிகாட்ட ஒருவாறு கனிகிளுப்பை கிராமத்தை சென்றடைந்தோம். வினாயகர் கோவிலின் காப்பாளர் எங்களுக்கு கோவிலை திறந்து காட்டி விபரங்களும் கூறினார். மனதில் ஒரு சந்தோசம் பல நூற்றாண்டுகளைக் கடந்த தீர்தங்கரரை தரிசிப்பதற்கு. என்னை அழைத்து வந்த அதே ஆட்டோ ஓட்டுனர் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டார், சென்னைக்கு பேருந்து பிடிக்க.

TIRTHANKARA  AT KANIKILLUPPAI.
This Tirthankara came to this world again after many hundreds of years meditation under a field bund of this Village called KaniKilluppai. This Tirthankara was chiseled out of sand stone similar to the stone used in Kailasanathar Temple of Kanchipuram. Due to aging and nature of the stone the statue was eroded to maximum. The Tirthankara could not be identified, since he was damaged heavily. The Tirthankara is installed in a Vinayagar Temple along with A Buddha.

அடுத்ததாக நான் சென்றது கனிகிளுப்பை என்ற கிராமத்தை நோக்கி. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வயலில் புதையுண்டு சமீப காலத்தில் வெளி உலக்குக்கு வந்து இருக்கும் தீர்தங்கரரிக் காண.. இந்த தீர்த்தங்கரர். காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் உபயோகப்படுத்திய மணற்கல் போன்ற கல்லால் செதுக்கப்பட்டது. காலத்தாலும், பல நூற்றாண்டுகளாக மண்ணிலும் சேற்றிலும் புதையுண்டு கிடந்ததாலும் அதிகமாக சேதம் ஏற்ப்பட்டு உள்ளது. இதனால் இவர் எந்த தீர்தங்கரர் என்று இனம் காண கூடவில்லை. இந்த தீர்தங்கரர் அந்த ஊரின் வினாயகர் கோவிலில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள புத்தருக்கு அருகே கிழக்கு அமர்ந்து அருள்பாலிக்கின்றார். ( புத்தர் பற்றிய பதிவு தனியாக இடப்படும் ).


---OM SHIVAYA NAMA---

5 comments: