Thursday, 20 September 2018

Neminath and Parshwanath Jinalaya on Thirumalai Hill near Arani, Thiruvannamalai District, Tamil Nadu.

15th September 2018.
This Thirumalai Jain complex visit was a part of Arani Heritage Visit, organized by Mr Mohan Hariharan, an architect and a Heritage enthusiast. This Thirumalai Jain complex consists of Jinalayas on the top  and bottom of the Thirumalai Hill, near Arani. This place was originally called in different names like Vaigavur, Srisailapuram, Arahanthagiri etc,.

ஆரணி அருகே உள்ள திருமலை சமண ஜினாலயங்கள் தொகுப்பினைக் காண செப்டம்பர் மாதம் 15ந்தேதி கட்டிடகலை நிபுனரும், வரலாற்று ஆர்வலருமான திரு மோகன் ஹரிஹரன், அவர்களால்   ஏற்பாடு செய்யப்பட்ட ஆரணி மரபு நடையில் 20 வரலாற்று ஆர்வலர்கள் கலந்து கொண்டோம். நாங்கள் முதலில் சென்றதும் அங்குதான். மலையின் மீது இரண்டு ஜினாலயங்களும் மலையின் அடிவாரத்தில் இரண்டு ஜினாலயங்களும் உள்ளன. இம்மலை அடிவார கிராமம் வைக்காவூர், ஸ்ரீசைலபுரம், அறகந்தகிரி என பலவாறாக அழைக்கப்படுகின்றது.
  
THIRUMALAI HILL TOP
SRI NEMINATHA TIRTHANKARA
Nearly 150 steps are constructed and about 100 steps chiseled on the rock, to reach the top of the hill from west. The Jain monuments are located on three levels. In the first level, Neminath Tirthankara’s bas-relief, facing south was engraved on a the vertical surface of the hill. Neminath is 16.5 feet tall standing on a Lotus with 17 petals. This Neminath is one of the Tallest bas relief Tirthankara in South India. The Sculpture is very simple with out any intricate floral carvings.  The protection sanctum was constructed at a latter date. It was believed that this Naminath was carved by Rajaraja Chozha’s elder sister Kundhavai. But somebody claims this Neminathar belongs to 12th Century ( A Direct proof is not available  ). Neminath is also called as “Sikamani Nathar”, since Rajaraja was also called Sikamani. As per ARE report a Chozha period inscription was found in the dilapidated mandapa.

நேமிநாதர்.. நேமிநாதர் புடைப்புச் சிற்பமாக செங்குத்தான பாறை மீது செதுக்கப்பட்டு உள்ளார். ராஜராஜ சோழனின் ஒரு பெயரால் சிகாமணிநாதர் என அழைக்கப் படுகின்றார். இப்புடைப்பு சிற்பம் 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பது அறிஞர்களின் கருத்து. ராஜராஜனின் தமக்கையார் குந்தவையால் செய்து வைக்கப்பட்டது என்ற கருத்தும் உண்டு. தென் இந்தியாவின் உயரமான நேமிநாதர் சிலை எனக் கொண்டாடப்படும் இவர் பதினாறரை அடி உயரத்தில், 17 இதழ்கள் கொண்ட தாமரை மலர் மீது நின்ற கோலம் இருக்கின்றார்.


 
SRI PARSHWANATH JINALAYA
The steps further leads to Sri Parshwanatha Jinalaya with a simple sanctum and Vimana, after crossing the big globe shaped boulder, (called as butter ball, similar to Mamallapuram). The sanctum is facing east.  Sri Parshvanath is in standing posture under mukkudai and 5 head snake. The snake’s body and tail are shown on the side of the Tirthankara’s image.  It was told the this Parshwanath may belongs to 13th to 14th century AD and the Jinalaya was constructed in recent years.

அடுத்து மலை மீது உருண்டையான பறையைக் ( மகாபலிபுரத்தில் இருக்கும் வெண்ணை உருண்டை போன்ற தோற்றமுடைய கற்பாறை) கடந்து சென்றால் வருவது கிழக்கு நோக்கிய பார்சுவநாதரின் மிகச்சிறிய ஜினாலயம். கருவரை அதனுடன் விமானம் மட்டும். பார்சுவநாதர் முக்குடையுன் 5 தலை நாகக் குடையின் கீழ் நின்ற கோலம்.  மிகப் பழமையானவராகவும் (13 – 14 ஆம் நூற்றாண்டு), ஜீனாலயம் சமீபத்திய காலத்தைப்போல தோற்றம் அளிக்கின்றது. பாம்பின் உடற்பகுதியும் வாலும் பார்சுவநாதரின் பின்புறம் நன்றாகத் தெரிகின்றது.



SRI PAD ( FOOT PRINTS )
There are three sets of padhams / Foot prints engraved on the top of the hill with a later period inscription by ASI. It was told that the foot prints, belongs to Sri Veshbhacharaya, Sri Samantbhadra charaya and Sri Vardutt Gandhar Jain monks who took sallekhana / fast unto death. These foot prints are engraved under Devaalari tree ( plumeria rubra ), such that flowers falls in pads. It was a beautiful and awesome view of the tank, plains, mountains and the Village from the top of the hill.

மலை உச்சியின் மீது மூன்று ஜோடி பாதங்கள் வெட்டப்பட்டு உள்ளன. இவை ஸ்ரீவேஷ்பாச்சாரியா, ஸ்ரீசமந்த்பாத்ராச்சாரியா மற்றும் ஸ்ரீவர்தத் கந்தர் ஆகிய சமண முனிவர்களுக்கானது எனவும் இவர்கள் சமண சமயத்தின் படி சல்லேகனை ( உண்ணா நோன்பு) இருந்து முக்தி அடைந்தவர்கள் எனவும் கூறப்பட்டது. இவற்றின் அருகே தேவ அரளி என அழைக்கப்படும் மரங்கள் பாதங்களின் மீது மலர் சொரியும் வன்னம் நடப்பட்டு உள்ளது.



HOW TO REACH :
Thirumalai is about 5 KM from Vadamathimangalam Railway station on Arani to Polur Road.
Thirumalai is about 14 KM from Arani, 45 KM from Vellore and 120 KM from Chennai
Share Autos are available from Vadamathimangalam X Road on Arani to Polur Road.

LOCATION:CLICK HERE
---OM SHIVAYA NAMA---

No comments:

Post a Comment