This
is the 240th Thevaram Paadal Petra Shiva Sthalam and the 123rd Sthalam
on the south side of the river Kaveri in Chozha Nadu. Now this place is called Thirukkuvalai. This is one of the temples where Moovar has sung about Lord Shiva
of this temple. This temple is popularly known as “Thirukkuvalai Thyagaraja
Temple”.
In Periyapuranam, Sekkizhar records that
Thirugnanasambandar came to this temple
after worshiping Lord Shiva of Thiruvalivalam. In Thirunavukkarasu Swamigal Puranam, Sekkizhar didn’t mention this temple in particular, but he visited
this temple on the way to Thiruveezhimilali from Thirumaraikadu.
மல்லல்
நீடிய வலிவலம் கோளிலி முதலாத்தொல்லை
நான்மறை முதல்வர் தம் பதிபல தொழுதேஎல்லையில்
திருப்பதிகங்களால் பணிந்து ஏத்திஅல்லல்
தீர்ப்பவர் மீண்டும் ஆரூர்தொழ அணைந்தார்......
திருஞானசம்பந்தர் புராணம்
Thirugnanasambandar,
Thirunavukkarasu Swamigal, Sundarar, and Vallalar have sung hymns in praise of
Lord Shiva of this temple.
நாளாய
போகாமே நஞ்சணியுங் கண்டானுக்கேஆளாய
அன்புசெய்வோம் அடல்நெஞ்சே அரநாமம்கேளாய்நம்
கிளைகிளைக்கும் கேடுபடாத் திறம் அருளிக்கோளாய
நீக்கும் அவன்கோளிலிஎம் பெருமானே.....
திருஞானசம்பந்தர்மைகொள்
கண்ணுமை பங்கின் மான்மழுத்தொக்க
கையினன் செய்யதோர் சோதியன்கொக்க
மர்பொழில் சூழ்தரு கோளிலிநக்க
னைத் தொழ நம்வினை நாசமே.......
திருநாவுக்கரசு சுவாமிகள் கொல்லை
வளம்புறவில் திருக் கோளிலி மேயவனைநல்லவர்
தாம்பரவும் திருநாவல வூரன்அவன்நெல்லிட
ஆட்கள்வேண்டி நினைந்து ஏத்திய பத்தும்வல்லார்அல்லல்
களைந்துலகில் அண்டர் வானுலகு ஆள்பவரே.....
சுந்தரர்கோளிலியப்பர்
குணமூன்று டையார் தம்தோளிலுலாமாலை
சூட்டுதற்கு – வாளவுணன்கற்பக
வேல் தொட்ட கடவுட்கு முன்வந்த கற்பகத்தின்
பொற்கழல்கள் காப்பு....
திருக்குவளை தியாகரஜசுவாமி உலா- விநாயகவணக்கம் -“நெற்சுமக்கஆளிலை
என்று ஆரூரனார் துதிக்கத் தந்தருளுங்கோளிலியின்
அன்பர் குலங்கொள் உவப்பே”.....
திரு அருட்பாMoolavar : Sri Brahmapureeswarar, Sri Kolilinathar,
Sri Kolili Natheswarar.Consort : Sri Vandamarpoonguzhali.
Some
of the salient features of this temple are ……The
temple faces east with a 5-tier Rajagopuram. The sthala purana stucco image
is on the Rajagopuram. Dwajasthambam, balipeedam, and Rishabam are in a
mandapam. Stucco images in the form of an arch at the entrance of the sanctum
sanctorum. Moolavar is of swayambhu made of sand. In the koshtam, Arthanareeswarar,
Brahma, Durgai, Uma Maheswarar, Natarajar, Narthana Ganapathy, Pichadanar,
Dakshinamurthy, Maha Vishnu with sangu and chakram.
In the praharam, Sundarar with his wife Paravai, Thyaga Vinayagar, Viswanathar,
Visalakshi, Indira Pureeswarar, Chokkalingam, Annamalaiyar, Nalvar, Mahalakshmi,
Navagrahas (all are facing south direction in a single row), and Shivaloka
Vinayagar (who showed Siva loka to Hemakantha Munivar).
This temple, Thyagaraja, is
the second to Thiruvarur Thiyagarajar. This is also one of the Saptha Vidanga sthalam (Avani Vidangar and Dance is Birunga Nadanam). Utsavar is
Chandrasekar.
ARCHITECTUREThe
temple complex consists of the sanctum sanctorum, antarala, ardha mandapam, and a
mukha mandapam. An eka tala stucco vesara vimana is in the sanctum.
HISTORY AND INSCRIPTIONSThis
is one of the Mada Temples constructed by Ko Chenkat Chozhan. Since
Thirugnanasambandar has sung hymns in praise of Lord Shiva of this temple, the
original temple might have existed
before the 7th Century, and the same was reconstructed as a stone temple
by the Chozhas and further extended by the Pandyas and Vijayanagara Nayakas.
The
inscriptions recorded from this temple belong to the Chozhas and the Pandyas. As per
the inscriptions, Lord Shiva was called “Thirukolili Udaya Nayanar,” and
Thiagarajar was called “Avani Vidanga Thyagar”. The temple’s north street
was called “Thirumaraikadan Street”. This place was in Rajendra Chozha
Valanattu Idayalanattu Vendalai Velur Kootram.
During the Jadavarman Sundara Pandyan period, the Maha mandapa was built by Vadavallathu Irukudiyan Indrapathinallur Uyyavanthan Chiyyalai Pillai, alias
Jayathungavarman.
The
Pandya king Sadayavarman Sundara Pandyan’s 8th reign year
inscription records that, due to a flood in the Chandramouli river, the south
bank was breached and the water entered the Temple on the north
thiruveedhi. To drain the flood water, Palaikuruchi Udayar Thirumaraikadudayan
diverted the river water by making the north bank the south bank at the limit of
Kundaiyur Village. Due to this, the thirunamathukani land belonging to the temple
was taken for diversion. To compensate for the same, he had given a gift of 2 veli lands belonging to him, which were at
Parameswara Chaturvedi Mangalam. The Thiruveedi and the Vaikal/channel were named
after him as “Palaikuruchi Udayar Thirumaraikadudayan”.
Rajaraja
Chozha III’s 4th year reign inscription records that the Athipaththanayanar
image/idol was established by Alan, who belongs to “Sivanbadavar” (Chembadavar
Community). For the same, 2100 kasu was collected (begging) from his
community, and the money was handed over to Ayyanaippa Bhattan’s son Dhamothara
Bhattan. From the interest earned, 2 nazhi paddy is to be arranged for Athipaththa
Nayanar’s image worship and naivedyam.
"ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள்ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு 4 ஆவதுமார்கழி மாதத்தொருநாள் உடையார்திருக்கோளிலி உடையார் கோயிலில்முன்னாளில் சிவன்படவரில் ஆலன்எழுந்தருளிவித்த அதிபத்த நாயனார்க்கு"
Rajendra
Chozha-III’s 35th reign year inscription records the endowment
Thiruveethiuzha / procession, on his birth star Kettai day, by Pandya nadu
Chozha Pandya mandalathu Mathurothayavalanattu, Palaikuruchi Udayan Akayan
Thirumaraikadudayan. After the procession, the Utsavar will be kept, and Pooja will
be conducted in the “Thirumaraikadudayan mandapam”. For those days, naivedyam,
Sathupadi, burning lamps, Thirupallithamam / Garland, and donations are made, and
details are not known since the inscription was damaged in those portions.
Most
of the Chozha period inscriptions record the endowment of burning perpetual
lamps with ulakku oil, 91 nazhi oil per year, Naivedyam, sacred bath, etc. For the same money, like 1000 kasu, 800
kasu, 140 kasu, 260 panam, 100 panam, paddy, Gold, and lands were donated to
this temple. Some of them were received by the devotees of the temple, and one
inscription mentions “Kaniudaya Muppathu Vattathu Kaniudaya Sivabramins”.
These inscriptions record that lands are held by the Siva Brahmins as Irayili, ie, Tax-free. Also, there was a madam called “Thirugnanasambandar madam” who existed
in the village.
This
is one of the temples under the administrative control of Dharmapura Adheenam.
Maha Kumbhabhishekam was conducted in January 1999.
The Maragatha Lingam is one of the Saptha Vidanga Lingas (believed to have been brought by Rajendra Chozha from an East Asian Country). The Maragatha Lingam was stolen, and the same
was recovered by the Tamil Nadu Police.
மூன்றாம் இராஜேந்திரனின் 40 ஆம் ஆட்சியாண்டு,
பொயு 1250 ஆம் ஆண்டு, தியாகராஜசுவாமி கோயில் கருவறை வடக்குச்சுவரில்
உள்ள கல்வெட்டு இராஜேந்திரசோழ வளநாட்டு இடையள நாட்டு
திருக்கோளிலியில் உடையார் திருக்கோளிலி உடையாருக்குத் தைப்பூசம், வைகாசி (விசாகம்?) திருவிழா நடத்துவதற்கும்,
அந்நாளில் திருவெழுச்சி (திருவீதியுலா) நடத்துவதற்கும், பெரியகுடி, வடபெரியகுடி ஆகிய ஊர்களின் ஊரவர்,
நிலம் இறையிலியாக அளித்ததைப் பதிவு செய்கின்றது. தொடக்கம் கிடைக்கவில்லை.
மூன்றாம் இராஜராஜனின் 4 ஆம் ஆட்சியாண்டு, பொயு 1220 ஆம் ஆண்டு,
தியாகராஜசுவாமி கோயிலின் மகாமண்டப வடக்கு, மேற்கு ஜகதிப்படையில் உள்ள கல்வெட்டு திருக்கோளிலி
உடையார் கோயிலின் சிவன்படவர் இனத்தைச் சேர்ந்த ஆலன் என்பான் முன்னாளில் அதிபத்தநாயனாரை
எழுந்தருளுவித்தான். இவனது இனத்தைச் சார்ந்தவர்களிடம் தற்போது அவன் இரந்து
கேட்டுப் பெற்ற 2100 காசுகளை, ஐய்யனய்ய
பட்டன் மகன் தாமோதரபட்டனிடம் அளித்து, அதன்மூலம் அதிபத்த
நாயனாரின் வழிபாட்டுக்கு (திருப்படிமாற்று) தினந்தோறும்
இருநாழி அரிசியினை வழங்க ஏற்பாடு செய்ததைப் பதிவு செய்கின்றது.
இரண்டாம் இராஜாதிராஜனின் 1(8) ஆம் ஆட்சியாண்டு பொயு 1184 ஆம்
ஆண்டு, தியாகராஜசுவாமி கோயிலின் மகாமண்டப வடக்கு, மேற்குப்புற ஜகதியில் உள்ள கல்வெட்டு, திருக்கோளிலி
உடையார்க்கு, நெந்தா விளக்கெரிக்க அளித்த 100 காசுகளைப் பெற்றுக் கொண்ட சிவப்பிராமணர்கள் நாளுக்கு எண்ணெய் உழக்காக,
ஆண்டுக்கு 91 நாழி உழக்கு நெய்யளிக்க
வகை செய்ததைக் குறிக்கிறது.
மூன்றாம் குலோத்துங்கனின் 20 ஆம் ஆட்சியாண்டு பொயு 1196 ஆம்
ஆண்டு, தியாகராஜர் கோயில் மகாமண்டப வடக்கு, மேற்குப்புற அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு, திருக்கோளிலி
உடையார்க்குத் திருச்சாட்டியக் குடியுடையான் 800 காசுகள்
கொடுத்து விளக்கெரிக்கச் செய்த ஏற்பாட்டைக் குறிக்கிறது. முப்பது வட்டத்துக் காணியுடையார்
அதனைப் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்கச் சம்மதித்ததைப் பதிவு செய்கின்றது.
மூன்றாம் குலோத்துங்கனின் 4 ஆம் ஆட்சியாண்டு,
பொயு 1181, ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயிலின் மகாமண்டப மேற்குக்
குமுதத்தில் உள்ள கல்வெட்டு குலோத்துங்க சோழக்
கச்சியராயர் என்பார், 100 காசுகளை அளித்து ஒரு திருநுந்தா
விளக்கு எரிப்பதற்கு நாள் ஒன்றுக்கு உழக்கு எண்ணெய் வீதம், ஆண்டின் 365 நாள்களுக்கும் 91 நாழி எண்ணெய் அளக்க ஏற்பாடு செய்ததைக் குறிப்பிடுகிறது.
சிவப்பிராமணர்கள் வழிவழியாக இதனைச் செய்ய ஒத்துக் கொண்டதையும் பதிவு செய்கின்றது.

கல்வெட்டுக்களின் தொடர்ச்சி இப்பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டு உள்ளது.References
1. Annual Report on South Indian Epigraphy, year 1950 – 51
2. தமிழ்நாடுக் கல்வெட்டுகள் வரிசை
எண் 29, நாகப்பட்டிண மாவட்டக் கல்வெட்டுகள்
LEGENDSMoolavar
is of white sand and always covered with Kuvalai; hence this place is called Thirukkuvalai. Maha Vishnu, Brahma, Indra, Agathiyar, Musukunthan, Pancha
Pandavas, Navagrahas, and King Hemantha.
It is believed that all Vidanga
Shiva Lingas were gifted by Indra to Musikunta Chakravarthy, and he installed them in
7 temples around Thiruvarur. Vidanga means made without using a chisel. This is
one of the Saptha Vidanga Sthalam. The details are... (The others are
Thiruvarur – Veedhi Vidangar, Ajapa Natanam, Nagapattinam (Nagai Karonam), Sundara Vidangar, Vici Nadanam, Thirukaravasal – Adi Vidangar, Kukkuda nadanam,
Thirukkuvalai (Thiru Kolili) – Avani Vidangar, Brunga nadanam, Thirunallar –
Nagara Vidangar, Unmatha nadanam, Thiruvaimur – Nilla Vidangar, Kamalana
nadanam, and Vedaranyam (Thirumaraikadu) – Bhuvai Vidangar, Hamsapada nadanam.
Brahma
worshiped Lord Shiva in this temple. To get rid of dosham (Brahmahathi dosha)
by killing Bahasuran, in continuation of the Lingothbavar episode, Brahma was
cursed. Due to this, the creation was stopped, and the actions of the Navagrahas were
also paralysed. Brahma came to this temple, created the Brahma Theertha, and
worshiped Lord Shiva to get relief from the curse. Hence, Lord Shiva is
praised as “Brahmapureeswarar”
Beeman
worshiped the Lord of this temple to get rid of the Brahmahathi dosha by killing
the demon Bahasuran. The stucco image of Bahasuran and Brahmahathi is in the
Rajagopuram. The sthala vruksham is "Thetha maram".
As
per Sundarar’s hymns and Sekkizhar’s Periya Puranam, Sundarar used to do annadhanam at Thiruvarur. Kundaiyur Kilan used to offer paddy to Sundarar. Once
he did not have anything to offer. In his prayer, Lord Shiva gave
him paddy in the form of a hill. Sundarar prayed to Lord Shiva and got
people to shift the paddy to Thiruvarur.
நீள
நினைந்தடியேன் உனை நித்தலும் கைதொழுவேன்வாளன
கண்மடவாள் அவள் வாடி வருந்தாமேகோளிலி
எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்ஆளிலை
எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே
POOJAS AND
CELEBRATIONSApart from regular poojas, special
poojas are conducted on Vinayagar Chathurthi in the month of Avani (Aug – Sept),
Navaratri in the month of Purattasi (Sept-Oct), Annabhishekam in the month of Aippasi (Oct – Nov), Thirukarthigai in the month of Karthigai (Nov – Dec),
Thiruvathirai and Sundays in the month of Margazhi (Dec – Jan), Thaipoosam in
the month of Thai (Jan – Feb), Masi Mahan “Nel atti chillum thiruvizha”, Maha
Shivaratri in the month of Masi (Feb – March), Musukuntha archana, Vasantha
Utsavam, and monthly pradosams.
TEMPLE TIMINGSThe
temple will be kept open from 07.00 hrs to 11.00 hrs, and from 17.00 hrs to
20.00 hrs.
CONTACT
DETAILSThe
mobile number +919486446358 may be contacted for further details.
HOW TO REACHOn
the bus route from Thiruvarur to Ettukudi, before Ettukudi.From Thiruvarur
to Vedaranyam, the bus passes through this village.The
temple at Thirukkuvalai is 16 km from Thiruthuraipoondi, 23 km from Thiruvarur,
35 km from Mannargudi, 45 km from Vedaranyam, and 328 km from Chennai The nearest
Railway Station is Thiruthuraipoondi, and the Junction is Thiruvarur.
LOCATION OF
THE TEMPLE: CLICK HERE
The Maragatha Linga was stolen and recovered.கல்வெட்டுக்களின் தொடர்ச்சி….மூன்றாம் இராஜராஜனின் 23 ஆம் ஆடியாண்டு, பொயு 1269 ஆம் ஆண்டு,
தியாகராஜர் கோயில் மகாமண்டப மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு,
பாண்டிகுலாசனி வளநாட்டு ஆர்க்காட்டுக் கூற்றத்து சிற்றார்க்காடு
கிழான் அரையன் கிடாரத்துப் பிள்ளை ஆன சேரகோனும், ஆளவந்தானான
விசையாலயனும் உள்ளிட்ட சிலர், வண்டாழை வேளூர்க்
கூற்றத்துத் திருக்கோளிலி உடையாருக்கு, வல்லைக் கூற்றத்தில்
குடிநீங்கா தேவதானமாகவும், திருநாமத்துக் காணியாகவும் நீர்வார்த்து
அளித்த நிலக்கொடையைக் குறிக்கிறது. நிலத்தின் எல்லைகளும் பதிவு செய்கின்றது. அதன் வழி, இவ்வூரில் கைலாசமுடையார் கோயில் திருவிருப்பு,
புரவரி வினாயகப் பிள்ளையார் திருவிருப்பு ஆகிய பகுதிகளும் இருந்தது
தெரிய வருகின்றன. கொடையாளர் பெயர்கள் இறுதியில் சிறுமாற்றத்துடன், ஆர்க்காடு கிழான் சொக்கன் என்றும், விசையராயன்
என்றும் காணப்படுகின்றன.
பொயு 13 ஆம் நூற்றாண்டு திரிபுவனச் சக்கரவத்திகள், தியாகராஜர் கோயில் மகாமண்டப மேற்குச் சுவரில் உள்ள துண்டுக் கல்வெட்டு, மேல் முயங்கூருடையான்
காசு கொடுத்ததைக் குறிப்பதாகத் தெரிகிறது.
மூன்றாம் குலோத்துங்கனின் 12 – 13 ஆம் நூற்றாண்டு தியாகராஜர் கோயில் மகாமண்டப மேற்குச் சுவரில் உள்ள, பெரிதும் சிதைந்த கல்வெட்டு, மூவாயிரவன்,
செல்வபட்டன் ஸ்ரீதரகேசவபட்டன், தில்லை
நாயகபட்டன் போன்றோரின் காணியுரிமை தொடர்பான ஆவணமாகத் தெரிகிறது.
பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டு, பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தர
பாண்டியனின் 10+1 ஆம் ஆட்சியாண்டு, தியாகராஜர் கோயில் மகாமண்டப
நுழைவு வாயிலில் உள்ள கல்வெட்டு, மாங்குடையான் விச்சாதிரன்
அல்லது பிச்சன் கணவதி ஆண்டான் என்ற வணிகன், அவனது
நன்மைக்காக, மாதந்தோறும் திருவாதிரை நாளில் இறைவனையும்
தேவியையும் திருவுலாவாக எடுத்து வரச் செய்வதற்காக 260 பணம்
கொடுத்து, ஒன்றே மூன்று மாநிலம் வாங்கி, சண்டேஸ்வர தேவகன்மிகளிடம் ஒப்படைத்தான். அதனைப் பெற்றுக் கொண்டு
அவர்கள் திருவுலாச் செய்யும் பொறுப்பினை ஏற்றதையும்,
பலரும் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளதையும் பதிவு செய்கின்றது.
பொயு 13 ஆம் நூற்றாண்டு பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியனின், தியாகராஜர் கோயில் மகாமண்டப நுழைவு
வாயிலின் வலப்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு, அரசன்
பெயருடன் கல்வெட்டுப் பொறிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
தியாகராஜர் கோயிலின் மகாமண்டப நுழைவு வாயிலின் வலப்புறச் சுவரில்
உள்ள பொயு 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு, வடவல்லத்து இருக்கை
இளையான்குடியான இந்திராபதி நல்லூரைச் சேர்ந்த உய்ய வந்தான் சீகாழிப்பிள்ளை என்னும்
ஜயதுங்கபன்மர், நீராட்டு மண்டபத்தின் நுழைவாயில் தொடங்கி
கிழக்கு வாசல் வரை தளம் அமைத்துக் கொடுத்ததையும், அவரே
சிறுகாலைச் சந்திமுதல், பலிவரை அனைத்துப் பூசை
நேரங்களிலும் 20 விளக்குகள் எரிக்க, 30 பணம் பண்டாரத்தில் கொடுத்து, அதன்வழி நாலுமா
நிலம் விலைக்குப் பெற்று, விளக்கெரிக்கும் பொறுப்பினைத்
தானத்தாரிடம் ஒப்படைத்ததையும் குறிக்கிறது. நில எல்லையைக் குறிப்பிடும் போது
இவ்வூரிலிருந்த ஸ்ரீதர கேசவர் விண்ணகர் என்ற திருமால் கோயிலும் குறிக்கப்படுகிறது.
பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகரனின் 34 ஆம் ஆட்சியாண்டு,
பொயு 13 ஆம் நூற்றண்டு, தியாகராஜர் கோயில் மகாமண்டப மேற்கு
நுழைவாயிலின் கிழக்குச் சுவர் – இடப்புறம், உள்ள கல்வெட்டு,
சுத்தவல்லி வளநாட்டுப் பாம்புணிக் கூற்றத்து பாம்புணியான
தியாகபுரத்தைச் சேர்ந்த பொன்னிநல்லூருடையான் சீராமதேவன் என்பவன், இராசேந்திர சோழவளநாட்டு வண்டாழை வேளூர்க் கூற்றத்து திருக்கோளிலி
உடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவர் கன்மிகளிடம், கோயிலில்
இரண்டு விளக்குகள் எரிப்பதற்காகத் திருவிளக்குப்புறமாக, அரையே
இரண்டுமா முக்காணி அளவுள்ள நிலத்தினைப் பல்வேறு இடங்களிலுமிருந்து விலைக்கு
வாங்கிக் கொடையாக அளித்ததைக் குறிக்கிறது. எல்லைகளாக இருமரபும் துய்ய பெருமாள்
புரம், கல்யாணபுரங்கொண்டான் ஆறு,சுண்டிலக்குளம்,
உடுப்புடையான் குளம் ஆகியனவும், சில
நிலப்பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன.
பொயு 11 – 12 ஆம் நூற்றாண்டு, சோழர் மன்னன் திரிபுவனச்
சக்கரவத்திகள் (5) ஆம் ஆட்சியாண்டு தியாகராஜர் கோயில்
அர்த்தமண்டப வடக்கு அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு, இராஜேந்திர
சோழ வளநாட்டு இடையள நாட்டு, திருக்கோளிலி உடையார்க்கு,
முப்பது வட்டத்துக் காணியுடைய சிவப்பிராமணர்களிடம் 140 காசுகளை அளித்து தினமும் ஒரு திருநந்தாவிளக்கிடச் செய்த ஏற்பாட்டினைக்
குறிக்கிறது. நாளொன்றுக்கு உழக்கு எண்ணெய் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
மூன்றாம் இராசேந்திரனின் 35 ஆம் ஆட்சியாண்டு, பொயு 12 76 ஆம்
ஆண்டு, தியாகராஜர் கோயில் அர்த்தமண்டபத் தெற்குச் சுவரில்
உள்ள கல்வெட்டு, பாண்டி நாடான சோழபாண்டிய மண்டலத்து மதுரோதைய
வளநாட்டு அளற்றூர் நாட்டுப் பாலைக்குறுச்சி உடையான் அகயன் திருமறைக் காடுடையான்
என்பான், தான் பிறந்த கேட்டை நாளன்று, திருக்கோளிலி உடையாரைத் திருவீதியுலா எழுந்தருளச் செய்யவும், அப்போது திருமறைக் காடுடையான் என்ற மண்டபத்து வீற்றிருக்கச் செய்யவும்,
அன்றைய அமுதுபடி, சாத்துபடி, திருப்பள்ளித்தாமம், திருவிளக்கு எரித்தல்
ஆகியனவற்றுக்கு வேண்டிய நிவந்தங்களைச் செய்ததாகத் தெரிகிறது. நிவந்தம் என்ன
வகையினதென அறிய இயலாதவாறு பிற்பகுதிக் கல்வெட்டுக் கிடைக்கவில்லை.
மூன்றாம் இராசேந்திரனின் 29 +1 ஆம்
ஆட்சியாண்டு, பொயு 1276, ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயில் அர்த்த
மண்டபத் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, திருக்கோளிலி உடையார்
கோயில் தானத்தார்களில் இராவளர் சோமனாததேவரும், தேவகன்மிகளில்
திருச்சிற்றம்பல பட்டனும் பிறரும் கூறியதன்படி, இவ்வூரில்
உள்ள திருஞான சம்பந்தன் மடத்தைச் சேர்ந்த பழகினார் வினை தீர்த்தார் என்ற ஆச்சாரியர்க்கு,
மடப்புற இறையிலியாகப் பையூர், பாரணை
நல்லூர் ஆகிய ஊர்களில் நிலம் வழங்கியதையும், அதனின்று 120
கல நெல்லினை மடத்திற்களிக்கச் செய்த ஏற்பாட்டினையும்
குறிக்கிறது.
மூன்றாம் இராஜேந்திரனின் 3(1) ஆம் ஆட்சியாண்டு, பொயு 1277,
ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயில் அர்த்தமண்டபத் தெற்கு சுவரில்
உள்ள கல்வெட்டு, திருஞானசம்பந்தன் திருமடத்தில் இருக்கும்
எதிரொப்பிலாத சோமநாததேவர், திருக்கோளி உடையார்க்குத்
தேவதானமாகச் சண்டேஸ்வர தேவகன்மிகளிடம் எழுதிக் கொடுத்ததைக் குறிப்பதாகத்
தெரிகிறது. பெரிதும் சிதைந்து விட்டது.
பொயு 13 ஆம் நூற்றாண்டு சோழ மன்னனின், காலத்தைச் சார்ந்த தியாகராஜர் கோயில் அர்த்த மண்டபத் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு,
பாண்டி குலாசனி வளநாட்டு ஊரைச் சேர்ந்த (பெயர் தெரியவில்லை)
தில்லை நாயகன் ஆளு... என்பான் திருக்கோளிலி உடையார் கோயில் சிவப்பிராமணர்களின்
மூலம் (காசு? கொடுத்து) விளக்கெரிக்க ஏற்பாடு. செய்ததைக்
குறிப்பதாகத் தெரிகிறது. பெரிதும் சிதைந்துவிட்டது.
பொயு 13 ஆம் நூற்றாண்டு பாண்டியர் மன்னன் சடையவர்மனின்
(14) ஆம் ஆட்சியாண்டு தியாகராஜர் கோயில் சண்டேஸ்வர சன்னதி
கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, வல்லத்து இள[ய*]ான்
குடியான இந்திராபதி நல்லூரைச் சேர்ந்த உய்ய வந்தான் சீகாழியான் ஆன சேரனை வென்ற
பாண்டியதேவன் என்பவன் தன் நன்மைக்காக, திருக்கோளிலி உடையாருக்குப்
பஞ்சதிரவியத்தால் திருநீராட்டுச் செய்ய, நூறு பணம் கொடுத்துத்
திருநாமத்துக் காணியாக நிலம் வாங்கி அளித்ததையும், அதனைப்
பெற்றுக் கொண்ட சண்டேஸ்வரதேவர்கன்மிகள் என்றென்றும் திருநீராட்டு செய்ய இசைந்ததையும்
குறிப்பிடுகிறது.
பொயு 13 ஆம் நூற்றாண்டு பாண்டியர் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் 8 ஆம் ஆட்சியாண்டு, தியாகராஜர்
கோயில் சண்டேஸ்வர சுவாமி சன்னதி மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, சந்திரமெளலிப் பேராற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், தென்கரை அழியவே, வெள்ளம் கோயிலின் வடக்குத்
திருவீதியில் புகுந்தது. எனவே வெள்ளப் பெருக்கினை வடியச் செய்யப் பாலைக் குறுச்சி
உடையான் திருமறைக் காடுடையான் என்பானால் குண்டையூர் எல்லையில் வடிகால் செய்து,
இவ்வாற்றின் வடகரையைத் தென் கரையாக்கித் திசைமாற்றித்
தரப்பட்டது. இரண்டாம் திருவீதியாக ஊரைச் சூழ்ந்து திருவீதியும் செய்யப்பட்டு இந்த
மாற்றத்தினால் திருநாமத்துக்காணியாக இருந்த விளைநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்பட,
அதனை ஈடுகட்டத் தனக்குரிமையாகப் பரமேஸ்வரச் சதுர்வேதி
மங்கலத்தில் இருந்த 2 வேலி நிலத்தினை அவன் தந்தையும் குறிக்கிறது.
புதிய வாய்க்காலும் வீதியும் இதனைச் செய்தளித்த, பாலைக் குறுச்சி
உடையார் திருமறைக் காடுடையான் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.
பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டு மூன்றாம் குலோத்துங்கனின், தியாகராஜர் கோயில் அகத்தீஸ்வர சன்னதி
வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, திருக்கோளிலி உடையார்
கோயில் இறையிலி நிலங்களில் காணியுடைய சிவப்பிராமணர்களிடம், காசுகளை முதலாகக் கொடுத்து, விளக்கெரிக்கச்
செய்த ஏற்பாட்டையும், சிவப்பிராமணர்கள் பங்கினை விலைக்கு
வாங்கியோரும், பிறவகையால் பெற்றுக் கொள்வாரும்
என்றென்றும் இதனைச் செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளதையும் தெரிவிக்கிறது.
மூன்றாம் குலோத்துங்கனின் 23 ஆம் ஆட்சியாண்டு, பொயு 1201 ஆம்
ஆண்டு, தியாகராஜர் கோயில் அகத்தீஸ்வரர் சன்னதி வடக்கு அதிட்டானத்தில்
உள்ள கல்வெட்டு சீராமதேவன் கயிலாயமுடையான் ஆன திருமுனைப்பாடி
நாட்டு வேளான் செய்த ஏதோவொரு நிவந்தத்தைக் (நூறு காசு கொடுத்தது?) குறிக்கிறது.
பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டு மூன்றாம் குலோத்துங்கனின், தியாகராஜர் கோயில் அகத்தீஸ்வரர் சன்னதி
மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, அருமொழிதேவ வளநாட்டைச்
சேர்ந்த ஓர் ஊரினனான (பெயர் தெரிய வில்லை) தவமுடையான் என்பான் திருக்கோளிL உடையார் கோயிலில் திருநுந்தாவிளக்கொன்றெரிக்க, தினமும் உழக்கெண்ணையைச் செலுத்துவதற்காக, இக்கோயில்
முப்பது வட்டத்துக் காணியுடைய சிவப்பிராமணர்களிடம் ஆயிரம் காசுகளைக் கொடுத்ததைக்
குறிப்பிடுகிறது.
வீரஇராசேந்திரனின் (மூன்றாம்
குலோத்துங்கன்), 7 ஆம் ஆட்சியாண்டு, பொயு 1183 ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயில் அகத்தீஸ்வரர் சன்னதி தெற்குப்புற அதிட்டானத்தில்
உள்ள கல்வெட்டு இராசேந்திர சோழவளநாட்டு அளநாட்டு வண்டாழை
வேளூர்க் கூற்றத்து ஒருரைச் சேர்ந்த ஒருவன் (ஊரும் பேரும்
தெரியாமல் சிதைந்து விட்டது), திருக்கோளிலி உடையார்
கோயிலில் மூன்று திருநந்தா விளக்குகள் எரிக்க, 135 காசுகளை
இக்கோயில் முப்பது வட்டத்துச் சிவப்பிராமணர்களிடம் அளித்து, நாளொன்றுக்கு உழக்கெண்ணையாக, முன்னூற்றருபத்தைந்து
நாள்களுக்குமாக 91 நாழியும் ஓர் உழக்கும் எண்ணையைச் செலுத்தச்
செய்த ஏற்பாட்டினைக் கூறுகிறது.
பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தியாகராஜர் கோயில்
இரண்டாம் கோபுரம், நுழைவு வாயில் உபபீடத்தில் உள்ள
கல்வெட்டு தவலோக நாதனான இறைவனுக்கு, திருப்பூசனை
நடத்த, நவலோகபாலன் கைலாயன் வல்லைநரேசன் என்பான் செய்த
திருப்பணியைக் குறிக்கிறது.
References
1. Annual Report on South Indian Epigraphy, year 1950 – 51
2. தமிழ்நாடுக் கல்வெட்டுகள் வரிசை
எண் 29, நாகபட்டிண மாவட்டக் கல்வெட்டுகள்.--- OM SHIVAYA NAMA ---
.......
திருநாவுக்கரசு சுவாமிகள்
கற்பக
வேல் தொட்ட கடவுட்கு முன்வந்த
Moolavar : Sri Brahmapureeswarar, Sri Kolilinathar,
Most
of the Chozha period inscriptions record the endowment of burning perpetual
lamps with ulakku oil, 91 nazhi oil per year, Naivedyam, sacred bath, etc. For the same money, like 1000 kasu, 800
kasu, 140 kasu, 260 panam, 100 panam, paddy, Gold, and lands were donated to
this temple. Some of them were received by the devotees of the temple, and one
inscription mentions “Kaniudaya Muppathu Vattathu Kaniudaya Sivabramins”.
These inscriptions record that lands are held by the Siva Brahmins as Irayili, ie, Tax-free. Also, there was a madam called “Thirugnanasambandar madam” who existed
in the village.
References
1. Annual Report on South Indian Epigraphy, year 1950 – 51
2. தமிழ்நாடுக் கல்வெட்டுகள் வரிசை
எண் 29, நாகப்பட்டிண மாவட்டக் கல்வெட்டுகள்
The Maragatha Linga was stolen and recovered.
கல்வெட்டுக்களின் தொடர்ச்சி….
மூன்றாம் இராஜராஜனின் 23 ஆம் ஆடியாண்டு, பொயு 1269 ஆம் ஆண்டு,
தியாகராஜர் கோயில் மகாமண்டப மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு,
பாண்டிகுலாசனி வளநாட்டு ஆர்க்காட்டுக் கூற்றத்து சிற்றார்க்காடு
கிழான் அரையன் கிடாரத்துப் பிள்ளை ஆன சேரகோனும், ஆளவந்தானான
விசையாலயனும் உள்ளிட்ட சிலர், வண்டாழை வேளூர்க்
கூற்றத்துத் திருக்கோளிலி உடையாருக்கு, வல்லைக் கூற்றத்தில்
குடிநீங்கா தேவதானமாகவும், திருநாமத்துக் காணியாகவும் நீர்வார்த்து
அளித்த நிலக்கொடையைக் குறிக்கிறது. நிலத்தின் எல்லைகளும் பதிவு செய்கின்றது. அதன் வழி, இவ்வூரில் கைலாசமுடையார் கோயில் திருவிருப்பு,
புரவரி வினாயகப் பிள்ளையார் திருவிருப்பு ஆகிய பகுதிகளும் இருந்தது
தெரிய வருகின்றன. கொடையாளர் பெயர்கள் இறுதியில் சிறுமாற்றத்துடன், ஆர்க்காடு கிழான் சொக்கன் என்றும், விசையராயன்
என்றும் காணப்படுகின்றன.
பொயு 13 ஆம் நூற்றாண்டு திரிபுவனச் சக்கரவத்திகள், தியாகராஜர் கோயில் மகாமண்டப மேற்குச் சுவரில் உள்ள துண்டுக் கல்வெட்டு, மேல் முயங்கூருடையான்
காசு கொடுத்ததைக் குறிப்பதாகத் தெரிகிறது.
மூன்றாம் குலோத்துங்கனின் 12 – 13 ஆம் நூற்றாண்டு தியாகராஜர் கோயில் மகாமண்டப மேற்குச் சுவரில் உள்ள, பெரிதும் சிதைந்த கல்வெட்டு, மூவாயிரவன்,
செல்வபட்டன் ஸ்ரீதரகேசவபட்டன், தில்லை
நாயகபட்டன் போன்றோரின் காணியுரிமை தொடர்பான ஆவணமாகத் தெரிகிறது.
பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டு, பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தர
பாண்டியனின் 10+1 ஆம் ஆட்சியாண்டு, தியாகராஜர் கோயில் மகாமண்டப
நுழைவு வாயிலில் உள்ள கல்வெட்டு, மாங்குடையான் விச்சாதிரன்
அல்லது பிச்சன் கணவதி ஆண்டான் என்ற வணிகன், அவனது
நன்மைக்காக, மாதந்தோறும் திருவாதிரை நாளில் இறைவனையும்
தேவியையும் திருவுலாவாக எடுத்து வரச் செய்வதற்காக 260 பணம்
கொடுத்து, ஒன்றே மூன்று மாநிலம் வாங்கி, சண்டேஸ்வர தேவகன்மிகளிடம் ஒப்படைத்தான். அதனைப் பெற்றுக் கொண்டு
அவர்கள் திருவுலாச் செய்யும் பொறுப்பினை ஏற்றதையும்,
பலரும் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளதையும் பதிவு செய்கின்றது.
பொயு 13 ஆம் நூற்றாண்டு பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியனின், தியாகராஜர் கோயில் மகாமண்டப நுழைவு
வாயிலின் வலப்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு, அரசன்
பெயருடன் கல்வெட்டுப் பொறிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
தியாகராஜர் கோயிலின் மகாமண்டப நுழைவு வாயிலின் வலப்புறச் சுவரில்
உள்ள பொயு 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு, வடவல்லத்து இருக்கை
இளையான்குடியான இந்திராபதி நல்லூரைச் சேர்ந்த உய்ய வந்தான் சீகாழிப்பிள்ளை என்னும்
ஜயதுங்கபன்மர், நீராட்டு மண்டபத்தின் நுழைவாயில் தொடங்கி
கிழக்கு வாசல் வரை தளம் அமைத்துக் கொடுத்ததையும், அவரே
சிறுகாலைச் சந்திமுதல், பலிவரை அனைத்துப் பூசை
நேரங்களிலும் 20 விளக்குகள் எரிக்க, 30 பணம் பண்டாரத்தில் கொடுத்து, அதன்வழி நாலுமா
நிலம் விலைக்குப் பெற்று, விளக்கெரிக்கும் பொறுப்பினைத்
தானத்தாரிடம் ஒப்படைத்ததையும் குறிக்கிறது. நில எல்லையைக் குறிப்பிடும் போது
இவ்வூரிலிருந்த ஸ்ரீதர கேசவர் விண்ணகர் என்ற திருமால் கோயிலும் குறிக்கப்படுகிறது.
பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகரனின் 34 ஆம் ஆட்சியாண்டு,
பொயு 13 ஆம் நூற்றண்டு, தியாகராஜர் கோயில் மகாமண்டப மேற்கு
நுழைவாயிலின் கிழக்குச் சுவர் – இடப்புறம், உள்ள கல்வெட்டு,
சுத்தவல்லி வளநாட்டுப் பாம்புணிக் கூற்றத்து பாம்புணியான
தியாகபுரத்தைச் சேர்ந்த பொன்னிநல்லூருடையான் சீராமதேவன் என்பவன், இராசேந்திர சோழவளநாட்டு வண்டாழை வேளூர்க் கூற்றத்து திருக்கோளிலி
உடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவர் கன்மிகளிடம், கோயிலில்
இரண்டு விளக்குகள் எரிப்பதற்காகத் திருவிளக்குப்புறமாக, அரையே
இரண்டுமா முக்காணி அளவுள்ள நிலத்தினைப் பல்வேறு இடங்களிலுமிருந்து விலைக்கு
வாங்கிக் கொடையாக அளித்ததைக் குறிக்கிறது. எல்லைகளாக இருமரபும் துய்ய பெருமாள்
புரம், கல்யாணபுரங்கொண்டான் ஆறு,சுண்டிலக்குளம்,
உடுப்புடையான் குளம் ஆகியனவும், சில
நிலப்பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன.
பொயு 11 – 12 ஆம் நூற்றாண்டு, சோழர் மன்னன் திரிபுவனச்
சக்கரவத்திகள் (5) ஆம் ஆட்சியாண்டு தியாகராஜர் கோயில்
அர்த்தமண்டப வடக்கு அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு, இராஜேந்திர
சோழ வளநாட்டு இடையள நாட்டு, திருக்கோளிலி உடையார்க்கு,
முப்பது வட்டத்துக் காணியுடைய சிவப்பிராமணர்களிடம் 140 காசுகளை அளித்து தினமும் ஒரு திருநந்தாவிளக்கிடச் செய்த ஏற்பாட்டினைக்
குறிக்கிறது. நாளொன்றுக்கு உழக்கு எண்ணெய் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
மூன்றாம் இராசேந்திரனின் 35 ஆம் ஆட்சியாண்டு, பொயு 12 76 ஆம்
ஆண்டு, தியாகராஜர் கோயில் அர்த்தமண்டபத் தெற்குச் சுவரில்
உள்ள கல்வெட்டு, பாண்டி நாடான சோழபாண்டிய மண்டலத்து மதுரோதைய
வளநாட்டு அளற்றூர் நாட்டுப் பாலைக்குறுச்சி உடையான் அகயன் திருமறைக் காடுடையான்
என்பான், தான் பிறந்த கேட்டை நாளன்று, திருக்கோளிலி உடையாரைத் திருவீதியுலா எழுந்தருளச் செய்யவும், அப்போது திருமறைக் காடுடையான் என்ற மண்டபத்து வீற்றிருக்கச் செய்யவும்,
அன்றைய அமுதுபடி, சாத்துபடி, திருப்பள்ளித்தாமம், திருவிளக்கு எரித்தல்
ஆகியனவற்றுக்கு வேண்டிய நிவந்தங்களைச் செய்ததாகத் தெரிகிறது. நிவந்தம் என்ன
வகையினதென அறிய இயலாதவாறு பிற்பகுதிக் கல்வெட்டுக் கிடைக்கவில்லை.
மூன்றாம் இராசேந்திரனின் 29 +1 ஆம்
ஆட்சியாண்டு, பொயு 1276, ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயில் அர்த்த
மண்டபத் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, திருக்கோளிலி உடையார்
கோயில் தானத்தார்களில் இராவளர் சோமனாததேவரும், தேவகன்மிகளில்
திருச்சிற்றம்பல பட்டனும் பிறரும் கூறியதன்படி, இவ்வூரில்
உள்ள திருஞான சம்பந்தன் மடத்தைச் சேர்ந்த பழகினார் வினை தீர்த்தார் என்ற ஆச்சாரியர்க்கு,
மடப்புற இறையிலியாகப் பையூர், பாரணை
நல்லூர் ஆகிய ஊர்களில் நிலம் வழங்கியதையும், அதனின்று 120
கல நெல்லினை மடத்திற்களிக்கச் செய்த ஏற்பாட்டினையும்
குறிக்கிறது.
மூன்றாம் இராஜேந்திரனின் 3(1) ஆம் ஆட்சியாண்டு, பொயு 1277,
ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயில் அர்த்தமண்டபத் தெற்கு சுவரில்
உள்ள கல்வெட்டு, திருஞானசம்பந்தன் திருமடத்தில் இருக்கும்
எதிரொப்பிலாத சோமநாததேவர், திருக்கோளி உடையார்க்குத்
தேவதானமாகச் சண்டேஸ்வர தேவகன்மிகளிடம் எழுதிக் கொடுத்ததைக் குறிப்பதாகத்
தெரிகிறது. பெரிதும் சிதைந்து விட்டது.
பொயு 13 ஆம் நூற்றாண்டு சோழ மன்னனின், காலத்தைச் சார்ந்த தியாகராஜர் கோயில் அர்த்த மண்டபத் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு,
பாண்டி குலாசனி வளநாட்டு ஊரைச் சேர்ந்த (பெயர் தெரியவில்லை)
தில்லை நாயகன் ஆளு... என்பான் திருக்கோளிலி உடையார் கோயில் சிவப்பிராமணர்களின்
மூலம் (காசு? கொடுத்து) விளக்கெரிக்க ஏற்பாடு. செய்ததைக்
குறிப்பதாகத் தெரிகிறது. பெரிதும் சிதைந்துவிட்டது.
பொயு 13 ஆம் நூற்றாண்டு பாண்டியர் மன்னன் சடையவர்மனின்
(14) ஆம் ஆட்சியாண்டு தியாகராஜர் கோயில் சண்டேஸ்வர சன்னதி
கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, வல்லத்து இள[ய*]ான்
குடியான இந்திராபதி நல்லூரைச் சேர்ந்த உய்ய வந்தான் சீகாழியான் ஆன சேரனை வென்ற
பாண்டியதேவன் என்பவன் தன் நன்மைக்காக, திருக்கோளிலி உடையாருக்குப்
பஞ்சதிரவியத்தால் திருநீராட்டுச் செய்ய, நூறு பணம் கொடுத்துத்
திருநாமத்துக் காணியாக நிலம் வாங்கி அளித்ததையும், அதனைப்
பெற்றுக் கொண்ட சண்டேஸ்வரதேவர்கன்மிகள் என்றென்றும் திருநீராட்டு செய்ய இசைந்ததையும்
குறிப்பிடுகிறது.
பொயு 13 ஆம் நூற்றாண்டு பாண்டியர் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் 8 ஆம் ஆட்சியாண்டு, தியாகராஜர்
கோயில் சண்டேஸ்வர சுவாமி சன்னதி மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, சந்திரமெளலிப் பேராற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், தென்கரை அழியவே, வெள்ளம் கோயிலின் வடக்குத்
திருவீதியில் புகுந்தது. எனவே வெள்ளப் பெருக்கினை வடியச் செய்யப் பாலைக் குறுச்சி
உடையான் திருமறைக் காடுடையான் என்பானால் குண்டையூர் எல்லையில் வடிகால் செய்து,
இவ்வாற்றின் வடகரையைத் தென் கரையாக்கித் திசைமாற்றித்
தரப்பட்டது. இரண்டாம் திருவீதியாக ஊரைச் சூழ்ந்து திருவீதியும் செய்யப்பட்டு இந்த
மாற்றத்தினால் திருநாமத்துக்காணியாக இருந்த விளைநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்பட,
அதனை ஈடுகட்டத் தனக்குரிமையாகப் பரமேஸ்வரச் சதுர்வேதி
மங்கலத்தில் இருந்த 2 வேலி நிலத்தினை அவன் தந்தையும் குறிக்கிறது.
புதிய வாய்க்காலும் வீதியும் இதனைச் செய்தளித்த, பாலைக் குறுச்சி
உடையார் திருமறைக் காடுடையான் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.
பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டு மூன்றாம் குலோத்துங்கனின், தியாகராஜர் கோயில் அகத்தீஸ்வர சன்னதி
வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, திருக்கோளிலி உடையார்
கோயில் இறையிலி நிலங்களில் காணியுடைய சிவப்பிராமணர்களிடம், காசுகளை முதலாகக் கொடுத்து, விளக்கெரிக்கச்
செய்த ஏற்பாட்டையும், சிவப்பிராமணர்கள் பங்கினை விலைக்கு
வாங்கியோரும், பிறவகையால் பெற்றுக் கொள்வாரும்
என்றென்றும் இதனைச் செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளதையும் தெரிவிக்கிறது.
மூன்றாம் குலோத்துங்கனின் 23 ஆம் ஆட்சியாண்டு, பொயு 1201 ஆம்
ஆண்டு, தியாகராஜர் கோயில் அகத்தீஸ்வரர் சன்னதி வடக்கு அதிட்டானத்தில்
உள்ள கல்வெட்டு சீராமதேவன் கயிலாயமுடையான் ஆன திருமுனைப்பாடி
நாட்டு வேளான் செய்த ஏதோவொரு நிவந்தத்தைக் (நூறு காசு கொடுத்தது?) குறிக்கிறது.
பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டு மூன்றாம் குலோத்துங்கனின், தியாகராஜர் கோயில் அகத்தீஸ்வரர் சன்னதி
மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, அருமொழிதேவ வளநாட்டைச்
சேர்ந்த ஓர் ஊரினனான (பெயர் தெரிய வில்லை) தவமுடையான் என்பான் திருக்கோளிL உடையார் கோயிலில் திருநுந்தாவிளக்கொன்றெரிக்க, தினமும் உழக்கெண்ணையைச் செலுத்துவதற்காக, இக்கோயில்
முப்பது வட்டத்துக் காணியுடைய சிவப்பிராமணர்களிடம் ஆயிரம் காசுகளைக் கொடுத்ததைக்
குறிப்பிடுகிறது.
வீரஇராசேந்திரனின் (மூன்றாம்
குலோத்துங்கன்), 7 ஆம் ஆட்சியாண்டு, பொயு 1183 ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயில் அகத்தீஸ்வரர் சன்னதி தெற்குப்புற அதிட்டானத்தில்
உள்ள கல்வெட்டு இராசேந்திர சோழவளநாட்டு அளநாட்டு வண்டாழை
வேளூர்க் கூற்றத்து ஒருரைச் சேர்ந்த ஒருவன் (ஊரும் பேரும்
தெரியாமல் சிதைந்து விட்டது), திருக்கோளிலி உடையார்
கோயிலில் மூன்று திருநந்தா விளக்குகள் எரிக்க, 135 காசுகளை
இக்கோயில் முப்பது வட்டத்துச் சிவப்பிராமணர்களிடம் அளித்து, நாளொன்றுக்கு உழக்கெண்ணையாக, முன்னூற்றருபத்தைந்து
நாள்களுக்குமாக 91 நாழியும் ஓர் உழக்கும் எண்ணையைச் செலுத்தச்
செய்த ஏற்பாட்டினைக் கூறுகிறது.
பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தியாகராஜர் கோயில்
இரண்டாம் கோபுரம், நுழைவு வாயில் உபபீடத்தில் உள்ள
கல்வெட்டு தவலோக நாதனான இறைவனுக்கு, திருப்பூசனை
நடத்த, நவலோகபாலன் கைலாயன் வல்லைநரேசன் என்பான் செய்த
திருப்பணியைக் குறிக்கிறது.
References
1. Annual Report on South Indian Epigraphy, year 1950 – 51
2. தமிழ்நாடுக் கல்வெட்டுகள் வரிசை
எண் 29, நாகபட்டிண மாவட்டக் கல்வெட்டுகள்.
சிறப்பான பதிவு. நான் பார்க்கவேண்டிய தலங்களின் பட்டியலில் இக்கோயிலும் உள்ளது. கோயிலுக்குச் செல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். உங்கள் பதிவு அந்த ஆவலை அதிகப்படுத்தியுள்ளது.
ReplyDelete2013ல் சென்றபோது அதிகமான புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை ஐயா.. தாங்கள் விரைவில் அங்கு சென்று காண எந்தையை இறைஞ்சுகின்றேன்..
Delete