The visit to these Ajanta caves was
a part of the “Elephanta, Ajanta and Ellora Heritage Walk” organized by Enthisai
Historical Heritage Walk Group, from December 23rd to 26th, 2023.
அஜந்தா புத்தமத குடைவரைகள்
வாக்ஹோரா நதிப்பள்ளத்தாக்கில், இயற்கையாக குதிரை லாட வடிவத்தில் அமைந்த செங்குத்தான
பாறையில் குடையப்பட்டுள்ளது. இக்குகைகள் ஆற்றின் கரையில் இருந்து சுமார் 76
மீட்டர் உயரத்தில் குடையப்பட்டுள்ளது. அஜந்தாவில் இருக்கும் முப்பது குடைவரைகள்
இரு காலக்கட்டங்களில் குடையப்பட்டது. முதல் கட்டமாக பொயுமு 2ஆம் நூற்றாண்டில்
இருந்து பொயு நான்காம் நூற்றாண்டு வரை ஆறு குடைவரைகள் (8, 9, 12, 13 & 15A – புத்த மதத்தின்
ஹீனாயான பிரிவைச் சார்ந்தவை) சாதவாகனர் ஆட்சிக்காலத்திலும், இரண்டாம் கட்டமாக மீதமுள்ள குடைவரைகள் (புத்தமதத்தின் மஹாயான
பிரிவைச்சார்ந்தவை, குகைகள் 1, 2, 4, 6, 7, 11, 15, 16, 17, மற்றும் 20 - 24) பொயு 5-6 ஆம் நூற்றாண்டுகளில்
வாகாடக பேரரசின் ஆட்சிக்காலத்திலும் குடையப்பட்டது. இக்குகைகளில் காணப்படும் இரண்டாயிரம்
வருடங்களுக்கு முன்பு வரையப்பட்ட ஒவியங்கள் இந்தியாவின் கலைத்திறனுக்கு காலம் கடந்தும்
எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.
சாதவாகனர் காலத்தைச்
சார்ந்த (புத்த மதத்தின் ஹீனாயான பிரிவைச் சார்ந்த குடைவரைகள் 8, 9, 12, 13 & 15A) குடைவரைகள்
அமைப்பில் மிகவும் சாதாரணமாகவும், அதே சமயத்தில்
சுவரிலும், விதானத்திலும் வரையப்பட்ட ஓவியங்கள் மிகவும் சிறப்பு
வாய்ந்தவைகளாகக் கருதப்படுகின்றது. அவ்வோவியங்கள், புத்தரின் வாழ்கை வரலாறு,
புத்தசமய ஜாதக கதைகள், அக்காலத்தில் நிலவிய சமுதாயப்பண்பாடு, அவர்களின்
வாழ்க்கைமுறை, ஆடைகள், அணிகலன்கள், மற்றும் பலவிதமான அழகிய வடிவங்கள் என
வரையப்பட்டு உள்ளது. இவ்வோவியங்கள் சாஞ்சி மற்றும் பாமத் போன்ற இடங்களில் காணப்படும்
ஓவியங்களுக்கு நிகராகக் கருதப்படுகின்றது. இக்குடைவரைக் குகைகள் மரத்தால்
கட்டப்பட்ட கோயில்களின் அமைப்பை ஒட்டி குதிரையின் லாட அமைப்பிலும் / தூங்கானை மாடம் விதானம்
மரச்சட்டங்களால் செய்யப்பட்டதைப் போன்று குடையப்பட்டு உள்ளது. மேலும் இது
புத்தபிக்குகள் தங்குமிடமாகவும், தொழும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டன. 5-6 ஆறாம் நூற்றாண்டுகளில்
இந்தியா வந்த சீனப்பயணி யுவாங் சுவாங் இந்த குகைகளுக்கு நேரில் வராவிட்டாலும் இக்குகைகளைப்பற்றி
தனது பயணக் குறிப்பேட்டில் குறிப்பிட்டு உள்ளார்.
இவ்வோவியங்கள் சொரசொரப்பான
தளத்தின் மீது, சுண்ணாம்பு, மாட்டுச்சானம், தாவரத்தின் காய்ந்தபகுதிகள், மணல் மற்றும் மண்
கொண்டு பூசப்பட்டு, அதன்மீது இயற்கையாகக் கிடைத்த கற்களின் வண்ணங்களைக் கொண்டு
வரையப்பட்டது.
கல்வெட்டு தகவல்களின்
படி மஹாயான புத்தபிரிவைச் சார்ந்த சில குடைவரைக் குகைகள் வாகாடக பேரரசின் அரசர்
ஹரிசேனாவின் (பொயு 475 – 500) மந்திரி வராகதேவரால் குடையப்பட்டது. இக்குகைகள் அனைத்தும் 5 ஆம் நூற்றாண்டுக்கு
பிறகு குடையப்பட்டன. 26
ஆம் எண் குகையில் உள்ள கல்வெட்டு ராஷ்ட்ரகூட மன்னர்களின் பங்களிப்பைச் சுட்டுகின்றது. இக்குடைவரைகளில் புத்தரின் பலவிதமான நிலைகள், பரிநிர்வான நிலை
உட்பட சிற்பங்களாக வடிக்கப்பட்டு உள்ளது. பலபுத்தர் சிற்பங்கள் அவரது உபதேச
முத்திரையிலேயே காணப்படுவது ஒரு சிறப்பு ஆகும்.
Ajanta Caves (75 40° E: 20°30'N) are famous for their murals, which are the finest surviving examples of Indian art, particularly painting.
These caves were excavated in a horseshoe-shaped bend of rock scarp nearly 76
mt. in height overlooking a narrow stream known as Waghpra.
The location of this valley provided a calm and serene
environment for the Buddhist monks who retreated to these selected places
during the rainy season. Each cave was connected to the stream by a flight of
steps, which are now almost obliterated, albeit traces of some could be noticed
in some places. All 30 caves were hewn out of the living rock in different
periods according to the necessity.
Out of these, five (cave nos. 9, 10, 19, 26, and 29) are
Chaitya-grihas, and the rest are viharas. In date and style, these caves can
be divided into two broad groups. Out of the 30 caves, 6 caves belong to the
earliest phase of Buddhism, the Hinayana. Caves 9 & 10, which are
Chaitya-grihas, and 8, 12, 13 & 15A, which are Viharas, belong to this phase. These
caves are datable to the pre-Christian era, the earliest among them being Cave
10, dating from the second century B.C where the object of worship is a stupa.
These caves are imitations of contemporary wooden constructions, to the
extent of fixing wooden rafters and beams to the ceiling even though they
are non-functional. These early caves were painted, but nothing substantial has
survived. Caves No.9 and 10 clearly show some vestiges of painting. The
headgear and ornaments of the images in these paintings resemble the bas-relief
sculpture of Sanchi and Bharhut.
The addition of new caves could be noticed again during the
period of the Vakataka Dynasty (Cave Nos. 1, 2, 4, 6, 7, 11, 15, 16, 17, and 20 to 24), the contemporaries of the imperial Guptas. These
were excavated by the royal family and also the feudatories owing
allegiance to the Vakatakas. Varahadeva, the minister of Vakataka king
Harishena (475-500 CE) dedicated Cave 16 to the Buddhist Sangha, while Cave 17
was the gift of a prince (who subjugated Asmaka), a feudatory of the same
king. A flurry of activity at Ajanta was between the mid-5th century CE and the mid-6th century CE. Hiuen
Tsang, the famous Chinese traveler who visited India during the first half of the 7th century CE, has left a vivid and graphic description of the flourishing
Buddhist establishments here even though he did not visit the caves.
A solitary Rashtrakuta inscription in cave no. 26 indicates its date to the 7th century CE. The second phase departs from the earlier one with the pattern in
layout as well as the central Buddha image, both in use during the 8th
- 9th centuries, introducing new sculpture as well as paintings.
All these caves were once painted, but now the best
examples of these exemplary paintings of the Vakataka period can be noticed only
in caves 1, 2, 16, and 17. The variation in style and execution in these
paintings is also noticed, mainly due to different authors who followed
contemporary styles.
The main theme of the paintings is the depiction of various
Jataka stories-different incidents associated with the life of Buddha- and contemporary events and social life. The ceiling decoration invariably consists
of decorative patterns, geometrical as well as floral. Apart from painted
representations, Sculptural panels also adorn the beauty of the caves.
Ajanta paintings are the best examples of the Tempera technique,
executed after elaborate preparation of the rock surface. After chiseling the rock
surface, different layers of clay mixed with ferruginous earth, sand, and fibrous
material of organic origin were applied very carefully. Then the surface was finally
finished with a thin coat of lime wash. Over this surface, outlines are drawn boldly, and then the spaces
are filled with requisite colors in different shades and tones to achieve the
three-dimensional effect of rounded and plastic volumes. The colors and shades
utilized also vary from red and yellow ochre, terra verte, to lime, kaolin,
gypsum, lamp black, and lapis lazuli. The chief binding material used here was
glue.
This group of caves is being maintained by the Archaeological
Survey of India, Aurangabad Circle. The group of caves was inscribed by UNESCO as a World Heritage Site in the year 1983.
CAVE NO. 10
புத்த மதத்தின் ஒரு
பிரிவான ஹினாயான பிரிவைச்சார்ந்த இக்குடைவரை 30.5 x 12.2 மீட்டர் அளவில் குடையப்பட்டுள்ளது. இக்குடைவரை பாகாடா என்ற
இடத்தைச் சார்ந்த புத்தபிக்கு / துறவி தர்மதேவா என்பவருக்காக வஷிஸ்டபுத்ர கடகாடி கனககா என்பவரால்
குடையப்பட்டது. மேலும் ஓவியங்கள் புத்தமத பக்தர்களால் செய்விக்கப்பட்டது. இக்குடைவரை
மரச்சட்டங்களால் கட்டப்பட்டதைப் போன்ற தோற்றத்தில் குடையப்பட்டுள்ளது.
இக்குடைவரை பொயுமு 2 - 4 ஆம் நூற்றாண்களில் குடையப்பட்டதாக
கருதப்படுகின்றது. அரைவட்ட வடிவில் அல்லது லாடவடிவில் 39 எட்டுப்பட்டை
தூண்களுடனும், அதன் கடைசியில் ஸ்தூபியுடனும் குடையப்பட்டு உள்ளது. தூண்களிலும்
சுவர்களிலும் அக்காலத்தச் சார்ந்த புத்தர் மற்றும் புத்தர் ஜாதகக்கதைகள் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. அனால் தற்போது பெரும்பாலான ஓவியங்கள் இனம் காணமுடியாத அளவிற்கு சிதைந்து
காணப்படுகின்றது.
This is the earliest chaitya-griha (30.5 X 12.2m) at Ajanta,
belonging to the Hinayana Sect of Buddhism. On the basis of Inscriptions, the cave
was excavated through gifts made by Vasisthiputra Katahadi, Kanahaka of Bahada, and monk Dharmadeva, while the paintings were done by various devotees.
The predominantly wooden architecture and the paleographical
evidence date this cave to circa the 2nd century B.C.E. The chaitya is
apsidal in plan, consisting of a nave flanked by two aisles by a colonnade of
thirty-nine pillars. The Stupa placed at the apsidal end is the biggest at
Ajanta and is plain and hemispherical in shape.
The importance of this cave lies in its preserving the early
specimens of Indian paintings. The paintings belong to two different periods;
the earlier dates to the 2nd century B.C.E., and the latter to the 4th century CE. The plain octagonal pillars, ceilings, and walls are painted with Buddhist themes, designs, and Jatakas, but nothing
substantial has survived.
CAVE NO. 26.
இந்த புத்தர் குடைவரை பொயுமு 2 ஆம் நூற்றாண்டு – பொயு
4 ஆம் நூற்றாண்டு காலத்தச் சார்ந்ததாக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
19 எண் குடைவரையைப் போன்றே இக்குடைவரையிலும் அதிக அளவில் சிற்பத்தொகுதிகளும் சிற்பங்களும்
காணப்படுகின்றன. இக்குடைவரை புத்தபிக்குகளின் பிரார்த்தனைக்காக குடையப்பட்டது. இக்குடைவரை,
சுற்றுப்பாதையுடன், நீண்ட செவ்வக வடிவத்தில், அதன் உள் பகுதி அரைவட்டவடிவில் குடையப்பட்டு,
அந்த அரைவட்ட பகுதியில் ஸ்தூபியை அமைக்கப்பட்டுள்ளது. இக்குடைவரையின் கூரை, மரச்சட்டங்களைக்
கொண்டு கட்டப்பட்டதைப் போன்று செதுக்கப்பட்டு உள்ளது ஒரு சிறப்பான அமைப்பாகும்.
இக்குடைவரையில் செதுக்கப்பட்ட சிற்பத்தொகுதிகளில்
முக்கியமானதாகக் கருதப்படுவது, புத்தரின் பரிநிர்வான நிலை சிற்பம்.
இச்சிற்பம், புத்தரின் ஆத்மா உடலில் இருந்து பிரிந்த பின்பு உள்ள நிலையை சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
உறவினர்கள் கீழே அமர்ந்து உள்ளது, சீடர் சோக நிலையில் அமர்ந்து இருப்பது, புத்தரின் ஆவி பிரிந்து
புத்தர் உருவத்துடன் மேலே செல்வது, மாரா யானை மீது அமர்ந்து இருப்பது, மாரா கௌதமரை அவனுடைய
அசுர கணங்களைக் கொண்டு தாக்குவது, போன்றவற்றை அழகாகச்செதுக்கி இருப்பது நமது கற்பனைக்கு
அப்பாற்பட்டது.
This Buddhist cave
No. 26 belongs to the 2nd century BCE and the latter to the 4th century CE. This cave is almost as crowded with
sculptures as Cave 19. But this chaitya- the hall is larger in size. It has a
colossal reclining Buddha figure ...... representing Parinirvana ... in a
grouping of kings, queens and monks. The same wall presents a relief of
"The Temptation of the Buddha". A theme seen in a mural in Cave 1- on the left is Mara seated on an elephant and assaulting Gautam with his demon
forces. On the right is Mara's retreat. In the foreground, his daughters are
trying to tempt the Great Ascetic.
This chaitya-griha is hewed apsidal
on plan, consisting of a nave-flanked pillared hall for circumambulation. The Stupa
placed at the apsidal end is the biggest at Ajanta and is plain and
hemispherical in shape. These caves exhibit the imitation of wooden
construction to the extent that the rafters and beams are also sculpted even
though they are non-functional. The Circumambulation path is divided into
sections, and Buddha’s various postures, along with Bodhisattvas, whisk bearers,
etc are sculpted. One of the Hall pillars has a British-period inscription.
Buddha's Parinirvana sculpture - Reclining posture of Buddha - 7 meters (23 ft long)
Buddha's Parinirvana sculpture
Buddha's relatives mourn the Parinirvana of Buddha
Buddha's Parinirvana sculpture - the feet are not on the pillow, indicating Parinirvana
Buddha's Parinirvana - the soul comes out of Buddha's body
Buddha's parinirvana sculpture - Reclining posture of Buddha - 7 meters (23 ft long)
Buddha's Parinirvana sculpture
Buddha's relatives mourn the Parinirvana of Buddha
Buddha's Parinirvana sculpture - the feet are not on the pillow, indicating Parinirvana
Buddha's Parinirvana - the soul comes out of Buddha's body
Buddha's parinirvana sculpture - Reclining posture of Buddha - 7 meters (23 ft long)
Buddha's disciples mourn the parinirvana of Buddha
Stupi with Buddha's image
Inscription
Ref:
1.
Display boards at the entrance of the
caves.
3. Ajanta Murals by Archaeological Survey of India (ASI)
NOTE
The caves will be open from 6.00 hrs to 18.00 hrs
The cave is closed on Monday
HOW TO REACH
The Ajanta Caves are about 8 km from Ajanta, 103 km from Ellora Caves, 268 km from Nashik, and 414 km from Mumbai.
The nearest railway station is Mukundwadi.
Nearest airport Aurangabad
LOCATION OF THE
CAVES: CLICK HERE
--- OM SHIVAYA NAMA ---















































No comments:
Post a Comment