Thursday 16 January 2014

THIRUVALAM, SRI – LA - SRI SIVANANDA MOUNA SWAMYKAL CHEPPEDU SASANAM - திருவலம் ஸ்ரீ - ல - ஸ்ரீ - சிவானந்த மௌன சுவாமிகள் செப்பேடு சாசனம்

15, January 2014.  
After reading the ‘Cheppedu sasanam ‘ of Sri – la - Sri Siddhar Sivananda Mouna Swamigal, I do not have words to write. I thank Lord Shiva for given me the opportunity at-least to enter in to the temple in which Sri – la Sri Sivananda Mouna Swamigal had done the thirupani. How generous he was. The money earned  through the services was given to various thirupani, is really great. I would like to share my some thoughts with the readers.


But at the same time we have to think one thing. The donations by the kings in terms of land, cattle, where it has gone?. (Remains only in the kalvettu.) The famous proverb “Sivan sothu kula naasam - சிவன் சொத்து குல நாசம் ” comes to my mind. Whether it really works?. Whether the people who swallowed the Lord’s property are now happier or wealthier or in good health?. We have to collect the data. The truth is ……….

PC: WIKIPEDIA

If the income from the property is given to the temple, then the old temples escaped from destruction due to ages. At least for one thing we should be happy, that the temples were built with big compound walls, otherwise the same people would have swallowed the temples also. ( Like what happened to the outer sannadhis at Thiruvannamalai ).

From the cheppedu we can understand that how meticulously he planned for the future poojas and other functions. The amount allotted to each temple and the pooja may be sufficient during those days. Swamigal has not foreseen the inflation. Also people has become greedy and selfish, hence the system failed. But we have to appreciate the devotees / followers of Swamiji continued the thirupani and recently the Kumbhabhishekam was performed. ( I am  really ashamed for not attending the same – received an SMS from the organizers – and really missed the opportunity  ).

I was not able to read in some of the places, where I left blank. Due to limitations of space the letter sizes were reduced from the first line to last lines. As far as possible I tried to rewrite the same from the original. ( May be mistakes in one or two places ). The original Photo taken is up loaded as it is, without compressing for web pages. Hence the readers can expand and read.

Once again I thank and seek the blessings of Lord Shiva and Sri – la – Sri Siddhar Sivananda Mouna Swamigal and forgive me for any mistakes I had made while reproducing the “Cheppedu Sasanam”.
  

ஸ்ரீ - - ஸ்ரீ - சித்தர் சிவானந்த மௌன சுவாமிகள் திருப்பணி  தொண்டர் தர்மகர்த்தா தலைவர் பல க்ஷேத்திர  கூழ் அரச்சாலை ஸ்தாபகர் யோகீஸ்வரர் இவரது பிரந்த வரலாரு கீழ் காணலாம்  

தனுமத்யை வில்வபதி முருகா  ஸ்ரீ - - ஸ்ரீ - சித்தர் சிவானந்த மௌன சுவாமிகள் செப்பேடு சாசனம்  குரோதி ஆண்டு மாசி மாதம் 2 ம் தேதி மங்கலவாரத்திற்குச் சரியான 1965 ஆண்டு மார்ச் மாதம்  9ம் தேதி வடார்காடு மாவட்டம் குடியாத்தம் தாலூக்கா 7 ஆம் நெ. காரணாம்பட்டு  கிராமம் வண்ணார் குலம் வீரபத்திர கோத்திரத்தில் பிறந்து சம்பத்துடன் வாழ்ந்து வந்த குள்ளப்ப மேஸ்திரிக்கும் அம்மணி அம்மாளுக்கும் மகனாகதோன்றிய  சின்னையா மேஸ்திரி ஆகிய நான் செய்யும் செப்பேடு சாசனம் என்னவெனில் நான் இல்லறம் துறந்து + மகாதேவமலை சென்று அப்பன் உத்தரவுப்படி காரணாம்பட்டு ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் வந்தடைந்து அங்கே பல அதிசயங்கள் நடந்தபின் ஸ்ரீ முருகன் தோற்றமாகி 108 வியாதிகளுக்கும் விபூதியும் வில்வமும் கொடுக்கும்படி கட்டளையானது அந்த தொண்டினால் வந்த காணிக்கையைக் கொண்டு அக்கோயில் திருப்பணியும் பிள்ளைக் குளத் திருப்பணியும் முடிக்கப்பட்டன  பின்னர் அம்முண்டி சென்று திருவலம் தேவஸ்தான தெப்பக்குளம் அருகில் உள்ள ஸ்ரீ ராக்காத்தம்மன் கோயில் தரை மராமத்து குகாஸ்ரமம் நந்தவனம் அமைத்தல் ஆகிய திருப்பணிகளை முடித்தபின் அர்த்தநாரீசுவரர் கோயிலில்  தங்கி இருந்த சமயம் தீபாவளி நோன்புதினம் தொடங்கி திருவலம் தேவாலயத் திருப்பணி செய்யும்படி உத்தரவானது  அக்கட்டளைபடி செய்து வந்த தொண்டினால் இமயம் முதல் குமரி வரை உள்ளவர்களும் வெளிநாட்டினர்களும் வந்து தீராத நோய்கள் தீர்ந்து நலமடைந்தனர் அதனால் பல இலட்சக்கணக்கில் பணம் குவிந்தது திருவலம் தேவாலயத் திருப்பணித் தொண்டர் சிவானந்த மௌன சுவாமிகள் என்ற பெயரும் வந்தது  மகான்களாலும் பல்லவ பாண்டிய மன்னர்கள் பலராலும் கட்டி முடிவுபெராமல் இருந்த கோயில் திருப்பணிகள் பல செய்து முடிக்கப்பட்டன  திருப்பணிகள் விபரம் மகாமதில் கௌரி தீர்த்தத் திருக்குளம் தளவரிசை பதினோரு கோபுரங்கள் முதலியவைகளைப் புனருத்தாரனம் செய்தும் கோபுரங்களில் 27 செப்புக்கலசங்கள் அமைத்தும் பழுதுபட்டுக்கிடந்த தேர்களையும் வாகனங்களையும் புதுப்பித்தும் தேர்களை நிறுத்துவதற்காகப் பெருந்தொகை செலவில் இரும்பு கர்டர் ஜிங்க்ஷீட் கொட்டகை அமைத்தும் மிகுந்தசெலவில் பட்டுத்துணியால் தேர்சீலைகள் தைத்தும் முன் கோபுரத்தின் புராதன ஐதீகக் சின்னங்களைப்  புதுப்பித்தும் மண்டபங்களின்மேல் தளத்தில் திருக்கைலாயக் காட்சி முதலான பல புராணக் காட்சித் திருவுருவங்கள் அமைத்தும் சீர்குலைந்து போன துவஜஸ்தம்பத்தை நீக்கி புதிய கம்மபம் அமைத்து அடி முதல் முடிவரை செப்புத்தகடு பொருத்தியும் அறுபத்து மூன்று சிவனடியார்களின் கற்சிலா மூர்த்திகளை ஸ்தாபித்தும் தொகை அடியார்களுடன் 72 அடியவர்களின் பஞ்சஉலோக மூர்த்திகள் வார்த்தும் கைலாயக்காட்சி விமானம் செய்தும் வேண்டிய இடங்களில் இரும்புக்கம்பிகளால் வேலி அமைத்தும் ஏற்கனவே அடியேனுடைய கனவில் அம்பிகேஸ்வரி தோன்றி அறிவித்தபடி பூமியில் அம்பிகையும் இலிங்கமும் கண்டு எடுக்கப்பட்டு பதினாறுகால் மண்டபம் பஞ்ச கலச கோபுரம் ஐதீகச் சின்னங்களுடன் புதியதாக அம்பிகேஸ்வரி  சமேத ராஜேஸ்வரர் ஆலயம் கட்டி அதற்கென நித்ய பூசைகட்கு ஏற்பாடு செய்தும் காடாய்  இருந்த இடத்தை நந்தவன ஆஸ்ரமாக அமைத்தும் மின்சாரமில்லதிருந்த ஊருக்கு மின்சாரம் வரவழைத்து கோயில் முழுவதும் ஒளிமயமாக்கியும் சங்கு பம்புசெட்டு ஒலிபெருக்கிகள் அமைத்தும் கோயில் முழுவதும் வர்ணங்கள் தீட்டியும் இத்தகைய அறிய திருப்பணிகள் செய்து முடித்து பேய்க்கரும்பு இனித்தால்தான் கும்பாபிஷேகம் செய்வது என நான்காண்டுகள் வரை திருபணிசெய்து ஆண்டவன் திருவருள்படி பேய்க்கரும்பு இனித்ததால் 14-1-63 அன்று உலக மக்கள் மகாகும்பாபிஷேகம் திருவலம் ஸ்ரீ வில்வனாதேஸ்வரப் பெருமானுக்கும் சகல மூர்த்திகளுக்கும் யாகசாலை ஓமகுண்டம் முதலிய சகல வைபவங்களுடன் நடைபெறச் செய்து அன்று தொடங்கி 48 நாட்கள்   கும்பாபிஷேகமும் அந்நாட்களில் நாள்தோறும் ஐயாயிரம் மக்களுக்கு அன்னதானம் அளித்தும் பல ஆண்டுகள் நின்று விட்டிருந்த விழாக்களை நடத்தியும் மூன்றாண்டுகள் வரை கும்பாபிஷேகமப் பெருவிழாவும் நடத்தி முடிவுற்றன பின்னர் கோயில் மதிற்புறத்தில் பசுமண்டபமும் கோபுரதின்முன்பு இரும்புக்கம்பங்கள் அமைத்து ஜிங்க்ஷீட்டினால் பந்தலும் அமைக்கப்பட்டன இக்கோயில் தொடர்பான ஸ்ரீ ஏகவல்லியம்மன் கோயிலுக்கும் திருப்பணிகள் செய்து மின்சார மெர்குரி விளக்குகள் அமைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது சாசன விபரம் திருப்பணி செலவுகள் போக மிகுதித்தொகை ரூபாய் அறுபத்தோராயிரம் 61,000..தற்போது நிரந்தர டெபாஸிட்டாக ராணிப்பேட்டை இண்டியன் ஓவர்ஸீஸ் பாங்கியில் கட்டி அறநிலையப் பாதுகாப்பு அரசாங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது  இத்தொகை கோயில் மின்சாரவிளக்கு  மராமத்துகளுக்கும் செலவுக்கும் மூலதனமாக வைக்கப்பட்டுள்ளது இதில் வரும் வட்டியை மட்டும் வாங்கி மின்சார செலவு செய்யலாம்  அதைத்தவிர மூலதனம் ரூபாய் அறுபத்தோராயிரத்தை சூரிய சந்திரர்கள் உள்ளவரை யாருக்கும் வாங்கவோ வேறு எந்த செலவுகளுக்காக மாற்றவோ உரிமையில்லை வட்டியை மட்டும் வாங்கலாம் இந்த வட்டிப்பணத்தில் ஸ்ரீ ஏகவல்லியம்மன் கோயில் மின் விளக்குச் செலவுக்கும் பயன்படுத்த வேண்டும் ஸ்ரீ வில்வநாதேசுவரர் ஆலயத்திற்கு இத்தொகை  ரூபாய் அறுபத்தோராயிரம் 61,000..நிரந்தரசொத்தாக சொந்தமாக்கப்பட்டது மற்ற யாருக்கும் உரிமையில்லை இப்படிக்கு என்மனப்பூர்வமாய் எழுதிவைத்த செப்பேடு சாசனம்  

இவையன்றி சென்னை கந்தகோட்ட வெள்ளித்தேரும் செய்து வைக்கப்பட்டது இங்ஙனம் சிவானந்த மௌன சுவாமி திருப்பணி தொண்டர், டிரஸ்டு போர்டு தலைவர்  ஸ்ரீ வில்வநாதீஸ்வரர் தேவஸ்தானம் திருவலம்  அறநிலையக் கமிஷனர் திரு M.S.சாரங்கபாணி முதலியார் B.A.B.L. டெபுடி கமிஷனர் திரு D.ராமலிங்க ரெட்டியார் M.A.B.L. சென்னை உதவிக் கமிஷனர் திரு தீனதயாளு B.A.B.L., காஞ்சிபுரம் E.O. திரு R.N. ராதாக்கிருஷ்ண ரெட்டியார் B.COM. திருவலம் தர்மகர்த்தர்கள் திரு V.D.கோவிந்தராசு செட்டியார் ராணிபேட்டை திரு K.M.துரைசாமி முதலியார் திரு K.N.சபாபதி முதலியார் திரு முத்து கவுண்டர் குறிப்பு பெரிய பைண்டு புத்தகத்தில் எல்லா விபரங்களும் முக்கிய நோக்கமும் பிரதமர் முதல் முக்கியமானவர்கள் கையெப்பமுடன் எழுதி E.O. இரும்புப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது  மேற்கண்ட செய்திகள் யாவும் ஷெட்டில்மெண்டு எழுதி ரிஜிஸ்ட்டர் செய்யப்பட்டுள்ளது சென்னை தமிழ்நாடு கவர்னர் மேன்மை தங்கிய மைசூர் மகாராஜா ஸ்ரீ ஜெயசாமராஜ உடையார் பகதூர் அவர்களால் இந்த சாசனம் திறந்து வைக்கப்பட்டது  இடம் கவர்னர் கம்ப்  திருவலம் 
என்னால் ஏற்படுத்திய 108 லைட்டும் நான் ஏற்படுத்திய இரண்டு கால பூஜைகளை பண்ணியும் உற்சவமும் நிரந்தரமாக நடந்துவர வேண்டியது 

ஓம் முருகா ஊரார் உலகத்தார் கண்ட அதிசயம் திருச்செந்தூரிலே போகர் சமாதி கண்ட சித்தர் சிவானந்த மௌன  சுவாமிகள் முற்றும் துறந்தவர் ஆடைகளை கடந்தவர் ருசி பசி அற்றவர் ஸ்நான  பானம் விட்டவர் நாயுடன் உண்பவர் கோவணமோ கோணி பட்டைதான்  ஏகபுதல்வர்  தேசபக்தர் 108 வியாதிகளும் தீர்த்தவர் நானசம்பந்தர்  பாடியதை மந்திரமாவது நீறு என்பதை நிரூபித்தவர் விபூதியாலே பலரோகம் சந்தன சம்பத்து மக்கள் குறையும் தீர்த்தவர் பட்டினத்தாருக்கு பேய் கரும்பு ருசித்ததை இங்கு நிரூபித்து மூண்றாண்டும்   கும்பாபிஷேகம் செய்தவர் பட்டுப்போன வேப்பமரம் துளிர்த்து விருக்ஷமாகியது வெட்டியா நுனித்துண்டும் மரமாகியதை இன்றும் காணலாம் நாங்கள் கண்ட அதிசயம் எழுத ஏட்டிலடங்காது சொல்லி முடியாது சரித்திரமே வாங்கி படித்தாலும் அவரது அற்புத மகிமையைச் சொல்லொனா நடமாடும் கண்கண்ட தெய்வமையா  அரிதரிது பார்த்தவர்களா தரிசித்தவர்களா என கேட்டு அதிசயக்கும் கட்டம்  வரும் 
இங்ஙனம் திருவலம் கம்பராஜபுரம் கிராமவாசிகள் 

திருவலம் சுவாமிகள் மகிமை சொல்ல முடியாது  விசுவாவசு வருடம் வைகாசி மீ . 13,26-5-1965 ரூ 66 ஆயிரம் விபரம் இந்த தேதி தேவஸ்தான சிவானந்த மௌன சுவாமி மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் முன் துவர்க்கும் பின் இனிக்கும் சிவமயம் 

20
வரியில் வரி பிளப்பு ராணிப்பேட்டை இந்தியன் ஓவர்சீஸ் பாங்கியிலிருந்த ரூபாய் 61 ஆயிரத்துடன் ரூபாய் ஐந்து ஆயிரமும் சேர்த்து ஆக ரூபாய் அறுபத்தாறு ஆயிரத்திற்கு சென்னை ஐகோர்ட்டு அபிஷியல் டிரஸ்டி மூலம் ஸ்ரீ - - ஸ்ரீ சிவானந்த மௌன சுவாமிகள் ஆகிய நான் ஏற்படுத்தியுள்ள சாசனத்தின்படி 19 அயிட்ட தர்மங்களின் விவரம் நான் தங்கியிருந்த காரணாம்பட்டு   செல்லியம்மன் கோயில் தீபத்திற்கு தர்மம் மாதம் ஒன்றுக்கு ரூபாய் பத்து 10.. நான் தங்கியிருந்த அம்முண்டி ராக்காத்தம்மன்  கோயில் தீபத்திற்க்காக தர்மம் மாதம் ஒன்றுக்கு ரூபாய் பத்து 10..வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி தேவஸ்தானம் தீபத்திற்க்காக தர்மம் மாதம் ஒன்றுக்கு ரூபாய் பத்து 10.. எனது ஆஸ்ரம்திலுள்ள ஸ்ரீ அம்பிகேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோயில் பூசைக்காக குருக்கள் கட்டளை தர்மம் ரூபாய் ஐந்து 5.. நான் தங்கியிருக்கும் திருவலம் ஆஸ்ரம வார வழிபாட்டிற்காக தர்மம் மாதம் ஒன்றுக்கு ரூபாய் பத்து 10.. நான் திருவல தேவஸ்தானத்தில் ஏற்படுத்திய இரண்டு கால பூசைக்கும் என்னால் நிறுவப்பெற்றுள்ள நாயன்மார்கள் 63 தொகைஅடியார்களுடன் 72 அடியார்களின் பூசைக்குமாக குருக்கள் கட்டளை தர்மம் மாதம் ஒன்றுக்கு ரூபாய் பத்து 10.. நான் எற்படுத்தியுள்ள பூசைகளுக்காக ஜலம் கொட்டும் குருக்கள் கட்டளை தர்மம் ரூபாய் 5.. பிரமோத்ஸ்வத்தில் ஆறாம் நாள் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவின்போது ஏழை மக்களின் பசிக்காக உணவளிப்பதற்காக தர்மம் ரூபாய் 100.. இவைகளைத்தவிர  பத்திரத்தில் கண்டுள்ள மற்ற பதினொரு வகை தர்மங்கள் உள்பட 19 அயிட்ட தர்மங்களையும் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள மின்சார செலவுகளையும் .........மாக வைக்கப்பட்டுள்ள ரூபாய் அறுபத்தாறு ஆயிரத்திற்கும் வரும் வட்டிதொகையை மட்டும் கொண்டு நடத்தி வருவதோடு மிகுந்த பணத்தில் பிரமோத்சவ காலத்தில் ஆறாம் நாள்  நடைபெறும்  அறுபத்துமூவர் உற்சவத்தையும் திருப்பணிக்கு முன்பு ஏழு ஆண்டுகளாக நின்று போயிருந்து அடியேனால் துவக்கப்பட்ட பிரமோத்சவ  விழாக்களையும் உலக பக்தர்கள் சிறப்பாக நடத்தி வர வேண்டியது ......... சென்னை திருத்தனிகை பொள்ளாச்சிக்கும் மூன்று வெள்ளி ரதங்கள் செய்து அளித்தார் கீழ்மின்னல் முருகன் கோயிலுக்கு பல ஆயிரம் செலவில் படி அமைத்தார்  இவ்வாலயதிர்க்கு வெள்ளி மயில் கிளி வாகனம் வெள்ளி   ....டம் பிரபை செய்து வைத்தார் ஒரு லக்ஷத்தி ஆயிரக்கனக்கான ருபாய் சென்னை அய்கோர்ட் அபிஷியலலில் மேல்க்கண்ட 21 தர்ம கட்டளை நடக்க வைத்துள்ளார் இவ்வாலயத்திலும்  இன்னும் பல ஆலயத்திலும் ...... அறச்சலை அமைத்துள்ளார் திருப்பணிகள் விபரங்கள் இவ்வாலயத்தில் ரெண்டாவது கோபுர வாச ......... கீழ்பக்கத்தில் காணலாம் இப்படிக்கி திருப்பணி தொண்டர் தர்மகர்த்தா தலைவர் சித்தர் .........................................( Last line was not able to read ).

 --- OM SIVAYA NAMA ---

4 comments:

  1. The reverential attitude with which you have recorded this visit, it touching. Regards

    ReplyDelete
  2. Namaskaram, landed up on this post while searching for Thiuvalam swami's thirumukam..... Was reading about swami... Penned by Pon. Paramaguru(I. P. S)... (Nan kanda Siddhargal by Vaanathi pathippagam)..... Dhanyoasmi....

    ReplyDelete