சோழமன்னன் பரகேசரிவர்மனின், 5 ஆம் ஆட்சியாண்டு
கல்வெட்டு ( 912 பொயு ) கிழார்க்கூற்றத்துப்
பிரம்மதேயம் புள்ளமங்கலத்துத் திருவாலந்துறை மகாதேவர்க்கு நந்தாவிளக்கொன்று எரிப்பதற்குத் தினமும்
உழக்கு எண்ணெய் கிடைக்கத்தக்க வகையில் மாடலனக்கஞ்சாமி என்பவர் இரண்டுமா முக்காணி
நிலம் வழங்கிய செய்தியைக் கூறுகிறது இக்கல்வெட்டு. வழங்கப்பட்ட நிலத்தின் பெயர் "பன்றிகுழி" எனத் தெரிகிறது.
14/1995- Parantaka Chozha-I’s -regnal year lost,
10th Century CE. ( on the
north wall of the ardha mandapa ) incomplete inscription - stops after
mentioning the title of the king "Madiraikonda kõpparakesari panman ..”.
10 ஆம் நூற்றாண்டு, பராந்தக சோழனின்
கல்வெட்டு “மதிரை கொண்ட கோபரகேசரி…” என
எழுதத் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள இருகல்வெட்டுகள் உள்ளன.
15/1995 Name of the King and regnal year lost
In characters of 10th Century
CE. This damaged inscription at the beginning and end. Seems to record a gift
of paddy for burning a perpetual lamp with five ulakku of oil. The paddy was
calculated for one year as one kalam by the members of Mahasabha of
Pullamangalam.
பெயர் அறியப்படாத
மன்னரின் காலத்தைச்சார்ந்த கல்வெட்டு, தினசரி நந்தா விளக்கெரிப்பதற்கு ஐந்து உழக்கு எண்ணெய்
என்ற கணக்கில் ஆண்டொன்றுக்குக் கல நெல் மகாசபையாரால் வழங்கப்பட்டது. இதிலிருந்து ஐந்து நந்தாவிளக்குகள் கோயிலில் எரிவதற்கு மகாசபையார் ஏற்பாடு
செய்தனர் என்று தெரிகிறது.
16/1995 The 10th-century inscription
without the king’s name and year, ( North side of the adhishtana (Kumudam) of
Ardha mandapa ), records the gift of land in two different places situated one
at the eastern side of the tank of Srikandamangalam and the other on the bank
of a canal, called pańkādu, to burn a perpetual lamp during day and night in front of the deity Tiruvalanthurai Mahadeva at Pullamangalam. This inscription is as
two pieces now.
10ஆம் நூற்றாண்டு பெயர் மற்றும் ஆட்சியாண்டு
அறியப்படாத கல்வெட்டு, புள்ளமங்கலத்துத் திருவாலந்துறை
மகாதேவர்க்கு நந்தாவிளக்கு ஒன்று இரவும் பகலும் எரிப்பதற்குத் தினசரி உழக்கு நெய்
கிட்டும் வண்ணம், வாச்சியன் நாரிநயனகாடன் என்பவர், ஸ்ரீகண்டமங்கலத்துக் கீழ்க்குளத்து.
வெள்ள வாய்க் கரையிலும் மேலும் சிலர் பங்காட்டு வாய்க்காலின் கரையிலும் 3 மாநிலம் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. இரு துண்டுகளாகக் கிடைக்கின்றது.
17/1895 – The Chozha King Parakesari varman’s 8th
regnal year - 10th Century CE inscription ( North side of the adhishtana -Kumudam -of
Ardha mandapa, records the gift of 1 ½ ma
of land called Panrikuli, situated in the northern sluice of Senaikulam, which
was purchased for gold, from the Mahasabha of Pullamangalam, by one individual
named Arithan Maranarayanan, for burning a perpetual lamp to the Mahadeva of
Tiruvalanturai at Pullamangalam.
பரகேசரி வர்மனின் 8ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, திருவாலந்துறை மகாதேவர்க்குத் திருவிளக்கு எரிப்பதற்காக, ஆரிதன் மாறனாராயணன் என்பவர் புள்ளமங்கலத்துச் மகாசபையாரிடம் பொன் கொடுத்து
நிலம் விலைக்கு வாங்கிக் கோயிலுக்குக் கொடையாக வழங்கினார். பன்றிக்குழி சேனைக் குளத்தின் வடவாயில் அமைந்திருந்த ஒன்றரை மாநிலம்
குறிப்பிடப்படுகிறது. (ஊ.க.எண்.1 பார்க்க.
18/1995- The 10th Century
inscription without King and regin regnal, damaged inscription on the north
side of adhishtana ( kumudam ) of Ardha mandapa, begins with
Tirukköiludaiyärgal [Temple administrative officers]. Registers the gift of
land, according to the measurement of paddy calculated for daily offering to
the Temple Place names such as Kilar and Nallur Cheri are mentioned.
10
ஆம்
நூற்றாண்டு ஆட்சியாண்டு மற்றும் பெயர் அறியப்படாத 10 ஆம் நூற்றாண்டு சிதைந்த கல்வெட்டு, "திருக்கோயிலுடையார்கள்" எனப்பட்ட கோயில்
நிர்வாகிகள் பற்றிய குறிப்புடன் கல்வெட்டு தொடங்குகிறது. தினசரிப் பூசைக்கு வழங்கப்பட வேண்டிய நெல்லினைக் கணக்கிட்டு அதற்கேற்ப நிலம்
கொடையாக வழங்கப்பட்டதாகத் தெரிகிறது."கிழார், நல்லூர்ச்சேரி "ஆகிய இடப்பெயர்கள்
இக்கல்வெட்டில் இடம் பெறுகின்றன.
19/1995 Chola king Rajäkesarivarman
(Rajaraja I ) 15th regnal year north side of the Adhishthana
(Kumudam) of Ardha mandapa, inscription records (
might have belonged to the period of Rajaraja-I ), the gift of 90 sheep for
burning a perpetual lamp daily by giving one ulakku of oil per day to the deity
of Tiruvalanthurai.
இது இராஜராஜ சோழனின் 15ஆம் ஆட்சியாண்டு
கல்வெட்டாகலாம். நந்தாவிளக்கு ஒன்று
எரிப்பதற்குத் தினசரி உழக்கு நெய் கிட்டும் வண்ணம் 90 ஆடுகள் வழங்கப்பட்ட செய்தி கூறப் பட்டுள்ளது.
20/1995 Chola Parakesarivarman’s, 3rd
regnal year, 10th Century CE ( North wall of the Central shrine )
inscription records that the assembly of Pullamangalam met at the upstairs of
entrance tower in front of the Tiruvalanturai temple, by the beat of the drum to sell
the land. The Ganattar [administrative body] of Naduvirchari bought the
land for 20 kasu for the temple of Kalapitari. It also
mentions that the land includes the kävitikkani of Thiruvenkattadikal alias
Elunurru Aimpattu Nalvan and his brothers they lost their right tax-free,
due to their non-submission of accounts to the official called Sundarachola
Muttaraiya.
சோழ அரசர் பரகேசரிவர்மனின் மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு, கிழாற்கூற்றத்து
பிரம்மதேயம் புள்ளமங்கலத்து மகாசபையார் இக்கோயிலின் முன்புள்ள வாசல் மாடத்தில்
கூடினர். பறையறைந்து கூட்டம் பற்றி அறிவிப்புச் செய்யப்பட்டுக் கூட்டம்
கூட்டப்பட்டது. இவ்வூரிலிருந்த காளி கோயிலுக்கு நடுவிற்சேரி திருமணி மண்டகமுடைய
காளாபிடாரிக்கு,
நடுவிற்சேரி கணத்தாரிடமிருந்து 25 காசு பெற்றுக் கொண்டு சபையார் மூன்று மா நிலத்தினை விற்று
வழங்கினர். இவ்வூர் மத்யஸ்தனான திருவெண்காட்டடிகள் ஆன எழுநூற்று ஐம்பத்து
நால்வனும் அவனது தம்பிமாரும் காவிதிக்காணியாகப் பெற்றிருந்த நிலம். அரசு அதிகாரி
சுந்தரசோழமுத்தரையர் ஆன பிராந்தகமுத்தரையர் வந்து கணக்கு கேட்டபொழுது அவர்கள்
காட்டாததால்,
இறையிலியிலிருந்து நீக்கப்பட்டது. அந்நிலமும் இதில் அடங்கும் என
கூறப்பட்டுள்ளது.
21/1995 – Kulothunga Chozha-III’s regnal year
lost - 12th Century CE, inscription ( North and West side of the
Adhishthana of the Central shrine ) starts with his prasasti meikeerthi,
records that tirunamattukkani land with the taxes. This might have been gifted
to the deity of Tiruvalanthurai at Pullamangalam. a brahmadeya in Kilärkurram,
a subdivision of Nittavinōdhavalanādu.
12 ஆம் நூற்றாண்டு மூன்றாம்
குலோத்துங்க சோழனின் கல்வெட்டு
அவருடைய மெய்கீர்த்தியுடன் ஆரம்பிக்கின்றது. நித்தவினோத வளநாட்டுக் கிழார்க்
கூற்றத்துப் பிரமதேசம் புள்ளமங்கலத்துத் திருவாலந்துறையுடைய மகாதேவர்க்குத்
திருநாமத்துக்காணியாக வழங்கப்பட்ட நிலத்தின் வரியினங்கள் குறிப்பிடப்படுகின்றன. கல்வெட்டு முற்றுப் பெறவில்லை.
22/1995 - Rajaraja Chozha-I- 12th (
? ) regnal year 997CE, ( South wall of
Central shrine ) inscription, records the gift of one Veli of land and a garden
to the Chattars [ Persons who well versed in Vedas ] for chanting Sama and Rig
Vedas as Chattabhoga, by the assembly of Pullamangalam, in Kilärkurram. It is
said that this decision was taken by the assembly, at the meeting which was
conducted by the beat of a drum and blow of Kalam, held in the house of Aridan Mangan
Suvaran of this village.
Earlier the lands were enjoyed by the family of
one Nakkan Kali Perumal. But the King ordered them to sell the lands and bring it to
the custody of the Govt official Pändikulásani Märäyar. So the lands were
brought for sale in the presence of Samantha and Danika. But nobody came
forward to buy it. So Pandi Kuläsani Marayar ordered the assembly to take it
and pay the money, Then the assembly paid 90 Kasu as the cost of that land and
garden, and took it with their possession, Later they gifted that land to the
chattars.
சோழ அரசர் ராஜராஜனின் 12 ஆம் ஆட்சியாண்டாகக் கருதப்படும்
கல்வெட்டு, கிழார்க் கூற்றத்துப் பிரம்மதேயம் புள்ளமங்கலத்து
மகாசபையார் அவ்வூர் ஆரிதன் மன்றன் சுவரன் வீட்டில் கூடிப் பேசினர். அக்கூட்டம்
பற்றித் தட்டழி கொட்டிக் காளம் ஊதி அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில்
இவ்வூரில் நின்றோதும் சட்டர்களாகிய சாம வேதிகளுக்கும் இருக்கு வேதிகளுக்கும் சட்ட
போகமாக நிலமளிக்க எடுக்கப்பட்ட முடிவு இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலம் முன்னர் நக்கன் காளி பெருமாளார்
என்பவருக்குக் கொடுக்கப்பட்டி ருந்தது. அவர் அனுபவித்துக் கழிந்த பின்னர் அவனுக்கு
உரிமையான நிலம். அவன் உடன் பிறந்தார் நிலம். அவன் மக்கள் நிலம், பிராமணிமார் நிலம் ஆகிய நிலங்களை விற்றுப் பாண்டி
குலாசனி மாராயர் தண்டல் நிலத்தில் சேர்க்க என்று மன்னனின் ஆணை வர. அந்நிலங்கள் ஜாதிசாமந்தர், தனிர் முன்னிலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.
ஆனால் அந்நிலங்களை வாங்குதற்கு யாரும் முன் வரவில்லை யாதலால், சபையோரே அந்நிலத்தைப் பெற்றுக் கொண்டு அதன்
விலைக்காசை வைக்க வேண்டுமென்று பாண்டி குலாசனி மாராயர் சபையாருக்கு அரச ஆணையாக
உத்தரவு பிறப்பிக்க [கோச்செய்ய]. சபையோர் ஒரு வேலி நிலத்துக்கு 80 காசும். தோட்டத்துக்கு 10 காசும் ஆக மொத்தம் 90 காசுகளை அளித்தனர். சபையோரால் இவ்வாறு காசு கொடுத்து
வாங்கப் பெற்ற நிலங்கள் தான் சட்டபோகமாக நின்றோதும் சட்டர்களாகிய சாம
வேதிகளுக்கும் இருக்கு வேதிகளுக்கும் அளிக்கப்பட்டது. மகாசபை உறுப்பினர்களும்
மத்யஸ்தனும் கையொப்பமிட்டுள்ளனர்.
23/1995 – Rajaraja Chozha –I’s, 21st
regnal year – 1006 CE - North wall of the Central shrine, inscription records
about the same land mentioned in the previous record. States that both the
assembly of Pullamangalam, a brahmadeya of Kilärkurram, in Nittavinōdhavalanadu, and Gov't officer Athavatturudaiyar
a tax collector, have passed a resolution at their meeting to collect the tax (
irai ) for the lands since there was no chanting by Chattars. The lands were
given to the Chattars for chanting Vedas in the 12th regnal year of
the King as tax-free Chattabhoga earlier.
முதலாம் இராஜராஜ சோழனின் 12ம் ஆட்சியாண்டில் சபையோரால் நின்றோதும்
சட்டர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் பற்றி [பார்க்க க.எண். 10] இக்கல்வெட்டும் பேசுகிறது.
முன்னர் நீலமங்கலத்து முட்டத்து அளையூர் நக்கன் காளி
என்பவன் காணியாய் அனுபவித்த நிலத்தைச் சபையோர் விலை கொண்டு. மன்னரின் 12-வது ஆட்சி யாண்டின் போது நின்றோதும் சட்டர்களுக்கு
இறையிலியாக வழங்கிக் கல்லில் பொறித்தும் வைத்தனர். ஆனால் தற்போது நின்றோதும்
சட்டர்கள் ஓதுவாரின்றிப் போய்விட்டமையால் இறையிலியாக அறிவிக்கப்பட்டிருந்த
அந்நிலங்களுக்கு இறை [வரி ] ஏற்றிக் கொள்க என்று மன்னர் ஆணையிட்டபடியால். அந்த
ஒன்றே நான்கு நிலத்திற்கும் இறை கொள்வதாக நித்தவினோத வளநாட்டு கிழார் கூற்றத்துப்
பிரம்மதேயம் புள்ளமங்கலத்துச் சபையோர் கூடி முடிவெடுத்தனர். அப்போது தண்டல்
அதவத்தூர் உடையாரும் [அரசு அதிகாரி] அக்கூட்டத்தில் பங்கு பெற்றிருந்தார் என்ற
செய்தி கூறப்பட்டுள்ளது.
24/1995 – Rajaraja Chozha-I’s - 12th
regnal year- 997 CE-South side of the
Adhishtana ( Kumudam ) of Central shrine, inscription, records that the
assembly of Pullamangalam, a Brahmadaya in Kilärkurram, met in front of the
Thiruvalanthurai Paramesvara temple on the day of lunar eclipse and made the
sale of land as Ambalapuram to a certain Arithan Manran Suvaran- The land was
purchased and donated by him for the maintenance of an Ambalam. which was
established by him earlier, with Prakara, water tough, to the persons who bale out water from the well, to clean the floor ( with cow dung ) pour water
in the Ambalam and for renovation whenever required.
The assembly also made the arrangements to
exempt taxes for the purchased lands, for that the donor gave [Dravyam]
money in advance.
முதலாம் ராஜராஜனின் 12 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, கிழார்க் கூற்றத்துப் பிரமதேயம் புள்ளமங்கலத்துச்
சபையார். இவ்வூரைச் சேர்ந்த ஆரிதன் மன்றன் சுவரன் என்பவனுக்கு அம்பலப்புறமாக 800 பார்த்தி நிலத்தைப் புள்ளமங்கலத்துத் திருவாலந்துறை
பரமேசுவரர் கோயிலின் முன்னே, சந்திரகிரஹணத் தன்று கூடியிருந்து விற்றுக்
கொடுத்தனர்.அந்நிலம். முன்னர் அவனால் எடுப்பிக் கப்பட்ட அம்பலத்துக்கும் அதன்
சுற்றுக் கல்லூரிக்கும்,தொட்டிக்கும்,கிணற்றில் நீர் இறைப்பவன், அம்பலம் மெழுகுபவன் ஆகியோருக்கும். அம்பலத்தில் அழிவு
ஏற்படுகின்ற போது புதுப்பிக்கவும், போன்ற பராமரிப்புச் செலவுகளுக்காக ஆரிதன் மன்றன்
சுவரனால் கொடையளிக்கப்பட்டது.
மேலும் கொடை வழங்கப்பட்ட அந்த 800 பார்த்தி நிலத்திற்கும் வரி நீக்கித்தர வேண்டுமென்று
சபையோரிடம் பணம் [திரவ்வியம் ] கொடுத்தமையால் அதைப் பெற்றுக்கொண்ட சபையோர்
வரிநீக்கம் [இறையிழிச்சி] செய்து கொடுத்தனர்.
அவ்வூர் மண்டகத்தே தன்மி செய்து கூடியிருந்ததையும்
இக்கல்வெட்டுத் தெரிவிப்பதால், இங்கு கூடியிருந்தது. இறைஇழிச்சித் தரும் முடிவெடுப்பதற்காக எனலாம்.
25/1995 Chola King Adittakarikalan’s 5th
regnal year 964 CE South wall of the Central shrine, inscription, records the
gift for food offerings to the goddess Käläpidari, housed in the mandapa
called, "Thirumani Mandapam" A long list of donors appeared.
சுந்தரசோழனின் மூத்தமகனும் இளவரசனுமாகிய
ஆதித்தகரிகாலனின் 5 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, திருமணிமண்டபத்துக் காளாபிடாரிக்குத் திருவமுது
படைக்கும் செலவிற்காக பலர் நிவந்தமளித்துள்ள செய்தி குறிக்கப்படுகிறது. அவர்களின்
பெயர்ப் பட்டியல் மிகவும் நீண்டுள்ளது.
26/1995 Vikramachola Chozha’s 9th regnal
year. 1126 CE. The south wall of the Central shrine, inscription, records that the
two persons called Palli Ponni Nädälvän and Vanarayapoyan who were working as
watchmen in the temple of Thivuvalanthugai Mahadeva of Pullamangalam, a
brahmadeya of Kilärkurram, a subdivision of Nittavinoda Valanadu, had a quarrel
between them and fought with arrows. Kuppaipperumän, son of Ponni Nadalvan died
in the hands of Vanarayapoyan. But he did not make any arrangements to
substitute his life. So he made a gift of ¾ perpetual lamp to the temple, in
the name of deceased, Kuppaipperuman, with 72 sheep.
விக்ரம சோழனின் 9 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, நித்தவிநோத வளநாட்டு கிழார்க்கூற்றத்துப் பிரமதேயம்
புள்ளமங்கலத்துத் திருவான துறை மகாதேவர் கோயிலில் பள்ளி பொன்னி நாடாழ்வானும், வாணராய போயனு காவற்பணி செய்து வந்தனர். இவர்கள்
இருவருக்கும் பகை ஏற்பட்டு,அம்பு என் சண்டையிட்டபோது, வாணராயப் போயன் அம்பு பட்டுப் பொன்னிநாடாழ்வான் மக
குப்பைப் பெருமான் இறந்து விட்டான். அவன் அதற்கு இழப்பீடாக எது கொடுக்காத
காரணத்தினால் குப்பைப்பெருமான் பெயரில் கோயிலில் 72 ஆடு கொடுத்து 3/4 திருநொந்தா விளக்கு எரிக்கவேண்டும் என வாணராய போயனுக்
சபையார் ஆணையிட, அவன் 72 ஆடுகள் கொடுத்த
செய்தியும், சிவப்பிராம மூவர் அதனை ஏற்று திருநந்தாவிளக்கை எரிக்க
உடன்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.
27/1995 Chola King Parakesarivarman’s 6th
regnal year 913 CE, Central shrine. The south wall of the Central shrine, inscription, records
the gift of land as Sandhipuram in Srikandamangalam for conducting early
morning service with food offerings by rice and ghee daily to the deity ( Mahadeva
) of Thiruvalanthurai at Pullamangalam, a Brahamadaya of Kilarkurrm, by certain
Sembian Mahabalivanarayan
சோழ அரசர் பரகேசரிவர்மரின் 6 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, கிழார்க் கூற்றத்துப் பிரமதேயம் புள்ளமங்கலத்துத்
திருவாலந்துறை மகாதேவர் கோயிலில் சிறுகாலைச் சந்தியின் போது தினமும் இருநாழி அரிசி
மற்றும் அரைப்படி நெய்யால் திருவமுது செய்து படைப்பதற்காகச் செம்பியன் மகாவலி
வாணராயன் என்பவன் ஸ்ரீகண்டமங்கலத்தில் நிலம் விலைக்கு வாங்கிச் சந்திப்புறமாகக் கோயிலுக்குக்
கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.
28/1995- Parantāka Chozha-I’s 31st regnal year 938 CE-
Southside of the Adhishtana ( Kumudam ) of Ardha mandapa, an inscription records
the gift of land in Srikandamangalam by the assembly of the village to the temple
of Thiruvalanthurai Mahadeva for the musicians who mute Timilai, a music
instrument in this temple.
முதலாம் பராந்தசோழரின் 31ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, பிரமதேயம்
புள்ளமங்கலத்துத் திருவாலந்துறை மகாதேவர் கோயிலுக்கு இவ்வூர் சபையார் ஸ்ரீகண்டமங்கலத்துதுக்
கிழார் என்னுமிடத்தில் உள்ள நிலத்தைக் கொடை யாக அளித்தனர். அந்நிலம் அக்கோயிலில்
திமிலை என்னும் வாத்தியக் கருவியை இசைக்கும் இசைக்கலைஞர்களுக்கு அளிக்கப்பட்டதைத்
தெரிவிக்கிறது இக்கல்வெட்டு.
29/1995 – Parantaka Chozha- I’s - regnal year
lost 10th Century CE. ( South
wall of the Ardha mandapa ) inscription records the royal gift of land in
Tavāman Välkkai in Miraikkürram, on the northern bank to the deity in the
Thiruvalanthurai temple at Pullamangalam, a brahmadeya in Kilar kurram, as devadana
( free from the cultivators) which yields 500 kalam of paddy and five kalañju
of gold by the king Parantaka chola,
முதலாம் பராந்தக சோழனின் ( ஆட்சியாண்டு தெரியவில்லை ) 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு, கிழார்க் கூற்றத்துப் பிரம்மதேயம் புள்ளமங்கலத்து இறைவன்
திருவாலந்துறை மகாதேவர்க்குக் குடிநீங்கிய தேவதானமாக ஐந்தே காலே அரைமா அரைக்காணி
நிலம் வழங்கி, அதன் மூலம் ஐந்நூற்றுக்கல நெல்லும், ஐங்கழஞ்சுப்
பொன்னும் (ஆண்டுக்கு ?) கோயிலுக்கு வருமானம் வர வகை செய்யப்பட்ட செய்தி குறிப்பிடப்
படுகிறது. இரண்டாம். மூன்றாம் பகுதிகள், கல்வெட்டுகளின்
இறுதிப் பகுதியாகும் எக்கல்வெட்டின் தொடர்ச்சி என்பது உறுதியாக அறியக் கூடவில்லை.