1st October
2017.
In August 2017, Mr
Prumal took us to see the hero stones erected at the base of the Kalrayan
Hills. Most of the hero stones are located in the fields and middle of the beetle
nut farms. After seeing the picturesque location requested him to take us to
Kalrayan Hills also. The Heritage visit to Kalrayan Hills organized by Salem
Historical Research Center gave me the opportunity to see and enjoy the natural beauty, gifts, treats, heritage value, etc., of Kalrayan Hills on 1st October
2017.
Enjoyed the fewer traffic
roads with a number of hairpin bends, lush green hills, stepped fields on the hill slopes, Coffee
plants, pepper plants on the silver oak trees, Valleys with paddy fields,
Medicinal plants, fresh and not much-polluted air which refreshed our mind and body...
The Kalrayan hills are a
treasure of heritage values with ten thousand years old Neolithic tools
worshipped as Pillayar and Perumal by the tribal Villagers, Dolmens erected for
the dead - also called Kulla Pandi houses by the local people, Karkuvai,
Hero stones, Sati stones, a 11th century Rajendra Chozha –I, Period Kal
Chekku with inscriptions, inscription tablets and of-course tribal temples too.
This Heritage Walk gives us the opportunity to learn the heritage Values of the hill, the customs, the culture of the Tribal villagers and their way of life, etc.
I extend my sincere thanks
to the Organisers Pon Venkatesh, Dr Ponnambalam, Periyar Mannan, Kalai Selvan,
Jeevanarayanan, Our Guru Srinivasan, and the great Perumal ( the man behind
this show ) and the advisers Mrs & Mr. Veeraraghavan and Pandian, for allowing me to join this Heritage visit with the hot and tasty afternoon
lunch & SHRC’s special Vada. Thanks once again and will continue my journey
in the forthcoming visits too…
ஆகஸ்டு மாதம் 2017, திரு பெருமாளுடன் கல்வராயன்
மலை அடிவாரம் வரை நடுகற்களைக் காணச் சென்று இருந்தோம். மலையின் அடிவாரமே பாக்கு மற்றும்
தென்னை மரத் தோப்புகளுடன் நிறைந்து மிகவும் அழகாக இருந்தது. மலையின் அடிவாரமே இப்படி இருந்தால் மலையின் மேலே
இன்னும் எவ்வளவு நன்றாக இருக்கும் என் கருதி திரு பெருமாளிடம் கல்வராயன் மலைக்கு ஒருதடவை அழைத்துச் செல்லுமாறு
கேட்டுக்கொண்டு இருந்தேன். அந்த வாய்ப்பு சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் மூலமாக அக்டோபர்
மாதம் ஒன்றாம் தேதி 2017ல் நடத்தப்பட்ட கல்வராயன் மலை மரபு நடையின் மூலம் கிடைத்தது.
உயர்ந்த மலைகள்,, வளைந்து நெளிந்து சென்ற அதிக போக்குவரத்து அற்ற சாலைகள், கொண்டை ஊசி வளைவுகள், பச்சை பசேல் என்ற புல் வெளிகள், மலைகளின் சரிவில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட படி போன்ற அமைப்புடன்
விளை நிலங்கள், பள்ளத்தாக்குகளில் நெல் வயல்கள், காபி தோட்டங்கள், அதில் ஊடு பயிராக
வளர்க்கப்பட்ட மிளகு கொடிகள், அவை பற்றி வளர நடப்பட்ட சில்வர்ஓக் மரங்கள், மூலிகை செடிகள்,
கடுக்காய் மரங்கள் அப்பப்பா இன்னும் எத்தனையோ… இவற்றிற்க்கும் மேலாக மாசினால் அதிகமாக பாதிக்கப்படாத காற்று, மிதமான
தட்ப வெட்பம்.. அஹா.. அருமையாக இருந்தது.
வழி நெடுகிலும் அங்கங்கே காணப்பட்ட குக்கிராமங்கள்,
அவர்கள் வாழ்க்கை முறைகள், கேள்விப்பட்ட அவர்கள்
பிறப்பு, திருமண, இறப்பு சடங்குகள் ஒரு பிரமிப்பை ஏற்ப்படுத்தியது. இதற்கும் மேலாக
சதி கற்கள், கல்வெட்டுக்களுடன் கூடிய சோழர்கள் காலம் 11ம் நூற்றாண்டைச் சார்ந்த கல்லில்
செதுக்கப்பட்ட செக்கு, எழுத்துக்களுடன் கூடிய பலகை கற்கள், வீர கற்கள், குள்ள பாண்டி
வீடுகள் என்று மலை வாழ் மக்களால் அழைக்கப்படும் இறந்த மனிதர்களின் ஈம கல்திட்டைகள்,
கற்குவைகள், மலை வாழ் மக்கள் பிள்ளையார் எனவும் பெருமாள் எனவும் கடவுளாகக் கருதி வணங்கும் சுமார் பத்தாயிரம் வருடத்திற்க்கு
முற்பட்ட கற்கால மனிதர்கள் உபயோகித்த கல் ஆயுதங்கள் என நம் முன்னோரின் ஒரு வரலாறே இந்த
மலையில் புதைந்தும் கொட்டியும் கிடக்கின்றது. இன்னும் தோண்ட தோண்ட என்ன என்ன கிடைக்குமோ….
அவற்றில் சில வைரங்களையே நாம் கண்டவை… கோவில்களுக்கும்
பஞ்சமில்லை..
பல இன்னல்களுக்கு இடையே இந்த மரபு நடையை
நடாத்திய நம் சேலம் வரலாற்று ஆய்வு மைய பொறுப்பாளர்கள் பொன் வெங்கடேசன், மருத்துவர்
பொன்னம்பலம், தளபதிகள் கலைச் செல்வன், ஜீவ நாராயணன், எங்கள் குரு சீனுவாசன், அன்பு
நண்பர் பெருமாள் ( இவரின் நட்பை பெற நான் தவம் செய்து இருக்க வேண்டும் ), பெரியார்
மன்னன், , ஆலோசகர்கள் பாண்டியன், அய்யா வீரமணி வீராசாமி என அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த
நன்றிகள்.. இவர்களின் விருந்தோம்பல் என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகள். கள்ளம் கபடம் அற்ற இவர்களுடன் தொடரும் என்பயணம்.
நன்றி.. நன்றி.. நன்றி...
Pepper plant
Still, the native breed
exists
Cable & Dish TV
too entered
A simple function to release the Book on Kalrayan
Hills by SHRC
---OM SHIVAYA NAMA---
No comments:
Post a Comment