The visit to Rock Arts at Raghunatha Puram in
Kallakurichi District, was a part of “Rock Arts of Nadu Naadu Visit, in Viluppuram
and Kallakurichi Districts”, organised by திருவண்ணாமலை மாவட்ட வரலாற்றுஆய்வு நடுவம், on 17th November 2024. Thanks to Mr. Gandhirajan, the Rock Art expert, who guided us to understand Rock Arts (தமிழ் மூலம் திரு காந்திராஜன் அவர்கள்).
சமவெளிப்
பகுதிக்கு அருகாமையிலேயே வடக்கு திசையில் அமைந்துள்ள பாறைக் குன்றில் ஓவியங்கள்
காணப்படுகின்றன. பொதுவாக பாறை ஓவியங்கள் வாழ்விட குகை மற்றும் பாறை ஒதுக்குகளின்
உட்புறத்தில் வரைவதுண்டு. இங்கு வரையப்பட்ட இடம் தங்குவதற்கான இடமல்ல, ஆனால்
வழித்தடத்தில் பயணிப்போர் பார்வையில் படும்படியான இடமாக உள்ளது. அதே நேரத்தில் மழை நீரால்
பாதிக்காவண்ணம் உள்ள பாறையினைத் தேர்ந்தெடுத்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் பெரும்பாலும் சிவப்பு மற்றும் வெள்ளை
வண்ணத்திலேயே வரைவதுண்டு. மிக அரிதாக கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணம்
பயன்படுத்துயுள்ளனர். அந்த வகையில் இங்குள்ள ஓவியங்கள் சிவப்பு மற்றும் மஞ்சள்
வண்ணத்தில் வரையப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது. இங்கு மனித உருவங்களின்றி
விலங்கு உருவங்கள் மட்டுமே வரையப்பட்டுள்ளது.
இரண்டு விலங்குகள் காணப்படுகின்றது. அதில்
ஒன்று மஞ்சள் வண்ணத்திலும் மற்றொன்று சிவப்பு வண்ணத்திலும் உள்ளன. மஞ்சள் வண்ண
விலங்கு நிலகை போன்ற விலங்கினமாக இருக்கக்கூடும் (பெரிய ஆடு/மான் குடும்பம், ஆய்வுக்கு உரியது) சிவப்பு
வண்ணத்தில் உள்ளது மாட்டின் உருவம். மஞ்சள் வண்ண விலங்கின் தலை மற்றும் கொம்புகள்
சிறுத்தும் உடல் திமிலற்ற மாட்டின் வடிவத்தை ஒத்தும் கால்கள் சற்று மெலிந்தும் கணப்படுகின்றது. இதன் உருவம் அடர்த்தியான கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது. அதன் உடம்பின்
உட்புறம் உள்ளுருப்பைக் காட்டும் விதமாக மெல்லிய கோடுகளால் இரண்டு நீள்வட்ட வரைவு
குறுக்கு கோடுகளுடன் நிரப்பபட்டுள்ளது. இவ்விலங்கின் பின் பகுதி சிதிலமடைந்து
விட்டது. இங்கு காடப்பட்டிருக்கும் உள் உருப்பு போன்ற வரைவுகள் ஆலம்பாடி மற்றும்
செத்தவரை ஓவியங்களில் உள்ளதைப் போன்ற வடிவில் ஒத்து காணப்படுகின்றது. இதற்கு சற்று மேலே உள்ள
எருமை மாட்டின் உருவம் சிவப்பு வண்ணத்தில் நேர்த்தியான உடலமைப்பில் கோட்டோவியமாக
காட்டப்பட்டுள்ளது. இதன் உடல் பகுதியில் வெறுமனாகவே உள்ளது. வளைந்த கொம்புகளுடன்,
நீண்ட வாலுடன் காணப்படுகின்றது.
இந்த ஓவியங்களுக்கு சற்று அருகில் மான்
ஒன்றின் உருவம் நிற்கும் நிலையில் கழுத்தை வளைத்து முதுகுப் பகுதியை நாவால்
வருடுவது போல காட்டப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான உடலமைப்பு மற்றும் அளவுகளுடன்
காட்டப்பட்ட அரிய முயற்ச்சி. மேலும் மானின் உருவம் சிவப்பு வண்ணத்தில்
கோட்டோவியமாக வரையபட்டு, உடல்
பகுதியில் உடம்பின் புறக்கோட்டுக்கு இணையாக உடம்பின் உட்புறத்தில் சிவப்பு
வண்ணத்தில் கோட்டோவியமாக காட்டப்பட்டுள்ளது. இவ்விரு சிவப்பு கோடுகளுக்கிடையே
மஞ்சள் வண்ணம் பூசப்பட்டுள்ளது. இரண்டு வண்ணங்களைக் கொண்டு புதிய முயற்ச்சியில்
இந்த ஓவியத்தை அமைந்துள்ளது.
இங்குள்ள மற்றொரு விலங்கின் உருவம் இரண்டு
கொம்புகளுடன் மான் போலவும், உடலமைப்பில்
மாடு போல நீண்ட வாலுடன் காணப்படுகின்றது. (கூடுதல் ஆய்வுக்கு உரியது)
(நீலான் - Boselaphs tragocamelus) என்பது
ஆசியாவில் காணப்படும் ஒருவகை மான் இனமாகும். மான் இனங்களிலேயே நீலான் உருவ அளவில்
மிகப் பெரியது. இதன் உடல் பகுதி சற்று நீல நிறத்துடன் இருப்பதால் இதை நீலான்,
நீலமான், நிலகை மான் போன்ற பெயர்களால்
அழைக்கப்பட்டுகின்றது. இந்த வகை மான் இனம் இந்தியா, தெற்கு
நேபாளம், கிழக்கு பாகிஸ்தான் பகுதிகளில் வாழ்கின்றன. நீலான்
தென்னிந்தியாவின் திறந்த வெளிக் காடுகள் மற்றும் மேட்டுப்பாளையம் வரை பரவி
இருந்ததாகக் கூறுகின்றனர்.
இந்த நீலான் மானின் உருவம்
கோட்டோவியமாக நேர்த்தியான உடலமைப்பில் சிவப்பு வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது. இதன்
உடற்பகுதியில் ஆங்காங்கே சிவப்பு வண்ணத்தால் வண்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும் சில
விலங்குகளின் உருவங்களும், பறவை
ஒன்றின் உருவமும் மங்கிய நிலையில் காணப்படுகின்றன.
Usually, the Rock Arts are drawn on
elevated vantage points, where the movement of animals and enemies is spotted
from a long distance. But this group of Rock Art is drawn on a rock in a plain
area, which is viewed by the passer-by. The specialty of this rock art is,
drawn with Red, and Yellow ochre. Also, no human image is drawn.
In one place two animals are drawn,
in which one is drawn with yellow ochre and the other with red ochre. The yellow
ochre may belong to the Goat or Deer family. The red ochre-drawn animal may be a bullock with short horns and without hump. The legs are slim. Oval and cross
lines are drawn to show its organs. This is very much similar to the Alambadi
and Settavarai rock arts. A buffalo is drawn above with red ochre. The buffalo
has curved horns and a long tail.
Near the above group, a Deer is drawn with a double line of red ochre. Yellow ochre is used to fill the two lines. This deer
with bulky like a bullock with two horns. As per the experts, this may be a
variety of Neelan, rarely found in Asian countries. Also called Neelaman,
Neelakai, Nilakaiman, etc. This variety of Deer, lives in India, the southern part of
Nepal, and the east part of Pakistan. It was also spread in Southern India, up to
Mettupalayam.
This Neelan Deer is drawn with red ochre. Apart from an outline, the inside of
the body is also painted with red ochre, without community. Apart from this some animals and bird art are found faintly.
LOCATION OF THE CAVE: CLICK HERE
11.7976274,79.2429361.
No comments:
Post a Comment