Wednesday, 1 January 2025

Puli Suttu Pattan Kal/புலி சுட்டு பட்டான் கல்/ Hero Stone/ Sati Stones, Pichampalayam, Tiruppur, Tiruppur District, Tamil Nadu.

This group of Hero stones, Puli Suttu Pattan Kal, and two Sati Stones are found in the premises of Kottai Mariamman Temple, Tiruppur. I extend my sincere thanks to Mr. Ponnuswamy, Palladam of Tiruppur Veerarajendran Archaeology and History Research Centre, for providing me the details and Guidance.  


PULI SUTTU PATTAN KAL/ புலி சுட்டு பட்டான் நடுகல்
இந்த புலி சுட்டு பட்டான் நடுகலில், வீரன் புலியைத் துப்பாக்கியால் சுடுவது போலவும், புலி அவ்வீரனைத் தாக்குவது போலவும் பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. வீரன் கழுத்திலும் காதிலும் அணிகலன்களும்  இடுப்புக்கீழே அரையாடையும் அணிந்து காணப்படுகின்றான். புலி நின்ற நிலையில் முன்னிருகால்களையும் வீரனின் தோளின் மீது வைத்து அவ்வீரனை தாக்குவதுபோலக் காட்டப்பட்டுள்ளது. வீரனின் வலது பக்கம் அவ்வீரனது இரு மனைவியரும் காட்டப்படுள்ளனர். இது வீரன் இறந்த பிறகு மனைவியர்கள் ருவரும் சதிமேற்கொண்டதைக் காட்டுகின்றது. 

இந்தியாவில் துப்பாக்கி 19ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்த நடுகல் 19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படுகின்து.

In this, the hero is shooting a Tiger with a rifle. The Hero is shown wearing ornaments around the neck and ears. He is wearing a half-dress below his waist. The tiger is shown, in standing with its back legs and keeping its front legs on the shoulder of the Hero.

Two ladies are shown on his left side. This shows that his two wives took sati after the Hero's death.

Since the rifle was introduced in India around the 1850s, this Puli Suttu Pattan Kal might have been erected in the 19th Century. 



SATI STONES/MEMORIAL STONES.
புலி சுட்டு பட்டான் நடுகல்லின் வலது புறம் இரண்டு சதிக்கற்கள் காணப்படுகின்றன. இவ்விரு நடுகற்களும் ஒரே மாதிரியான அமைப்பில் பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த நடுகற்களில் உள்ள ஆண் முகத்தில் முறுக்கிய மீசை, தலையில் நாயக்கர் கால கொண்டை, அணிகலன்கள் மற்றும் இடுப்புக்கு கீழே அரையாடை அணிந்தும் காட்டப்பட்டு உள்ளது. ஆணின் வலதுபுறம் அவருடைய மனைவி ஒருகையில் மலர் ஏந்தியும், மற்றொரு கையில் மதுக்குடுவையுடனும் காட்டப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஆணின் கைகள் இரண்டும் அஞ்சலி முத்திரையுடன் காட்டப்பட்டுள்ளதால் இது ஞாபகார்த்த நடுகல்லாக கருதப்படுகின்றதுஇந்த ஞாபகார்த்த நடுகல் 16-17 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாக இருக்கலாம்.

These Sati/ Memorial stones are very much similar in standing posture and tufts. Since the Men are shown in Anjali Hastam, these two Nadukals are memorial stones. The ladies took Sati after the demise of their husbands. In both Memorial stones, the men are shown with a big mustache and wearing ornaments around the neck and ears. The Ladies also wear ornaments around the neck and ears and half-dress below their waists. Both ladies holding a flower in one hand and a toddy pot in another hand.

Based on the iconography of this Nadukal, these may belong to the 16th to 17th Century CE.




LOCATION OF THE MEMORIAL STONE:      CLICK HERE

Am Amman is also installed along with the Hero Stone.
--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment