11th,
November 2012.
20.
திருவொற்றியூர் ( THIRUVOTRIYUR )
இது மூவர்
தேவாரம் பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களுள் தொண்டை நாட்டின் 20 வது ஸ்தலம். இது சென்னையின்
வட பகுதியில் உள்ளது.
இத்தலம் பல சிறப்புகளை கொண்டது. பல மகான்கள் வாழ்ந்து இறைவனுக்கு தொண்டு செய்து முக்தி
அடைந்த சிவ ஸ்தலம். இத்தலத்தில்
இறைவனை விட அம்பாளுக்குத் தான் தனி சிறப்பு. இத்தலதிற்க்கு பல முறை சென்று இருந்தாலும்
11-11-2012
அன்று மீண்டும் ஒரு முறை சென்று இருந்தேன்.
இறைவன்
:ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர், ஸ்ரீ புற்றிடங்கொண்டார், ஸ்ரீ படம் பக்க நாதர்,
ஸ்ரீ எழுத்தறியும் பெருமாள், ஸ்ரீ தியாகேசர்,
ஸ்ரீ ஆனந்தத்தியாகர்.
இறைவி : ஸ்ரீ திரிபுரசுந்தரி, ஸ்ரீ வடிவுடையம்மை, ஸ்ரீ வடிவுடை மாணிக்கம்.
இத் தலத்தைப் பற்றிய சில முக்ய தகவல்கள்.
மூலவர்
சுயம்பு - புற்று மண் - தைலக்காப்பு மட்டும். வருடத்தில் தமிழ் கார்த்திகை மாதம் பௌர்ணமி
நாளில் தைலக்காப்பு சாற்றப்படும்.
மற்ற நாட்களில் கவசத்தால் மூட பட்டு ஆவுடையாருக்கு மட்டும் தான் அபிஷேகம் நடைபெறும். கருவறை
மிகவும் விசாலமான இடம். மூலவர் மண்டபத்தின் கீழே. நாகபறன கவசத்தின் உள்ளே இருகின்றார்.
கோஷ்டத்தில்
விநாயகர், தக்ஷினாமூர்த்தி, மஹா விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோருடைய மூர்த்தங்கள்.
பிரகாரம் சிதிலம் அடைந்து உள்ளதால் சுற்ற அனுமதி இல்லை ( தக்ஷினாமூர்த்தி மூர்த்தம்
முன்பு ஒரு தூண் கீழே விழுந்து கிடந்தது ).
கருவறை
விமானம் கஜபிருஷ்ட அமைப்பு. இரு பெரிய சிவன் சன்னதிகள். ஒன்று ஆதி புரீஸ்வரர்,
அடுத்தது வொற்றீஸ்வரர். இரு சன்னதிகளும் கிழக்கு நோக்கி உள்ளது. இத்தலத்தில் மூன்று கொடிமரங்கள்.
அம்பாள்
சன்னதி கோவில் வளாகத்தில் நுழைந்த உடன் வலது பக்கத்தில் தனி கோவிலாக
உள்ளது. உள் பிரகாரத்தில்
வடிவுடைஅம்மன், கொடியுடைஅம்மன், திருவுடைஅம்மன் ஆகியோரின் படங்கள் மாட்டப் பெற்று உள்ளது. ( இந்த
மூன்று கோவில்களும் சென்னையை சுற்றியே உள்ளது. அவை முறையே - மேலூர், வட திருமுல்லைவாயில்
& திருவொற்றியூர் இம்மூன்று
அம்மன் சிலைகளும்
ஒரே சிற்பியால் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்று நம்பப்படுகின்றது. மேலும் இம்மூன்று
அம்மனையும் காலை, மதியம், மாலை வழிபட நல்லது என்ற நம்பிக்கை பக்தைகள் இடையே. ) கோஷ்டத்தில் சிலைகள்
எதுவும் இல்லை. அம்பாள்
சன்னதி முன்பு ஸிம்ஹ வாகனத்துடன் கொடிமரம்.
வெளி
பிரகாரத்தில் தியாகேசர், கௌலீஸ்வரர், அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர்,
மீனாக்ஷி சுந்தரேஸ்வரர், திருவொற்றீஸ்வரர், வட்டப்பாறை அம்மன், பைரவர், குழந்தையீசர்,
விநாயகர், நவகிரங்கங்கள், ஜகதம்பிகை சமேத ஜெகநாதர், அமிர்தகடேஸ்வரர், சூர்யன், அப்பர்,
மாணிக்கவாசகர், திரு ஞானசம்பந்தர், சுந்தரர் சங்கிலி நாச்சியாருடன் சன்னதிகள் உள்ளது.
இராஜகோபுரம்
5 நிலைகளைக்கொண்டது. இக்கோயிலில்
4 கால், 16 கால்9 இராஜகோபுரம் முன்பு ), 24 கால் மண்டபங்கள் உள்ளது ( இரண்டாவது பிரகாரத்தில்
).
ஸ்தல
மரம், மகிழ மரத்தின் கீழே இறைவனை சாட்சியாக வைத்து சுந்தரர் சங்கிலி நாச்சியாரை திருமணம்
புரிந்து கொண்டார் என்பது வழி வழி செய்தி .
பட்டினத்து
அடிகள் அம்பிகை மீது பாடல்கள் பாடி உள்ளார். அவர் முக்தி அடைந்த ஸ்தலம். கடற்கரை ஓரம்
அவருக்கு ஒரு கோவில் உள்ளது.
கலிய
நாயனாரின் அவதார ஸ்தலம்.
வொற்றீஸ்வரர்
கோவிலின் மண்டபம் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் உள்ளன. சிற்பங்கள் பாதுகாப்பு
கருதி கிரில் அமைப்பு செய்யப்பட்டு உள்ளது. நுழைவு வாயிலின் மேல் மனித
சிற்பம் பஞ்சாட்சர விளக்கம்
காணத்தக்கது.
கோவிலில்
கும்பாபிஷேகதுக்கான வேலைகள்
நடந்துகொண்டு இருக்கின்றது. ஆகையால் உள் பிரகாரம் சுற்றவோ, புகைப்படங்கள் அதிகமாக
எடுக்கவோ
முடியவில்லை.
திருவொற்றியூர்
செல்லும் வழி.
பிராட்வே,
கிண்டி, வேளச்சேரி மேலும் முக்ய இடங்களில் இருந்து
பஸ் வசதி உள்ளது .
சென்ட்ரல், கடற்கரை இரயில்
நிலையங்களில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் புகைவண்டி திருவொற்றியூர்
வழியாக செல்கின்றது. ஸ்டேஷனில் இருந்து கோவில் சுமார் 1/2 கி
மீ தூரத்தில் உள்ளது.
மஹா கும்பாபிசேகத்திற்கு பின்பு : CLICK HERE
மஹா கும்பாபிசேகத்திற்கு பின்பு : CLICK HERE
( பஞ்சாட்சர சக்கரங்களுடன் மனித உருவத்தின் புடை சிற்பம் - இரு புறமும் சந்திரன் & சூரியன் - வொற்றீஸ்வரர் சன்னதியின் மண்டபத்தில் )
(திருவொற்றீஸ்வரர் சன்னதியின் தோற்றம் )
(திருவொற்றீஸ்வரர் சன்னதியின் தோற்றம் )
( பைரவர் சன்னதி முகப்பு தோற்றம் )
( 24 கால் மண்டபம் )
( ஸ்தல விருக்ஷம் - மகிழ மரத்தின் கீழே இறைவனை சாட்சியாக வைத்து சுந்தரர் சங்கிலி நாச்சியாரை திருமணம் புரிந்து கொண்டார் என்பது செவி வழி செய்தி )
( கோவில் வளாகத்தின் தோற்றம் -கொடிமரத்தின் அருகே சிறிய மண்டபத்தில் ரிஷபம் - கற்தூண் மேல் )
( வடிவுடை அம்மன் கோவில் முகப்பு தோற்றம்)
( 24 கால் மண்டபம் )
( ஸ்தல விருக்ஷம் - மகிழ மரத்தின் கீழே இறைவனை சாட்சியாக வைத்து சுந்தரர் சங்கிலி நாச்சியாரை திருமணம் புரிந்து கொண்டார் என்பது செவி வழி செய்தி )
( கோவில் வளாகத்தின் தோற்றம் -கொடிமரத்தின் அருகே சிறிய மண்டபத்தில் ரிஷபம் - கற்தூண் மேல் )
( வடிவுடை அம்மன் கோவில் முகப்பு தோற்றம்)
--- ஓம் சிவாய நம ---
No comments:
Post a Comment