27th July 2016.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 24 சூலை 2016, நண்பர் திரு நாச்சியப்பன் அவர்களுடன் தேவகோட்டை பயணம். நான் செட்டிநாட்டிற்க்கு செல்வது இது முதல் தடவை இல்லை என்றாலும், இந்தமுறை சென்றது முக்கியமானது.. காரணம் கோட்டை அம்மன் தரிசனம். ஒருமாதத்திற்க்கு முன்பு
தேவகோட்டை திரு வெங்கடேஷ் அவர்களின் புதல்வர் திருமணத்திற்க்கு செல்லவேண்டியது கடைசி நிமிடத்தில் அலுவல் காரணமாக தடைபட்டது. திரு நாச்சியப்பன் அவர்கள் கோட்டை அம்மன் திருவிழா சிறப்பாக இருக்கும் என்று கூறியதால் தேவகோட்டை செல்ல முடிவு செய்தேன்.. பயணம் இனிதாக இருந்தது.. அவருடைய விருந்தோம்பல், சிறியவர் முதல் கொண்டு பெரியவர் வரை “வாங்க” என்று வரவேற்றது என்னை திக்குமுக்காட செய்தது.. ஒருநாள் முழுவதும் அவருடைய குடும்பத்தாருடன் இனிமையாகக் கழிந்தது... அவர்கள் பழைய வீடு நூறு வருடத்தை தாண்டிவிட்டது என்றும்.. சமீபத்தில் மிக பொருட்செலவில் மராமத்து வேலைகள் பார்த்ததாகவும் கூறினார்.. ஏழாம் எட்வர்டு பட்டமேற்ப்பு விழா, மைசூர் மன்னர், அவர்கள் தாத்தா, கொல்லுத்தாத்தா புகைபடங்கள் மிக அருமை.. வீதிகளிலும் சாலைகளிலும் செல்லும் போது அவருடைய உறவினர்கள், அண்ணா, தம்பி, தங்கை, மாமனார் வீடுகளையும் காட்டினார்.. அடுத்து அடுத்த வீடுகள்…
காலையில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் தரிசனம்.. பின்பு கோட்டை அம்மன் தரிசனம் ( விபரம் தனியான பதிவில்)..மாலை ஸ்ரீசாய்பாபா தரிசனத்துடன் சாக்கோட்டை ஸ்ரீ வீரசேகர பெருமான் தரிசனம்..
House
Front View from Inner
Lights
Old and New
Courtyard with Verandah
wooden
Ceiling, Pillars, and Fans all from Burma
Front Verandah
Front Verandah
Mysore King at Palace
Edward
VII- Coronation
---o0o---
No comments:
Post a Comment