15th May
2017.
This
heritage walk was carried out on 15th May 2017 after crossing
many hurdles. The legends behind this walks are Mr Sundaram, Mr Ramasamy, Mr
Siva, Mr Thenkongu Sadhasivan, Mrs Fozia Iqubal. Thanks to my co participants,
Mr Srinivasan, Mr Raja, Mrs Sakthi Prakash and Miss Tamilarasi. Mrs
Fowzia organised this Heritage walk and really we are very much thankful
to her warm hospitality.
When
we planned to start our walk around 08.30 hrs from Sathyamangalam, last batch
was able to move only around 11.00 Hrs due to vehicle problem. The bus strike
also added more confusion to our walk. Dr Thangavel from Erode helped 4 of us
to reach Sathyamangalam through his car. After lot of confusions in the route
and driver, at last we reached the boating spot inside the Bhavani Sagar
dam. By that time one batch of people already left to Danaikan Fort. Mr
Ramasamy explained to us the details of the dilapidated Sri Madhava Perumal
Temple, inscriptions and the submerged fort with a cannon platform. It was very
pleasant sight to see the dam, hills on all sides and the water canal in side
the dam. It was around 15.00 hrs we had our lunch on the road side and left for
Sathyamangalam to see Sri Venugopala Swamy Temple.
This
Danaikan Fort was constructed by Mathappa Dhanda Naikan, who worked as Captain
under the Hoysala King Veera Ballala III, ( 1293 – 1342 CE ), in Karnataka.
Veera Vallalan was the son of Hoysala King Veerasomesuvaran ( 1234 -1264 CE ).
During his son Narasimhan III ( 1263 – 1292 CE ) period, Thanda
naikars ruled the Kundaluppet near Mysore. In the Thanda naikars, Perumal Thanda
naikar worked under Narasimhan III and Veelavallalan III as
an army Chief . These Thanda naikas used to call with titles like
Irakutharaayan, SithakarakaNdan and Ottaikku mindaan. They used to say
proudly that they conquered Nilgiris.
Mathapa
Thandanaikan constructed the Danaikan Fort during Veeravallalan’s rule ( 1263 –
1292 CE ). Narasimhan III constructed a Shiva Temple in the name of his
father Someswaran. This temple was submerged in the Bhavani Sagar Dam and an
inscription is available in Bhavani Sagar Dam Temple. As per inscriptions, the
Shiva Temple exists before construction of the Danaikan Fort ( before 1292 CE ).
The Fort is fully submerged in the water and 4 sides of walls with cannon base
is visible at present. The dilapidated Madhava Perumal Temple now little above
the water level was built by Mathappa Thandanaikan’s son Keththaya Naikan in
the name of his father. It was told that the original moortham and Garudathoon / Deepasthambham was shifted to a perumal temple near Bhavani sagar dam.
தண்டநாயக்கன் கோட்டை, தண்டநாயக்கர்கள்
டணாயக்கன் கோட்டை மாதப்ப தண்டநாயக்கன் என்பவரால் கட்டப்பட்டது. இந்த தண்டநாயக்கர்கள் யார்? கருநாடகப் போசள (ஹொய்சள) அரசர்களில் வீரசோமேசுவரன் ஒருவன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1234-
1264 என்ன்றும் குறிப்புள்ளது. இவனது மகன் மூன்றாம் நரசிம்மன. இவனது ஆட்சிக்காலம்
கிபி 1263 -1292.
முன்னாளில் தெற்கணாம்பி என்னும் பெயரில் இருந்தது. அதன் உட்பிரிவான பதிநான்கு நாட்டின் தலைவர்களாக இந்தத் தண்டநாயக்கர்கள் ஆட்சிசெய்தனர்.இவர்களில் பெருமாள் தண்ட நாயக்கன் என்பவர், மூன்றாம் நரசிம்மன். மூன்றாம் வீரவல்லாளன் ஆகியோரிடம் பிரதானி என்னும் முதன்மையான ஒரு பதவியில் பணியாற்றியவர். பெருமாள் நாயக்கனுக்கு இரு மகன்கள். ஒருவர் மாதப்ப தண்டநாயக்கன். மற்றவர் கேத்தய தண்டநாயக்கன். மாதப்ப தண்டநாயக்கன் மூன்றாம் வீரவல்லாளனின் படைத்தலைவனாக இருந்தவன். மூன்றாம் வீரவல்லாளனின் ஆட்சிக்
காலம் கி.பி. 1293- 1342 மாதப்ப தண்ட நாயக்கனுக்கும் இரு மக்கள். ஒருவர்
கேத்தய தண்ட நாயக்கன், சிற்றப்பனின் பெயர் கொண்டவர். மற்றவர் சிங்கய தண்டநாயக்கன்.
தண்டநாயக்கர்கள் முடிகுலய குலத்தைச் சேர்ந்தவர்கள். மோடகுலய குலம் என்றும் இக்குலத்தைச் சொல்வர். இவர்கள் தம் பெயருக்கு முன்னால் பல விருதுப்பெயர்களை வைத்துக்கொண்டனர். அவற்றுள் இம்மடி இராகுத்தராயன், சிதகரகண்டன் ஆகிய இரு பெயர்கள் முதன்மையானவை. ஒட்டைக்கு மிண்டான் என்னும் ஒரு விருதுப்பெயரும் கானப்படுகிறது. தண்டநாயக்கர்கள் தமிழகத்தின் நீலகிரியைக் கைப்பற்றியதாகப் பெருமை பேசுபவர்கள் என்னும் குறிப்பு உள்ளது. எனவே, நீலகிரிசாதார(ண)ன் என்னும் விருதுப்பெயரும் இவர்களுக்கு உண்டு.
மாதப்ப தண்டநாயக்கன் மூன்றாம் வீரவல்லாளன் காலத்தில் டணாயக்கன் கோட்டையை நிறுவினான். மூன்றாம் நரசிம்மன் (கி.பி. 1263-1292) தன் ஆட்சிக்காலத்தில் தன் தந்தை பெயரால் சோமேசுவரன் கோவிலைக்கட்டினான் என்று வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. பவானிசாகர் அணைப்பகுதியில் மூழ்கிப்போன கோயில்களுள் இக்கோயிலும் ஒன்று எனக்கருதலாம். ஏனெனில், சோமேசுவரர் கோயில் என்னும் பெயருடைய கோயில் நீரில் மூழ்கிய செய்தி பவானி சாகர் அணைப்பகுதிக் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியின் அடிப்படையில், டணாயக்கன் கோட்டையை மாதப்ப தண்டநாயக்கன் கட்டும்போதே அப்பகுதியில் சோமேசுவரர் கோயில் இருந்துள்ளது என்பது பெறப்படுகிறது. எனவே, டணாயக்கன் கோட்டை கி.பி. 1292-ஆம் ஆண்டுக்குப் பின்னரே கட்டப்பட்டிருக்கவேண்டும். நாம் பார்த்த, நீரில் மூzழ்கிய கோட்டைக்கோயில் மாதப்ப தண்டநாயக்கனின் மகனான கேத்தய நாயக்கன் என்பவன் கட்டிய கோயிலாகும். தன் தந்தையின் பெயரால் மாதவப்பெருமாள் கோயில் என்று பெயர் சூட்டினான்.
நன்றி
:திரு தென்கொங்கு சதாசிவம் அவர்கள்
LOCATION OF THE FORT :CLICK
HERE
For
More Photos :CLICK HERE
The dilapidated Sri Madhava Perumal temple
The dilapidated Sri Madhava Perumal temple
The dilapidated Sri Madhava Perumal temple
The yazhi varisai of Sri Madhava Perumal temple
The front mandapam of Sri Madhava Perumal temple
The
sanctum of Sri Madhava Perumal temple
The dilapidated roof top Sri Madhava Perumal temple
Danaikan Fort that submerged in water
For
More Photos : CLICK HERE
---
OM SHIVAYA NAMA---
No comments:
Post a Comment