Thursday 11 May 2017

Sri Kapaleeswarar Temple / கபாலீஸ்வரர் கோயில், மயிலாப்பூர், Mylapore, Chennai, Tamil Nadu.

10th May 2017.
கடந்த ஞாயிரு 07 ந்தேதி மே மாதம் 2017, அன்று தமிழ் அறக்கட்டளையின் சார்பில் நடந்த பேச்சு நிகழ்வுக்கு செல்வதற்கு முன்பு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்கு திரு வெங்கடேஷ், நிவேதிதா, சக்திபிரகாஷ் & நந்தன் அவனுடைய அப்பாவுடன் சென்று இருந்தோம். கல்வெட்டுக்கள் மட்டும் இன்றி தூண்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், கோபுரத்தில் அமைந்த சுதைசிற்பங்கள், மேலும் வாயிலார் நாயனார், திருஞானசம்பந்தரால் பத்து முறை குறிப்பிடப்பட்ட ஒரே பெண் பூம்பாவை சன்னதி ஆகியவற்றை திரு வெங்கடேஷ் அவர்கள் சரித்திரக் குறிப்புக்களுடன் விவரித்தார்.


ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் 7ம் & 8ம் நூற்றாண்டுகளில் சாந்தோம் கடற்கரையின் அருகே இருந்தது. போர்துகீசியகளால் சென்னை மற்றும் அருகே அவர்கள் எல்லைக்குட்பட்ட இடங்களில் இருந்த கோவில்கள் அழிக்கப்பட்டன. அவ்வாறு அழிக்கப்பட்ட கோவில்களுள் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலும் ஒன்று. போர்த்துகீசியர்களின் வீழ்ச்சிக்குப்பின்பு,  அழிக்கப்பட்ட கோவில்கள் இடமாற்றம் செய்யப்பட்டோ அல்லது அதே இடத்திலோ மீண்டும் கட்டப்பட்டன. ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் இருந்த இடத்தில் கிறுத்துவ தேவாலயம் ( Santhome Cathedral Basilica Church ) கட்டப்பட்டு விட்டதால்  ( இப்போதும் தேவாலயத்தின் பழம் பொருள் காப்பகத்தில் தேவாலயம் கட்டும் போது அகழ்ந்து எடுக்கப்பட்ட சோழர்கால கல்வெட்டு கற்பலகைகள் இருக்கின்றன )  பின்பு அங்கு கிடைத்த கற்களையும் பிற கோவில்களில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களைக் கொண்டு தற்போது உள்ள கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில் ஏறத்தாழ முப்பது கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அம்மன் கோவில் பிரகாரத்தின் சுவற்றில்  கல்வெட்டுடன் கூடிய கற்கள் உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது. சில கற்கள் தலைகீழாக வைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு கல்வெட்டுடன் கூடிய கல் திரிசூலமலையில் உள்ள கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்டது. எல்லா கல்வெட்டுக்களும் முழுமையாக இல்லை. முருகன் கோவில் முன் மண்டபத்தில் போர்த்துகீசியர்களின் கல்லரை மீது போடப்பட்ட கல்லும் உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது. 

Before attending the Tamil Heritage Trust talk, had been to Mylapore Sri Kapaleeswarar temple on 07th May 2017  as a part of heritage visit along with Mr Venkatesh, Mrs Sakthiprakash, Mrs Nivedita Louis and Nandan with his father. 

Many Hindu temples were destroyed during Malik kafur and Portuguese invasions. Mylapore Sri Kapaleeswarar temple was also not spared. Some were reconstructed on the same place and some were relocated to the nearby sites. Sri Kapaleeswarar temple and Amman temples are shifted from Santhome and reconstructed at the present place Mylapore  using the stones available from various places/ temples, which includes a Portuguese tomb cover stone. Even though visited the temple many times earlier, I didn’t  noticed the inscriptions available in the temple. There are about 30 incomplete inscriptions available in the temple. It was sad to see an inscription stone was kept upside down.

This heritage visit was not restricted  to inscriptions, but extended to the various reliefs chiseled on the pillars of mandapams.  Mr Venkatesh explained the importance of the reliefs, stucco images on the vimanas, and the Sannadhis of Vayilar Nayanar and Poompavai, whose name is mentioned 10 times in Devara hymn  sung by Thirugnanasamabandar.   

Comments on facebook :CLICK HERE

 Murugan temple believed to be exists before shifting of Shiva temple from Santhome to Mylapore 



The story connected to Thiruvothur Temple, where Thirugnanasambandar changed male palm tree to Female palm tree
 - the stucco image is on Poompavai sanctum vimanam 



 Sarabeswarar 

May be Vayilar Nayanar – one of the 63 nayanmars, who hailed from this place 


 At the entrance of the west side Rajagopuram paved as a step stone 

இக்கல்வெட்டு இக்கோயிலைச் சேர்ந்ததல்ல. திிரிசூலம் என்று இப்போது வழங்கும் ஊரில் பண்டு இருந்த சிவன்கோயிலின் கல்வெட்டுத் துண்டுதான் இது. திரிசூலத்தின் பழம்பெயர் திருச்சுரம் என்பதாகும். இறைவன் பெயர் திருச்சுரமுடைய நாயனார். கல்வெட்டில் வரும் ”குலோத்துங்க...” என்னும் தொடர் குலோத்துங்க சோழவளநாட்டைக் குறிக்கும். இது புலியூர்க்கோட்டத்தி்ன் சிறப்புப்பெயர். சென்னைப்பகுதிகள் புலியூர்க்கோட்டத்தில் இருந்தன. திருச்சுரமுடைய நாயனாருக்கு முப்பது பசுக்கள் கொடையளிக்கப்பட்டதைக் கல்வெட்டு கூறுகிறது.
( Thanks Sir Dorai Sundaram ) This inscription stone was belongs to Thirisoolam Shiva temple.

 This inscription stone was placed upside down 

படத்தில் உள்ள கல்வெட்டு வரிகள்: வரி 
1- கொண்டான் மடத்துக்கு மடப்புறமாக இன்னா - 
2 யங்களும் ஆசுவிகள் பேராற்
3-செல்வதாகச்சொன்னோம்
4-பான் கெங்கைக்(க)கரை
5-ரக்ஷை 

விரதங்கொண்டான் என்னும் பெயரில் இருந்த மடத்துக்கு மானியமாக அனைத்து ஆயங்களின் (வரிகள்) வருமானமும், ஊர்க்காவல் புரியும் வீரர்களுக்காக வாங்கும் வரியின் வருமானமும் அளிக்கப்பட்டன. ஆசுவிகள் என்போர் ஊர்க்காவலில் ஈடுபட்ட வீரர்கள். ( Thanks Sir Dorai Sundaram ) This inscription speaks about the donation made to the  for the security personnel of a village. 

A Portuguese  tomb cover stone – inscriptions

---OM SHIVAYA NAMA---

No comments:

Post a Comment