15th September 2018
This Thirumalai Jain complex visit
was a part of Arani Heritage Visit, organized by Mr Mohan Hariharan, an
architect and a Heritage enthusiast. This Thirumalai Jain complex consists of
Jinalayas on the top and bottom of the
Hill. This place was originally called in different names like Vaigavur,
Srisailapuram, Arihantha giri, etc,. The following are the group of temples are
located on the south side of Thirumalai Foot hills.
ஆரணி அருகே உள்ள திருமலை சமண ஜினாலயங்கள் தொகுப்பினைக் காண செப்டம்பர்
மாதம் 15ந்தேதி கட்டிடகலை நிபுணரும், வரலாற்று ஆர்வலருமான திரு மோகன் ஹரிஹரன், அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆரணி மரபு நடையில் 20 வரலாற்று
ஆர்வலர்கள் கலந்து கொண்டோம். மலையின் மீது இருந்த நேமிநாதர் தீர்தங்கரரைக் கண்ட பின்பு
எங்களின் அடுத்த பயணம் திருமலையின் தெற்கு பகுதியில் தரைத்தளத்தில் அமைந்த குகை மற்றும்
கட்டுமான ஜினாலயங்களை நோக்கி. இம்மலை அடிவார கிராமம் வைக்காவூர், ஸ்ரீசைலபுரம், அறகந்தகிரி
என பலவாறாக அழைக்கப்படுகின்றது.
MAHAVIR JINALAYA
The temple complex is facing east
with a three tire Rajagopuram without much stucco images. A Tirthankar image
with fragments of stones with inscriptions stones of the old temple are kept
in a GI sheet shed.
The sanctum Sanctorum consists of
Sanctum, antarala, ardha mandapa and a mukha mandapa. A three tire vimana with
kalasa is on the sanctum with stucco images of
24 Tirthankars without lanchanam and Jain monks, on all four directions.
Stucco image of Bhagwan Sri Mahavir with Devas, whisk bearers, Yakshan & Yakshi are in the sanctum. The
Yakshi’s image was found broken and only head is lying on the peedam. Faint
Fresco paintings can be seen in the sanctum.
There is a Tirthankara statue in
the arthamandapa. Seems that this sanctum sanctorum was built or re-built
during 16th century, Vijayanagara period retaining the old brick
structure. The mukha mandapa was built with stone. The Mukha mandapa pillar capital are made like
Chozha period and has the Vijayanagara’s favourite reliefs, like a king in
worshiping posture, herdsman, etc,. No inscriptions are found around the
sanctum.
மகாவீரர் ஜினாலயம் ஒரு கட்டுமான ஜினாலயம். கருவரை, இடைநாழி, அர்த்தமண்டபம்,
முக மண்டபம் என்ற அமைப்பில் விஜயநகர பேரரசால் கட்டப்பட்டது. கருவரையை உற்று நோக்கும்
போது பழமையான செங்கல் தளியை அப்படியே வைத்துக்கொண்டு அதன் மீது சுதை விமானத்துடன் கட்டப்பட்டு
இருப்பதைக் காண முடிகின்றது. விமானம் 3 நிலை. 24 தீர்தங்கரர்களின் சுதைச் சிற்பங்கள்
அழகாக வடிக்கப்பட்டு உள்ளது. கருவரையில் மகாவீரர், யக்ஷன், யக்ஷி, சாமரதாரிகள் மற்றும்
தேவர்கள் சுதைச் சிற்பமாக உள்ளன. அதில் யக்ஷியின் சிற்பம் உடைந்து தலை மட்டும் கீழே
கிடக்கின்றது. பின்புறம் விஜயநகர பேரரசின் காலத்திய ஓவியங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன.
அர்த்தமண்டபத்தில் ஒரு தீர்த்தங்கரர் சிற்பமும் உள்ளது.
முன் மண்டபம் கருங்கற்களால் விஜயநகர பேரரசால் கட்டப்பட்டது. தூண்களில்
அவர்களின் முத்திரைச் சிற்பங்களான, ஆட்டு இடையன் மற்றும் வணங்கும் நிலையில் உள்ள கொடையாளி/
அரசர் புடைச்சிற்பங்கள் காணப்படுகின்றன. துண்களின் போதியல்கள் சோழர்கள் கால அமைப்பில்
உள்ளன.
KUNDAVAI JINALAYA – NEMINATH JINALAYA
The Kundavai Jinalaya is little
above the Mahavir Temple, with a flight of steps on the right side of the Rajagopuram.
Palipedam and Manasthamb top portion is kept immediately after the entrance.
The sanctum sanctorum consists of sanctum antarala, ardha mandapa, and
Mukamandapa. The total sanctum sanctorum is of flat roof with out vimana on the
sanctum.
In the sanctum Neminath is in
sitting posture with whisk bearers Samaratharis are on both sides. Latter
period Neminath marble images are in ardha mandapa and maha mandapa. Panchaloha
images of Neminatha and other Tirthankaras are in the maha mandapa.
In the mukamandapa Mahavir is about
4 feet tall image is kept on the left side of the maha mandapa entrance. Whisk
bearers / samaratharis, mukkudai, Ashoka leaves, Simha and prabai behind head are shown. On the north side the hill has
rock cut caves with Ambika, Bahubali, Parsvanatha, Adinatha and Mahavira to which
provisions for lighting perpetual lamps and for offering worship were made.
Above the rock cut caves, a natural cave divided in to cells to accommodate 24 Tirthankaras, contains Chozha period paintings on the
ceiling and Vijayanagara period paintings on the wall.
அடுத்து படியேறி மேலே சென்றால் வருவது நேமிநாதர் ஜினாலயம்.
11ஆம் நூற்றாண்டு சோழ அரசன் ராஜராஜனின் தமக்கை
குந்தவையால் கட்டுவிக்கப்பட்டது. அதனால் இந்த ஜினாலயம் குந்தவை ஜினாலயம் என்றே அழைக்கப்படுகின்றது.
கருவரை, அர்தமண்டபம், மஹாமண்டபம், முக மண்டபம் என்ற அமைப்பில் கட்டப்பட்டது. கருவரை
மீது விமானம் எதுவும் இல்லை. கருவரையில் நேமிநாதரின் சிறிய உருவம். அர்த்த மண்டபத்திலும்
மகா மண்டபத்திலும் பளிங்கு கற்களால் ஆன நேமிநாதர் சிற்பங்கள். பஞ்சலோக நேமிநாதர், தீர்த்தங்கரர்
சிற்பங்கள் அர்த்த மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளன. முகமண்டபத்தில் மகாவீரர் சிற்பம்.
முக்குடை, பிரபை, அசோகா இலைகள், சாமரதாரிகள் அனைத்தும் காட்டப்பட்டு உள்ளது.
ஜினாலயத்தின் வடக்கு பக்க மலையை ஒட்டி குடவரைகளில்,
அம்பிகா, பாகுபலி, பார்சுவநாத், ஆதிநாத், மகாவீர் புடைச்சிற்பங்கள். அதற்கும் மேலே
இயற்கையான குகையில் சோழர்கால ஓவியங்கள் விதானத்திலும், விஜயநகர காலத்திய ஓவியங்கள்
சுவரிலும் தீட்டப்பட்டு இருந்தது.
Inscriptions… Inscriptions on the
rocks are found in front of the Rajagopuram and the path leading to Kundavai
Jinalaya. In addition to this Chozha period inscriptions are found on the walls
of sanctum, and rock cut caves. There are fragments of athisdana stones with
inscriptions and old mandapa pillars are kept as a wall. The inscriptions belongs
to the periods of Rajaraja Chozha, Rajendra Chozha, Pandya, Sambuvarayar and
Vijayanagara. One of the 958AD Rashtrakuta period inscription speaks about
burning of perceptual lamp for the Yakshan, donated by Rashtrakuta King
Kannaradevan ( Krishna III), wife’s servant maid.
கல்வெட்டுக்ககள்… ராஜகோபுரத்தின் முன்பும், குந்தவை ஜினாலயம் செல்லும் வழியிலும் பாறைகள் மீது சோழ மன்னர்களின் மெய்கீர்த்தியுடன் கல்வெட்டுகள்
ASI பாதுகாப்பில் உள்ளன. இது தவிர, ஜீனாலய
மண்டப சுவர்கள், பாறைகள் ஆகியவற்றில், சோழர், பாண்டியர், கங்கர்கள், விஜயநகர பேரரசு,
சம்புவராயர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் காணப்படுகின்றது. அதில் கங்கர்கால கல்வெட்டு ஒன்று ராஸ்டிரகூட அரசன்
கன்னதேவன் ( கிருஷ்ணா III) மணைவியின் பணிப்பெண் இங்குள்ள யக்ஷனுக்கு தீபம் எரிப்பதற்கு
நன்கொடை கொடுத்த விபரத்தைத் தெரிவிக்கின்றது.
HOW TO REACH :
Thirumalai is about 5 KM from
Vadamathimangalam Railway station on Arani to Polur Road.
Thirumalai is about 14 KM from
Arani, 45 KM from Vellore and 120 KM from Chennai
Share Autos are available from
Vadamathimangalam X Road on Arani to Polur Road.
LOCATION:CLICK HERE
---OM SHIVAYA NAMA---
No comments:
Post a Comment