Wednesday 12 September 2018

Jain Tirthankaras at Salamedu, Enathirimangalam, Korathy, Karapattu and Pathur / Padur, Villupuram District, Tamil Nadu.

IndiBlogger Badge
02nd September 2018.
In this 57th Ahimsa Walk, it was planned to visit 7 places, where Tirthankaras  were found and kept under worship on 2nd September 2018. Considering  the travelling distance & time from Chennai, it was planned to start around 05.00 hrs, but as usual we 15 persons in a Van, are able to start with a delay of 90 minutes. The  another Van and 2 cars are also joined with us at Salamedu, a part of Villupuram.

57வது அஹிம்சை நடை, இந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி விழுப்புரம் மற்றும் திருவெண்ணைநல்லூர் பகுதிகளில் உள்ள ஏழு தீர்த்தங்கரர் பிம்பங்களைக் காணத் திட்டமிடப்பட்டு இருந்தது. அவைகளில் கொறத்தி கிராமத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தீர்த்தங்கரர் பிம்பமும் ஒன்று. பயண தூரம், காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதிகாலை 5 மணிக்கு கிளம்ப வேண்டியது ஒன்றரை மணி நேரம் தாமதமாக 15 பேர் ஒரு சிற்றுந்தில் சென்னையில் இருந்து கிளம்பினோம். விழுப்புரத்தில் மற்றொரு சிற்றுந்தும் இரண்டு கார்களும் இணைந்து கொள்ள விழுப்புரத்தின் ஒரு பகுதியான சாலமேடு என்ற பகுதியை சென்றடைந்தோம்.

SRI PARSHWANATH TIRTHANKARA AT SALAMEDU, VILLUPURAM.
The  Parshvanath Tirthankara is kept in the premises of a private  J G Nursery & Primary School, owned by Mr Veeraraghavan & Mangai Veeraraghavan, who are experts in Epigraphy and Archaeology. This 7th to 8th century Tirthankara is a part of their collection and was brought from a near by Village Periyasevalai, near Villupuram. The  earth covered up to knee was removed to see the padams of Parshvanath. A 5 headed snake and a mukkudai are shown above Parshvanath. After deepa aarathi we started towards Pidagam, where Swathi Sri Lakshmi Sena Padaraka Swamikal was waiting for us.  At Pidagam, After a brief meeting Mr A Raja, a Tamil Jain farmer who excelled in Sugar cane breeding was felicitated by Swamiji.

பார்சுவநாத தீர்தங்கரர்.. இந்த பார்சுவநாதர் பிம்பம் திரு வீரராகவன் மற்றும் அவரது துணைவியார் மங்கை வீரராகவன், கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள், அவர்களின் சேகரிப்பில், அவர்களால் நடத்தப்படும் ஜே ஜி மழழையர் மற்றும் ஆரம்ப பாடசாலையில் இருக்கின்றது. பார்சுவநாதர் முட்டி வரை புதைந்த நிலையில் காணப்பட்டார். அன்பர்கள் பாதத்தைத் தரிசிக்க ஏதுவாக மூடி இருந்த மண்ணை அகற்றினர். பார்சுவநாதர் பாம்புக்குக் குடையின் கீழ் முக்குடையுடன் காணப்படுகின்றார். கிபி ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த இவரை விழுப்புரம் அருகே உள்ள பெரியசெவளை என்ற கிராமத்தில் இருந்து எடுத்து வரப்பட்டதாக திரு வீரராகவன் கூறினார். ஸ்வத்ஸ்ரீ லக்ஷ்மிசேன படாரக சுவாமிகள் பிடாகம் வந்து விட்ட தகவலை அறிந்து பிடாகம் நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது. பிடாகத்தில் கரும்பு பயிரில் சாதனை புரிந்த தமிழ் சமண சமயத்தைச் சார்ந்த திரு ராசு அவர்களை சுவாமிஜி வாழ்த்தி கௌரவம் செய்தார்.

LOCATION:11deg 55' 19.54"  & Lon 79deg 29' 25.43



SRI MAHAVIRA TIRTHANKARA AT ENATHIRIMANGALAM.
A small Mahavira Tirthankara is kept in a mangalore tiled shed along with Brahma devar at Enathirimangalam on the banks of river Thenpennai. Mahavir is in sitting posture with a mukkudai.  The Villagers do not know much details about this Mahavira Tirthankara and worships as Hindu deity. A Palipedam with an Elephant is in front of the temple. The temple is in palalayam and preparations are on for constructing a new temple.

மகாவீர் தீர்த்தங்கரர்...காலை ஆகாரத்திற்குப் பிறகு எங்கள் பயணம் தென் பென்னை ஆற்றின் கரையில் உள்ள ஏனாத்திரிமங்களம் என்ற கிராமத்தை நோக்கி. இங்கு மகாவீர் தீர்த்தங்கரர் பிரம்ம சாஸ்தாவுடன் இந்துகளின் வழிபாட்டில் இருக்கின்றார். சிறிய பிம்பம். முக்குடையுடன். சாதாரணமாக காணப்படும் புடைச்சிற்பமாக இன்றி சிலை அமைப்பில் காணப்படுகின்றார். சாமரதாரிகள் தீர்த்தாங்கரரின் தலைக்கு இருபுறமும் காட்டப்பட்டு இருக்கின்றனர். இக்கோவிலின் எதிரே பிரம்ம சாஸ்தாவின் வாகனம் யானையும் பலிபீடமும் காணப்படுகின்றது. புதிய கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டு இருக்கின்றன.  

LOCATION: Lat 11deg 51' 44.43" & Long 79deg 29' 6.08"


TIRTHANKARA AT KORATHI.
This Tirthankara was found abandoned  on the banks of a tank, on the south side of Thenpennai River. The mukkudai above Tirthankara was found missing. Chowry bearers are also shown. The Tirthankara couldn’t identified for want of lanchanam. As per the experts this Tirthankara belongs to 10th Century Chozha Period. With a hard effort of Mr Immanuel, of Ulunthampattu  constructed a small shelter for this Tirthankara. Swathi Sri Lakshmi Sena Padaraka Swamiji, consecrated this Tirthankara and Pooja was also performed. After pooja Mr Immanuel was felicitated by Swamiji for his hard work.

தீர்த்தங்கரர். கொறத்தி கிராமம்..... அடுத்து நாங்கள் சென்றது தென்பென்னை ஆற்றங்கரையில் உள்ள கொறத்தி என்ற கிராமம். முக்குடை உடைந்து  கைவிடப்பட்ட ஒரு தீர்த்தங்கரர் பிம்பம். ஆய்வாளர்களின் கணிப்புப் படி இந்த தீர்த்தங்கரர் பிம்பம் 10ம் நூற்றாண்டு சோழர்கள் காலத்தைச் சார்ந்தது.  திரு இம்மானுவேல் என்ற ஒரு கிருத்துவ அன்பரின் பெரு முயற்ச்சியால் இந்த தீர்தங்கரருக்கு ஒரு சிறிய நிழற் குடை கட்டப்பட்டு அதில் நிறுவப்பட்டு உள்ளது. ஸ்வத்ஸ்ரீ லக்ஷ்மி சேன படாரக சுவாமிகளின் திருக்கரங்களால் அபிசேகமும் ஆராதனையும் செய்விக்கப்பட்டது.  இச்சிறிய கோவிலமைப்புக்கு காரணமான திரு இம்மனுவேலை சுவாமிஜி அவர்கள் வாழ்த்தி கௌரவமும் செய்தார்.

LOCATION: Lat 11deg 50' 50.27" & Long 79deg 30' 43.57"




TIRTHANKARA, KARAPATTU.   
This Tirthankara was kept on the left side of Sri Muthumari Amman Temple under the Peepal tree. This Tirthankara was found abandoned in the Village, which was shifted to the present place. Rough chisel marks are observed on this Tirthankara. The face is also found Chipped off. Hope this Tirthankara was abandoned due to chipped of face, during the process of making. As per the experts, this Tirthankara may belongs to 15-to 16th Century.

தீர்த்தங்கரர்..எங்களின் அடுத்த பயணம் காரப்பட்டு தீர்த்தங்கரைக் காண. இந்துக் கோவிலான முத்துமாரியம்மன் கோவிலுக்கு வெளியே ஒரு தீர்த்தங்கரர் பிம்பம் இருந்தது. முழுதும் முடிக்கப்படாமல் முகம் சிதைந்து காணப்பட்டது. செதுக்கும் போது பின்னபட்டதால் கைவிடப்பட்டு இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இத்தீர்த்தங்கரர் பிம்பம் ஊரினுள் தாழ்வான பகுதியில் இருந்ததாகவும், ஊர் மக்களால் இப்போது இருக்கும் இடத்திற்குக் கொண்டு வரப்பட்டதாகவும் கூறினர். ஆய்வாளர்களின் கணிப்பு படி இந்த தீர்த்தங்கரர் பிம்பம் 15 அல்லது 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம்..

LOCATION:Lat 11deg 50' 19.61" & Long 79deg 26' 42.26"


TIRTHANKARA, PATHUR ( PADUR)
In Pathur Village, this abandoned 15th century Tirthankara was kept under a canopy constructed in 2015. The Tirthankara with canopy is in front of a Kali Temple. The canopy was constructed under the effort of  SPDJBM Trust Tindivanam, BDJTK Committee, Chennai and Ahimsa walk. The Tirthankara was eroded  heavily  due to aging, weather and without any maintenance. Chowry bearers and Mukkudai are shown.

Then we had been to a small rocky hill, a Parshvanath bas-relief was chiseled on boulder. 20 steps are constructed to climb the hill from the base. Local people worships Parshvanath as Murugan / Subramaniar. A New temple is also constructed, keeping the Parshwanath relief as Subramaniyar.

தீர்த்தங்கரர், பதூர்.. இந்த 15ம் நூற்றாண்டச் சார்ந்த திர்த்தங்கரர் பிம்பம் பதூர் கிராமத்தின் காளி கோவிலின் எதிரே ஒரு சிறு நான்கு கால் மண்டபத்தில் நிறுவப்பட்டு இருக்கின்றது. SPDJBM அறக்கட்டளையும் BDJTK குழுவும் இணைந்து அஹிம்சை நடை குழுவினரின் வழிகாட்டுதலின் படி இச் சிறிய 4 கால் நிழல் மண்டபம் 2015ல் கட்டப்பட்டது. பிம்பத்தில் முக்குடையும் சாமரதாரிகளும் காட்டப்பட்டுள்ளனர். நிலத்தில் புதையுண்டும், வெய்யில் மழைக்கு ஆட்பட்டு பிம்பம் முழுதும் மழுங்கி உள்ளது. பின்பு 20 படிகளைக்கொண்ட ஒரு சிறு குன்றின் பாறையில் பார்சுவதநாதர் புடைச்சிற்பமாக செதுக்கப்பட்டு இருந்ததைக் காணச்சென்றோம். புடைச்சிற்பம் இந்துக்களின் முருகனாக / சுப்பிரமணியராகப் பாவித்து விபூதி பட்டை இட்டு வணங்கி வருகின்றனர் அவ்வூர் மக்கள். பார்சுவநாதர் புடைச் சிற்ப்பத்தை மையமாக வைத்து புதிய கோவில் கட்டப்பட்டு முடியும் தறுவாயில் இருக்கின்றது.     

LOCATION: Lat:11deg 73' 38.06" & Long 79deg 34' 18.03" 




After the visit to 5 Tirthankaras returned once again to Pidagam and had our lunch, hosted by Mr Jinendra Kumar & Family.  After Lunch it was decided to return back to Chennai to reach little earlier, skipping the two places, which are scheduled earlier. After thanking Swamiji, who accompanied with us and Mr Jinendra kumar & family ( for providing us the breakfast and Lunch), Mr Perani Sridhar for organising  this Ahimsa Walk, Dr Kanaka Ajithadass, Mr Rajendra Prasad, Mr Soumendar, Mr Babu and all the participants of this 57th Ahimsa Walk,  we started our return journey to Chennai, hoping to meet in 58th Ahimsa walk.

5வது தீர்த்தங்கரர் பிம்பத்தைக் கண்டு முடிக்கும் போது மதியம் இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. மதிய உணவிற்கு மீண்டும் பயணம் பிடாகம் நோக்கி.  திரும்ப சென்னை வரும் நேரத்தைக் கணக்கிட்டுப் பார்க்கும் போது மீதி காண வேண்டிய 2 இடங்களையும் தவிர்த்து விடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.. எங்களுடன் பயணித்த ஸ்வத்ஸ்ரீ லக்ஷ்மிசேன படாரக சுவாமிகளின் ஆசீர்வாதத்தோடு, எங்களுக்கு காலை மற்றும் மதியம் உணவளித்த திரு ஜீநேந்திரகுமார் மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம். இந்த 57வது அஹிம்சை நடையைச் சிறப்பாக ஏற்பாடு செய்த பேரணி ஸ்ரீதரன் அப்பான்டைராஜ், முனைவர் கனக அஜிததாஸ், திரு ராஜேந்திர பிரசாத், திரு சௌமேந்த்திரன், திரு பாபு.மற்றும் பங்கு கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறி சென்னையை நோக்கி பயணித்தோம் அடுத்த 58வது அஹிம்சை நடையில் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்.. நன்றி.. 
 ---OM SHIVAYA NAMA---

No comments:

Post a Comment