Monday, 4 March 2019

Sri Matcha Pureeswarar Temple / Machapureeswarar Temple / மச்சபுரீஸ்வரர் கோவில், Kovil Devarayan Pettai / கோவில் தேவராயன் பேட்டை, Pandaravadai, Thanjavur District, Tamil Nadu.

24th February 2019
It was planned to Visit the Temple built during the Chozha period in and around Thanjavur. This temple Matcha Pureeswarar Temple is on the way to Thanjavur from Kumbakonam on the South of rivers Kaveri and Kudamurutti. This is one of the Thevara Vaippu sthalam and Thirugnanasambandar has sung hymns in praise of Lord Shiva of this temple. It is also believed that Sri Bala Devarayan, who composed “Kandha Sasti Kavasam”, belongs to this place.  As per the inscriptions, this place was called “Chelur” and “Rajakesari Chaturvedi Mangalam”.


Moolavar   : Sri Matcha Pureeswarar
Consort     : Sri Sugantha Kundhalambigai, Sri Narunguzhal Nayaki...

The salient features of this temple are…
The temple faces east with a newly built entrance arch.   Balipeedam and dwajasthambam are in front of the entrance and dilapidated ( old ) Rajagopuram base. On the right is the Temple like a sannadhi for Ambal Sri Sugandha Kundhalambigai. On the left is the Sthala vruksham vanni tree with Vinayagar and Nagar. On the back, is the Durgai Amman with 8 hands ( Ashtabhuja ) in a separate sannadhi, facing North.

Ambal sannadhi was built with sanctum, Antarala / ardha mandapa and open muka mandapa, facing South. The mukha mandapa was built at a later date. The sanctum was built on a patha bandha adhisthana  and no inscriptions are found.  The Koshtams are empty. In the sanctum, Ambal is in a standing posture. A Mahameru is in front of Ambal. Who installed Maha Meru is not known. In the artha mandapam / antarala  Rishi / Minis  are installed.

In the artha mandapam, sannadhi for Vinayagar and Navagrahas.  In the sanctum, Moolavar looks cute with Matcham (Fish) worshiping lord Shiva.  The Sanctum was built on a patha bandha adhistanam with Bhoodhavari, Kodungai / Kabotham, and Yazhi vari on the top. The Viyyalavari has a mixture of elephants also. In the Koshtam Balavinayagar, Dakshinamurthy ( due to the break of the hand of the original statue a new Dakshinamurthy is installed in front ). Mahavishnu, Brahma, and Durgai.  A nagara  vimana is on the sanctum.

In the outer praharam sannadhi for Siddhar Peedam Sri Babaji, Saptha mathas, Nalvar Narasimhar ( Simha Vishnu ), Kasi Viswanathar and Visalakshi, Narthana Vinayagar, Sri Valli Devani  samedha Murugan with six faces as Subramaniar ( holding Shankha / conch and Chakra ), Gajalakshmi, Chandikeswarar, Iyappan, Saraswathy, Anjaneyar, Kala Bairavar, Yoga Bairavar, Saneeswarar, and Suryan.

ARCHITECTURE
The main sanctum sanctorum consists of Sanctum, antarala, Artha mandapam and mukha mandapam. The sanctum sanctorum is on a pada bandha adhistanam with jagathy, three patta kumudam, and pattika. The Bhittai starts with vedika. The pilasters are Vishnu kantha pilasters with square bases, kalasam, kudam, lotus petals mandi, and pothyal. The prastaram consists of valapi with bhuta ganas, kapotam with nasi kudus and chandra mandalam, and Viyyalavari/ prati vari. In this elephants are shown. The temple was built in stone from adhistanam to prastaram. The superstructure above the prastaram was built with bricks and the sigaram is of Nagara style.

At the entrance of Mukamandapa pillars the reliefs of a Cow ( Kamadhenu ?) worshiping Lord Shiva on the left and on the right Sri Maha Vishnu a Fish ( Matcha Avathar ) worships Lord Shiva of this temple. 

INSCRIPTIONS:
It is believed that this temple existed before the 8th Century (Thirugnanasambandar Period). As per the inscriptions and Thirugnanasambandar's Thevaram this place was called “Chelur” and Shiva as “Thiru Chelur Mahadevar”. Also, it is believed that this temple was built by Aditya Choza-I ( 880 to 907 CE ) as a brick structure and later rebuilt into a stone temple by Parantaka Chozha-I, (907- 955 CE). Later it had contributions from Vijayanagaras, Nayakas, Hoysalas, and Marathas. Kumbhabhishekam is done after renovations between 1928 CE and 2010 CE. The inscriptions are inscribed from Adhistanam to the top including Kapotam below Viyyalavari.  

In one of the inscriptions, it was mentioned that this place's land was donated to Thanjavur Hospital ( Adhula salai ) by Kundavai the elder sister of Rajaraja Chozha-I. The other inscriptions speak about the donation of Land, Money ( Black coin, Eezha kasu ( Srilankan Coin – since Sri Lanka was under Chozha’s Rule. It is interesting to note that a foreign coin was exchanged in Chozha’s country)),  for burning of Day and Night Lamps/ perpetual lamps, Pooja, offering to god, to bring 4 pots of water from river Kaveri for Lord Shiva’s abhisheka, etc.

Summaries of 53 inscriptions of Machchapuriswarar temple at Koil Devarayan Pettai of Papanasam Tk. of Thanjavur Dt. are given below. All the records except two ( 4 & 34/1996 ) are written in Tamil language and script with few names in Grantha. Name of the King, regnal year, historical year, and location are added to each.

The Detailed inscriptions are enclosed at the bottom of the post, both in Tamil and English.

Ref:
Papanasam Vatta kalvettukkal, Pages 205-305, Sl. Nos. 1/1996 to 53/1996

 Inscriptions
 Inscriptions on the Kodungai / Kapotam too-- above is the Viyyalavari
Inscriptions on the Kumudam - mention donations to the Perangadi (Shops)

LEGENDS
As per the legend, Mahavishnu took the matcha ( Fish )  avatar to bring back the 4 Vedas which were stolen and hidden under the sea by the Demons. In another legend, Vishnu in Matcha Avathar saved this earth from the piralaya by keeping it on his back.  Since this Iraivan Lord Shiva was worshiped by Mahavishnu in the form of Fish, this temple is one of the Parihara sthalam for the “Meena Rasi”.
  
 Mahavishnu worships Lord Shiva in the form of Fish 
Mahavishnu worships Lord Shiva

POOJAS AND CELEBRATIONS
Regular Poojas, Prodhasam, Avani Month pooja in Ashwini Nakshatra Pancha Murthy procession, etc, are conducted in this temple.

TEMPLE TIMINGS:
The temple will be kept open between 07.00 hrs to 12.00 hrs and 16.00 hrs to 20.00 Hrs.

CONTACT DETAILS:
Mr Poyyamozhi may be contacted for further details on his mobile at 8870570289 and 9894085435.

HOW TO REACH:
The Place Kovil Devarayan Pettai is a part of Pandaravadai in between Kumbakonam to Thanjavur bus route and the temple is about 600 meters off the main road.  Get down at Pandaravadai Bus stop. Thanjavur is about 22 KM and 19 KM from Kumbakonam.
All route buses from Kumbakonam to Thanjavur stop at Pandaravadai.
Town buses from Kumbakonam route nos  8,7 and  25 also stop at Pandaravadai.
Through the Train get down at Pandaravadai Railway Station.

LOCATION OF THE TEMPLE: CLICK HERE

 Saptamatrikas
 Nalvar



 Ambal Sannadhi

INSCRIPTIONS - கல்வெட்டுகளின் தொடர்ச்சி... 
1/1996. மூன்றாம் ராஜேந்திரனின், 5 ஆம் ஆட்சியாண்டு ( பொயு 1251 ), கல்வெட்டு பெரியாழ்வார் பண்டாரத்தார்க்குத் திருச்சேலூர் மகாதேவர் கோயிலுக்குரிய 118 குழி இறையிலி நிலம்,4000 காசுகளுக்கு விற்கப்பட்டது. இந்நிலத்தினை மனு விளங்கப் பிள்ளை பெற்றாள் என்ற பெயரிலான மடம் கட்டவும். அம்மடத்துத் தலைவரான (மடபதி) திருஞானசம்பந்தபதி என்பவருக்கு அளிக்கவும். கோயிலின் தேவகன்மிகள் பெற்ற 4000 காசில் திருநாவுக்கரசு தேவர் திருமேனியை எழுந்தருள் விக்கவும் அரசன் இட்ட ஆணையினைப் பிள்ளை செழிய கோனார் என்பவர் கொணர்ந்து கோயில் தேவகன்மிகளிடம் கொடுத்தார்.அதன்படி செயல்கள் நிறை வேற்றப்பட்டன. பெரியாழ்வார் பண்டாரத்தார் என்பவர்கள் மூன்றாம் இராஜ இராஜனின் குடும்பக் கருவூலத்தினை நிர்வாகிப்பவர்கள்.
1/1996 - Chola Rajendra- III’s, 5th  regnal year 1251CE inscription on the North side of the adhistana (Kumudam ) of Maha mandapa is a sale deed executed between the authorities of the temple and personal treasury of the King (பெரியாழ்வார் பண்டாரம்). The royal order for this transaction was brought by Pillai Seliya Kōnār. According to it, 118 kuli of tax-free land belonging to Thiruchelur Mahadeva temple was sold for 4000 kasus. The land was utilized for building and functioning the mutt named 'Manu Vilanka pillai perrāl' with the headship of Thirugnanasambandapati son of Sundara Perumal, a resident devotee ( 2 ) of the temple at Thiruvalanjuli. The 4000 kasus received by the temple authorities have to be utilized for setting up the image of Thiru- nāvukkarasar in the temple. The reference to the personal royal treasury is rare.

2/1996. கோராஜகேசரிவர்மன் ( சுந்தரசோழன்..?) 17ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, முதற் பராந்தக சோழனின் 17, 13, 19, 2 ஆகிய ஆட்சியாண்டுகளில் வழங்கப் பட்ட கொடைகளும், அவற்றைக் கோயிலுடையார்கள் மூவர் பெற்றுக்கொண்டு செய்ய வேண்டிய ஏற்பாடுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட செய்தியும் குறிப்பிடப்படுகின்றன. இக்கல்வெட்டு சுந்தரசோழனின் 17-ஆவது ஆட்சியாண்டில் தொகுத்தெழுதப்பட்ட ஆவணமாகத் தெரிகிறது. அதில் சில மேல் நடவடிக்கை களும் இக்கல்வெட்டு எழுதப்பட்ட காலத்தில் செய்யப்பட்டுள்ளன.
2/1996 - Chola – Rajakesarivārman’s ( Sundara Chola? ) - 17th regnal year CE 974, inscription on the North wall of the Ardha mandapa, records the donation for burning lamps, and bringing water from Kāvēri for the sacred bath by giving 'sheep, gold and cow in various regnal years of Parantaka Chola-I by various persons. By accepting them, three temple servants took the responsibility of executing the same. It is a consolidated document engraved in the 17th  regnal year of Sundara Chola ( Rajakesarivarman ).

4/1996. கோராஜகேசரிவர்மன் ( சுந்தரசோழன் ) 7ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, முற்பகுதி சமஸ்கிருதத்திலும், பிற்பகுதி தமிழிலும் உள்ள இக்கல்வெட்டு, இராச கேசரிச் சதுர்வேதி மங்கலத்திலுள்ள, திருச்சேலூர் மகாதேவர்க்கு, இவ்வூர் நரதொங்கச் சேரியைச் சேர்ந்த கூற்ற மங்கலத்துப் பாரதாயன் பட்டன் சேந்தநக்கன் என்பவன். இரவும் பகலும் இரண்டு விளக்குகள் எரிப்பதற்கு, ஆறுமாச் செய்நிலம் அளித்ததைக் குறிக்கிறது. கிரந்தப் பகுதியில் முதல் ஸ்லோகம் சிவனை வணங்கியும். அடுத்த ஸ்லோகம் சுருக்கமாகக் கொடையையும் குறிக்கிறது.
4/1996 - Chola Rajakesarivarman (Sundara Chola) - 7th  regnal year 964CE inscription on the North wall of the ardha mandapa ( Left to Durga ) is a bilingual record of Sanskrit and Tamil, written in Grantha and Tamil scripts respectively. It records six ma of land for burning two perpetual lamps in the temple of Thiruchelur Mahādava at Rājakesarichaturvedimangalam, by a resident of Naratongacheri, a quarter of that village.

5/1996. முதலாம் குலோத்துங்க சோழனின் 19 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, ராஜராஜ வளநாட்டுப் பரவைச்சுற்றுக் கீரங்குடிக் கீரங்குடையான் பாலைக்கூத் உய்யவந்தானான குலோத்துங்க சோழ மூவரையன், கலாகரச்சேரி குலைகுதேதி அனந்தநாராயண பட்டனாரிடமிருந்து ஏழு மா நிலத்தை விலைக்கு வாங்கி சபையார்க்குப் பொன் வழங்கி, நிலத்தை இறையிலியாக்கிக் கோயிலுக்கு வழங்கியுள்ளான். மூன்றுமா நிலத்துக்குரிய அந்தராயமாக. ஒவ்வொரு விளைச்சலிலும் அரைக்காசு மட்டும் செலுத்திவர ஏற்பாடு செய்யப்பட்டது.
5/1996 - Chola – Kulottunga- I’s 49th regnal year 1119 CE inscription on the North wall of the Ardha mandapa, and pattikai of Antarala, records the gift of one ma of land after purchase from Ananda Narayana Bhattar of Kalakaracheri by Palaikkuttan Uyyavandan alias Kulöttungachōla Muvāraiyan of Paravaisurru in Rajarajavalanadu. He got the land made tax-free by depositing 1.75 Kalanju of gold per ma and the antaraya of 0.5 kasu per yield only to be remitted annually.

6/1996. முதலாம் இராஜாதிராஜனின் 35 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, முதலாம் இராஜேந்திரனின் 28-ஆம் ஆட்சி ஆண்டிலும் முதலாம் இராஜாதி ராஜனின் 31-ஆம் ஆட்சி ஆண்டிலும் கோயிற் கருவூலத்திலிருந்து கடனாகப் பெற்ற தொகை வட்டியோடு 710 காசுகளாகி விட்டமையால், அதனைப் பெற்ற, நித்தவினோத வளநாட்டு. நல்லூர் நாட்டு இராஜகேசரிச் சதுர்வேதி மங்கலத்துச் மகாசபையார், அதன் வட்டியிலிருந்து, திருச்சேலூர் மகாதேவர் கோயிலுக்குரிய நிலங்கள் சிலவற்றுக்கான வரிகளை கட்டச் செய்த ஏற்பாட்டினை அவர்கள் ஏற்றதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
6/1996 - Chola – Rajadhiraja-I’s 35th regnal year 1052CE inscription on the North wall of the Maha mandapa, Records an agreement made by the big assembly of Rajakesarichaturvedimangalam, a brahmadēya in Nallurnādu, which was a subdivision of Nittavinōda valanādu, to pay all taxes on certain land belonging to the temple of Tiruchchēlur Udaiya Mahādēva by way of interest on the money which they had borrowed from the temple treasury. One in the 28th year of Periyadevar who was pleased to take Purvad sam, Gangai, and Kadaram' for purchasing house sites and another in the 31st year of Sri Rājādhirājādēva. That amount together with their interest had now accrued to 710 kasu. Mentions a Kalañju as equivalent to 2 kasu.

7/1996. இராஜகேசரிவர்மன் ( சுந்தரசோழன் ) 6ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, வாழைப்பந்தலைச் சேர்ந்த கண்ணந்தை அறிவாளன் பூமி சுந்தரனான சுந்தரசோழ மூவேந்த வேளான், முடிசோழநாட்டுப் பிரமதேயம் ஸ்ரீசிம்மவிஷ்ணுச் சதுர்வேதி மங்கலத்தில் ஸ்ரீபூமிசுந்தர விண்ணகர் எடுப்பித்து, குந்தமங்கலம் என்ற ஊரினை வாங்கி குடிநீக்கா இறையிலியாக வழங்கியதைக் குறிக்கிறது. மேலும் இறைகாவலாக (முன்பணமாக) 200 கழஞ்சுப் பொன் சபைக்குக் கொடுத்து, மூவாயிரக்கலம் நெல் இப்பொன்னுக்குரிய ஆண்டு வட்டியாக வசூலித்துச் சபையே இறை செலுத்தி வர ஏற்பாடு செய்திருக்கிறார்.
7/1996 - Chola – Rajakesarivarman’s 6th regnal year 963 CE, inscription on the North side of the adhistana ( Kanda ) of Maha mandapa, Antarala, and Central shrine, records the tax exemption made by Peruńguri Mahāsabai of Simha-Vishnu Chaturvedi Mangalam, a brahmadeya of Mudichönädu after receiving 200 Kalanju of gold from Kannanthai Arivānan alias Sundarachōla Muvendavelan as advance payment to meet out the future taxes in kind of paddy of 3000 Kalam per year for the village Kundamangalam, which was donated as Kudiningā devadānam to the temple of Bhumisundara Viņņagar built by him. All the village lands were purchased from two individuals.

10/1996. ஆதித்த கரிகாலனின், 4 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, தஞ்சாவூர் திரிபுவன மாதேவிப் பேரங்காடி வியாபாரி கல்லியூருடையான் அரையன் நக்கனின் மனைவி நீலன்தியாகி என்பவள், தென்கரை பிரம்மதேயம் இராசகேசரிச் சதுர்வேதி மங்கலத்துத் திருச்சேலூர்ப் பெருமாளுக்கு ஒரு திருவிளக்கு எரிப்பதற்கென 20 காசு வழங்கியுள்ளாள். இக்காசிற்குச் சமமாகப் பொன் பத்து எனக் கணக்கிட்டுக் குறிப்பிடப்படுகிறது.
10/1995 - Chola – Adittakarikalan’s, 4th regnal year 964 CE inscription on the North side of the adhistanam of Maha mandapa, antarāļa and Central shrine, records the gift of 20 kasu equivalent to 10 kalanju of gold for burning a lamp in the temple of Thiruchelur Perumal by Nilan Tiyaki, wife of a merchant named Araiyan Nakkan of Tribhuvanamādēvi Perangadi at Thanjavur.

14/1996. கோராஜகேசரிவர்மன் (கண்டராதித்தன்  அல்லது சுந்தரசோழன் ) 3ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, திருச்சேலூர் மகாதேவர்க்குக் காவிரியிலிருந்து நீர் கொண்டுவந்து திருமஞ்சனமாட்டுவதற்கு ஒரு மா நிலத்தினை ஒன்பது கருங்காசுகளுக்கு வாங்கி, வெள்ளாளன் ஐயாறன் திவாகரன் என்பவர் வழங்கியதைத் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு. இந்நிலம் பாலாசிரியன் சேந்தன் செந்தளியின் தம்பி, சேந்தன் அறத்தனிடம் மனோரச்சரிப் போலாசிரியன் மாறன்தேவச்சோமாசியார் பெயரால் அந்நிய நாம காரணத்தால் விலைக்குவாங்கப்பட்டதெனவும் குறிக்கப்படுகிறது.
14/1996 - Chola - Rajakesarivarman ( Gandaraditya or Sundarachola ) - 3rd regnal year - 10th Century, CE Paleography - North side of the wall of Antarala inscription records an endowment of one ma of land after purchasing it from one Sendan Agattan younger brother of Sendan Sentali of Manoramacheri for 9 karuńkāsu by a vellālā named Ayyaran Divakaran, a resident of Ilamangalam, a quarter in Rajakesari Chaturvedi Mangalam for providing water from river Kāvēri for the sacred bath of Thirucelur Mahadeva. The purchase is said to have been made in the name of another person ( anyanāma karaņam ) namely Marandeva Sōmāsiyār of Manoramacheri

15/1996. முதலாம் இராஜேந்திரனின் 7 ஆம் ஆட்சிடயாண்டு கல்வெட்டு, ஆழ்வார் ஸ்ரீ பராந்தகன் ஸ்ரீகுந்தவைப் பிராட்டியார் திருமுகம் (ஓலை) அனுப்பி, நல்லூர் நாட்டு பிரம்மதேயம் ஸ்ரீராஜகேசரிச் சதுர்வேதிமங்கலத்துச் சபையார்க்கு ஆணை வழங்கியபடி,தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூரிலுள்ள சுந்தரசோழ விண்ணகர் எனப்படும் திருமால் கோயிலோடு இணைந்த ஆதுலசாலைக்கு (மருத்துவ மனைக்கு ) நிவந்தம் வழங்கிய செய்தி குறிப்பிடப்படுகிறது. ஊர்க்கல்வெட்டு எண் : 22 காண்க.
15/1996 - Chola – Rajendra-I’s, the 7th regnal year 1018 CE inscription on the North and West side of the adhistana ( jagathy) of the Central shrine, records the land donation to the hospital ( aturasālai ) attached to Sundara Cholavinnagar at Tañjāvur in Tañjāvurkkurram by sending an order ( Srimukham ) by Alwar Sri Parantakan Sri Kundavaipirațțiyar to the Sabaiyar of Sri Rajakesari- Chaturvedimangalam, a brahmadeya at Nallurnādu.

16/1996. முதலாம் இராஜேந்திரனின் 6 ஆம் ஆட்சிடயாண்டு கல்வெட்டு ஆழ்வார் ஸ்ரீபராந்தகன் ஸ்ரீகுந்தவைப் பிராட்டியார், நித்தவினோத வளநாட்டு நல்லூர் நாட்டு ஸ்ரீராஜகேசரிச் சதுர்வேதிமங்கலத்துத் திருச்சேலூர் மகாதேவர்க்குக் கருவறையில் எரிவதற்கு நந்தாவிளக்கு ஒன்று வைத்து, 90 ஆடுகள் கொடையாக வழங்கியதையும் இவ்வாடுகளை மூன்று பேர் பராமரித்து, இராசகேசரி என்ற அளவையால் தினசரி உழக்கு நெய் அளந்து கொடுக்கும் பொறுப்பு ஏற்கிறதையும் இக்கல்வெட்டு குறிக்கிறது. உயரத்தில் வைத்தெரிக்க முழநீளமுடைய விளக்குத் தண்டினையும், கலம் ஒன்றினையும் வழங்கியுள்ளார்.
16/1996 - Chola – Rajendra- I’s 6th regnal year 1017 CE inscription on the North wall of the Central shrine and Antarala, begins with Meykirtti. Gift of one perpetual lamp and two lampstands to the temple of Thiruchelur Mahadeva by Alvar Sri Parāntakan Sri Kundavai Pirattiyar, 90 sheep were entrusted with three persons and they had to supply one ulakku of ghee daily with the measure 'Rajakesari'.

18/1996. கோப்பரகேசரிவர்மனின் 17 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, மதுரை கொண்ட மகாராயரின் (முதற் பராந்தகன்) 14. -ஆம் ஆட்சியாண்டில் திருக்கோயிலுடையான் காமக்காணி நக்கன் திரியம்பக பட்டன் திருச்சேலூர்ப் பெருமாள் கோயிலில் தினமும் விளக்கெரிக்க எண்ணெய் அளப்பதற்காக மன்னன் வைத்த ஐங்கழஞ்சுப் பொன்னைப் பெற்றதையும், அதே மன்னனின் 12-ஆவது ஆட்சியாண்டில் கலாகரச்சேரியைச் சேர்ந்த மகேந்திரகிரமவித்தனிடம் பதினொரு கழஞ்சு பெற்றதையும். 15ஆம் ஆட்சியாண்டில், திருச் சேலூர்ப் பெருமானுக்குத் தினமும் ஆழாக்கெண்ணெய் அட்டுவதற்காக ஐங்கழஞ்சுப் பொன் பெற்றதையும், அவற்றுக்குப் பிணையாளர்களாக இருவரைச் சுட்டியதையும் குறிக்கிறது. மேலும் 15-ஆம் ஆண்டில் சீகண்டச்சேரி தாயன் பரமன் விளக்கெரிக்க எண்ணெய் வழங்கியதையும் குறிக்கிறது. 
18/1996 - Chola – Parakesarivarman’s 17th regnal year 10th  Century, CE, Paleography – inscription on the North wall of the Antarala, records an agreement given by Kämakkāni Nakkan Traiyambaka Bhattan, a temple servant () to supply a certain quantity of oil daily for the lamp in the temple of Thiruchelur Mahadeva for which he received 5 Kalanju of gold at each time from the temple in the 14th  and 15th  regnal years of 'Maduraikonda Mārāyār (i.e.) Parātaka I. He also received 11 Kalanju from one Mahendra Kramavittan of Kalakarachari in the 12th  year of the same King. Another person named Tayan Paraman gave one lamp and oil to the temple in the same year

20/1996. முதலாம் குலோத்துங்கனின், 49 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, இராஜராஜ வளநாட்டுப் பரவைச்சுற்றுக் கீரங்குடிக் கீரங்குடையான் பாலைக்கூத்தன் உய்யவந்தானான குலோத்துங்கசோழ மூவரையன்ன திருச்சேலூர் மகாதேவர்க்கு அமுதுபடிக்கென ஆறுமா நிலத்தை விலைக்கு வாங்கியும், பழம்படி நிலம் மூன்று மாவையும் கோயிலுக்கு வழங்கியதையும், ஒவ்வொரு விளைச்சலின் போதும் அரைக் காசு அந்தராயமாக அரசுக்கு வழங்கத்தக்க வகையில் ஏழேமுக்கால் மாப் பொன்னை மகாசபையாரிடம் முதலீடாக (deposit) வழங்கியதையும் குறிப்பிடுகிறது.
20/1996 - Chola Kulottunga –I’s, 49th regnal year 1118 CE inscription on the  Central shrine North wall, records the gift of land after purchase from Olochiyan Sri Vasudevan Aramudhan of Anbil for providing sacred food to the God Thiruchelur Mahadeva by Pālaikkuttan Uyyavandan alias Kulottungachola Muvaraiyan of Paravaicurru Kirangudi in Rajarāja valanādu. The land was made tax-free by depositing some lumpsum amount. But the antaraya of 0.5 Kasu per yield had to be remitted.

22/1995. முதலாம் இராஜேந்திரனின்  33 ஆட்சி ஆட்சியாண்டு கல்வெட்டு, இராஜகேசரிச் சதுர்வேதிமங்கலத்துச் சபையாரிடமிருந்து ஆழ்வார் ஸ்ரீபராந்தகன் குந்தவையார் (செம்பியன் மகாதேவியார்) ஒன்பது மா நிலமும். ஒன்றைகால் வீட்டுமனையும் விலைக்கு வாங்கி, வைத்ய போகமாக (மருத்துவர்களுக்குரிய அனுபோக நிலமாக) வழங்கினார். மகா சபையார் எண்பது காசு பெற்றுக் கொண்டு. அதற்கு இறை நீக்கம் செய்துள்ளனர். க்ஷத்திரியசிகாமணி வளநாட்டு மருகல் நாட்டுச் சவர்ணன் அரையன் மதுராந்தகனுக்கும். அவன் குலப்பிரிவினருக்கும் (அன்வயத்தார்) இவ்வைத்யபோகம் உரிமையாக்கப்பட்டுள்ளது. 
22/1996 - Chola – Rajendra- I’s 3rd regnal year 1014 CE inscription on the West wall of the Central shrine, records the sale of 9 ma land by the big assembly of Rajakesarichaturvedimangalam and 1.5 manai ( house site ) by Irayur Echchaköpakramavittän of Kalakaracheri to the princess Alvär Sri Parāntakan Sri Kundavaippirātțiyar and was made for the enjoyment of Savarņan Arayan Madurantakan and his descendants as Vaidyabhoga.This was engraved, it is stated, by the big assembly on receiving the order of the princess brought by Araiyan Ambalanathan.

24/1996. கோப்பரகேசரிவர்ம்னின், 8 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, உத்தமசோழனின் தாயார் செம்பியன் மாதேவியார், தன் மகன் நன்மையை வேண்டி, மாதப்பிறப்பு நாள்களில், திருச்சேலூர் இறைவர்க்கு நூற்றெட்டு சிறப்புக் (உத்தம) கலசத்தால் திருமஞ்சனம் (நீராட்டு) செய்யவும், சிறப்புத் திருவமுது படைக்கவும். இரு புத்தாடைகள் வழங்கவும். அப்பூசை செய்யும் அர்ச்சகருக்குமாக, பலரிடம் இருந்து நிலத்தினை விலைக்கு வாங்கிக் கொடையாக அளித்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. நூற்றெட்டுக் கலசங்களும் அளிக்கப்பட்டன. நிலங்கள் விற்றவர்கள் பெயர்கள், அதன் அளவுகள், எல்லைகள் ஆகியவைவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
24/1996 - Chola – Parakesarivarman’s, 6th  regnal year, 10th  Century CE Paleography, inscription on the West wall and patți of the Central shrine, records the endowment of land made by the Queen-mother of Gandarādittan Madurāntaka Sri Uttamachōla, for the merit of him to the temple of Thiruchelur Alvar at Rajakesari Chaturvedimangalam. Provision was made to perform abhisheka with 108 Kalasa, to offer special sacred food, to supply a pair of new clothes, and remuneration to the priest for doing this special worship. The names of the persons who sold the lands and the extent and boundaries of are mentioned in detail.

26/1996. முதலாம் இராஜேந்திரனின் 66 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, ஸ்ரீராஜகேஸரிச் சதுர்வேதிமங்கலத்துத் திருச்சேலூர் தேவற்குத் திருவுண்ணாழிகை யில் ஒரு நொந்தாவிளக்கு எரிப்பதற்குத் தினசரி இராசகேசரி எனும் உழக்கால் ஓர் உழக்கு வீதம் நெய் வழங்கி வருவதற்காக ஆழ்வார் ஸ்ரீபராந்தகன் ஸ்ரீகுந்தவையார் (அரசனின் அத்தை) 90 ஆடுகள் வழங்கியுள்ளார். பட்டன் பொன்னன், பாலன் பெருமான் ஆகியோர் ஆடுகளைக் கோயிலின் சார்பாக ஏற்றுள்ளனர்.
26/1996 - Chola - Rajendra –I’s, the 6th regnal year 1017 CE inscription on the South wall of the Central shrine, begins with the introduction ' '. Records an agreement by two shepherds to supply ghee of one Ulakku daily by the liquid measure Rajakesari for a perpetual lamp in the central shrine of the temple of Thiruchelurdevar in Nallurnādu, a subdivision of Nittavinoda Valanadu for ninety sheep received by them from Alvar Sri Parāntakan Sri Kundavaippiratiyar.

28/1996, கோப்பரகேசரிவர்மன் ( உத்தமச்சோழன் ) 5 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, வேசாலிப்பாடி இளையில் நாட்டுச் சிறுவேலூருடையான் செம்பியன், வேசாலிப்பாடி நாட்டு மூவேந்த வேளானான திருவடிகள் ஐயனடி என்ற இருவரும் இறைவர்க்கு அமுதுபடிக்குரிய வெள்ளித்தளிகை, வெள்ளித்தட்டம். பொன்னாலான நிறை பொறிக்கப்பட்ட ஈயோட்டும் கைப்பிடியுடன் விசிறி, கவசம் ஆகியவற்றை வழங்கியதைக் காட்டுகிறது.
28/1996 - Chola – Parakesarivarman’s, 5th regnal year, 10th Century CE inscription on the South wall of the Central shrine - ( Left side of Dakshinamurthy ), records gift of two silver plates for offering the sacred food and also armor and flywhisk with handle made of gold by Thiruvadigal Aiyanadi alias Sembianvesālipādinātțu Muvendavalan of Siruvelur in Ilayilnadu.

30/1996. முதலாம் இராஜராஜனின், 5 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, உத்தம சோழரைப் பெற்ற தாயான செம்பியன் மாதேவியார். உத்தம சோழர் பெயரால் இக்கோயில், இறைவர்க்கு வெள்ளித் தளிகை ஒன்றும்,தராவினால் செய்யப்பட்ட வட்டிகைக்கால் (பீடம்) ஒன்றும் செய்வித்தளித்ததைக் குறிக்கிறது.
30/1996 Chōla – Rājarāja-I’s 5th regnal year 986CE inscription on the South wall of the Central shrine, records the gift of a silver plate and a bronze stand to the temple of Thiruchēlur Mahādevar by Sembian Madeviyar mother of Uttamachōla on behalf of her son.

31/1996. முதலாம் இராஜராஜனின், 12 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, உத்தமசோழரின் தாயார் செம்பியன் மகாதேவியார். உத்தமசோழரைச் சார்த்தித் திருச்சேலூர் இறைவர்க்குப் பொற்கலசம் ஒன்று வழங்கியதைத் தெரிவிக்கிறது.
31/1996- Chola – Rājarāja-I’s, 12th regnal year 996CE inscription on the South wall of the Central shrine, engraved in continuation of the prior inscription. Records the gift of a gold pot by Sembian Mädeviyär mother of Uttamachōlā on behalf of her son.

32/1996. முதலாம் பராந்தகனின் 27 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, திருச்சேலூர் மகாதேவர் ரிஷபவாகனப் பெருமாளுக்கு நண்பகல் அமுது செய்விக்க நானாழி அரிசி, நெய்யமுது, கறியமுது. தயிரமுது, அடைக்காய் (பாக்கு) அமுது, ஆற்றிலிருந்து திருமஞ்சன நீர் தினம் ஒரு குடம் ஆகியவற்றுக்காக ஊர் மத்யஸ்தன் நக்கன் அமுதன் நிலம் வழங்குகியதைக் குறிக்கிறது.
32/1996- Chola Parantaka- I’s, 37th regnal year, 943 CE, inscription on the South side of the adhistana ( Kumudam ) of the Central shrine and Antarāļa, records the gift of land by purchase for midday food offerings and for a pot of water daily from the river for the sacred bath to the deity Rishabhavāhana Perumal by one Nakkan Amudan, the Madhyastha of the village.

34/1996. சுந்தரசோழனின், 4 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, நரதொங்கச்சேரி கூற்றமங்கத்துப் பாரதாயன் சேந்தன்னக்கபிரான் பட்ட சர்வக்ருது யாஜியார். திருச்சேலூர் இறைவர் வசம் 20 காசு வழங்கி. அதன் தம்மவிருத்தி (அற வட்டி)யாக வருடம் ஒன்றுக்கு வரும் 3 காசினை, வருடந்தோறும் மார்கழித் திருவாதிரை தீர்த்தவாரி நாளில் ஜைமினி சாமவேதம் ஓதிக் கலமறுத்து நல்லாரானார் ஒருவர்க்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளதைத் தெரிவிக்கிறது.
34/19996 - Chola – Sundarachola’s 14th regnal year, 970CE inscription on the South side of the Adhishthāna ( Kumudam ) of the Central shrine and ardha mandapa, is a bilingual record in Sanskrit and Tamil written in Grantha and Tamil scripts respectively. It records an endowment of 20 karuńkāsu made to the temple by Paratāyan Sendanakkapirānbaţţa Sarvakratuyajiyar of Kürramangalam in Naratōngacheri.

38/1996. கோப்பரகேசரிவர்மன் ( முதலாம் இராசேந்திரன் ) 2 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, தஞ்சாவூர் திரிபுவன மாதேவிப் பேரங்காடி வணிகன் வரகூருடையான் தத்தன் சீலன் என்பான் மனைவி நெடுநங்கை தேசம் என்பாள் விளக்கு ஒன்றும், அதனை எரிக்கக் காசு முப்பதும் கொடுத்ததைக் கூறுகிறது.

(திரிபுவனமாதேவி என்பது முதல் இராஜராஜனின் மனைவியருள் ஒருவர் பெயராதலால் இக்கல்வெட்டு முதல் இராஜேந்திரன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தெ.இ.க. தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.)
38/1996 - Chola – Parakēsarivarman’s ( Rajendra- I ) - 2nd regnal year, 1013 CE, inscription on the South wall of the ardha mandapa, records a gift one lamp and 30 käsu for the maintenance of the lamp in the temple of Thiruchelur Mahadeva, by Nedunangai Desam wife of Tattan Silan, a merchant of Thirubhuvanamadevipperangadi at Thanjavur. ( Due to the occurrence of the name Tribhuvanamādevi, Queen of Rajaraja- I, this record has been attributed to Rajendra- I in S.I.I. vol ).

39/1996. இராஜகேசரிவர்மனின் 3 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, நரதொங்கச்சேரி புள்ளமங்கலத்து பாலாசிரியன் பட்டன் பூவத்தன் சங்கரன் என்பவன், திருச்சேலூர் மகாதேவர்க்குத் தினமும் காவிரியில் இருந்து ஒரு குடநீர் கொணர்ந்து திருமஞ்சனத்திற்குக் கொடுக்கும் நபருக்கு ஜீவிதமாக நிலம் அளித்ததைக் குறிக்கிறது.
39/1996 - Chola – Rajakesarivarman’s 3rd regnal year, 10th Century CE inscription on the South wall of the Ardha mandapa, records the Gift of land for the maintenance ( Jivita ) of a person to bring a pot of water from Kaveri daily for the sacred bath of Thiruchelur Mahādeva by Pavattan Sankaran, a resident of Pullamangalam in Naratongachari.

40/1996. ஆதித்தகரிகாலனின், 4 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, தென்கரைப் பிரம்மதேயம் ராஜகேஸரிச் சதுர்வேதிமங்கலத்துள்ள திருச்சேலூர் கணபதிக்கு, மார்கழித் திருவாதிரை நாளில் அவல். எள், சர்க்கரை, தேங்காய் ஆகியன படைத்து வழிபட 45 காசுகளும், அரைக்கால் அக்கமும் அளித்ததைக் குறிக்கிறது. வரி 17க்கும் 18க்கும் இடையில், சிலவரிகள் இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது. கொடை கொடுத்தவர் பெயர் முதலியன இல்லை.
40/1996 - Chola – Adittakarikalan’s 4th regnal year, 963CE inscription on the Pilasters of the south side of the Ardha mandapa is Unfinished. Stops after mentioning the name Rājākesarichaturvedimangalam.

43/1996. பரகேசரிவர்மனின், 8 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, திருச்சேலூர் மகாதேவர் கோயிலில் ஸ்ரீபலி வழிபாட்டின் போது ஐந்து பேர் [கொட்டும் இசைக்கருவி ] இசைப்பதற்கு. இவ்வூர் மத்யஸ்தன் கற்பக ஆதித்தன் ஆச்சன் அமுத னக்கந் என்பவர் நிலம் விலைக்கு வாங்கிக் கொடை அளித்ததைக் குறிக்கிறது. விலைக்கு வாங்கப்பட்ட நிலம் 'காஷ்டகாரிப் பங்கு' என்று குறிக்கப்படுவதால், அது கட்டிடப்பணி செய்பவருக்கு அளிக்கப்பட்டிருந்த நிலம் என்று தெரிகிறது.
43/1996 - Chola – Parakesarivarman’s 8th regnal year, 10th Century CE  inscription on the South side of the Adhishtana ( Kumudam ) of the Ardha mandapa, records the gift of land after purchase for performing music [ beating the drums, etc.] in the Sribali service by five persons. This was made by Karpaka Ädittan Achchan Amudanakkan an arbitrator (Madhyasta) of this village. The land purchased was mentioned as 'Kashtäkärippanku ( ie, land allotted for temple building & Repairs, etc.).

44/1996. முதலாம் பராந்தகனின், 37 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, தென்கரைப் பிரமதேயம் ஸ்ரீராஜகேஸரிச் சதுர்வேதிமங்கலத்துத் திருச்சேலூர் மகா தேவர்க்கு அர்த்தயாமத்தில் உணவு படைக்கும் போது செண்டை கொட்டி, காளமும் சங்கும் ஊதுவதற்கு இவ்வூர் மத்யஸ்தன் நக்கன் அரங்கன். நிலம் ஒன்றினை விலைக்கு வாங்கி வழங்கியதைக் குறிக்கிறது.
44/1996-Chola Parantaka -1’s, 37th regnal year, 943 CE inscription on the South side of the Adhishtana of ( Kumudam & Jagathy ) the Ardha mandapa, records the Gift of land ( measured makani araikkani muntiri ) after purchase by Nakkar Araiyan, Madhyasta of the village, Rajakesarichatarvdi Mangalam to perform music with Chendai, ( gong ) Kilam ( horn ) and Chanku ( conch ) while the food offering made in midnight service ( Ardhajama ) to Thiruchaler Mahadeva.

45/1996. விக்ரமச்சோழனின், 5 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, இராசகேசரிச் சதுர்வேதிமங்கலத்துச் சோழ சூளாமணிச்சேரி புரவசேரி அடிகணம்பி பட்டன், திருச்சேலூர் மகாதேவர் கோயிலுக்காக ஆதிசண்டேஸ்வரர் பெயரில். கொன்றையந் ஸ்ரீமாதேவ பட்டனிடம் விலைக்கு வாங்கிய மனை நிலத்தினையும். சுந்தர தேவபட்டன். இராயூர் நரசிங்க பட்டன் ஆகிய இருவரிடமும் விலையாலும் தானத்தாலும் பெற்ற விளைநிலத்தினையும், விற்றுக் கொடுத்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. 3-4 - ஆம் வரிக்கும். 6-7 - ஆம் வரிக்கும் இடையே. சிறிய தொடர்பின்மை உள்ளது..
45/1996-Chola Vikramachola’s, 5th regnal year, 1122CE, inscription on the South wall and pilaster of the Ardha mandapa, records the sale deed executed between Chandesvaradeva on behalf of Thiruchslun Mahädava and A Ligalnambi Bharjan of Chilasulimaaichori in Rajak+sarichturvedi- Mangalam. The said property consists of house-site and arable land purchased from Konraiyan Sri Konraiyan Sri Madevabhata and Iriyur Narasinga Bhatta respectively Small portions are missing between the lines 3&4 and 6&7.

49/1996. மூன்றாம் இராஜராஜனின் 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு, காவேரி வல் [லவ நா ] டாழ்வான். இக்கோயிலில் அழகிய கூத்தர். அவரது நாச்சியார் ஆகிய இரு திருமேனிகளை எழுந்தருள்வித்ததையும். இத்திருமேனிகளுக்கு இறையிலியாக நிலக்கொடை வழங்கித் தினசரி பதக்கு நெல் நிவேதனமாகப் படைக்க ஏற்பாடு செய்ததையும் குறிக்கிறது. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை.
49/1996- Chola – Rajaraja-III’s inscription on the entrance Inner side of the ( Gopura ) Southside, a regnal year lost 13th Century CE, records the installation of the bronze images of Nataraja ( Alagiyakuttar ) and his consort and making the arrangements for food offerings to them by giving land donation by Kaveri Vallava Nadalvän.

53/1996. பரகேசரிவர்மன் ( உத்தமச் சோழன் ) 7 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, திருச்சேலூர் மகாதேவர்க்கு அந்திப் பொழுதில் திருவமுதுபடைக்கவும் குரளை (குடமுருட்டி ? ) யில் இருந்து திருமஞ்சனம் ஆட்டுவதற்குத் தினமும் நான்கு குடநீர் எடுத்து வருவதற்கும், இளையூர் நாட்டுச் சிறுவேலூருடையான் திருநந்தி இராயனடி என்பவர். நிலக்கொடை அளித்ததைக் குறிக்கிறது. கொடுக்கப்பட்ட இந்நிலம். மூன்பு இவரே நந்தவனம் அமைப்பதற்காகக் கொடுத்த நிலத்திற்குப் (பரிவர்த்தனை) பதிலாகக் கொடுக்கப்பட்ட நிலம் என்றும் குறிக்கப்படுகிறது. இவரே ஒரு ஈழ விளக்கு அளித்ததையும் குறிக்கிறது.
53/1996 - Chola – Parakesarivarman’s ( Uttamachola ), 7th regnal year 976 CE, inscription on the South wall of the Central shrine, records the gift of land as an endowment for the daily offerings during the evening service in the temple of Thiruchalur Mahadeva, and for providing for the daily supply of 4 pots of water from the river Kuralai ( Kudamurutti ) for the sacred bath of the God, by Tirunanti Irayanadi of Siruvelur in Ilaiyur nadu on the Southern bank of the river. This land is said to have been got in exchange for a flower garden adjacent to another land which had been previously presented by the donor.

மூன்றாம் குலோத்துங்கனின் 13 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு,
மதுரையும், பாண்டியன் முடித்தலையும் கொண்ட குலோத்துங்க சோழதேவனின் (III) கல்வெட்டு. கேயமாணிக்க வளநாட்டு,திருவாரூர்க் கூற்றத்து வல்லத்தைச் சேர்ந்த ஒருவரிடம், பணம் பெற்றுக் கொண்டு. சந்தி முதல் அர்த்த யாமம் வரை இரண்டு விளக்கெரிக்கச் சிவப்பிராமணர்கள் ஒத்துக்கொண்டதைக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
On the south wall of the mandapa of Mattapurīswara Temple Tribhuvana Chakravartikal Kulōttunga Chōladeva, who was pleased to take Madurai and the crowned head of Pandya - 13th regnal year Agreement by the Sivabramanas to burn two lamps from twilight to midnight in the temple for the money received by them from a native of vallam in Tiruvarur Kurram, a subdivision of Geyamānikka- valanādu.

முதலாம் இராஜராஜனின் 16 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, திருமகள் போல' என்ற இராஜராஜனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது இராஜகேசரிச் சதுர்வேதி மங்கலத்துப் பண்டித வத்சலச்சேரியைச் சேர்ந்த ஒருவர் தன் உடன்பிறந்தாளைச் சார்த்தி, ரிஷபவாகன தேவரின் தேவியார் திருமேனிக்குச் சில அணிகலன்களைச் செய்தளித்ததைக் குறிக்கிறது இக்கல்வெட்டு.
On the south wall of Mattapurīswara Temple – Rājarāja- I - 16th regnal year. Begins with the introduction ' ' etc. Records the gift of some gold ornaments to the image of the consort of Rishabhavāhanā Perumal in the temple by a resident of Panditavatsalacheri of the village on behalf of his sister.
---OM SHIVAYA NAMA---

No comments:

Post a Comment