13th
October 2019.
After visiting the Jain's Sri 1008 Chandraprabha Tirthankara Jinalaya, I visited this Shiva temple on 13th October 2019. This was my second visit to this temple; I first visited Sri Nageswarar Temple on 12th November 2016, and I recorded the details. In this post, the inscription details
are added. During my previous visit, the temple was under renovation and preparing for the Kumbhabhishekam. During this second visit, the compound wall was under construction after Kumbhabhishekam, and it was said that the old mandapam on the southeast corner would be retained and only the roof would be replaced.
Consort : Sri Govarthanambigai
Some of the important features of this temple are...
Some of the important features of this temple are...
The
temple faces west, with a newly built 5-tier Rajagopuram. A Deepasthambham is
in front. Nagars and Vinayagar are under a Bodhi (Arasamaram) tree. Dwarapalakas
are at the entrance of the ardha mandapam; deer and Mazhu on the left side, dwarapalaka and soolam, and damaru on the right side dwarapalaka. In the koshtam: Ganapathy,
Dakshinamurthy, Durgai, Lingothbavar, and Brahma.
In the praharam /maha mandapam, Sri Valli Devasena sametha Sri Subramaniar, Bhairavar, a
big-sized Nagar, and 5 Shiva Lingas of Pancha Bootha Sthalangal and Chandikeswarar.
Utsavars and Sabha are in the front mandapam.
The
temple is under renovation, and the Saptamatrikas have been removed and kept
separately.
Ambal
is in a separate temple and faces west. This was built during the 12th century.
ARCHITECTURE
The temple was built with stone from adhistanam to prastaram. The temple consists of sanctum sanctorum, antarala, ardha mandapam, and mukha mandapam. The sanctum sanctorum is on a pada bandha adhistanam with jagathy, three patta kumudam, and pattikai. The bhitti starts with vedikai. The pilasters have square bases: Vishnu kantha pilasters with kalasam, kudam, lotus petals mandi, palakai, veera kandam, and vettu pothyal. The prastaram consists of valapi, kapotam with nasi kudus, and vyyalavari. The vimanam above the bhumi desam was constructed with bricks. The vimanam has 2 tiers, greevam and nagara sigaram. Stucco images of Shiva, Dakshinamurthy, Maha Vishnu, and Brahma are in the tala and greeva koshtams.
Ambal is in a separate temple and faces west. This was built during the 12th century. The construction is very similar to the Shiva temple.
HISTORY AND
INSCRIPTION
This
temple was believed to have been constructed during the 7th to 8th Century by the Cheras.
A total of 37 inscriptions are recorded from this temple. The
inscriptions belongs to Veera Rajendran (1212 CE, 1237 CE, 1248 CE, 1249 CE), Veerapandian (1268 CE), Sundarapandian (1301 CE), Tribhuvana Veera Thevan Veera Chozhan-III (1172 CE), Vikrama
Chozhan-II (1259 CE), Vikrama Chozha-III (1286 CE), Ko Abimana Rajathi Rajan (1100 CE), Rajathi Rajan (12th Century), Veera Narayanan, Kulothunga Chozha (12th
Century), Kulothunga Chozha-I (12th Century), Hoysala King Veeravallalan-III
(14th century) and British Queen (1883 CE, 19th Century – the inscription stone
was broken during 2018-19 renovations).
கொங்குச்
சோழ அரசன் வீரராசேந்திரனின் 4+1 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1212 ஆண்டு, நாகீசுவரர் கோயில் கருவறை வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு குறுப்பு நாட்டு உகாப்பாடி ஊரவர் இராசராசபுரம் சிவப்பிராமணர் ஆலங்காட்டுப்
பாண்டி உடையானான சைவ சிகாமணி பரதாயனுக்கும், விசயமங்கலம்
ஆத்திரேய கோத்திரம் ஆளவந்திக்கும் கோயில் காணியளித்து அவர்கள் பெறும் உரிமைகளையும்
எழுதித் தந்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குச் சோழ அரசன் வீரராசேந்திரனின்
42 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1249, நாகீசுவரர் கோயில் கருவறை வடக்குச்
சுவரில் உள்ள கல்வெட்டு விசயமங்கலம் வேளாளரில் சாத்துவாய்
குல உடையான் என்பவர் சந்தியா தீபம் வைக்க ஸ்ரீயக்கி அச்சு ஒன்று கொடுத்ததைப்
பதிவு செய்கின்றது.
கொங்குச் சோழ அரசன் வீரராசேந்திரனின் 41 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1248, நாகீசுவரர் கோயில்
கருவறை வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு பிடாரியூர்
திருமுகமலர்ந்தநாதர் கோயில் சிவபிராமணன் மார்க்கண்டேய கோத்திர சைவபுரந்தரச்
சக்கரவர்த்தி நாகீசுவரர் கோயிலில் சந்தியா தீபம் வைக்கப் பழஞ்சலாகை அச்சு ஒன்று
கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குச் சோழ அரசன் வீரராசேந்திரனின்
29+1 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1237, நாகீசுவரர் கோயில் கருவறை
கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு விசயமங்கலம் படைத்தலை
வேளாளர்களில் திருவானைக்கா சொக்கன் என்பவர் சந்தியா தீப விளக்கு வைத்தார்.
கொங்குச் சோழ அரசர் வீரராசேந்திரனின் 41 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1248, நாகீசுவரர் கோயில்
கருவறை கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு விசயமங்கலம்
வேட்கோவர் கோச்சன் மகளும் பெரியான் மனைவியுமான நங்கி என்பவள் சந்தியா தீப விளக்கு
வைக்க பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குச் சோழ அரசர் வீரராசேந்திரனின் 13 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1220, நாகீசுவரர் கோயில்
கருவறை கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, விசயமங்கலம்
ஊர்ச்சபையார் சிவப்பிராமணன் குநிச்சன் உடையானான நாற்பத்தெண்ணாயிரச் சக்கரவத்திக்கு
கோயில் உரிமையில் சரிபாதி அளித்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குச்சோழ அரசன் வீரராசேந்திரனின் 29+9 ஆம் ஆட்சியாண்டு பொஆ 1245, நாகீசுவரர்
கோயில் கருவறை தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, விசயமங்கலம்
வேளாளரில் கொள்ளிகுல சொக்கன் தேவன் சந்தியா தீப விளக்கு வைக்க ஸ்ரீயக்கி பழஞ்சலாகை
அச்சு ஒன்று கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குச்சோழ அரசன் வீரராசேந்திரனின்
15+5 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1227, நாகீசுவரர் கோயில் கருவறை தெற்குச்
சுவரில் உள்ள கல்வெட்டு, பூவாணிய நாட்டு ஆவணிப் பேரூர்
வேளாளரில் புள்ளர் குல நடுவிலான் என்பவர் மனைவி சிறுபெண் அவள் மகன் பிள்ளனின்
நன்மைக்காக பெரிய நாச்சியார்க்குத் திருஆரம் காக்கல் ஊராணியோடு ஒக்கும் பொன்னும்
சந்தியா தீபத்துக்கு பழந்திருவாகை ஒன்றும் கொடை அளித்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குப் பாண்டிய அரசன் வீரபாண்டியனின்
3 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1268, நாகீசுவரர் கோயில் முன்மண்டப வடக்குச்
சுவரில் உள்ள கல்வெட்டு, நித்தசோழ வளநாட்டுக் கிழாலூர்க்
கூற்றம் மாத்தூர் வியாபாரி மலரியூருடையான் அறிவுடையான் தில்லைநாயகன் சந்தியா தீபம்
வைக்க ஸ்ரீயக்கி பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குப் பாண்டிய அரசர் சுந்தரபாண்டியனின்
16 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1301, நாகீசுவரர் கோயில் முன்மண்டப
வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, விசயமங்கலம் படைத்தலை
வேளாளரில் நம்பி விளக்கு வைக்க நூற்று இருபது பணம் மூலப் பொருளாக வைத்த தைப்
பதிவு செய்கின்றது.
கொங்குச் சோழ அரசன் வீரராசேந்திரனின்
42 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1249, நாகீசுவரர் கோயில் கருவறை வடக்குச்
சுவரில் உள்ள கல்வெட்டு விசயமங்கலம் வேளாளரில் சாத்துவாய்
குல உடையான் என்பவர் சந்தியா தீபம் வைக்க ஸ்ரீயக்கி அச்சு ஒன்று கொடுத்ததைப்
பதிவு செய்கின்றது.
கொங்குச் சோழ அரசன் வீரராசேந்திரனின் 41 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1248, நாகீசுவரர் கோயில்
கருவறை வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு பிடாரியூர்
திருமுகமலர்ந்தநாதர் கோயில் சிவபிராமணன் மார்க்கண்டேய கோத்திர சைவபுரந்தரச்
சக்கரவர்த்தி நாகீசுவரர் கோயிலில் சந்தியா தீபம் வைக்கப் பழஞ்சலாகை அச்சு ஒன்று
கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குச் சோழ அரசன் வீரராசேந்திரனின்
29+1 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1237, நாகீசுவரர் கோயில் கருவறை
கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு விசயமங்கலம் படைத்தலை
வேளாளர்களில் திருவானைக்கா சொக்கன் என்பவர் சந்தியா தீப விளக்கு வைத்தார்.
கொங்குச் சோழ அரசர் வீரராசேந்திரனின் 41 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1248, நாகீசுவரர் கோயில்
கருவறை கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு விசயமங்கலம்
வேட்கோவர் கோச்சன் மகளும் பெரியான் மனைவியுமான நங்கி என்பவள் சந்தியா தீப விளக்கு
வைக்க பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குச் சோழ அரசர் வீரராசேந்திரனின் 13 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1220, நாகீசுவரர் கோயில்
கருவறை கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, விசயமங்கலம்
ஊர்ச்சபையார் சிவப்பிராமணன் குநிச்சன் உடையானான நாற்பத்தெண்ணாயிரச் சக்கரவத்திக்கு
கோயில் உரிமையில் சரிபாதி அளித்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குச்சோழ அரசன் வீரராசேந்திரனின் 29+9 ஆம் ஆட்சியாண்டு பொஆ 1245, நாகீசுவரர்
கோயில் கருவறை தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, விசயமங்கலம்
வேளாளரில் கொள்ளிகுல சொக்கன் தேவன் சந்தியா தீப விளக்கு வைக்க ஸ்ரீயக்கி பழஞ்சலாகை
அச்சு ஒன்று கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குச்சோழ அரசன் வீரராசேந்திரனின்
15+5 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1227, நாகீசுவரர் கோயில் கருவறை தெற்குச்
சுவரில் உள்ள கல்வெட்டு, பூவாணிய நாட்டு ஆவணிப் பேரூர்
வேளாளரில் புள்ளர் குல நடுவிலான் என்பவர் மனைவி சிறுபெண் அவள் மகன் பிள்ளனின்
நன்மைக்காக பெரிய நாச்சியார்க்குத் திருஆரம் காக்கல் ஊராணியோடு ஒக்கும் பொன்னும்
சந்தியா தீபத்துக்கு பழந்திருவாகை ஒன்றும் கொடை அளித்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குப் பாண்டிய அரசன் வீரபாண்டியனின்
3 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1268, நாகீசுவரர் கோயில் முன்மண்டப வடக்குச்
சுவரில் உள்ள கல்வெட்டு, நித்தசோழ வளநாட்டுக் கிழாலூர்க்
கூற்றம் மாத்தூர் வியாபாரி மலரியூருடையான் அறிவுடையான் தில்லைநாயகன் சந்தியா தீபம்
வைக்க ஸ்ரீயக்கி பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குப் பாண்டிய அரசர் சுந்தரபாண்டியனின்
16 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1301, நாகீசுவரர் கோயில் முன்மண்டப
வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, விசயமங்கலம் படைத்தலை
வேளாளரில் நம்பி விளக்கு வைக்க நூற்று இருபது பணம் மூலப் பொருளாக வைத்த தைப்
பதிவு செய்கின்றது.
Reference
ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி – 3.
10 கல்வெட்டுக்களின் விபரங்கள் மட்டுமே இப்பகுதியில் கொடுக்கப்பட்டு
உள்ளது. மீதமுள்ள கல்வெட்டுக்கள், இக்கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டு உள்ளது.
The
temple was renovated during British rule in 1883 CE, and some of the inscription stones are now broken and missing.
TEMPLE TIMINGS
The
temple will be kept open from 06.00 hrs to 12 hrs, and from 17.00 hrs to 20.00
hrs.
CONTACT
DETAILS :
Sri
Shunmuga Subramania Gurukkal and Mani Gurukkal +919488152412.
HOW TO
REACH :
Vijayamangalam
is on the way from Erode, Perundurai, to Coimbatore.
Town bus service is available from Perundurai.
The nearest
Railway Station is Erode.
LOCATION OF
THE TEMPLE: CLICK HERE
Snakes worshiping Lord Shiva
The Saptamatrikas
The Saptamatrikas
கல்வெட்டுக்களின்
தொடர்ச்சி….
கொங்குப் பாண்டிய அரசன் வீரபாண்டியனின்
5 ஆம் ஆட்சியாண்டு பொஆ 1270, நாகீசுவரர் கோயில் முன்மண்டப வடக்குச்
சுவரில் உள்ள கல்வெட்டு, விசயமங்கலம் படைத்தலை வேளாளர்களில்
நேரிய மூவேந்தவேளான் அவினாசி என்பவர் சந்தியா தீபம் ஒன்றுக்கு ஸ்ரீயக்கி பழஞ்சலாகை
அச்சு ஒன்று கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குப் பாண்டிய வீரபாண்டியனின் 3 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1268, நாகீசுவரர் கோயில் முன்மண்டப வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு விசயமங்கலம் படைத்தலை வேளாளர் நம்பி என்பவரின் மனைவி பிள்ளை பாவை பிள்ளையம்மை சந்தியா தீபம் ஒன்றுக்கு ஸ்ரீயக்கி பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குச் சோழ அரசன் திரிபுவன வீரதேவன் மூன்றாம் வீரசோழனின் 4 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1172, நாகீசுவரர் கோயில் முன்மண்டப வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, நாகீசுவரமுடையார்க்கு நித்தியப்படி கறியமுதுக்காக விசயமங்கலம் படைத்தலை வேளாளரில் தேவன் கூத்தப்பெருமாளும் தேவன் பராக்கிரமன் ஓர் அச்சு 4 பணமும், படைத்தலை வேளாளரில் நல்லிசையாளன் மகள் அஞ்சாதான் மனைவியுமான நம்பியம்மை ஓர் அச்சு 4 பணமும் காங்கயம் வியாபாரி திருநாகீசுவரமுடையான் ஓர் அச்சு 4 பணம் ஆக 44 அச்சு அளித்த தைப் பதிவு செய்கின்றது.
கொங்குப்பாண்டிய அரசன் வீரபாண்டியனின் 15ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1280, நாகீசுவரமுடையார் கோயில் முன்மண்டப வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, வீரபாண்டியன் அதிகாரிகள் மூலம் விசயமங்கலம் வணிகர்கட்கும் ஊரார்கட்கும் அளித்த ஓலை, விசயமங்கலம் வாகைப்புத்தூரில் வடக்கு வாசி வாகைக்குளம் நெடுநாளாக பாழ்பட்டுக் கிடந்தது. இதனை மீண்டும் வெட்டி நாகீசுவரமுடையார் திருக்காமக்கோட்ட தேவதானமாக அளிக்க ஆணையிடப்பட்தைப் பதிவு செய்கின்றது.
கொங்குச் சோழ அரசன் இரண்டாம் விக்கிரமசோழனின் 3+1 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1259, நாகீசுவரமுடையார் கோயில் முன்மண்டப கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு விசயமங்கலம் பெருமாள் மாலையுடையார் என்பவர் சந்தியா தீபம் ஒன்றுக்கு ஸ்ரீயக்கி பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
As per the inscription of Vikrama Chozha-II (1255-1265 CE), the temple was renovated, and the inscriptions were copied and inscribed again. The inscriptions mainly speak about the donation of land, money, Sriyaki Pazhanjalakai achu, gold, towards regular Poojas, Naivedyam, excavation of eri /tank, Construction of Ambal temple, and burning of the Perpetual lamp & Sandhya Deepam. The inscription also mentions that Vijayamangalam is under Kuruppa Nadu.
கொங்குச் சோழ அரசன் மூன்றாம் விக்கிரமசோழனின் 13 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1286, நாகீசுவரமுடையார் கோயில் முன்மண்டப கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு காங்கய நாட்டுப் பட்டாலி வியாபாரி பெரியான் ஆண்டையான் சந்தியா தீபம் ஒன்றுக்கு ஓர் அச்சுக் கொடையாகக் கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குச் சோழ அரசன் திரிபுவனவீரதேவன் மூன்றாம் வீரசோழனின் 4 ஆம் ஆட்சியாண்டு பொஆ 1172, நாகீசுவரமுடையார் கோயில் முன்மண்டப கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, விசயமங்கலத்துப் பெருமாள் படைகளில் கெசத்தபடையினர் சந்தியா தீபம் இரண்டுக்கு இரண்டு அச்சுக் கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குச் சோழ அரசன் கோ அபிமான இராசதிராசனின் பொ ஆ 1100, நாகீசுவரமுடையார் கோயில் முன்மண்டப தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு கோயிலில் நந்தா விளக்கு வைத்த விபரம் தெரிகிறது. கல்வெட்டின் பிற்பகுதி அழிந்துவிட்டதைப் பதிவு செய்கின்றது.
கொங்குச்சோழ அரசன் இராசதிராசனின் 12 ஆம் நூற்றாண்டு, நாகீசுவரமுடையார் கோயில் முன்மண்டப தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, திருநாகீசுவரமுடையாற்கு கறிஅமுது படிக்காக மன்னன் இராசாதிராசன் நிலம் கொடையளித்துள்ள தைப் பதிவு செய்கின்றது.
கொங்குப்பாண்டிய அரசன் வீரபாண்டியனின் 19 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1284, நாகீசுவரமுடையார் கோயில் முன்மண்டப தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு தேவரடியாள் சடைமேலிருந்தாள் என்பவள் விளக்கு எரிக்க ஸ்ரீயக்கி பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குச் சோழ அரசன் ராஜாயிராஜ வீரநாராயணனின் 12 ஆம் நூற்றாண்டு நாகீசுவரமுடையார் கோயில் முன்மண்டப தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு கோயிலில் உச்சிச் சந்தி திருஅமுதுக்காக பரகேசரியாலும், வீரநாரயணனாலும் அளந்து 37 கலம் தூணிப்பதக்குக் கொடுக்கப்பட்டது. அதில் 18 கலம் இருதூணி (பாதி) வீரசோழ வளநாட்டு உத்தமசோழச் சதுர்வேதிமங்கலத்து இறையிலே கொடுக்கப்பட்ட தைப் பதிவு செய்கின்றது. "பரகேசரி" "வீரநாராயணன்" கொங்குச் சோழர்கால முகத்தலளவைகளின் பெயர்கள்.
கொங்குச் சோழ அரசன் குலோத்துங்கனின் 8 ஆம் ஆட்சியாண்டு பொஆ 12 நூற்றாண்டு, நாகீசுவரமுடையார் கோயில் முன்மண்டபம் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, விசயமங்கலம் வேளாளர்களில் சாத்துவாய் குலக் காங்கயதரையன் மனைவி ஆண்டியான மங்கையர்க்கரசி பெரிய நாச்சியாரை அதாவது இக்கோயில் அம்மனை எழுந்தருளுவித்து, திருக்கலியாண உற்சவம் எடுத்து நாள்தோறும் அமுதுபடி இருநாழி அரிசிக்கும், அடைக்காயமுது ஆறுக்கும், இலையமுது பதினைந்துக்கும் ஆண்டுக்கு இரு பரிவட்டத்துக்கும் விசயமங்கலம் ஊரார் வசம் 19 அச்சு மூலப்பொருளாக வைத்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குச் சோழ அரசன் இரண்டாம் விக்கிரமசோழனின், பொஆ 1263, நாகீசுவரமுடையார் கோயில் முன்மண்டபம் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு பரகேசரி விக்கிரமசோழனின் (1255-65) ஏழாம் ஆட்சியாண்டில் நாகேசுவரமுடையார் கோயில் முதற்பிரகாரமண்டபம் (முதல் திருச்சுற்று மண்டபம்) இறக்கித் திருப்பணி செய்யப்பட்டது. மண்டபத் திருப்பணி முடிந்ததும் அங்கிருந்து கல்வெட்டுகள் படி எடுக்கப்பெற்று மீண்டும் மண்டபத்தில் வெட்டப்பட்டன. ஏழு கல்வெட்டுகள் மீண்டும் வெட்டப்பட்டுள்ளன. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. இன்னும் சில, பழைய திருப்பணியின்போது கல்வெட்டுகள் அழிந்திருக்கக்கூடும்.
கொங்குச் சோழ அரசர் முதலாம் குலோத்துங்க சோழனின் 13 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1162, நாகீசுவரமுடையார் கோயில் முன்மண்டபம் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு பெருமாள் சாமந்தரில் குலோத்துங்க சோழ விக்கிரமாதித்த தேவன் திருப்புதியதுக்குப் பழஞ்சலாகை அச்சு இரண்டும் சந்தியா தீபத்துக்குப் புதுச்சலாகை அச்சு ஒன்றும் கொடையாகக் கொடுத்த தைப் பதிவு செய்கின்றது. "பெருமாள்" என்பது அரசரைக் குறிக்கும் சொல்.
கொங்குச் சோழ அரசர் வீரராசேந்திரனின் 2+1 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1210, திருநாகீசுவரமுடையார் கோயில் முன்மண்டபம் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, கூடூர் வேளாளர் பனங்காடைகுல கோவன் மனிச்சரில் உண்ணாடி சந்தியா தீப விளக்கு எரிக்க ஸ்ரீயக்கி பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
மன்னர் பெயர் அறிய முடியாத சிதைந்த திருநாகீசுவரமுடையார் கோயில் முன்மண்டபம் தெற்குச் சுவரில் உள்ள 8ஆம் ஆட்சியாண்டு, 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு விசயமங்கலத்து வேளாளர் ஒருவருடைய மனைவி பொதுவன்பாவை என்பவர் ஒரு சந்தியா தீபத்துக்காக ஸ்ரீயக்கி பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடுத்த தைப் பதிவு செய்கின்றது. இறுதிப்பகுதி சிதைந்துள்ளது.
கொங்குச் சோழ அரசர் திரிபுவனவீரதேவன் (வீரசோழன் III) பொ ஆ 12 ஆம் நூற்றாண்டு திருநாகீசுவரமுடையார் கோயில் முன்மண்டபம் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு வடகொங்கு நாட்டில் பல நாடுகளைச் சேர்ந்த சிவபிராமணக் காணியாளர்கட்கும் தானத்தார்களுக்கும், திருப்பாண்டிக் கொடுமுடி போன்ற ஊர்களின் தானத்தார்களுக்கும் அரசன் நேரடியாக அளித்த ஓலை விபரங்களைப் பதிவு செய்கின்றது.
கொங்குச் சோழ அரசன் மூன்றாம் விக்கிரமசோழனின் 11 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1284, திருநாகீசுவரமுடையார் கோயில் முன்மண்டபம் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, இளம்மழையில் வேளாளரில் காடை குல அவினாசி என்பவரின் மனைவி தேவன் சொக்கி என்பவர் சந்தியாதீப விளக்கு வைக்க ஓர் அச்சுக் கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குச் சோழ அரசன் வீரராசேந்திரனின், 14 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1221, திருநாகீசுவரமுடையார் கோயில் முன்மண்டபம் மேற்குச் சுவர் வாயில் இடதுபுறம் உள்ள கல்வெட்டு விசயமங்கலம் வேளாளரில் சாத்துப்படி குலஉடையான் தேவனான சிவ கல்யாண நம்பி என்பவர் சிவராத்திரி நான்கு கால வழிபாட்டுக்கும் எல்லாப் பொருள்களுக்கும் கொடுத்தது மூன்று கழஞ்சு, நான்கு சந்தி அமுதுபடிக்குத் தூணிப் பதக்கும், 90 விளக்குகளும் கொடையாகக் கொடுத்த தைப் பதிவு செய்கின்றது.
கொங்குச் சோழ அரசனின் 14 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1221, திருநாகீசுவரமுடையார் கோயில் அம்மன் சன்னதி வடபுறச் சுவரில் உள்ள கல்வெட்டு, மாதேவர் கோயில், திருமுற்றம் பிள்ளையார் கோயில், பிடாரியார் கோயில், மற்றுமுள்ள கோயில்களிலும் காணியுடைய குறுப்பு நாட்டுச் சிவபிராமணர்கள் இனிமேல் வடபரிசார நாட்டில் உள்ள முறைப்படியே உவச்சர்களுக்கு நான்கில் ஒரு பாகம் கொடுத்து மீதி மூன்று பாகத்தை மட்டும் சிவபிராமணர் கொள்ளவேண்டும் என சண்டிகேசுவரர் பெயரில் ஓலை வழங்கப்பட்தைப் பதிவு செய்கின்றது.
தொடக்கத்தில் சண்டிகேசுவரர் ஓலையைக் குறிக்கும் வெண்பா இடம்பெற்றுள்ளது.
கொங்குப் பாண்டிய அரசன் வீரபாண்டியனின் 9 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1274, திருநாகீசுவரமுடையார் கோயில் அம்மன் சன்னதி வடபுறச் சுவரில் உள்ள கல்வெட்டு, விசயமங்கலத்து படைத்தலை வேளாளர்களில் தேவன்கூத்தப் பெருமாள் என்பவர் திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியார்க்குச் சந்தியா தீபம் ஒன்று எரிக்க ஸ்ரீயக்கி பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடை கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குப் பாண்டிய அரசன் வீரபாண்டியனின், 12 ஆம் ஆட்சியாண்டு பொஆ 1277 திருநாகீசுவரமுடையார் கோயில் அம்மன் சன்னதி வடபுறச் சுவரில் உள்ள கல்வெட்டு, விசயமங்கலத்துத் தேவரடியாரில் மாணிக்கதேவர் அகமுடையார் பொன்னாச்சி என்பவர் திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியார் திருக்கோயிலில் சந்தியா தீபம் வைக்க ஸ்ரீயக்கி பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
பொஆ 14 ஆம் நூற்றாண்டு மூன்றாம் வீரவல்லாள தேவரின் திருநாகீசுவரமுடையார் கோயில் அம்மன் சன்னதி தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, திருநாகீசுவரமுடையார்க்கு திருநாள்படி, பலபடி நிபந்தம், திருப்பணி ஆகியவற்றிக்காகக் குறப்பு நாட்டு ஆமூரான ராகுத்தராய நல்லூர் வருவாய் அனைத்தையும் குறுப்பு நாட்டவர் கொடையாக அளித்த தைப் பதிவு செய்கின்றது.
கொங்குப் பாண்டிய அரசன் சுந்தரபாண்டியனின், 27 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1312, திருநாகீசுவரமுடையார் கோயில் அம்மன் சன்னதி வடபுறச் சுவரில் உள்ள கல்வெட்டு, விசயமங்கலத்து வெண்மணி வேளாளர்களில் துணையன் ஆண்டாந் என்பவன் திருநாகிஜரமுடைய திருக்காமக்கோட்ட ஆளுடைய நாச்சியாற்கு ஒரு நந்தா விளக்கெரிக்க 140 பணத்தினை இக்கோயிலில் உள்ள மூன்று சிவபிராமணர்களிடம் வழங்கியுள்ளதைப் பதிவு செய்கின்றது.
பொஆ 13 ஆம் நூற்றாண்டு, திருநாகீசுவரமுடையார் கோயில் அம்மன் சன்னதி முன்மண்டப வடபுறச் சுவரில் உள்ள கல்வெட்டு விசயமங்கலத்து ஊரும் ஊராளிகளும் பண்டாரத்தில் அளப்பனவற்றை என்றென்றும் நிறைந்த அளவாக அளக்கவேண்டும் என்று இறைவன் பெயரில் கல்வெட்டினர்.
கொங்குப் பாண்டிய அரசன் சுந்தரபாண்டியனின் 27 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1312, திருநாகீசுவரமுடையார் கோயில் அம்மன் சன்னதி முன்மண்டப வடபுறச் சுவரில் உள்ள கல்வெட்டு விசயமங்கலத்து ஊரார் திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியார் பண்டாரத்தில் நெல் விற்றுப் பெற்ற பணம் நூற்று நாற்பதை நந்தா விளக்கு எரிய மூலப் பொருளாக வைத்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குச் சோழ அரசர் இராசாதிராசனின் 14+1 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1100, திருநாகீசுவரமுடையார் கோயில் முதல் பிராகார மேற்குப்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு, கொங்குச் சோழ மன்னன் இராசாதிராசன் விசயமங்கலம் சிவாலயத்தில் கூத்தாடும் தேவர்க்கும் நாச்சியார்க்கும் அமுதுபடிக்காக் குளம் ஒன்றை இறையிலியாக அளித்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குச் சோழ அரசன் இராசாதிராச வீரசோழதேவரின் 5 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1122, திருநாகீசுவரமுடையார் கோயில் மேற்குப் பிரகாரக் குத்துக் கல்லில் உள்ள கல்வெட்டு, பரஞ்சேர் வழி வேளாளரில் வெள்ளை குலச்சிலம்பன் நீலன் என்பாரின் மனைவி சிட்டன் காவி கொடுத்த நிலக் கொடையை பதிவு செய்கின்றது.
பொஆ 1883 ஆம் ஆண்டு, விக்டோரியா
மகாராணியாரின் நாகீசுவரர் கோயில் தென்புற மண்டப விதானத்தில்
உள்ள தமிழ் கல்வெட்டு விசயமங்கலம் நாகீசுவரர் கோயிலில் சிலருடைய
உதவி பெற்று ஏழுகாப்பந்தி மண்டபம், தீர்த்தக் கிணறு, தென்புற மண்டபம், மகாமண்டபம், தட்டோடு
இவற்றை கம்புளியம்பட்டி நாகப்ப கவண்டர் முன்னின்று பழுது பார்த்துத் திருப்பணி
செய்த விபரங்களைப் பதிவு செய்கின்றது.
பொ ஆ 1869 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியாரின் நாகீசுவரர் கோயில் வடபுற மண்டப விதானத்தில் உள்ள தமிழ் கல்வெட்டு விசயமங்கலம் நாகீசுவரர் கோயிலில் கொறட்டுவாசல் மண்டபம், கருட கம்பத்துக் கொறடு ஆகியவை கட்டப்பட்ட விபரங்களைப் பதிவு செய்கின்றது.
Reference
ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி – 3.
---OM
SHIVAYA NAMA---

No comments:
Post a Comment