14th
October 2019.
The
second visit to this Kundrapureeswarar Shiva temple was on 14th
October 2019. During my first visit, this Kundrapureeswarar Temple was under
renovation and being prepared for the Kumbhabhishekam. As per the inscription, this
place was called Kuruppa Nattu Kundrathoor (குன்றத்தூர்) during the 13th Century
and later corrupted to the present name of
Kunnathur. Kuruppa Nadu was one of the subdivisions of the 24 Nadus of Kongu
mandalam during the Kongu Chozha period.
Moolavar: Sri Kundrapureeswarar.
Some
of the important features of this temple are...
The
temple faces west. The Deepasthambham/ Vilakku Thoon or Garudathoon is in
front of the temple. There is an entrance arch on the west side.
Balipeedam, Dwajasthambam, and Nandhi are in front of the sanctum sanctorum. The
sanctum is on an elevated level. In the koshtam are Durgai, Brahma, Lingothbavar, Dakshinamurthy, and Vinayagar. In
praharam: Chandikeswarar, Vinayagar, Navagrahas, Chandran, and Suriyan.
ARCHITECTURE
The
temple consists of the sanctum sanctorum, antarala, and artha mandapam. Amman is in a
separate Sannadhi facing west. As per the inscriptions, the temple might have
been built before the 12th century. But this was completely changed, and
the temple looks like a recent-period temple. There is no trace of the old
structure now, and inscriptions are also not available.
HISTORY AND
INSCRIPTION
As
per the Tamil Nadu Archaeological Department’s report, the temple had 15 inscriptions
of Hoysala King Veera Vallalan-III (14th Century), Vikrama
Chozha-III (1275 CE), Veera Pandiyan (13th Century), Sundara Pandyan
(1291 CE), and Mysore Wodeyar king Nanjara Raya Wodeyar (18th Century). As per the inscriptions, this place was called Kun(d)rathur, and Lord Shiva
was called Kundramudayar.
பொஆ 14 ஆம் நூற்றாண்டு போசள அரசன்
மூன்றாம் வீரவல்லாளனின், குன்னபுரீஸ்வரர் கோயில் கருவறை வடபுறச்சுவரில் உள்ள கல்வெட்டு குன்னத்தூர் வேளாளரில் சாத்துவாயர் குலகோன் கூத்தப்பெருமாள் குன்றமுடையார்
கோயிலில் சந்தியா தீபம் வைத்த்தைப் பதிவு செய்கின்றது.
பொஆ 14 ஆம் நூற்றாண்டு போசள அரசன் வீரவல்லாளனின்,
குன்னபுரீஸ்வரர் கோயில் கருவறை கிழக்குச் சுவரில் உள்ள
கல்வெட்டு குன்னத்தூர் ஊரும் ஊராளிகளும் குன்றமுடையார் கோயிலில்
நந்தாவிளக்கு வைக்க கோயில் சிவப்பிராமணர் வசம் பன்னிரண்டு அச்சுக் கொடையாக அளித்ததைப்
பதிவு செய்கின்றது.
கொங்குச் சோழ அரசன் மூன்றாம் விக்கிரமசோழனின்
2 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1275 ஆம் ஆண்டு, குன்னபுரீஸ்வரர் கோயில்
அர்த்தமண்டப வாயில் வடபுற நிலையில் உள்ள கல்வெட்டு, குன்றத்தூர்
தேவனான தென்னவன் என்பவர் குன்றமுடையார் கோயில் திருப்பணியின்போது அர்த்தமண்டப வாயில்
நிலையைத் தன் கொடையாக அளித்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குச் சோழர் மூன்றாம் விக்கிரமசோழனின், 2 ஆம் ஆட்சியாண்டு பொஆ 1275 ஆம் ஆண்டு, குன்னபுரீஸ்வரர்
கோயில் அர்த்தமண்டப வாயில் வடபுற நிலையில் உள்ள கொங்குச்
சோழன் விக்கிரமசோழன் பெயர் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் ஆண்டு
குறிக்கப்பட்டுள்ளது. குன்றமுடையார் கோயில் திருப்பணி நடைபெற்றுவரும் காலம்.
பொஆ 13 ஆம் நூற்றாண்டு கொங்குப் பாண்டிய அரசன் வீரபாண்டியனின் குன்னபுரீஸ்வரர் கோயில் அர்த்தமண்டபத் தென் சுவரில் உள்ள (தக்ஷிணாமூர்த்தி) கல்வெட்டு, இராசகேசரி
வீரபாண்டியன் பெயர் மட்டும் குறிக்கப்பட்டுள்ளது.
References
1. ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி – 2
2. Annual Report on South Indian Epigraphy, Year – 1967 - 68
இப்பகுதியில் 5 கல்வெட்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கல்வெட்டுக்கள் இப்பதிவின் கடைசியில்…
The
inscriptions also speak about the donation of money in terms of Achu for burning
Sandhya Deepam and Perpetual lamps. If
anybody looks for these inscriptions will be disappointed, since all the inscriptions
were lost during recent renovations. Hope the moolavar and Nandhi are original.
TEMPLE TIMINGS
The
temple will be open between 06.30 hrs and 12.00 hrs, and 17.00 hrs to
20.00 hrs
HOW TO
REACH :
This
temple is on the Kunnathur to Nambiyur
road.
Kunnathur
is at the junction of Tiruppur to Gobichettipalayam and Erode/ Perundurai to
Tiruppur via Perumanallur.
Kunnathur is 40 km from Erode, 21 km from
Gobichettipalayam, and 28 km from Tiruppur
The nearest Railway Station is Tiruppur.
LOCATION OF
THE TEMPLE: CLICK HERE
கல்வெட்டுக்களின் தொடர்ச்சி….
பொஆ 14 ஆம் நூற்றாண்டு போசள அரசர் மூன்றாம்
வீரவல்லாளனின் குன்னபுரீஸ்வரர் கோயில்
அர்த்தமண்டபம் தென் சுவரில் உள்ள கல்வெட்டு போசள மன்னன்
மூன்றாம் வீரவல்லாளன் காலத்தில் குன்னத்தூர் வேளாளரில் சாத்துவாயர் குலத்து
அடியவர் கொடுத்த கொடையைப் பதிவு செய்கின்றது.
பொஆ 14 ஆம் நூற்றாண்டு, போசாள அரசர் மூன்றாம் வீரவல்லாளனின், குன்னபுரீஸ்வரர்
கோயில் அர்த்தமண்டபம் வடச்சுவரில் உள்ள கல்வெட்டு குன்னத்தூர்
வேளாளரில் கொள்ளி குல பிறையணி சடையன் ஒற்றியன் குன்றமுடையார் கோயிலில் சந்தியா
தீபம் வைக்க ஓர் அச்சுக் கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குப் பாண்டிய அரசன் வீரபாண்டியனின், 17 ஆம் ஆட்சியாண்டு பொஆ 1282 ஆம்
ஆண்டு, குன்னபுரீஸ்வரர் கோயில் அர்த்தமண்டபம் வடச்சுவரில்
உள்ள கல்வெட்டு குறுப்பு நாட்டுச் சிறுவலூர் வேளாளர் சாத்தந்தை
குலக் கேசன் என்பவர் மனைவி அந்தியூராண்டி குன்றமுடையார் கோயில் இரண்டு
திருநிலைகால் மற்றும் படியும் செய்தளித்ததைப் பதிவு செய்கின்றது.
பொஆ 14 ஆம் நூற்றாண்டு போசாள அரசன் மூன்றாம் வீரவல்லாளனின், குன்னபுரீஸ்வரர் கோயில் அர்த்தமண்டபம் வடச்சுவரில்
உள்ள கல்வெட்டு, குன்றத்தூர் அடியவர் ஒருவர் சந்தியா தீபம் வைத்த
செய்தியைப் பதிவு செய்கின்றது.
கொங்குப்பாண்டிய அரசன் சுந்தரபாண்டியனின் 6 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1291 ஆம் ஆண்டு, குன்னபுரீஸ்வரர்
கோயில் மகாமண்டப வாயில்நிலை வலப்பக்கம் உள்ள கல்வெட்டு, காங்கய
நாட்டு வெள்ளக்கல் வியாபாரி புண்ணியதேவன் என்பவர் குன்றமுடையார் கோயிலில் மகாமண்டப
வாயிலின் இருநிலைகளையும், படியையும் திருப்பணியின்போது
கொடையாக அளித்த்தைப் பதிவு செய்கின்றது.
As per the inscriptions, the renovations were carried out in the 13th Century for the same; the maha mandapam, artha mandapam door jambs/frames, and steps were donated by Kangeya Nattu Vellakkal merchant Punniyathevan and Siruvalur Vellalar caste (Sathanthai sub sect) Kesan’s wife Anthiyuraandi.
கொங்குப்பாண்டிய அரசன் வீரபாண்டியனின்
20 ஆம் ஆட்சியாஅண்டு, பொஆ 1285 ஆம் ஆண்டு, குன்னபுரீஸ்வரர் கோயில்
மகாமண்டப கிழக்கு, வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, குன்றத்தூர் வேளாளரில் தேவந்தை குல சொக்கன் இனியபிள்ளை என்பவர்
குன்றமுடையார் கோயிலில் சந்தியா தீபம் வைக்க ஓர் அச்சுக் கொடையாகக் கொடுத்த்தைப்
பதிவு செய்கின்றது.
பொஆ 14 ஆம் நூற்றாண்டு போசாள அரசன் மூன்றாம் வீரவல்லாளனின், குன்னபுரீஸ்வரர் கோயில் அர்த்தமண்டபம் வடச்சுவரில்
உள்ள கல்வெட்டு, குன்றத்தூர் அடியவர் ஒருவர் சந்தியா தீபம் வைத்த
செய்தியைப் பதிவு செய்கின்றது.
கொங்குப்பாண்டிய அரசன் சுந்தரபாண்டியனின் 6 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1291 ஆம் ஆண்டு, குன்னபுரீஸ்வரர்
கோயில் மகாமண்டப வாயில்நிலை வலப்பக்கம் உள்ள கல்வெட்டு, காங்கய
நாட்டு வெள்ளக்கல் வியாபாரி புண்ணியதேவன் என்பவர் குன்றமுடையார் கோயிலில் மகாமண்டப
வாயிலின் இருநிலைகளையும், படியையும் திருப்பணியின்போது
கொடையாக அளித்த்தைப் பதிவு செய்கின்றது.
கொங்குப்பாண்டிய அரசன் வீரபாண்டியனின்
20 ஆம் ஆட்சியாஅண்டு, பொஆ 1285 ஆம் ஆண்டு, குன்னபுரீஸ்வரர் கோயில்
மகாமண்டப கிழக்கு, வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, குன்றத்தூர் வேளாளரில் தேவந்தை குல சொக்கன் இனியபிள்ளை என்பவர்
குன்றமுடையார் கோயிலில் சந்தியா தீபம் வைக்க ஓர் அச்சுக் கொடையாகக் கொடுத்த்தைப்
பதிவு செய்கின்றது.
பொ ஆ 18 ஆம் நூற்றாண்டு, குன்னபுரீஸ்வரர்
கோயில் மகாமண்டப வடக்கு, மேற்குச் சுவரில் உள்ள
கல்வெட்டு, மைசூர் உடையார் நஞ்சராய உடையார் காலத்தில் (1766-1772)
காரியத்துக்குப் பிரதானியாக இருந்தவர் பூவாணிய நாட்டுத் தாரமங்கலம்
கட்டி முதலிகள் மரபில் வந்த முதலியார் நல்லுடையப்ப தம்பா முதலியார் இளைய முதலியார்
என்பவர். மதுரை நாயக்கர்களால் அதிகாரம் இழந்த கட்டி முதலிகள் மரபில் வந்த இவருக்கு
மைசூர் உடையார்களால் குன்றத்தூரில் மீண்டும் அதிகாரம் வழங்கப்பட்டது. அதற்ககாகக்
குன்றமுடையார் கோயிலில் நந்தா விளக்கு வைத்துத் தன் ஊர் செழிக்க அமுதுபடிக்கும்
பொருள் உதவி செய்ததைப் பதிவு செய்கின்றது.
The Mysore Wodeyar’s inscription states that Kettimudali’s descendant, Thamba Mudaliyar, was given power in this area, but was thrown out of power during the Madurai Nayaks period.
கொங்குப்பாண்டியர அரசன் வீரபாண்டியனின் 6
ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1271 ஆம் ஆண்டு, குன்னபுரீஸ்வரர் கோயில்
மகாமண்டபம் மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, குறுப்பு
நாட்டுக் குன்றத்தூரில் இருந்த நகரத்தார்கள் குன்றமுடையார் கோயில்
திருப்பணியின்போது மண்டபத்தில் வேதிகைப்படையையும், அகவாய்,
புறவாய் ஆகியவற்றையும் தங்கள் பங்குக் கொடையாகச் செய்தளித்ததைப்
பதிவு செய்கின்றது.
பொஆ 14 ஆம் நூற்றாண்டு, போசள அரசன் வீரவல்லாளனின், குன்னபுரீஸ்வரர் கோயில் மகாமண்டபம் மேற்கு
தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, குன்னத்தூர் கைக்கோளரில்
வாமதேவன் சைவன் என்பவர் குன்றமுடையார் கோயிலில் சந்தியா தீபம் வைக்க பன்னிரண்டு
பணம் மூலப்பொருளாக வைத்ததைப் பதிவு செய்கின்றது.
பொஆ 13 ஆம் நூற்றாண்டு, குன்னபுரீஸ்வரர் கோயில் மகாமண்டபம் தெற்கு,
கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, குறுப்பு
நாட்டில் உள்ள மாதேவர் கோயில், பிள்ளையார் கோயில், பிடாரி கோயில் முதலிய எல்லாக் கோயில்களிலும் உள்ள பட்டர், தானத்தர், திருமுற்ற நம்பிமார் ஆகியயோருக்கு அரசன்
அளித்த ஓலை. கோயில் வருவாயை ஒன்பது பங்காகப் பிரித்து மூன்று பங்கு உவச்சர்கட்கு
அளித்து மீதி ஆறுபங்கை மற்றவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பது ஓலைச் செய்தியைப்
பதிவு செய்கின்றது.
The 13th-century inscription speaks about sharing the proportion of income from the temples by Bhattar, Thanathar (Donors), and ThirumuRRa Nambiyars.
References
1. ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி – 2
2. Annual Report on South Indian Epigraphy, Year – 1967 - 68
---OM SHIVAYA NAMA---
No comments:
Post a Comment