25th January 2020.
The visit to this Chitharal Jain Monuments at Vellamcode Taluk in Kanyakumari District was a part of Nanjil Nadu Heritage Walk organized by
Yaaooyaakay and Celebrate Kanchi in association with Tamil Nadu Tourism and
Development Department, Kanyakumari, scheduled on 24th to 26th
January 2020.
This Jain monument is under the control of Tamil Nadu Archaeological
Department. Steps are paved neatly to climb up the hill. The hill is about 400
feet high and has many natural caves.
As per the inscription this hill was mentioned as Thiruchcharanathu malai. This hill might have obtained this name due to the Jain monks lived here. In one of the cave facing North – west direction Jain Tirthankaras like, Neminath, Parshvanath with Yakshi, Mahavir with Samaratharis & Devas, Yakshi Padmavathy on her back are a Tree and a Lion, a Lady & Two Children also shown and Tirthankaras are chiseled in the form of bas-reliefs. The names of the persons who donated for creating these bas-reliefs are also inscribed.
As per the inscription this hill was mentioned as Thiruchcharanathu malai. This hill might have obtained this name due to the Jain monks lived here. In one of the cave facing North – west direction Jain Tirthankaras like, Neminath, Parshvanath with Yakshi, Mahavir with Samaratharis & Devas, Yakshi Padmavathy on her back are a Tree and a Lion, a Lady & Two Children also shown and Tirthankaras are chiseled in the form of bas-reliefs. The names of the persons who donated for creating these bas-reliefs are also inscribed.
On the other side, the natural cave is being used
for the built up temple, with 3 sanctums, a maha mandapam and a mukha mandapam.
The maha mandapam is supported with pillars and the ceiling has the Gajalakshmi
panel. The Pillars has the Tirthankaras, animals, Saints, Monks, dancers and Hindu bas-reliefs. The Pillars are
supported with pushpa pothyals / Capital and Lion load bearers.
Two Dwarapalakas are at the entrance of the Maha mandapam. The names of the donors are inscribed on the pedestal.
The Mukha mandapam is supported with 6
pillars. The vimanam above the sanctum on the rocky surface is found
unfinished or might have damaged. There is a water pond or
pali in front of the temple.
HISTORY
AND INSCRIPTION
There are 17 inscriptions found in this temple and
12 are directly related to Jainism. The latest one belongs to Sri Moolam
Thirunal, the King of Travancore. Believed that this was built during Aay Kings
and 9th Century Aay King Vikramaditya Varaguna’s inscription is the
oldest one. The inscription records the gift of ornaments to Bhatari ( May be
Yakshi – Bhagavathy ? ). Latter during 13th Century this temple was
converted in to Hindu Temple, but now these three sanctums houses the images of
Bhagavathy, Mahavir and Parshvanath. The
1250 CE, inscription records, one Tamil Pallavarayan, belongs to Kizhvembenadu
donated money to this Bhagavathy Amman for conducting regular poojas. It may be
concluded that this temple was a Jain Temple till 13th Century and
latter converted to Hindu temple. The
previous inscriptions do not mentions the Bhagavathy’s name.
It was learnt that this temple was renovated
a Jain Nun called Muttavalai Narayana Kurathiyar, who also offered Lamp and
golden flower. The male and female monks/
nuns are referred as Kuravar and Kurathiyar.
This is very much similar to the inscription found in Kalugumalai of Thoothukudi District and
also they belongs to Kottaru ( a place in Kanyakumari District ).
திருச்சாரணத்து மலை எனும் சிதரால்.
கன்னியாகுமரி
மாவட்டம் விளவங்கோடு தாலூக்காவில் திருச்சாரணத்து மலை என்று அழைக்கப்பட்டு பின்பு மறுவி
தற்போது சிதரால் என அழைக்கப்படும் மலையில் சமணர் கோயிலும், சமண சமய சிற்பங்களும் காணப்படுகின்றது. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியே இந்த சிதரால்
எனப்படும் இடம். இம்மலைகளில் இயற்கையாகவே சில குகைகளும் நீர் நிலைகளும் காணப்படுகின்றன.
சங்க காலம் தொட்டு அக்குகைகளில் சமண துறவியர் வாழ்ந்து தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும்
கல்வி மருத்துவம் போன்ற அறத்தை ஆற்றி வந்ததற்கான
பல சான்றுகள் இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன. சாரணர்களாகிய
சமண சமயத்தார் இம்மலையில் வாழ்ந்ததினால் இம்மலைக்கு இப்பெயர் வந்து இருக்கலாம் என்பது
அறிஞர்கள் கருத்து.
மலையின்
உச்சியின் தென்மேற்குபுறம் உள்ள பாறையின் முகப்பில் இரு வரிசைகளாக சமணத் தீர்த்தங்கரர் திருவுருவங்கள்
செதுக்கப்பட்டுள்ளன. மேல் வரிசையில் பன்னிரண்டு
தீர்த்தங்கரர் சிற்பங்கள் முக்குடையுடன் சிறிய அளவில் செதுக்கப்பட்டுள்ளன.
கீழ்வரிசையில்
பெருவுருவங்கள் செதுக்கப்பட்டு உள்ளது. இவ்வுருவங்கள் நேமிநாதர், நின்ற நிலையில் பார்சுவநாதர்,
மகாவீரர், யக்ஷி பத்மாவதி முதலியோரைக் குறிப்பதாகும். பார்சுவநாதர் மற்றும் அவருடைய
யக்ஷி பாம்புக்குடையுடன் நின்ற நிலையில் செதுக்கப்பட்டு உள்ளனர். பத்மாவதியின் சிற்பத்தொகுதியில்
பின்புறம் ஒரு மரம் மற்றும் ஒரு சிங்கம், கீழே ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகளும் புடைச்சிற்பமாக
செதுக்கப்பட்டு உள்ளனர். மகாவீரர் சிற்பத்தொகுதியில் சாமரதாரிகளும் தேவதூதர்களும் இருபுறமும்
காட்டப்பட்டு உள்ளனர். இச்சிற்பங்களுக்கூடே சில சிறிய தீர்த்தங்கரர் சிற்பங்கள் முக்குடையுடன்
செதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொல்லியல் துறையால் இச்சிற்பத் தொகுதிக்கு செல்ல படிக்கட்டுகளும்,
மழைநீர் சிற்பங்களின் மீது படாமல் இருக்க மண்டபம் போன்ற அமைப்பும் அமைக்கப்பட்டு உள்ளது.
இப்புடைப்புச் சிற்ப்பங்களை வெட்டுவித்தவர்களின் பெயர்களும் கல்வெட்டாக பொறிக்கப்பட்டு
உள்ளது.
மலையின்
மேற்கு பகுதியில் இயற்கையாக அமைந்த குகையை மூன்று கருவரைகளுடன் கூடிய ஒரு கட்டுமானக்
கோயிலாக மாற்றிக் கட்டப்பட்டுள்ளது. கருவரைகளில் பகவதி அம்மன், மகாவீரர் மற்றும் பார்சுவநாதர்
சிற்பங்கள் உள்ளன. கோயில் கருவரை, மகாமண்டபம்
மற்றும் முக மண்டபம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. முகமண்டபத்தில் மகா மண்டபத்திற்குச்
செல்ல மூன்று வாயில்களும் அதன் நடுவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்களும் நிறுவப்பட்டுள்ளனர்.
அத்துவாரபாலகர்களின் கீழே அதை அமைத்துக்கொடுத்தவர் பெயரும் கல்வெட்டாக வெட்டப்பட்டு
உள்ளது.
மகா
மண்டபத்தை தூண்கள் தாங்கி நிற்கின்றன. அத்தூண்கள் புஷ்பப்போதிகைகளுடனும் சிம்ஹ பாரம்தாங்கிகளுடன்
அமைக்கப்பட்டு உள்ளது. தூண்களில் சமண தீர்த்தங்கரர்கள்,
விலங்குகள், முனிவர்கள் மற்றும் இந்துமத கடவுளர்கள் புடைச்சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளனர். இது ஒரு
மத நல்லினக்கத்தின் வெளிப்பாடக கருதப்படுகின்றது. மண்டபத்தின் கூரைப்பகுதியில் கஜலக்ஷ்மி
புடைச்சிற்பம் அழகாக செதுக்கப்பட்டு உள்ளது. முகமண்டபத்தை ஆறுதூண்கள் தாங்கி நிற்கின்றன.
முகமண்டபத்தில் இருந்து எதிரே உள்ள நீர்நிலைக்குச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு
உள்ளது. நீர்நிலைக்கு தண்ணீர் வர மலையின் மேல்
உள்ள பாறைப்பகுதிகளில் கால்வாய்கள் போன்ற அமைப்பு வெட்டப்பட்டு உள்ளது. கட்டுமானக்கோயிலின்
கருவரை ஒரு இயற்கையாக அமைந்த குகையில் இருப்பதால், அதன் மேல் உள்ள பாறையில் விமானம்
போன்ற அமைப்பு கட்டப்பட்டதற்கான அடையாளமாக அடித்தளம் மட்டுமே காணப்படுகின்றது. அதுவும்
சமீப காலங்களில் தொல்லியல் துறையால் சீரமைக்கப்பட்டு உள்ளது.
வரலாறும் கல்வெட்டுக்களும்.
இந்த
சமண கோயிலில் மொத்தம் 17 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டது. அதில் 12 கல்வெட்டுக்கள்
சமண சமயத்திற்கு நேரடி தொடர்பு கொண்டது. நாஞ்சில் நாட்டுப்பகுதியை ஆண்ட ஆய் மன்னர்களால்
கட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. அதில் 9 ஆம் நூற்றாண்டு ஆய் மன்னர் விக்ரமமாதித்ய
வரகுணனின் கல்வெட்டே மிகப் பழமை வாய்ந்தது ஆகும். கல்வெட்டுக்கள் பொன்னும் பணமும் கொடையாக
கொடுக்கப்பட்டதைக் கூறுகின்றன. 13 ஆம் நூற்றாண்டுகளில் இக்கட்டுமானக்கோயில் பகவதி அம்மன்
கோயில் என இந்து கோயிலாக மாற்றம் பெற்று பின் எப்போது சமண சமய கோயிலாக மாற்றம் அடைந்தது
என்று தெரியவில்லை. புடைச்சிற்பத் தொகுதிகளின் கீழ் அதைச் செய்வித்தவர்கள் பெயர்களுடன்
குறவன், குறத்தியர், ஊரின் பெயர் கோட்டாரு என்று காணப்படுகின்றது. திருநெல்வேலி மாவட்டம்
கழுகுமலைக் கல்வெட்டுக்களிலும் இக்கல்வெட்டுக்களில் வரும் ஊர் பெயர்களை ஒத்து இருப்பதைக்
காணும் போது சிதராலுக்கும் கழுகுமலைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதை அறிய முடிகின்றது.
இந்த
சமண சமய வரலாற்று சிறப்பு வாய்ந்த சிதரால்
மலை தற்போது தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் ஒரு கிலோமீட்டர்
தொலைவு மலை ஏற்றத்திற்கு ஏதுவாக படிகளும் அதன் இருமருங்கும் நிழலுக்காக மரங்களும்,
இடையே அமர்ந்து இளைப்பாற இருக்கைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. காலையில் 8 மணியிலிருந்து
மாலை 5 மணிவரை மலையேற்றம் அனுமதிக்கப்படுகின்றது. மலையேற்றம் மேற்கொள்வோர் தங்களுடன்
தேவைக்கு ஏற்ப குடிநீர் எடுத்துச்செல்ல அறிவுறுத்தப்படுகின்றது.
TIMINGS:
Visitors are allowed between 08.00 hrs to
17.00 Hrs.
HOW
TO REACH:
Chitharal is about 9 KM from Marthandam, 40 KM from
Nagercoil, 55 KM from Kanyakumari, 118 KM from Tirunelveli and 800 KM from Chennai.
LOCATION: CLICK HERE
Mahavir
Parshvanath
--- OM SHIVAYA NAMA---
https://www.bejansmith.xyz/2020/09/chitharal-malaikoil-images-history.html?m=1
ReplyDeletevery informative sir!
ReplyDeleteThanks ma..
Delete