The display of antiques like Bronze & stone sculptures,
inscriptions on stone & Copper plates at Madras Museum are brought from
various parts of Madras Presidency, which spanned up to the present Uttara
Karnataka. The antiques reflects the past history and social life of the people
of that part of India. The antiques displayed are collected over a period,
since 1938 CE, when the Madras Museum was started, by Dr.F.H.Gravely. The
antiques belongs to early centuries of before
the Christian era to the recent times. Of these, the Buddha images brought from
Amaravati in present state of Andhra Pradesh are the earliest, dated around 3rd
Century BCE.
The collections are categorised as Bronzes of
Shaivite and Vaishnavite, Jainisam, Buddhism, Stone sculptures of all the
religions, Hero stones, Copper plates, etc, and displayed in different
galleries. More than 1500 Bronze images are on display. Madras Museum is one of
the largest and best collections of Metal images of the whole world.
In
the Bronze images category, the Pallava bronzes, which include the images of
little Somaskanda (skanda missing), Vishapaharana, Kannappanayanar
and Vishnu. The best Chola specimens include the figures of
Nataraja, from Tiruvalangadu and Velankanni, the
Rama group from Vadakkuppanaiyur, Vishnu as Srinivasa, Tirumangai Alvar, Inscribed Kali, the world famous Ardhanarisvara from Tiruvenkadu and Parvati. In fact some of them, for instance,
the Tiruvalangadu
Nataraja and Rama group, are so well executed to be a real
masterpieces of art, which we can be proud of our crafts men of Pallava and
Chozha periods.
In stone sculptures category the early
Buddhist sculptures ranges from about 200 BCE to 250 CE, and that of the
Jainism and Hindu are from about 600 CE to the recent times.
In Connection with the 151st
year of the Madras Museum, the displays are reorganised with improved Lighting
for Visibility, safety measures in par with international museums. Tradition
wooden enclosures are replaced with Aluminium enclosures for easy cleaning of
the images, increased life of the enclosures with aesthetic look,
சென்னையின் மெட்ராஸ் தொல்பொருள் காட்சியகத்தில்
காட்சிபடுத்தப்பட்டுள்ள வெண்கலம் மற்றும் கற்களால் செய்யப்பட்ட தொன்மை வாய்ந்த
சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் சுமார் 1938ல் Dr.F.H.Gravely என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து
சேகரிக்கப்பட்டவைகள் ஆகும். இவை கிறித்து காலத்திற்க்கு முன்பு முதல்
சமீபகாலத்தைச் சார்ந்த தொல்பொருட்கள் ஆகும். அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சியின்
அதிகாரத்தில் இருந்த ( வடக்கு கர்நாடகா வரை ) இடங்களில் இருந்து கொண்டு
வரப்பட்டவையே. இவை சைவம், வைணவம், புத்தம் மற்றும் சமண சமயம் சார்ந்த சிற்பங்கள்
தனிதனி காட்சியகத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் அமராவதியில் இருந்து
கொண்டுவரப்பட்ட சிற்பங்கள் பொயுமு 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக
கணிக்கப்பட்டுள்ளது. வென்கல சிற்பங்கள் மட்டும் சுமார் 1500 க்கு மேற்பட்ட
சிற்பங்கள் கட்சிப்படுத்தப்படுள்ளன. இதில் பல்லவர் காலத்தைச் சார்ந்த
சோமாஸ்கந்தர், விஷபஹரனர், கண்ணப்பநாயனார் மற்றும் விஷ்ணு சிற்பங்கள் சிறப்பானவையாக
கருதப்படுகின்றது. மேலும் சோழர் காலத்தைச் சார்ந்த நடராஜர், ஸ்ரீநிவாசர்,
திருமங்கை ஆழ்வார், காளி, ராமர் போன்ற சிற்பங்கள் சிற்பக்கலையின் உச்சமாக மதிப்பிடப்படுகின்றது.
கற்சிற்பங்களுல் புத்தசமய சிற்பங்கள் பொயுமு 200 ல் இருந்து 250 காலத்தைச்
சார்ந்தது. சமணம் மற்றும் இந்து சமய சிற்பங்கள் 7 ஆம் நூற்றாண்டுக்கு
பிற்பட்டவையே.
தொல்பொருள் காட்சியகம்
ஆரம்பிக்கப்பட்ட 151வது வருடத்தின் கொண்டாட்டமாக ஒளி, பாதுகாப்பு மற்றும்
காட்சிப்படுத்தலை உலகத்தரத்திற்கு இணையாக மாற்றம் செய்யப்பட்டது.
Somaskanda
The
place where this Somaskanda was brought from is not known. Measures to a height
of Shiva 50cm, Paravti 44 cm and Subrahmanya
29 cm. This Somaskanda Group belongs to 10th century CE.
Shiva is
with 4 arms, holding Axe / mazhu and antelope in the upper hands and lower right
hand is in abhaya hastam and what is in the left hand is not known. Parvati is
with two hands in abhaya and varada hastam. Kanda / Subrahmanya is standing between
them with two hands holding flower buds.
The
treatment of this image, especially the necklaces and faces, clearly mark it as
of Chola type, in spite of the absence of the projecting elbow ornaments. An usual crescent moon is shown on the jada
makuda. The face of the antelope are facing towards Shiva. Subrahmania is
shown as standing with bend in the legs and wears a karanda-makuta and
patra-kundalas in the earlobes.
சோமாஸ்கந்தர்…
இச்சிற்பம் எங்கு இருந்து கொண்டுவரப்பட்டது என்று தெரியவில்லை. இதில் சிவன் 50 செமி,
பார்வதி 44 செமி மற்றும் சுப்பிரமணியர் 29 செமி உயரமுள்ளது.
சிவன் நான்கு
கரங்களுடன் காணப்படுகின்றார். மேல் இரு கைகளில் மானும் மழுவும், கீழ்
வலது கை அபய முத்திரையிலும், ஜடா முடி, அதில்
பிறைச் சந்திரன், ஆகியவற்றுடன் காணப்படுகின்றார். பார்வதி இரண்டு கைகளுடன் அபய வரத
முத்திரையுடன் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே
கந்தர் கரண்ட மகுடத்தில் கைகளில் மலருடன் நின்ற நிலையில் காணப்படுகின்றார். இந்த சோமாஸ்கந்தர்
தொகுப்பு சோழர் காலத்தைச் சார்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.
Chandikesvara
This
image of Chandikeswara was brought from Tiruvenkadu, Sirkali Taluk, Thanjavur
District. This belongs to 11th Century CE.
The
Chandikevara is with two hands seated on a bhadrasana. The right hand is in
kataka posture suggesting the holding of a mazhu/ axe / parasu, the left hand mudra
is not known. The left leg is folded and rests on the pedestal firmly and the
right leg hangs down and rests on a lotus flower support. The right leg seems
to have been below the ankle. He wears Yajnopavita, udarabandha and padra kundala in the elongated earlobes. He
is shown with jatamakuta and a beautiful charm and grace on the face.
11 ஆம் நூற்றாண்டைச்
சார்ந்த இந்த சண்டிகேஸ்வரர் தஞ்சாவூர் மாவட்டம் திருவென்காட்டில்
இருந்து கொண்டுவரப்பட்டது.
சண்டிகேஸ்வரர்
இரண்டு கரங்களுடன், வலது கரத்தில் மழுபிடிக்கும் படியான முத்திரையுடன் அமர்ந்த நிலையில்,
இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்டு காணப்படுகின்றார். பூணூல், வயிற்று பட்டி/
உதரபந்தம், காதுகளில் பத்ர குண்டலம், ஜடாமகுடத்துடன் காட்டப்பட்டு உள்ளார். வசீகரமான முகத்தில் தவழும் புன்னகை அருமையாக காட்டப்பட்டுள்ளது.
Ardhanarisvara
This Ardhanarisvara
was brought from Tiruvenkadu, in Thanjavur District, measures
to a Height of 101 cm. And belongs to 11th Century CE.
As the name indicates, Siva is
represented here as half-male and half-female. The right half represents Siva and the left half is
Parvati. Shiva is in jada makuta
with crescent moon. He has three arms of which the lower arm rests
on the head of the bull ( Pallava hastam ) his vehicle, and the upper right has
an axe / mazhu and left hand is in kadaka hastam / holding a flower. The whole
of the right side is adorned with ornaments particular to Siva. The right leg is bent and
rests on the pedestal to match the height of left side female part. The dress is
shown upto the knee. Ornaments on the neck, yagnopavita and Utara bandham is
shown common for both male forms. On the left side the image has a karandamakuta. The drapery is upto
the anklets and her leg is slightly bent, resting on the pedestal. The left
side face, smooth small cheek, small eyes, ear ring as badra kundala, hand
holding flower hastam are belongs to female form ie Parvati. The inscription on
the base of the image is reads as “Tiruvenkadu”.
அர்தநாரீஸ்வரர்..
101 செமி உயமுள்ள 11 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக கருதப்படும் அர்தநாரீஸ்வரர் தஞ்சாவூர்
மாவட்டம், திருவென்காடு கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது. பீடத்தில் உள்ள கல்வெட்டும்
திருவென்காட்டைச் சார்ந்ததை உறுதி செய்கின்றது.
அர்தநாரீஸ்வரர் மூன்றுகரங்களுடன்,
ரிஷபவாகனத்தின் மீது சாய்ந்தவாறு ரிஷபாந்திகராக மூன்று கரங்களுடன் காணப்படுகின்றார்.
சிற்பத்தின் இடதுபுறம் பார்வதி அம்மைக்குரிய அனைத்து அம்சங்களான, கரண்டமகுடம், பத்ரகுண்டல
காதணி, ஆபரணம், சிறிய கண், வாய், சிறியமுகமைப்பு,
ஒற்றைக்கையில் மலர் ஏந்து முத்திரை, இடை ஆடை பாதம் வரை நீட்டி வடிக்கப்பட்டுள்ளது
மிகச்சிறப்பு. இருவருக்கும் பொதுவாக கழுத்தில் ஆபரணம், பூணூல், உதரபந்தம் / வயிற்றுப்பட்டியும்
காட்டப்பட்டு உள்ளது.
Nisumbasudani
Brought
from Turaikadu, Thanjavur District. Measures to a height of 75 cm and belongs to 10th Century CE.
The
Goddess is destroying the demon Nisumbha. She is with 8 arms holding Trident in
kataka hastam, Cobra, Sword, Shield, bow, bell, dragger and a skull bowl. Her
face is shown with considerable vigour"- Raudra-cum-Saumya expression. The
right ear-ring is a human form, while the left ear carries an owl.
நிசும்பசூதனி..
75 செமி உயரமுள்ள 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நிசும்பசூதனி வென்கலச்சிற்பம் தஞ்சாவூர்
மாவட்டம் துரைக்காடு கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது.
நிசும்பசூதனி பீடத்தின்
மீது அமர்ந்த நிலையில்வலது காலை நிசும்பன் மீது இருத்தி எட்டு கரங்களுடன் காணப்படுகின்றார்.
கரங்களில் சூலத்தை ஏந்தும் முத்திரை, பாம்பு, வாள், கேடயம், குருவாள், மணி, வில் போன்றவைகள்
காட்டப்பட்டு உள்ளன. காதில் ஒருபுறம் ஆந்தையும் மற்றொரு காதில் பத்ர குண்டலமும் முகத்தில்
ரௌத்ரத்துடன் வடிக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு.
Parvati with
attendant
Parvati
is with an attendant, brought from Tiruvengimalai, Trichy District. Measures to
a height 92 cm and belongs to 10th Century CE.
Parvati
stands in a tribhanga posture with a dwarf attendant, is a masterpiece of the
Cholas. She stands on an oval padmasana over a rectangular bhadrasana. Her
right hand is in the posture of holding a flower and her left hand is placed on
the head of her dwarf attendant (Vamanika). The modelling of the breasts, the
disposition of the hands, especially that of the left hand which has pliability
or flexible in its gentle way of placing on the head of the attendant and the
disposition of the strands of hair are superb.
பார்வதியும் பணிப்பெண்ணும்… 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பார்வதியும்
பணிப்பெண்ணும் சிற்பத்தொகுப்பு 92 செமி உயரம் உடையது. திருச்சிக்கு அருகே திருஈங்கோய்மலையில்
இருந்து கொண்டுவரப்பட்டது.
பார்வதி திரிபங்கமாக
பத்மாசனத்தின் மீது நின்ற நிலையில் காணப்படுகின்றார். வலது கையில் மலர் ஏந்தி இடது
கையை குள்ளப்பணிப்பெண்ணின் தலைமீது வைத்தவாறு காணப்படுகின்றார். அம்மையின் உடல் அமைப்பு,
மார்பகங்கள், கைகளின் தொய்வு தன்மை, முடிக்கற்றை போன்றவைகள் அவரின் நளினத்தை மேலும்
எடுப்பாக எடுத்துக்காட்டுகின்றது.
Tripurantaka
This
Tripurantaka was brought from Tirukkodikkaval, in Kumbakonam Taluk, Thanjavur
District. Measuring to a height 100 cm and belongs to 11th Century CE.
Shiva
is depicted here as a samharamurti, after he destroyed the three asuras who
dwelt in three forts made of metals with a smile on his face. There are two
pairs of hands. He is standing on a padmasana. He is with 4 hands, while the
upper hands holds the Mazhu ( broken and missing ) and antelope, the lower
hands are holding posture of a bow and an arrow. ( arrow and bow are missing ).
The workmanship of the jatamakuta and the ornaments are splendid.
திரிபுராந்தகர்…
11 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த 100 செமி உயரமுள்ள திரிபுராந்தர் வென்கலச்சிற்பம் தஞ்சாவூர்
மாவட்டம் திருக்கோடிக்காவல் என்ற கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது.
இத் திரிபுராந்தகர்
மூன்று அசுரர்களையும் சம்ஹாரம் செய்தபின்பு, அவரின் முகத்தில் தவழும் புன்சிரிப்பு
சோழர் சிற்பக்கலையின் உச்சமாக கருதலாம். நான்குகரங்கள், அவற்றின் மேல் இருகரங்களில்
மழுவும் மானையும் பற்றியிருக்க கீழிருகரங்களில் வில்லையும் அம்பையும் பற்றுவதற்கான
முத்திரைகளுடன் காட்டப்பட்டு இருக்கின்றார். தலை அலங்காரமான ஜடாமகுடம் திரிபுராந்தகரின்
அழகைமேலும் கூட்டுகின்றது.
Vinadhara
Dakshinamurti
This
Dakshinamurti was brought from Tanjore District. Measuring to a height of 66 cm s
and belongs to 12th century CE.
Standing
in three bangha posture. He is with 4 arms. While the upper hands are holding
Mazhu and antelope and the lower hands are in kataka hastam, (for holding the
vina ) postures.
The
simple treatment of the image suggests affinity with those of the Chola type
but the somewhat high relief of the ornamentation, especially the necklaces and
the Lion-face clasp of the girdle, seem to preclude this. The snake and the
crescent moon are inconspicuously shown on the right and left respectively of
the top of the head-dress. The breast and the back of the head of the
antelope are facing towards Siva.
வீணாதார தட்சிணாமூர்த்தி… தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட
இந்த வீணாதார தட்சிணாமூர்த்தி 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். உயரம் 66 செமி. 4 கரங்களை
உடைய இவர், மேல் இரு கரங்களில் மானும் மழுவும் ஏந்தி, கீழ் இருகரங்கள் வீணை வாசிப்பதைப்
போன்ற முத்திரையுடன் காணப்படுகின்றார். அணிகலன்களாக காதில் மகர குண்டலம், பத்ர குண்டலம்,
கழுத்தணிகள், பூணூல், உதரபந்தம் அணிந்து காணப்படுகின்றார். இடது காலை மடித்து முயலகன்
மீது வைத்து, ஜடாமகுடம் அதில் காணப்படும் பூரிமமும்
அழகுற காட்டப்பட்டு உள்ளது, இந்த வீணாதாரர் சிற்பம் சோழர் காலத்தச் சார்ந்தது என்பதை
நிருபிக்கின்றது.
Vishapaharana
This
bronze sculpture Vishapahara was brought from the Village Kilappudanur,
Nannilam Taluk, Thanjavur District. Measuring to a Height of 62 cm. This Vishapaharana
belongs to 9th Century CE.
Considering
the style of this image, especially the high relief of the details of the head
dress shows affinity with Somaskanda from Tiruvalankadu. The head- dress bears
a Datura flower, moulded in the round as in that image and certain other
Nataraja images on its left side and an imperfect crescent, apparently also
designed in the round, on the right near the top. There are makarakundalas in
both the ears. The inner of the two necklaces is very broad and plain. The outer
one appears to have been designed with an ornamental centre piece, but its
surface is quite smooth. The sacred thread or the yagnopavita is divided into three, its broad central
portion being looped over the right forearm. He also wears utharabandham. He is
shown with 4 arms, while the upper arms holds the mazhu and antelope, the lower left and is holding a snake and the
right hand hold the poison. The face and breast of the antelope are facing
towards Siva.
விஷபஹரனா.. இவர் தஞ்சாவூர் மாவட்டம் கீலப்படனூர் கிராமத்தில் இருந்து
கொண்டுவரப்பட்டவர். 9 ஆம் நூற்றாண்டைச்
சார்ந்த இவர் 62 செமி உயரத்துடன் காணப்படுகின்றார். சோமாஸ்கந்த மூர்த்தியின் அமைப்பை
ஒத்து காணப்படுகின்றார். இவர் வலதுகாலை தொங்கவிட்டு இடதுகாலை மடித்து சுகாசன நிலையில்
அமர்ந்து காணப்படுகின்றார். மேலிரு கரங்களில் மானும் ( மான் சிவனை நோக்கி ) மழுவும்
ஏந்தி, கீழ் இடது கையில் பாம்பையும், வலது கையில் ஆலகால விஷத்தை ஏந்தி காணப்படுகின்றார்.
அணிகலன்களாக, மகரகுண்டலம் இரு காதுகளிலும், கழுத்து மற்றும் கைகளில் ஆபரங்கள், பூணூல்
வலது கீழ்கரத்தின்மீது வைத்தும், உதர பந்தமும்
அணிந்து காணப்படுகின்றார்.
Kali
This Kali’s image was brought from, Thiruvengadu, Thanjavur District.
The image measures a height 45.5cms. This Kali belongs to 10th Century
CE.
Kali is seated
on a high bhadrasana
has four hands. The upper right hand carries a trisula while the upper left carries
an ankusa (?)/ a pasa / snake,
the lower right is in abhaya
hastam and left hand holds a bowl. She has a terrifying countenance
having protruding tusks from the mouth. The restrained ornamentation of the
image, the presence of skandhamala on
the right side (an early characteristic feature) and the natural rendering of
the head-dress, are noteworthy. The head is adorned with jvalakesa.
காளி… தஞ்சாவூர் மாவட்டம் திருவென்காடு கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட
இவர் 10 ஆம் நூற்றாண்டைச் சாந்தவர். 45.5 செமி உயரத்தில் காண்ப்படுகின்றார். நான்குகரங்களுடன்
காணப்படும் காளி, மேல் இரு கரங்ளில் சூலம் மற்றும் பாம்பையும் ஏந்தி இருக்க கீழ்வலதுகரம்
அபய முத்திரையிலும் இடது கரத்தில் கிண்ணத்துடன்
காணப்படுகின்றார். கழுத்தில் கபால மாலை பூணூல் போன்றும், கோரைப்பற்கள்
வாயின் இருபுறமும் நீண்டு பயமுறுத்தும் தோற்றத்துடன் காணப்படுகின்றார். தலையில் காட்டப்பட்டு
இருக்கும் கேச பந்தம் பார்பதற்கு மிகவும் அழகாக காட்டப்பட்டுள்ளது.
Mahesvari
This was bought from Velankanni, in Thanjavur District.
Measures to a height of 50 cm. This Maheswarai belongs to 10th Century
CE.
Maheswari is one of the Group of Saptamatrikas and considered as the female
power of Shiva. Maheswari is holding axe / mazhu and antelope in the upper
hands and lower right hand is in abhaya mudra and left hand holds a bowl. She
is in sukhasana sitting posture with left leg folded and right leg hanging on a
padmapeeta. The hair is made to resemble a flame and is heart-like in form. The
crescent moon and the Datura flower are shown. ( கரு ஊமத்தை மலர் ). A yajnopavita with all the three
strands joined together is seen on the trunk.
மஹேஸ்வரி.. இச்சிற்பம்
10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. சப்தமாதர் தொகுதியில் சிவனின் அம்சமாக, நான்கு கரங்களில்
மானும் மழுவும் மேல் இருகரங்களில் ஏந்தியும் கீழ் வலதுகரம் அபய முத்திரையிலும், இடது கரத்தில் கிண்ணமும்
ஏந்தி காணப்படுகின்றார். சுகாசனத்தில் அமர்ந்து வலதுகாலைத் தொங்கவிட்டு, இடது காலை
மடித்து அமர்ந்த நிலையில் இருக்கும் இவரின் கேசம் தீஜுவாலையைப்போன்று காணப்படுகின்றது.
கேசத்தில் கருஊமத்தை மலரை சூடி, பூணூல் அணிந்து காணப்படுகின்றார்
.
Mahesvari
This
Maheswarai was brought from Tirukkodikkaval, Kumbakonam Taluk, Thanjavur
District. It measures to a height of 60 cm. This Maheswari sculpture belongs to
10th Century CE.
Maheswari
is Seated straight on a lotus pedestal, in sukhasana posture with the left leg
bent and right leg hanging down, wearing a jatamakuta with crescent moon on the
right side and cassia flower / kondrai flower and snake on the left side. Siraschakra is
present. She wears padre kundalas in the elongated earlobes. The third eye
appears as a tilaka mark on the forehead and the face is charming. She wears two
haras on the neck, Yajnopavita and uttarabandha. Katisutra is fashioned like
kirtimukha motif. She is with 4 hands, while upper hands holds sula and pasa / noose, the lower right hand is in
abhaya hastam and left hand hols a bowl.
மஹேஸ்வரி.. 10 ஆம் நூற்றாண்டைச்
சார்ந்த இச்சிற்பம் தஞ்சாவூர் மாவட்டம் திக்குக்கோடிக்காவல் என்ற கிராமத்தில் இருந்து
கொண்டுவரப்பட்டது. சப்தமாதர் தொகுதியில் சிவனின் அம்சமாக கருதப்படுகின்றது. மூன்றாவது
கண் திலகத்தைப் போன்றும், நான்கு கரங்களில் மானும் மழுவும் ஏந்தியும் கீழ் இருகரங்களில்
வலதுகரம் அபய முத்திரையிலும், இடது கரத்தில் கிண்ணமும் ஏந்தி காணப்படுகின்றார். சுகாசனத்தில்
அமர்ந்து வலதுகாலைத் தொங்கவிட்டு, இடது காலை மடித்து காணப்படுகின்றார். கேசம் ஜடா மகுடமாக
பிறை மற்றும் கொன்றை மலர் சூடி காணப்படுகின்றார். கழுத்து மற்றும் காதுகளில் ஆபரணங்கள்
மற்றும் பூணூலும் அணிந்து காணப்படுகின்றார்.
Kannappanayanar
This was brought from Tiruvalangadu, Tiruttani Taluk. This Kannappanayanar bronze belongs to 10th Century CE.
Hair tied in kesa-bandha fashion with a band over it in the middle and a wheel ornament on either side in front. There is ornaments in the ears. All necklaces are short and uniform, lowest one with a circular pendant. A quiver / ambara full of arrows on the right shoulder, attached to a band passing round left side of the waist, i.e., very much like a sacred thread / yagnopavita, but crossing the body in the opposite direction. A bow hanging from the left shoulder, dagger is tied to the belt on pleated kilt ( Skirt like dress ) in front of right leg. A cloth showing below kilt and reaching nearly to the knees.
கண்ணப்ப நாயனார்… 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவர் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்டவர். கேசம் கேசபந்தமாக முடியப்பட்டு, காதுகள், கைகள் மற்றும் கழுத்திலும் ஆபரணம் அணிந்து காணப்படுகின்றார். வில் இடது தோளில் தொங்க வலதுபுற முதுகில் அம்புராத்தூளியில் அம்புகளும் காணப்படுகின்றன. அம்புராதூளியின் கயிறு பூணூல் போன்று காட்சியளிக்கின்றது. இரு கரங்களும் அஞ்சலி ஹஸ்தமாக காட்டப்பட்டு உள்ளது.
Pichadana murti / Bhikshatana
murti
This
Pichadanar is about 60 cm tall and belongs to 10th Century CE.
In
this the Pichadana murti is in walking posture with left leg is straight and
right leg is little bend at knee and wears foot wear called padakoradu. A snake
is tied to his hip. He is shown with 4 hands, while upper hands are holding
damaru ( Missing ) and thanda with back bone of Maha Vishnu ( Missing ), the
botton left hand is holding bhiksha bowl and right hand is feeding to antelope.
The Jadamudi is tied neatly. He wears ornaments on the neck, padra kundalas in
the elongated earlobes, yagnopavita, tholvalai, uttarabandha. A Dwarf bhoot is
standing on his left side holding a big bowl on his head.
இந்த பிச்சாடன மூர்த்தி 10 ஆம் நூற்றண்டைச் சார்ந்தவர். நான்கு
கரங்கள், அவற்றின் மேல் இரு கரங்களில் உடுக்கை, மற்றும் தண்டம் பிடிக்கும் முத்திரையாகவும்,
கீழ் வலதுகை மானுக்கு உணவளிக்க, இடதுகை கபால
பாத்திரத்தை ஏந்தி காணப்படுகின்றார். கால்கள் நடக்கும் பாவனையில் காணப்படுகின்றது.
ஆபரணங்களாக கழுத்தில் மாலைகள், காதுகளில் பத்ர குண்டலங்கள் அணிந்து, பூணூல் மற்றும்
உதர பந்தமும் காட்டப்பட்டு உள்ளது. பாம்பை
இடுப்பில் கட்டி இருக்கின்றார். இடதுபுறம் நிற்கும் குள்ள பூத கணம் பிச்சை பாத்திரத்தை
தலை மீது சுமந்தபடி காட்டப்பட்டு உள்ளது.
Nandhikeswara..
This
Nandhikeswara belongs to 9th to 10th Century CE. He is
standing in three bhanga posture with 4 hands. The upper hands are holding
mazhu and antelope. The head of the antelope is turned to the opposite side.
The lower hands are in Anjali hastam. A Jada makuda is shown on head with
poornimam. He wears ornaments in the elongated earlobes, neck, hands and
anklets on the leg. A master piece of Chozha period Sculpture.
நந்திகேஸ்வரர் சுமார்
9- 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவராக கருதப்படுகின்றார். திரிபங்கமாக நின்ற கோலத்தில்
காணப்படும் நந்திகேஸ்வரர் நான்குகரங்களுடன் காட்டப்பட்டு உள்ளது. மேல் இருகரங்களில்
மானும் மழுவும் ஏந்தி இருக்க, கீழ் இரு கரங்கள் அஞ்சலி ஹஸ்தத்தில் காட்டப்பட்டு உள்ளது.
தலையில் ஜடாமகுடத்தில் பூரிமத்துடன் காணப்படுகின்றார். காது, கழுத்து, கைகள் மற்றும்
கால்களில் ஆபரணங்கள் அணிந்து காணப்படுகின்றார். சோழர்கால சிற்பக்கலையின் உச்சமாகக்
கருதப்படுகின்றது.
Natarajar
Natarajar in Dynamic Display was brought from
Thanjavur district and belongs to 9th Century.
In
the reorganised Bronze Gallery, a star display will be the cosmic effect on the
Nataraja bronze. A diorama showcase with cosmic background made by vinyl pasted
on acrylic material and cosmic effect given by fibreglass light tips with audio
commentary is the attractions. 70-watt halogen lamp generator will operate the
Fibre optic lights and a changing light pattern of seven colours will enhance
the display effect.
This
figure of Natesa has four arms carrying damaru and agni in his upper hands with
a beautiful smile on the face. The lower left is in gajahasta and his lower
right is in abhaya. A coiled snake is on the right hand side. Nataraja wears
ornaments on the neck and yagnopavita and the anklets. This image is noted for
its vigour and it is one among the well executed bronzes. The prabha is with 39
jwalas has interesting details. The
Jadamudi on both sides of the head and the cloth forms the support to Nataraja
with the prabha.
9 ஆம்
நூற்றாண்டைச் சார்ந்த இந்த நடராஜர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்டவர்.
நடராஜரின் பின்புறம் இப்பிரபஞ்சவெளி போன்று ஒளி அமைப்பு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.
நடராஜர் 4 கரங்களுடன்
காணப்படுகின்றார். மேல் இருகரங்களில் உடுக்கை மற்றும் அக்னியை ஏந்தியும், கீழ் இருகரங்கள்
அபய மற்றும் கஜ ( யானை தும்பிக்கை ) ஹஸ்தத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. வலது கரத்தில்
பாம்பு, கழுத்து, காதுகள், மற்றும் கால்களில் தண்டையும் ஆபரணங்களாக காட்டப்பட்டு உள்ளது.
ஜடாமுடி மற்றும் அவர் அணிந்திருக்கும் வஸ்திரம் பிரபையுடன் ஒட்டி நடராஜரின் உறுதித்தன்மையைக்
கூட்டுகின்றது. பிரபையில் மொத்தம் 39 ஜுவாலைகள் காட்டப்பட்டுள்ளன.
Nataraja
Nataraja side View
Nataraja side View
Nataraja a closer look
SOME OF THE OTHER BRONZES ARE..
Copper Plates
The
copper-plate inscriptions acquired up to 1917 CE, numbering over 200 have been
published in the form of a catalogue. Subsequently about 400 inscriptions have
been added. These inscriptions are mostly records of grants of villages or
plots of cultivable lands to private individuals or public institutions, by the
members of the different royal dynasties that ruled over South India. The
grants range in date from the 3rd century CE to recent times. A large number of
them belong to the Chalukyas, the Cholas and the Vijayanagar kings. Of special
interest are the Maydavolu and the Hirahadagalli plates of the early Pallava
dynasty and the large-sized grant acquired from Tiruvalangadu, issued by
Rajendra Chola- I. The latter consists of 31 large plates strung on a ring to
which is attached a seal showing the Chola emblems and Rajendra's legend in
relief. This is not only interesting as an "epigraphical curio" but
its contents, especially the genealogical portion are also valuable.
CHOLAS-1 UTTAMACHOLA
PLATES
Five
copper-plates have been deposited in the Museum for a long time, and have no
history. They are strung on a ring, the ends of which are secured by means of a
seal bearing in relief a seated tiger facing the proper right. There are two
fishes to the right of this. These three figures have a bow below, a parasol
and two chamaras ( fly-whisks ) at the top and a lamp on each side. Round the
margin a sloka is engraved in Grantha characters, which has been translated,
"This is the matchless edict of King Parakesarivarman, who teaches justice
to the kings of the realm".
A
portion of the inscription is in Sanskrit and the rest is in Tamil. The script used
is a mixture of Grantha and Tamil.
The
plates contain an edict issued by the Chola King Ko Parakesarivarman alias
Uttama Choladeva, at Kachhippedu (Conjeevaram), at the request of his minister,
to confirm the contents of a number of stone inscriptions, which referred to be
certain dues to be paid to the temple of Vishnu at Kachhippedu. The villagers
of Kuram and Ariyarperumbakkam had to supply five hundred kadi of paddy year as
interest on two hundred and fifty kalanju of gold borrowed by them from the
temple treasury. Similarly the inhabitants of the villa near Conjeevaram got
loans from the temple treasury and paid interest at the rate of five percent
per annum. A fresh grant was issued by this same king, which contains the
arrangements made for the conduct of the Chittiral festival of the deity in the
temple of Uragam, in Kachhippedu. Two hundred kalanju of gold were depoalted
with the residents of certain villages near Conjeevaram, who were asked to a
yearly interest of fifteen kalanju of gold to meet the expenses. Arrangements
were made for the several services in the temple are also described.
This
Parakesarivarman was the uncle and predecessor of Rajaraja-I and the period may
therefore be fixed as the tenth Century CE.
சோழர்கள்-1 - உத்தமச் சோழன் செப்பேடுகள்
நெடுங்காலத்திற்கு
முன்பாக ஐந்து செப்பேடுகளைக் கொண்ட தொகுதி அருங்காட்சியகத்தில் ஒப்படைவு
செய்யப்பட்டிருந்தது.
ஐந்து செப்பேடுகளும்
ஒரு வளையத்தில் கோர்க்கப்பட்டுள்ளன, வளையத்தின் இரு முனைகளும் பற்றவைப்பு
செய்யப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன. அம்முத்திரையில் புடைப்புருவாக வலம் நோக்கிய
புலியின் உருவம் மற்றும் அதற்கு வலப்புறமாக இணைமீன்கள், இவற்றுக்கு கீழாக ஒரு
வில், ஒரு வெண்கொற்றக் குடை மற்றும் இரு சாமரங்கள் குடையின் இருபக்கங்களிலும்
காணப்படுகின்றன. முத்திரையில் வட்ட விளிம்பினை ஒட்டி கிரந்த எழுத்தமைதியில்
"பரசேகரி மன்னனின் இந்த ஆணை ஈடிணையற்ற பொறிப்பு ஆகும். பல இராச்சியங்களுக்கு
நீதியைப் போதிக்கும் நீதிமான் ஆவார் .
செப்பேட்டு வாசகங்கள்
வடமொழி மற்றும் தமிழில் காணப்படுகிறது. இதில் கிரந்தம் மற்றும் தமிழ் எழுத்துக்கள்
கலந்து பயன்படுத்தப்பட்டுள்ளன.
பல கல்வெட்டுகளில்
குறிப்பிடப்பட்டுள்ளபடி கச்சிப்பேட்டில் (காஞ்சிபுரம்) உள்ள- விஷ்ணு கோயிலுக்கு
(மக்கள்) வழங்க வேண்டிய குறிப்பிட்ட நிலுவைகள் குறித்த அமைச்சரின் வேண்டுகோளுக்கு
இணங்க கோப்பரகேசரி வர்மனான உத்தமசோழனால் இவ்வாணை வெளியிடப்பட்டுள்ளது. கோயில்
கருவூலத்திலிருந்து 50 கழஞ்சு பொன் கடனாகப் பெறப்பட்டதற்கு ஈடாக கூரம் மற்றும் ஆரியாபெரும்பாக்கம்
கிராமத்தார்கள் ஆண்டுதோறும் 500 காடி நெல்லினை வட்டியாகச் செலுத்த வேண்டும்.
அதுபோலவே காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திார் கோயில்
கருவூலத்திலிருந்து பெற்ற கடனுக்கு ஈடாக ஆண்டொன்றுக்கு ஐந்து சதவீத வட்டி
செலுத்தப்பட வேண்டும். கச்சிப்பேட்டில் உள்ள உரகம் கோயிலுக்கு இது தவிர புதிய தானம்
வழங்கப்பட்டிருந்தது. காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள சிலகிராமங்களில்
குடியிருந்தவர்களுக்கு இருநூறு கழஞ்சு பொன் முதலாக வழங்கப்பட்டு பதினைந்து கழஞ்க
வட்டியாக செலவுகளை மேற்கொள்ள ஆண்டொன்றுக் பெறப்பட்டது. கோயிலில் செய்யப்பட்ட
பல்வேறு சேவைகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன.
இந்த பரகேசரிவர்மன்
மதுராந்தக சோழன் முதலாம் ராஜராஜ சோழனுக்கு முன்னர் ஆட்சிப்பொறுப்பிலிருந்தவர்
மற்றும் அவரது சிற்றப்பாவும் ஆவார். ஆகவே இவரது காலம் கி.பி.10-ஆம் நூற்றாண்டு
என்று கொள்ளலாம்.
CHOLA KARANDAI TAMIL SANGAM,THANJAVUR.
One set of 57 copper plates with two
seals intact.
These plates are reported to have
been unearthed in a field in the village of Puttur in Papanasam taluk in
Thanjavur District. The Karandai Tamil Sangam having learnt about the existence
of these plates, secured them through the good offices of the local Firka
Development Officer.
The first section of the charter
comprising of three plates serially numbered contains the Sanskrit Text.
The second section of twenty-two
plates independently numbered contains the details of the grant proper in
Tamil.
The third set of thirty-two plates also independently
numbered contains the list of all the Brahmana donees, the temples and other
services- all that received shares of the granted land.
THE Seal: the ends of the ring are
secured at the base of a 16 petalled lotus ( eight full-blown and eight partly
visible ) supported on the thickened segment of the ring. The circular royal
seal raising high from the base of the ring rests on the expanded lotus
mentioned above. In the centre of the seal is the Chola tiger with its mouth
open, seated facing the proper right on its hind legs with its forelegs raised
and claws drawn out and with tail drawn through and reaching to very near its
mouth. On its front are two fish, the Pandyan crest. Behind the tiger are a
lamp stand, a flag, a dagger in scabbard pointed downwards and a goad. A lamp stand,
a flag and a goad are represented behind the fish. Over the fish and the tiger
is a parasol ( chatra ) with a fly-whisk ( Chauri ) on either side of it.
Underneath the right a drum, a low chair standing perhaps for a simhasana, a
boar is facing proper right and a swastika. All these symbols are figured in
relief on a counter -sunken surface. Outside the surface bordered by a circle,
the following legend in Sanskrit verse is found in
embossed charecters of the Grantha alphabet, starting just above the parasol
and running round the margin of the seal in a clockwise direction:
"Rajad-rajanya makuta sreni ratnesu sasanam/ etad Rajendra cholasya
Parakesarivarmana://"
"This (is) Parakesarivarman
Rajendrachola's edict ( to be borne ) on the glittering jewels of the row of royal
diadems ( i.e., to be respected by them )".
சோழர்கள் கரந்தை
தமிழ்ச் சங்கம், தஞ்சாவூர்
57 செப்பேடுகளைக் கொண்ட
ஒரு தொகுதியாகவும், இரண்டு முத்திரைகளுடனும் கிடைத்துள்ளன.
இந்த செப்பேடுகள்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், புத்தூர் என்கிற கிராமத்தின் வயல் பகுதியில்
கண்டெடுக்கப்பட்டன. கரந்தைத் தமிழ் சங்கம் அப்போதிருந்த வட்டார வளர்ச்சி
அலுவலர்களிடம் நன்மதிப்புடன் இருந்ததினால் செப்பேடுகளை அவர்கள் வசமிருந்து
பெற்றுச் சென்றனர். இந்த செப்பேடுகளில், முதல் மூன்று செப்பேடுகள் ஒரு தனித்
தொகுப்பாக எண்களிடப்பட்டு வடமொழியில் உள்ளன.
இரண்டாவது தொகுப்பாக
தனியாக எண்களிடப்பட்ட இருபத்தி இரண்டு செப்பேடுகள் தமிழில் கொடையைப் பற்றிக்
குறிப்பிடுகின்றன.
மூன்றாவது தொகுப்பாக
தனியாக எண்களிடப்பட்ட முப்பத்திஇரண்டு செப்பேடுகள் தொகுதியில் தானமாகப்
அந்தணர்களின் பட்டியல், கோயில்கள் மற்றும் கோயில்சார் திருப்பணிகளுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தின்
விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
முத்திரை : இந்த செப்பேட்டின்
வளையத்தின் தடித்த இருமுனைகளும் பற்றவைப்பு செய்யப்பட்டு 16 இதழ்கள் கொண்ட தாமரை (
எட்டு இதழ்கள் முழுமையாக மலர்ந்த நிலையிலும், எட்டு பகுதியாக தெரியும் நிலையிலும் )
உள்ளன. மேற்குறிப்பிட்டதைப் போல தாமரை இதழ்கள் விரிந்த நிலையில் அதன்மீது அரச
முத்திரை வைக்கப்பட்டுள்ளது. முத்திரையின் மத்தியில், வாய் திறந்த நிலையிலும்,
பின்னங்காலின் மீது வலம் நோக்கி அமர்ந்த நிலையிலும், நகங்கள் வெளிவந்த நிலையுடன்
கூடிய முன்னங்கால்களுடன், அதன் நீண்ட வால் வாயருகில் வரும் வகையில் புலியின்
உருவம் காட்டப்பட்டுள்ளது. புலியின் முன்புறத்தில் பாண்டியர்களின் சின்னமான இணை
மீன்கள் காட்டப்பட்டுள்ளன. புலியின் பின்புறத்தில் ஒரு விளக்குத் தாங்கியும்,
கொடியும், கூர்முனை உடைய குறுவாளும், ஒரு அங்குலமும் உள்ளன. ஒரு விளக்குத்தாங்கி,
ஒரு கொடி, ஒரு அங்குலம் ஆகிய மீனின் பின்புறத்தில் உள்ளன. மீன் மற்றும் புலி
உருவத்திற்கு மேலாக வெண்கொற்றக்குடை மற்றம் வெண்சாமரமும் இருபுறமும்
காட்டப்பட்டுள்ளன. மீன் மற்றும் புலிக்கு கீழாக சிம்மாசனம் போன்றதொரு நாற்காலி,
வலதுபுறம் நோக்கிய வராக உருவம் மேலும் ஒரு ஸ்வஸ்திகம் ஆகியன காட்டப்பட்டுள்ளன.
மேற்கூறப்பட்ட இச்சின்னங்கள் அனைத்தும் குழிந்த பகுதியில் புடைப்புருவமாக
அமைக்கப்பட்டுள்ளன. வெளிப்பகுதியில் ஒரு வட்டமான விளிம்பும் விளிம்பினையொட்டி
கிரந்த எழுத்துக்களில் சமஸ்கிருத வாசகங்கள் வெண்கொற்றக் குடைக்கு மேலாகத் தொடங்கி
கடிகார சுற்றுப்படி வட்டமாக பின்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது “ராஜத் ராஜன்ய மகுட
ஸ்ரேணி ரத்போசு சாசனம் / ஏதத் ராஜேந்திர சோளஸ்ய பரகேஸரிவர்மன://"
( "ஸ்வஸ்திஸ்ரீ
இது பரகேஸரிவர்மனான இராஜேந்திர சோழனின் சாசனமாகும், இது பட்டொளி வீசும் அரசனின்
நெற்றிப் பட்டைகளைப் போல் திகழ்கிறது" )
No comments:
Post a Comment