The
Visit to this Ellora Buddhist caves was a part of “Elephanta, Ajanta and
Ellora Heritage walk” organized by Enthisai Historical Heritage Walk Group, from
December 23rd to 26th December 2023.
எல்லோரா குடைவரைத் தொகுப்பில்
34 குடைவரைகள் மட்டும் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தவைகள் ஆகும்.
இவை மஹாரஷ்டிர மாநிலத்தில் UNESCO நிறுவனத்தால்
அங்கீகரிக்கப்பட்ட 5 உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்று ஆகும். எல்லோரா குடைவரைத்
தொகுப்பில் முதல் 12 குடைவரைக்கள் பௌத்த சமயத்திற்காக பொயு 6 - 8 ஆம் நூற்றாண்டுகளில்
குடையப்பட்டதாகவும், 13 - 29 வது குடைவரை 17 குடைவரைகள் சிவன் மற்றும் மஹாவிஷ்ணுவிற்காக
பொயு 7 - 9 ஆம் நூற்றாண்டுகளில் குடையப்பட்டதாகவும், 30 ல் இருந்து 34 வரையுள்ள 5 குடைவரைகள் சமண
சமயத்திற்காக பொயு 9 -11 ஆம் நூற்றாண்டுகளில் குடையப்பட்டதாகக் கருதப்படுகின்றது.
இக்குடைவரைத் தொகுப்பில் 16 ஆம் எண் குடைவரை சிவனுக்காக் “கைலாசநாதர்
கோயில்” என மேலிருந்து கீழாகக் குடையப்பட்டது. இக்குடைவரையைப் பற்றிய தகவல்கள்,இக்கட்டுரை ஆசிரியரின் ஜோதிர்லிங்க யாத்திரையின் தகவல்களுடன் ஏற்கனவே இவ்வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இப்பதிவில் பௌத்த குடைவரைகளைப் பற்றி
காண்போமே…
The Ellora group of caves consists of 34 caves of
which 12 caves belong to Buddhism, hewed during 500 – 750 CE, 17 Hindu Caves
both for Saivam and Vaishnavam and hewed between 600 to 870 CE and lastly, the 5
Caves from 30 to 34 belongs to Jainism hewed during 800- to 1000 CE. The 12
Buddhist caves start from No 1. Of the 12 Caves, details of 4 important
caves are given below. Caves 5, 6, and 7 are interconnected with each
other.
CAVE 2
இக்குடைவரை பொயு 8 ஆம்
நூற்றாண்டில் புத்த மடாலயத்திற்காக 27.60 x 20.10 மீட்டர் என்ற அளவில், முன்தாழ்வாரம், பெரிய
தூண்களுடன் மஹாமண்டபம், பக்கவாட்டில் காட்சியகங்கள் மற்றும் கருவறையுடன் குடையப்பட்டு
உள்ளது. மடாலயத்தின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியையும் புத்தரின் அழகான
சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. கருவறை வாயிலின் இருபுறமும் போதிசத்துவர்கள்
காணப்படுகின்றனர். சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட 12 மண்டபத்தூண்கள், மண்டபத்திற்கு
ஒரு கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கின்றது. குகையின் பக்கவாட்டில் அமைந்துள்ள
சுவர்களில் புத்தரின் வெவ்வேறு கோலங்கள் போதிசத்துவர்களுடன் சிற்பங்களாகச்
செதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் புத்தர் தர்மசக்ர முத்திரையிலேயே
காணப்படுகின்றார். கருவறையில் புத்தர் சிம்மாசனத்தின் மீது அமர்ந்து போதிக்கும்
பாவனை – தர்மசக்கர முத்திரையில் போதிசத்துவர்களுடன் காட்டப்பட்டு உள்ளார்.
The Buddhist monastery (27.60 x 20.10
m) datable to circa 8th century CE, consists of a broken verandah, a
hypostyle hall with lateral galleries, and a sanctum flanked by cells. The
monastery is decorated both internally and externally with sculptures of Lord
Buddha in different postures and deities of the Buddhist pantheon. The doors of the
hall and sanctum are guarded by large figures of Bodhisattvas. The hall has
twelve decorative pillars, which endow it with a majestic appearance. The
lateral galleries and the walls are decorated with Images of the Buddhist
pantheon. The sanctum houses Lord Buddha on a lion throne in preaching posture,
attended by bejeweled Bodhisattvas.
CAVE 5
பொயு 7 ஆம் நூற்றாண்டைச்
சார்ந்த இந்த புத்தமடாலய குடைவரை 53.28 X 36.63 மீட்டர் என்ற அமைப்பில், நீள்சதுர மண்டபம் இரண்டு சிற்றாலயங்கள், இடைநாழி மற்றும் கருவறையுடன் குடையப்பட்டுள்ளது.
மண்டபத்தின் மிகப்பெரிய
தூண்களை வண்ன ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. இந்த மண்டபம் துறவிகள் கூடுமிடமாகவோ,
சாப்பிடும் இடமாகவோ அல்லது சடங்குகள் நடத்துவதற்கோ உபயோகப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. கருவறையில் புத்தர் போதனை செய்யும் பாவனையில் தர்மசக்கர
முத்திரையுடன் காணப்படுகின்றார். இரண்டு பெரிய அளவிலான போதிசத்துவர்கள் காவல்
காக்கின்றனர்.
This is a very big and impressive
Buddhist monastery ( 53.28 X 36.63 m ) datable to circa 7th century CE.
The oblong hall, the two side chapels with cells, an antechamber, and a sanctum are
the chief architectural components.
The massive pillars in the hall are
decorated with paintings. The hall seems to have been used by monks as an
assembly hall, Dining room, and also for Ritualistic purposes. The sanctum houses
Lord Buddha in preaching posture and is guarded by two huge Bodhisattvas.
CAVE 10
பொயு 7 ஆம் நூற்றாண்டைச்
சார்ந்த இக்குடைவரை இரண்டு தளங்களுடன், மடாலயம் மற்றும் தேவாலயங்களுக்காக்
குடையப்பட்டு உள்ளது. மேற்கூரை பாரம்பரிய முறைப்படி மரத்தால் கட்டப்பட்டதைப் போன்று
பின்புறம் அரைவட்டவடிவில் / தூங்கானை மாட வடிவில் குடையப்பட்டு உள்ளது சிறப்பு. மேற்தளத்தில்
இசைகாட்சியகம் - பிரார்த்தனையின் போது இசை அல்லது மந்திரங்கள் ஒலி பரப்புமிடமாகவும்
பயன்பட்டு இருக்கலாம். என்று கருதப்படுகின்றது. மேலும் இவ்விடம் பிரார்த்தனையின்
போது முக்கிய பார்வையாளர்கள் அல்லது விருந்தினர்கள் அமருவதற்காகப் பயன்பட்டு
இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது.
கூரையின் முகப்பு
மிகவும் அழகாக செதுக்கப்பட்டு உள்ளது. அதில் அமைந்துள்ள ஜன்னல் சூரிய ஒளி
குகையினுள் வர ஏதுவாக உள்ளது, முகப்பின் மேல், பறக்கும் நிலையில் கந்தர்வர்கள்,
மிருகங்கள், குள்ள பூதகணங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.
தூங்கானை வடிவில் குடையப்பட்ட
மண்டபத்தில் முப்பது தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளது. விகாரத்தின் / ஸ்தூபி முகப்பில்
புத்தர் போதிக்கும் பாவனையில் தர்மசக்கர முத்திரையுடன் காட்டப்பட்டு இருக்கின்றார். அவரின் பின்புறம் இரு
போதிசத்துவர்கள் மற்றும் இரு தேவர்களும் காட்டப்பட்டு உள்ளனர்.. ஸ்தூபியைச்
சுற்றி புத்தர் சிற்பங்களும் செதுக்கப்பட்டு உள்ளன
The double-storied Buddhist cathedral-cum-monastery
the only chaitya griha at Ellora Cave is stylistically and palaeographical datatable to 7th century CE. It is a beautiful creation of artists,
who have copied the contemporary wooden constructions in cave architecture. The
most remarkable feature is the Music Gallery ( upper floor ) and the beautifully
carved facade. The facade is decorated with a number of friezes of animals, and couples and a beautifully carved window, which allows light to in the cave. It
consists of a large courtyard with double-storeyed apartments on both sides
and an apsidal pillared hall on a raised platform.
The spacious hall apsidal on plan,
has thirty pillars arranged in an elongated apse. The object of worship is a
seated image of preaching Buddha flanked by two Bodhisattvas and celestial
couples all carved against the stupa, which serves as an ornamental background.
The drum of the stupa is also decorated with panels of Buddha and Bodhisattvas.
The ribbed vault gives an echo effect in the hall when a person standing at one
end of the columns of the nave creates any sound.
The upper floor is approached by a
flight of steps cut into the sidewall of the verandah, It is possible that from
this Music Gallery, background music was provided to the monks, chanting
mantras below. It may also have been used for seating important visitors during
prayers.
CAVE 12
பொயு 8ஆம் நூற்றாண்டைச்
சார்ந்த மூன்றுதள புத்தமத குடைவரை மடாலயத்திற்காக குடையப்பட்டது. இக்குடைவரை,
சாதாரணமாகவும் அதே சமயத்தில் அழகான சிற்பங்களுடன் குடையப்பட்டு உள்ளது.
முதல்தளம், தூண்களுடன்
மண்டபம், இடைநாழி, மற்றும் கருவறையுடன் குடையப்பட்டுள்ளது. குடைவரையின் பக்க
சுவர்களில் 5 புத்தர் சிற்பத்தொகுப்பு மற்றும் 8 போதிசத்துவர் சிற்பத்தொகுப்பும்
செதுக்கப்பட்டு உள்ளது. இரண்டாவது தளம் முக மண்டபம், தூண்களுடன் மஹாமண்டபம்,
இடைநாழி மற்றும் கருவறையுடன் செதுக்கப்பட்டுள்ளது. கருவறையில் புத்தரின் பக்தை சுஜாதா
புத்தருக்கு கீர் எனும் பாணம் அளிக்கும் சிற்பத்தொகுப்பு செதுக்கப்பட்டு உள்ளது.
புத்தர் ஞானம் அடைவதற்கு முன் நிலையை பூமி ஸ்பரிச முத்திரையுடன் அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டு
உள்ளார். மண்டப பக்க சுவர்களில் புத்தர் மற்றும் போதிசத்துவர் சிற்பங்கள்
காணப்படுகின்றன. அவை சுண்ணாம்பு பூச்சுடனும் வண்ண ஓவியத்துடனும் காணப்படுகின்றன.
மூன்றாவது தளம், ஒரு
சிற்பக்கருவூலமாகவும், பிரார்த்தனை மண்டபமாகவும் குடையப்பட்டுள்ளது. மண்டபத்தின்
சுவர்கள் பகுதி பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அதில் புத்தர், மற்றும் புத்தமத பெண்
தெய்வங்களின் சிற்பத்தொகுப்பு செதுக்கப்பட்டு உள்ளது.
This is a Buddhist monastery, datable
to circa 8th century CE, and is known as "Teen Tal"
because of its three floors. It looks massive and majestic but the facade is
very simple and does not betray the rich sculptures within.
The first floor has a pillared hall
an antechamber and a sanctum with cells. The sanctum houses Lord Buddha in
preaching posture on a lotus throne. The sidewalls of the sanctum have panels
of Pancha-Dnyani Buddhas and "Eight-Bodhisattva-Mandal". The second
floor contains a pillared verandah, a pillared hall, a sanctum with antechamber, and
a series of cells. The central figure of the sanctum is a beautiful panel of
Buddhist devotee Sujata offering Kheer to Lord Buddha, seated in an earth-touching
posture. Seven-Mortal Buddhas and eight Bodhisattva Mandal were also carved on
the sidewall. All sculptures were plastered and painted.
The third floor is similar in plan
and is more of a sculptural gallery than a prayer hall. The sidewalls of the hall
are decorated with huge figures of Buddha flanked by Bodhisattvas and flying
figures. The front wall of the hall is decorated with a panel of eleven
Buddhas having foliage and umbrellas over their heads. On the wall of the antechamber are carved twelve Buddhist Goddesses, originally painted and all
are seamed on a Lotus throne. a popular panel of "Sujata offering
Kheer". The cave sanctum also shows evidence of old paintings.
Ref:
1.
Display boards
installed at the caves.
HOW TO REACH
The Ellora Caves are about 30 KM from Aurangabad, 103 KM from Ajantha,
173 KM from Nashik, and 319 KM from Mumbai.
Nearest Airport Aurangabad.
Nearest Railway Station is
Mukundwadi.
LOCATION OF THE CAVES :
CLICK HERE
--- OM SHIVAYA NAMA ---
No comments:
Post a Comment