The
visit to this Archaeological Excavation
site at Adichanallur in Thoothukudi
District was a part of “Temples, Heritage Sites and archaeological excavation
sites Visit around Thoothukudi”, between
Dec 1st and 2nd December 2023.
தொல்லியல் தளமான ஆதிச்சநல்லூர் 2020-2021 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில்
அடையாளப்படுத்தப்பட்டு ஐந்து மாதிரி தொல்லியல் சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், இத்தள மேம்பாட்டு காணப்படும் தொல்லியல் எச்சங்களுடன் மேற்பரப்பாய்வுகள்
/ அகழாய்வுகள் இந்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்டத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆதிச்சநல்லூர் ( 8° 37" 47.6’ N:
77° 52’ 3497 ) தமிழ்நாட்டின் தூத்துக்குடி
மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுக்காவில் தாமிரபரணி ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ள சிறிய
கிராமம் ஆகும்.
The ancient archaeological site at
Adichanallur has been declared as one of the five “Iconic Sites” in the Union
Budget of 2020-2021. As per the Site Development
plan, fresh explorations / excavations related to archaeological remains at
Adichanallur have found by the archaeological Survey of India, Trichy Circle.
Adichanallur is a small Village ( 8° 37"
47.6’ N: 77° 52’ 3497 ) lies on the right bank of river Thamiraparani, in
Srivaikundam taluk in Thoothukudi District of Tamil Nadu.
This Adichanallur archaeological site
belongs to Iron age, spreads over 125.04 acres, on both sides of the Adichanallur Channel and
Karungulam Village roads. ( Tirunelveli to Srivaikuntam ). This archaeological
site is protected under the “Ancient Monuments and Preservation act 1904”, by
the Archaeological Survey of India ( ASI ), since 1921. The Archaeological
remains spreads beyond this protected site too.
1902-04 ஆண்டுகளில் அலெக்சாண்டர் ரியா ( இந்திய தொல்லியல் துறையின் முன்னாள்
கண்காணிப்பாளர் ) அவர்களால் இப்பகுதியில் ஆற்றின் இருபுறமும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு
சரளை மண்மேடுகளில் அமைந்துள்ள சுமார் 38 பண்டைய தளங்களானது அடையாளப்படுத்தப்பட்டது.
பல்வேறு இரும்புக் கால தொல்லியல் தளங்களின் மத்தியில் ஆதிச்சநல்லூர் தளமானது மிகவும்
பரந்த மற்றும் நன்கு பாதுக்காக்கப்பட்ட ஒன்றாக அமைந்துள்ளது. இத்தளமானது. உள்ளூர் வழக்கில்
வறண்ட உயரமான மேட்டினைக் குறிப்பதான பொருளில், “பறம்பு” என்று அடையாளப் படுத்தப்படுகிறது.
In the Year 1902 –
04, the area were extensively surveyed on either side of the river by Alexander
Rea ( Former Superintend of ASI ) and around 38 sites are identified. On gravelly
mounds were identified by him. Among the many Iron Age sites, Adichanallur site
appears to be the most extensive and
also the well protected one. The site locally referred to as “porambu” meaning
dry elevated mound.
Site museum
முந்தைய
ஆய்வுகள்
இந்தளமானது முதன்முதலில் பெர்லினைச் சேர்ந்த பண்பாட்டியலாளரும் கள
மேற்பரப்பாய்வாளருமான பெ. ஜாகர் என்பவரால் 1876ல் கண்டறியப்பட்டது. சரளைக் கற்களுக்காக
தோண்டப்பட்ட குழியில் கிடைக்கப்பட்ட மட்பாண்டங்கள், குறிப்பிடத்தக்க இரும்பு உபகரணங்களுடன்
எலும்பு மிச்சங்கள் போன்றவை அவரால் சேகரிக்கப்பட்டது. டாக்டர் ஜாகரால் எடுக்கப்பட்ட
இந்த கலைப்பொருட்கள் தற்போது ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து.1902-1905ல் இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த
அலெக்சாண்டர் ரியாவால் இந்த இடம் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு அகழாய்வு செய்யப்பட்டும்.
பின்னர் 2004-05ல் அதே நிறுவனத்தைச் சேர்ந்த டி.சத்தியமூர்த்தி அவர்களால் மேலும் அகழாய்வு
செய்யப்பட்டது.
Earlier investigations
The site was first
discovered by Dr Jagor of Berlin, an ethnologist and explorer in 1876. A lot of
objects such as earthen utensils and considerable iron objects besides skeletal
remains from the pits dug for mining gravel were collected by him. The
artefacts were taken by Dr Jagor which is presently displayed in Ethnological
Museum, Berlin, Germany. Subsequently, the site was extensively explored and
excavated by Alexander Rea of the Archaeological Survey of India in 1902- 1905
and was further excavated by T Sathyamurthy of the same organisation in 2004-
05.
அகழாய்வில்
கிடைத்த பொருட்கள் (1876-1905)
அகழாய்வில் கருப்பு-சிவப்பு பானைகள், வெள்ளைப் வண்ணம் தீட்டப்பட்ட கருப்பு-சிவப்பு
பானைகள், சிவப்பு பானைகள், கருப்பு பானைகள் போன்ற நேர்த்தியாக செய்யப்பட்ட பல்வேறு
வகையான மட்பாண்டங்களும், வாள், கத்தி, ஈட்டி, அம்பு முனை, திரிசூலம், ( Trident ), போன்ற
உலோகப் பொருட்களும், வெண்கலத்தினாலான வளையல், மோதிரம், அலங்கரிக்கப்பட்ட தாங்கி போன்ற
கலைப்பொருட்களும் கிடைத்துள்ளன. பெரும்பாலான
எலும்பு மிச்சங்கள் இரண்டாம் நிலை புதையல் சூழலிலேயே கிடைத்துள்ளன. வெண்கல மற்றும்
இரும்பு பொருட்களான மண்வெட்டிகள், மும்முனை ஈட்டிகள், தாய் தெய்வம் உருவம், விலங்கு
மற்றும் பறவை உருவங்கள் போன்றவை கிடைத்துள்ளன. மேலும், தமிழ் நாட்டின் பிற ஈமப்புதையல்
தளங்களில் அரிதாக கிடைக்கும் தனித்துவமான பொருட்களான மோதிரம் மற்றும் நெற்றிப்பட்டம்
உள்ளிட்ட தங்க பொருட்களும் பிற கலைப்பொருட்களும் கிடைக்கப்பெற்றுன. இரும்பு கலைப் பொருட்களின்
தரம் மற்றும் பானை வகைகளின் வேறுபாட்டுடன் வெண்கல பொருட்களின் தனித்துவமானது இந்திய
தொல்லியல் துறையால் இந்த தளத்தை மீண்டும் 2004-2005ல் அகழாய்வு செய்ய வழிசெய்தது.
Excavated Materials ( 1876 – 1905 )
The excavated objects include finely made ceramics of
various kinds such as black –and-red ware, red ware, black polished ware, and
white painted black- and-red-ware. The metal objects like sword, knife, spear,
arrow head, trident, etc,. The artefacts in bronze articles such as bangle,
ring, decorated stand, etc. Majority of
the skeletal remains were found in secondary context include Bronze and iron
objects such as hoe –spades, triple forded spears, mother goddess, animals,
birds etc,. Gold ornaments, such as rings and diadems are unique to Adichanallur
and such artefacts are rarely reported from any other urn burial sites in Tamil
Nadu. The uniqueness of the bronze objects, quality of Iron artefacts and
divergence of … ceramics led the
Archaeological Survey of India to re-excavate the site in 2004 – 2005.
அகழாய்வுகள் (2004-2005)
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் கட்ட அகழாய்வில், பறம்பின் தெற்குப் பகுதியில் 60 x 20 மீ அளவில் ஆறு ஆய்வுக்குழிகள் தோண்டப்பட்டு குறிப்பிடத்தக்க பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த அகழ்வாராய்ச்சியில் ஈமத்தாழிகள், உலோகப் பொருட்கள், பிற தொல்பொருட்கள் மற்றும் எலும்புக்கூடுகள் போன்ற ஏராளமான பொருட்கள் வெளிப்பட்டு அதன் தொன்மையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது. முந்தைய ஆய்வுகளின் தொடர்ச்சியாக,
2021-22 ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறை மேலும் ஆய்வுகளைத் தொடங்கியது.
Excavations ( 2004 – 2005 )
During the first
phase of excavations in 2004, six trenches were laid out measuring 60 x 20 m
were excavated in the southern part of the mound which are the remarkable
findings. The excavation revealed huge quantity of materials in the form of
urns, metal objects and other antiquities and skeletal remains conforming its
archaeological potential. In continuation of the earlier period ASI initiated further investigation in the
year 2021 – 22.
மீண்டும் 10-10-2021 ந்தேதியில் இருந்து, புதிதாக துவக்கப்பட்ட இந்திய தொல்லியல் துறை, திருச்சி கிளையின் மேளாலர் முனைவர் அருண்ராஜ், தலைமையில் காட்சியகமும், தோண்டும் பணியும் தொடர்ந்தது. ஆதிச்சநல்லூர் ஏரியை நோக்கி அமைந்த வடகிழக்கு மேட்டுப் பகுதியில் இருந்து தோண்டும் பணி அரம்பிக்கப்பட்டது. மேற்பரப்பில் எதுவும் காணப்படவில்லையாதலால், போட்டோகிராமெட்ரி ஜியோகிராபிக் என்ற அதிநவீன முறையும், ரிமோட் சென்சிங் முறைகளிலும் ஆராயப்பட்டது. மேட்டுப்பகுதி A, B and C என்று பிரிக்கப்பட்டு அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
The newly
established Archaeological Survey of India Trichy Circle under the direction of
Dr Arunraj,. T, present archaeological excavations at Adichanallur resumed on
10-10-2021 ( as per part of the Iconic site development and onsite museum ).
After an extensive structure was observed that the north –eastern side of the mount was least disturbed portion of the site. It was also over seeing the huge
lake of Adichanallur Village and it was also the highest point on the ridge
measuring 10 meter in elevation. Hence
the north-eastern portion of the
Adichanallur mound sloping towards east
was chosen for excavation, The fill was hard and compact and the colour of the
top layer varied from yellowish brown to brown. At places the seems mixed small
pieces of quartz and murram. The site did not reveal any surface indications of
the buried. The entire protected mount was re-surveyed with application of
scientific techniques such as photogrammetric geographic information system,
remote sensing tools. Based on the analysis of the data, three potential
locations were identified keeping in view of the archaeological, geo – spatial
and scientific data, the entire site / mound is divided in to three localities
namely Locality A, B and C and the excavations was initiated in all these three
localities and important findings are studied to understand the cultural
significance of the site in nut-shell.
முதுமக்கள் தாழி 19ல் காணப்பட்ட ஈமசடங்கிற்கான பொருள்கள் மற்றும் ஆயுதங்களின்
விபரங்கள் ( இது ஒரு எடுத்துக்காட்டு மாதிரி மட்டுமே )
URN NO 19
Ware-Red ware
Shape- Globular
Lid ware-Red ware
Lid shape - Button shaped lid
Hooks-two hooks in the urn (interior)
Phase - Early
Skeletal
remains - Secondary
Outside
grave goods - 5 basins, 3 pots, 17
bowls, 7 beakers of black-and-red ware, 7 big pot of red slipped, 12 ring
Stands, 11 cannold lid of black polished ware and many small offering pots.
Inside grave goods - 1 Red slipped
pot, 3 bowls and 1 conical pot of black and red ware, 1 cannold lid.
Antiquities
- Sword, 3 Arrowhead, 2 chisel, 1
Nail, 1 rod, Itriple edged blade/sword, 1 spade, 2 spearheads and all are of
iron.
ஈமத்தாழி எண்- 19
தாழி நிறம் - சிவப்பு
வடிவம் - கோள வடிவம்
மூடி நிறம் - சிவப்பு
மூடி வடிவம் - கூம்பு கோள வடிவம்
வடிவமைப்பு
கூறுகள் - தாழியின் உட்பகுதியில் 2 கொக்கிகள்
நிலை - முதல் நிலை
மனித எலும்புகள் - இரண்டாம் நிலை
தாழி வெளியே
ஈமப்பொருட்கள் - 7 சிவப்பு பூச்சு பானைகள், கருப்பு-சிவப்பு நிற
பானைகள் 3 கொப்பரைக்கிண்ணங்கள் 5. கிண்ணங்கள் 17 கோப்பைகள் 7 கருப்பு பூச்சு தாங்கிகள்
12. கூம்பு வடிவ மூடிகள் 11.
தாழி உள்ளே
ஈமப்பொருட்கள் -1 சிவப்பு பூச்சு பானை,
கருப்பு-சிவப்பு நிற கிண்ணங்கள் 3. பானை 1. கருப்பு பூச்சு கூம்பு வடிவ மூடி 1.
தொல்பொருட்கள் – இரும்பாலான வாள் 1, உளி 2, கம்பி 1. ஆணி 1. அம்புமுனை 3,
முப்பறம் கூரான வாள், மண்வெட்டி 1, வேல் 2.
INTRODUCTION TO IRON AGE
The Iron Age in the
Indian History that spans between the Bronze Age and the Early-Historic Period
is the hallmark of Indian culture. The characteristics of the Iron Age is
marked with the dominant production and utilization of iron. Iron Age is
considered as the last age in the widely known prehistoric classification as
defined in Three-Age-systems namely Stone Age, Bronze Age and Iron Age.
Previously the Iron Age culture was placed between 1800 BCE to 700 BCE and
recent AMS dates are now pushed back to second millennium BCE. The long span
was due to different cultures transiting from bronze to iron at different time
periods because of its high melting points of 1538°C. In course of time iron is
replaced bronze, due to the availability of iron ore and technological
development. It has several advantages as it is much stronger and durable than
bronze. The adoption to iron has made great impact in the lives of our
ancestors.
The introduction of iron varies widely depends upon the
availability of iron ore and technology. Invention of Iron directly impacted
changes in everyday life of the people in agriculture activity. The most
important remarkable finding is that "Origin of writing" happened in
this period of the late phase and these all features turned this period into
the emergence of Early historic culture. The non-availability of copper ore
prevented the agro pastoral community to take big leap forward in the discovery
of the culture. Therefore, the copper age or chalcolithic culture ( செம்புக்காலம் ) was prevalent in the specific geographical zones. For
instances the Indus valley civilisation could be cited as the finest example.
The advent of Iron changed the scenario due to its availability in major front
of India. The discovery of megaliths a century ago by J Babington, J.S.F.
Mackenzie and others had provided the main impetus for the study of south
Indian megaliths in particular. Excluding the plains of Punjab, the Indo-Ganga
basin, the desert of Rajasthan and the northern part of Gujarat, megaliths are
located all over India. However, they are concentrated mainly in peninsular
India.
IRON AGE
IN INDIA
In the later part of the second millennium
BCE (North Indian Iron Age Period I), the Painted Grey Ware (PGW) made its
appearance in the Ghaggar valley and the upper Ganga valley, and the black ware
industry consisting of the Black-and-Red Ware (BRW) and the Black Slipped Ware
(BSW) widely spread over the western part of the Ganga valley and the eastern
part of Rajasthan. The emergence of BRW in the Indian peninsula around 1400 BCE
may have been related to this expansion of BRW in the north. In North Indian
Iron Age Period Il dating to the early first millennium BCE, Painted Grey Ware
(PGW) spread into the western part of the Ganga valley resulting in the
development of interaction between Painted Grey Ware (PGW) and Black and Red
Ware (BRW)/Black Slipped Ware (BSW).
Iron was fully introduced in various parts of
the Ganga valley by this period. In connection with the developments of social
complexity that stone bead production became predominant during this period.
The evidence of stone beads of the late second millennium BCE is very limited
possibly due to the collapse of the Indus urban centres and urban cart
production. North Indian iron age period
III ( c . the mid- first millennium BCE ) is characterised by the appearance of
the Northern Black Polished Ware ( NBPW )
in the eastern part of the Ganga
Valley. This fine pottery, which belongs to the black ware tradition of BRW and
BSW, is distinct in having thinner walls, well finished
surface with some metallic slip and the
firing technique in a reduced
atmosphere using high temperature, all
indicative of a highly innovative ceramic production technology. Another
significant socio -cultural phenomenon of this period is the
emergence of cities or urban centres. Although the internal structure of these settlements and how they
developed have not been well revealed in their excavations, it is quite well
evidenced that the fortification walls
at those sites had been
constructed by the late first millennium BCE ( North Indian Iron Age
Period IV ). At the site of Maheth ( Sravasti ) in Uttar Pradesh, a workshop
producing iron, glass beads and stone beads was revealed in the excavations
suggesting that some controlled intensive craft production was being conducted
inside the city.
The most significant diagnostic feature of Iron Age culture in
south India was the erection of burials popularly known as megaliths. The term
"megalith" etymologically means "big stone". The megaliths
are basically a variety of sepulchral and commemorative monuments which are
built usually of large stones either of rude or chiselled. Generally associated
with a homogenous group of people using black-and-red ware and iron objects.
They are either individual or collective secondary burials entombing
post-exposure bones along with grave goods. The grave goods include pots, beads
and other artefacts made of terracotta and semi-precious stones like carnelian,
agate, quartz, jasper, etc,. Artefacts of iron, copper, gold, silver and bronze
objects, etc., are also evident. However, in some cases they are neither built
of large stones, nor do they contain post-exposure bones. The megaliths are
mainly located in the area where the raw materials were easily available for
their construction or in the elevated area or waste land often overlooking a
tank or a river valley and cultivated field
TYPES OF BURIALS IN TAMIL NADU
The kaleidoscopic
varieties of megalithic monuments, must have consumed considerable time and
labour. They prove a colourful picture of the architecture and religious
practice of our predecessors. Several tons of stone blocks or boulders had to be
cut or removed, moved to chosen building sites, erected and assembled into
structural arrangements. The delicate stone carving such as the port-hole and
anthropomorphic figures would have required specialized craftsmen These
sepulchral and commemorative monuments of megalithic period in peninsular India
are quite varied and are termed on the basis of their surface indications or
observations and on the basis of the details revealed through excavations.
Based on, these burials are labelled as dolmen, dolmenoid-cist, cairn heap,
cairn circle, stone circle, slab circle, rectangular stone-enclosure, menhir,
etc. The variations noticed in burial types are probably governed by social,
economic and ecological factors. Some of the megalithic burials are referred to
in the early Tamil works known as the Sangam literature and epigraphs as tali
or muthumakkal tali ( urn burial ), karkitai ( dolmen ), karpatukkai ( cist-burial ),
karkuva ( cairn-burial ) and natukal ( menhir ).
Stone Circle - A ring of boulders marking the surface
over a cist or pit burials. Occasionally double or multiple rings are seen.
Cairn Circle - A heap of earth or rubble or a mixture
of both erected as a mound over cist or pit burials. They are usually found in
uplands, on moorland, on mountaintops, or near waterways. These vary from
loose, small piles of stones to elaborate feats of engineering
Cist burial - A cist or kist was used as encasements
for dead bodies. An underground stone-lined chamber, maybe marked by cairn or
menhir or stone circle on the surface. One of the stone slabs forming the side
of the chamber (orthostats) may have a porthole in it.
Dolmen - A rectangular chamber erected above
the ground, and made by three or four vertical slabs (orthostats) set on end,
surmounted by a capstone. In case of closed chambers, one of the orthostats may
have a circular, semi-circular, U-shaped, rectangular or a crude porthole in
one of the orthostats. Dolmens were usually covered with earth or smaller
stones to form a barrow. But in many cases that covering has weathered away,
leaving only the stone "skeleton" of the burial mound intact.
Dolmenoid Cist - Similar in
construction to cists and closed dolmens, except that the chamber is partly
sunk into the ground.
Menhir - A single erect slab or boulder marking
the spot of a burial or serving as a memorial. May be part of a stone alignment
too.
Pit burial - An unlined burial, maybe marked by
cairn or menhir or stone circle on the surface.
Sarcophagus burial- An elongated
terracotta container with lid used for holding mortal remains. May be buried in
a pit or a cist and marked by boulder circles, cairns or menhirs.
Urn burial - A terracotta urn used for holding
mortal remains. Usually buried in a pit and marked by boulder circles, cairns
or menhirs. In Kerala, marked by kudakkals, too.
CHRONOLOGY
Interestingly in
Tamil Nadu unlike elsewhere in south India the contemporary habitational
deposit of the megalithic builders is identified at many sites. The habitation
sites are usually found closer to streams, rivulets or other water bodies. The
excavations in those sites revealed that the Iron Age culture overlaps with the
Neolithic culture and thus the Iron Age culture in south India can be dated
from c. 1800/1700 BCE to 700 BCE. The excavations in the habitation sites
revealed the settlement pattern, socio-economic life, art and craft, trade
activities, etc,, of the contemporary society.
இரும்புக்காலம்
இரும்புக்காலம் – அறிமுகம்
இரும்புக்கால நாகரிகம்
என்பது மனிதர்கள் முதனமுதலாக இரும்பை பயன்படுத்த தொடங்கிய காலமாகும். அவர்கள்
பல்வேறு ஆயுதங்களையும், பயன்பாட்டிற்காக பயன்பாட்டு பொருட்களையும் இரும்பு
உலோகத்தால் உருவாக்கத்தொடங்கினர். மற்றும் இது மனித வாழ்க்கை முன்னேற்றத்தில்
இரும்பு பொருட்களையும், ஆயுதங்களையும்
அதிகமாகப் பயன்படுத்திய காலகட்டம் ஆகும். மிகவும் பிரபலமான முக்கால
கோட்பாட்டின் ( கற்காலம்- செப்புக்காலம்
- இரும்புக்காலம் ) இறுதி. காலகட்டம் ஆகும். இரும்புக் காலமானது பொ.ஆ.மு. 1800 முதல்
300 பொ.ஆ.மு வரையிலான காலகட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் காலமானது
தொல்லியல் தரும் புதிய கண்டுபிடிப்புகளால் மேலும் பின்னோக்க செல்கிறது. இரும்பை
பயன்படுத்த தொடங்கியது மனித வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. உலகம்
முழுவதும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன.
இரும்புக் காலத்திற்கு
முன்பு சில குறிப்பிடத்தக்க நகரங்கள் இருந்தது மற்றவை நாடோடி மற்றும் பழங்குடி
வாழ்க்கை முறைகளாகவே இருந்தது. இரும்பை கண்டுபிடித்தது நேரடியாக மனிதர்களின்
அன்றாட வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒருபுறம் புதிய இரும்பு
பொருட்களால் விவசாயம் முன்னேற்றம் அடைந்தது. அதே நேரம் மறுபுறத்தில் இரும்பு
ஆயுதங்களின் மூலம் போர் புரியத் தொடங்கினர். கலையுணர்ச்சி மிகவும் அதிகமாக
வெளிப்படத் தொடங்கியது. அவர்களின் ஆபரணங்கள், மிகவும் அழகுவாய்ந்த அன்றாடம் பயன்படுத்தும்
பொருட்கள் மற்றும் கைவினைத்திறன் கூடிய மட்பாண்ட பொருட்கள் ஆகியவற்றின் வழியாகத்
தென்படுகிறது. மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பான "எழுத்தின் தோற்றம்"
இந்த காலத்தின் இறுதி நிலையில் நிகழ்ந்தது. இந்த அனைத்து மாற்றங்களும் இணைந்து
இரும்புக் காலகட்டத்தை நாகரீகத்தின் வளர்ச்சியின் தொடக்ககாலமாக மாற்றியது.
தமிழகத்தில் இரும்புக்
காலம்
தென்னிந்தியாவில்
இரும்புகாலப் பண்பாட்டை அறிய பயன்படும் முக்கியக் கூறானது பெருங்கற்காலம் என்று
பிரபலமாக அறியப்படும் ஈமச்சினங்களாகும். பெருங்கற்காலம் ( megalith ) எனும் சொல்லின்
வேற்சொற் பொருளானது 'பெரியகல்' எனும் பொருளைக் கொண்டதாகும். பெருங்கற்கள்
அடிப்படையில் பல்வகை கல்லறைகள் மற்றும் நினைவுச் சின்னங்களை உள்ளடக்கியதாகும், அவை
கரடுமுரடான அல்லது செதுக்கப்பட்ட பெரியக்கற்களாலான கட்டுமானங்களுடன் தொடர்புடைய
ஓர் இனக்குழுப் பண்பாட்டு கருப்பு - சிவப்புப் பானை மற்றும் இரும்பு பொருட்களுடன்
தொடர்புடையவையாகும்.. இத்தகைய ஈமப்புதயல்களின் படையல்கள் பானைகள், சுடுமண்ணால்
செய்யப்பட மணிகளுடன் சூதுபவளம், அகேட், படிகக்கல் போன்ற பகுதி- மதிப்புமிக்க கற்கள் மற்றும்
இரும்பு, செம்பு, வெண்கலப் பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
பெருங்கற்படைகள் பொதுவாக கட்டுமானத்திற்குரிய மூலப்பொருட்கள்
எளிதாகக் கிடைக்கப்பெறும் பகுதிகளிலோ அல்லது உயரமான பகுதிகளிலோ சிலநேரங்களில் வெற்றிடப்
பகுதிகளிலோ பெரும்பாலும், நீர்நிலைப் பகுதி/ ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும் சாகுபடிப்
பகுதிகளிலோ அமைந்துள்ளது.
பஞ்சாப் சமவெளிப் பகுதிகள், இந்தோ-கங்கைப் படுகை, ராஜஸ்தான் பாலைவனம் மற்றும் குஜராத்தின்
வடபகுதி போன்றவற்றைத தவிர இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெருங்கற்படைகள் அமையப்பெற்றுள்ளது.
ஆயினும், அவை முக்கியமாக தீபகற்ப இந்தியப் பகுதி மாநிலங்களான தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா,
ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்றவற்றிலும் அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரம்
பின் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், உத்திரப் பிரதேசம், வடகிழக்கு ராஜஸ்தான், காஷ்மீர்
பள்ளத்தாக்கு, லடாக் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது. இந்தியாவின் வடகிழக்குப்
பகுதிகளில் இவை இன்னமும் வழக்கில் உள்ள பண்பாடாகத் திகழ்கிறது.
ஈமப்புதையல்களின்
வகைகள் ( தமிழ்நாடு )
இரும்புக் காலம் மற்றும் வரலாற்றுத் தொடக்க காலத்தில்
தென்னிந்தியா முழுவதும் காணப்படும் பல்வேறு வகைகளைக் கொண்டுள்ன. ஈமப்புதையல்களின் வகைகளில்
காணப்படும் மாறுபாடுகள் அநேகமாக சமூக, பொருளாதார மற்றும் சூழலியல் காரணிகளால் நிர்வகிக்கப்படுவதாகக்
கருதப்படுகிறது. சில பெருங்கற்கால ஈமப்புதையல்கள் ஆரம்பகாலத் தமிழ்ப் படைப்புகளான சங்க
இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் போன்றவற்றில் தாழி அல்லது முதுமக்கள் தாழி ( urn -
burial). ஈமாபேழைகள் ( sarcophagus ), கற்திட்டை ( dolmen ), கற்பதுக்கை (cist-burial),
கற்குவை ( cairn-burial ) மற்றும் நெடுங்கல் ( menhir ) என குறிப்பிடப்பட்டுள்ளன.
இரும்புக்கால
ஈமசின்ன வகைகள்
1.கல் வட்டம் மற்றும் கற்குவை வட்டம்
2.ஈமத்தாழிகள்
3.ஈமப்பேழைகள்
4. கல்திட்டை
5.கற்பதுக்கை
அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய வாழ்விடப்பகுதிகள்
பொதுவாக நீரோடை மற்றும் சிற்றாறு அல்லது பிற நீர்நிலைப் பகுதிகளில் காணப்படுகிறது.
இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அகழாய்வுகளானது, இரும்புக்காலப் பண்பாடானது புதியகற்காலப்
பண்பாட்டோடு தொடர்புடையதாகவும் மற்றும் இரும்புக் காலப் பண்பாடானது தென்னிந்தியாவில்
தோராயமாக பொ.ஆ.மு 1800 / 1700 லிருந்து பொ.ஆ .மு 700 ஆக காலக் கணிப்பு செய்யப்பட்டுள்ளது.
Ref:
1. The display boards and the banners erected at Site museum
2. ASI Web site
HOW TO REACH
This Archaeological
excavation site is about 1 KM from Adichanallur, on the Tiruchendur to
Tirunelveli route via Kurumbur, Alwarthirunagari. Can be reached through Athur
from Thoothukudi.
This place is about 24 KM from Tirunelveli, 35 KM from
Tiruchendur, 41 KM from Thoothukudi, 174 KM from Madurai and 639 KM from
Chennai.
Nearest Railway
Station is Tirunelveli.
LOCATION OF THE SITE : CLICK HERE
--- OM SHIVAYA NAMA ---
An ancient civilization of south India . Good site museum and display. Wish video with explanatory sound tractor is made and published. Will help the vistor to hear the story about the spot, gallery and artifacts displayed. Now with technology it can be online. If required my Pitch foundation can help in this direction
ReplyDeleteIt is good idea... will try Pitchappan
Delete