Wednesday 17 January 2024

Ajanta Caves / அஜந்தா குகைகள் /Vakataka dynasty Rock Cut Caves/ Buddhist Caves, Ajanta, Aurangabad, Maharashtra State, India.

The Visit to this Ajanta caves was a part of “Elephanta, Ajanta and Ellora Heritage walk” organized by Enthisai Historical Heritage Walk Group, from December 23rd to 26th December 2023.


அஜந்தா புத்தமத குடைவரைகள் வாக்ஹோரா நதிப்பள்ளத்தாக்கில், இயற்கையாக குதிரை லாட வடிவத்தில் அமைந்த செங்குத்தான பாறையில் குடையப்பட்டுள்ளது. இக்குகைகள் ஆற்றின் கரையில் இருந்து சுமார் 76 மீட்டர் உயரத்தில் குடையப்பட்டுள்ளது. அஜந்தாவில் இருக்கும் முப்பது குடைவரைகள் இரு காலக்கட்டங்களில் குடையப்பட்டது. முதல் கட்டமாக பொயுமு 2ஆம் நூற்றாண்டில் இருந்து பொயு நான்காம் நூற்றாண்டு வரை ஆறு குடைவரைகள் ( 8, 9, 12, 13 & 15A – புத்த மதத்தின் ஹீனாயான பிரிவைச் சார்ந்தவை ) சாதவாகனர் ஆட்சிக்காலத்திலும், இரண்டாம் கட்டமாக மீதமுள்ள குடைவரைகள் ( புத்தமதத்தின் மஹாயான பிரிவைச்சார்ந்தவை ) பொயு 5-6 ஆம் நூற்றாண்டுகளில் வாகாடக பேரரசின் ஆட்சிக்காலத்திலும் குடையப்பட்டது. இக்குகைகளில் காணப்படும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வரையப்பட்ட ஒவியங்கள் இந்தியாவின் கலைத்திறனுக்கு காலம் கடந்தும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.

சாதவாகனர் காலத்தைச் சார்ந்த ( புத்த மதத்தின் ஹீனாயான பிரிவைச் சார்ந்த குடைவரைகள் 8, 9, 12, 13 & 15A ) குடைவரைகள் அமைப்பில் மிகவும் சாதாரணமாகவும், அதே சமயத்தில்  சுவரிலும், விதானத்திலும் வரையப்பட்ட ஓவியங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவைகளாகக் கருதப்படுகின்றது. அவ்வோவியங்கள், புத்தரின் வாழ்கை வரலாறு, புத்தமத ஜாதக கதைகள், அக்காலத்தில் நிலவிய சமுதாயப்பண்பாடு, அவர்களின் வாழ்க்கைமுறை, ஆடைகள், அணிகலன்கள், மற்றும் பலவிதமான அழகிய வடிவங்கள் என வரையப்பட்டு உள்ளது. இவ்வோவியங்கள் சாஞ்சி மற்றும் பாமத் போன்ற இடங்களில் காணப்படும் ஓவியங்களுக்கு நிகராகக் கருதப்படுகின்றது. இக்குடைவரைக் குகைகள் மரத்தால் கட்டப்பட்ட கோயில்களின் அமைப்பை ஒட்டி குதிரையின் லாட அமைப்பிலும் விதானம் மரச்சட்டங்களால் செய்யப்பட்டதைப் போன்று குடையப்பட்டு உள்ளது. மேலும் இது புத்தபிக்குகள் தங்குமிடமாகவும், தொழும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டன. 5 - 6 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியா வந்த சீனப்பயணி யுவாங் சுவாங் இந்த குகைகளுக்கு நேரில் வராவிட்டாலும் இக்குகைகளைப்பற்றி தனது பயணக் குறிப்பேட்டில் குறிப்பிட்டு உள்ளார்.

இவ்வோவியங்கள் சொரசொரப்பான தளத்தின் மீது, சுண்ணாம்பு, மாட்டுச்சானம், தாவரத்தின் காய்ந்தபகுதிகள், மணல் மற்றும் மண் கொண்டு பூசப்பட்டு, அதன்மீது இயற்கையாகக் கிடைத்த கற்களின் வண்ணங்களைக் கொண்டு வரையப்பட்டது.     

கல்வெட்டு தகவல்களின் படி மஹாயான புத்தபிரிவைச் சார்ந்த சில குடைவரைக் குகைகள் வகாடக பேரரசின் அரசர் ஹரிசேனாவின் ( பொயு 475 – 500 ) மந்திரி வராகதேவரால் குடையப்பட்டது. இக்குகைகள் அனைத்தும் 5 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு குடையப்பட்டன. 26 ஆம் எண் குகையில் உள்ள கல்வெட்டு ராஷ்ட்ரகூட மன்னர்களின் பங்களிப்பைச் சுட்டுகின்றது. இக்குடைவரைகளில் புத்தரின் பலவிதமான நிலைகள், பரிநிர்வான நிலை உட்பட சிற்பங்களாக வடிக்கப்பட்டு உள்ளது. பலபுத்தர் சிற்பங்கள் அவரது உபதேச முத்திரையிலேயே காணப்படுவது ஒரு சிறப்பு ஆகும்.

Ajanta Caves ( 75 40° E: 20°30'N ) are famous for their murals which are the finest surviving examples of Indian art, particularly painting. These caves were excavated in horse-shoe shaped bend of rock scarp nearly 76 mtr. in height overlooking a narrow stream known as Waghpra.

The location of this valley provided a calm and serene environment for the Buddhist monks who retreated at these selected places during the rainy season. Each cave was connected to the stream by a flight of steps, which are now almost obliterated, albeit traces of some could be noticed at some places. In all 30 caves were hewn out of the living rock in different periods according to the necessity.

Out of these, five ( cave nos. 9, 10, 19, 26 and 29 ) are Chaitya-grihas and the rest are viharas. In date and style also these caves can be divided into two broad groups. Out of the 30 caves 6 caves belong to the earliest phase of Buddhism Le Hinayana. Caves 9 & 10 which are Chaitya-grihas and 8, 12, 13 & 15A which are Viharas belong to this phase. These caves are datable to the pre-Christian era, the earliest among them being Cave 10 dating from the second century B.C E, where the object of worship is a stupa. These caves are imitation of contemporary wooden constructions even to the extent of fixing of wooden rafters and beams to the ceiling even thought they are non-functional. These early caves were painted but nothing substantial has survived. Caves No.9 and 10 clearly show some vestiges of painting. The headgear, ornaments of the images in these painting resemble the bas-relief sculpture of Sanchi and Bahamut.

The addition of new caves could be noticed again during the period of Vakataka Dynasty, the contemporaries of the imperial Guptas. These were caused to be excavated by the royal family and also the feudatories owing allegiance to the Vakatakas. Varahadeva, the minister of Vakataka king Harishena ( 475-500 CE ) dedicated Cave 16 to the Buddhist Sangha while Cave 17 was the gift of a prince ( who subjugated Asmaka ) a feudatory of the same king. A flurry of activity at Ajanta was between mid 5th century CE. to mid 6th  century CE. Hiuen Tsang, the famous Chinese traveler who visited India during the first half of 7th century CE. has left a vivid and graphic description of the flourishing Buddhist establishments here even though he did not visit the caves.

A solitary Rashtrakuta inscription in cave no. 26 indicates its centuries CE. The second phase departs from the earlier one with the pattern in layout as well as the centrality Buddha image, both in use during 8th - 9th introduction of new sculpture as well as in paintings.

All these caves which were once painted, but now the best examples of these exemplary paintings of Vakataka period could be noticed only in caves 1, 2, 16 and 17. The variation in style and execution in these paintings also are noticed, mainly due to different authors who followed contemporary style.

The main theme of the paintings is the depiction of various Jataka stories-different incidents associated with the life of Buddha, and the contemporary events and social life. The ceiling decoration invariably consists of decorative patterns, geometrical as well as floral. Apart from painted representations, Sculptural panels also adorn the beauty of the caves.

Ajanta paintings are the best examples of Tempera technique, executed after elaborate preparation of rock surface. After chiseling rock surface, different layers of clay mixed with ferruginous earth, sand, fibrous material of organic origin were applied very carefully. Then the surface was finally finished with a thin coat of lime wash.

Over this surface, outlines are drawn boldly, then the spaces are filled with requisite colours in different shades and tones to achieve the three dimensional effect of rounded and plastic volumes. The colours and shades utilised also vary from red and yellow ochre, terra verte, to lime, kaolin, gypsum, lamp black and lapis lazuli, The chief binding material used here was glue.

These group of cave are being maintained by Archaeological Survey of India, Aurangabad Circle, The group of caves is inscribed by the UNESCO as a World Heritage Monument in the year 1983.

CAVE NO. 1.
5 ஆம் நூற்றாண்டு வகாடகா பேரரசு காலத்தைச் சார்ந்த முதலாம் எண் குடைவரை, தாழ்வாரம் ( தற்போது இல்லை ), 6 தூண்களுடன் முக மண்டபம், 20 தூண்களுடன், மஹாமண்டபம், இடைநாழி மற்றும் கருவறை என்ற அமைப்பில் குடையப்பட்டுள்ளது. அரைத்தூண்கள், முழுத்தூண்கள் மற்றும் அதன் போதியல்கள் அழகிய வேலைப்படுகளுடன் சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளது. கருவறையில் புத்தர் அமர்ந்தநிலையில், உபதேசிக்கும்/ தர்மசக்கர முத்திரையுடன் காணப்படுகின்றார். மண்டப சுவர்கள் மற்றும் மண்டப விதானங்களில் ஓவியங்கள் அழகாக வரையப்பட்டு உள்ளன. இவ்வோவியங்கள், பெரும்பாலும் புத்தரின் ஜாதக கதைகளாகவே காணப்படுகின்றன. மேலும் சிபிசக்ரவர்த்தி & புறா, கதை, புத்தரின் வாழ்கை பிறந்தது முதல் அனைத்தும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. கருவறை முன்பு இரு பக்கங்களிலும் அஜந்தா ஓவியத்தின் பேரழகாகவும் சின்னமாகவும் போற்றப்படும் போதிசத்வரின் பத்மபானி மற்றும் போதிசத்துவர் அவலோகிதீஸ்வரர் / Bodhisattva Avalokitesvara ஓவியங்கள் இன்றும் நல்ல நிலையில் காணப்படுகின்றது. புத்தரின் கீழ் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டின்படி இக்குடைவர 5 ஆம் நூற்றாண்டில் குடையப்பட்டதாக முடிவு செய்யப்பட்டது.   

This 5th Century, Vakataka period Cave 1 of Ajanta received a special treatment in that it had a pillared porch ( now fallen ) like Cave 19 and a verandah frontally supported by six elegantly-decorated columns, the sculptured capitals of which carry spectacular entablatures with friezes of sculptures,  including scenes from the life of Buddha. The interior has a hall with twenty pillars and four pilasters arranged in a square and fourteen cells excavated into the walls. The central pillars of the back row are lavishly carved with extra ornamentation, again having on their capitals scenes from the life of Buddha. An antechamber leads to the sanctum enshrining a colossal image of Buddha. The other vihāras, including Caves 16 and 17, datable on inscriptional evidence to the end of the fifth century, follow the same pattern. Cave 4, one of the largest vihāras of Ajanta, can be definitely taken to be con- temporary to, or very slightly later than, Caves 1, 2, 16 and 17 on the strength of a recently- found inscription on the pedestal of the image of Buddha in the shrine 2. 

போதிசத்துவர் பத்மபானியாக- Bodhisattva Padmapani.
Here is Bodhisattva Padmapani himself-the focal figure of the elaborate panel. He towers over all his paraphernalia; his head is held high among the cloudy hills. Yet, unconscious of the majestic surroundings, his figure, of peerless grace, dissolves, as it were, in infinite compassion for the living world in sympathy with its miseries and with a promise of deliverance.
போதிசத்துவர் பத்மபானி ஓவியம் ஒரு விடுதியில்
போதிசத்துவர்- Part of the panel Bodhisattva Avalokitesvara






தூண் சிற்பங்கள்

A part of ceiling decoration
A part of ceiling decoration
போதிசத்துவர்- Part of the panel Bodhisattva Avalokitesvara
போதிசத்துவர் பத்மபானியாக- Bodhisattva Padmapani.
போதிசத்துவர் பத்மபானியாக- Bodhisattva Padmapani.
Buddha Jataka stories 
Buddha Jataka stories 
Buddha Jataka stories 
A part of ceiling decoration
Ceiling-decorations at Ajanta are usually ornamental, but here is a definite picture which depicts a distinguished foreigner (Persian ?) enjoying his drink and with five attendants, also foreigners, three of them ladies.

CAVE NO. 2
பொயு. 6 – 7 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இக்குடைவரை 35.7 x 21.6 மீட்டர் என்ற அளவில் குடையப்பட்டு புத்தமதத்தின் ஒரு பிரிவான மஹாயான மடாலயமாக கருதப்படுகின்றது. இக்குடைவரை முன்மண்டபம், மஹாமண்டபம், இடைநாழி ஒரு பிரதான கருவறை மற்றும் இரு உபகருவறைகள் என்ற அமைப்பில் குடையப்பட்டு உள்ளது. பிரதான கருவறையில் புத்தர் உபதேச முத்திரையில் / தர்மசக்கரம், அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். புத்தரின் தலைக்கு மேலே போதிசத்துவரும், தேவதைகளும் காட்டப்பட்டு உள்ளனர். பிரதான கருவறைக்கு மேற்கே உள்ள கருவறையில் செல்வத்தின் காவலர்களான சங்கநிதி மற்றும் பத்மநிதியும், கிழக்கு கருவறையில் ஹரிதி பஞ்சிகா என்ற தாய்தெய்வ படிமங்களும் செதுக்கப்பட்டு உள்ளன. மஹாமண்டபத்தின் விதானம் மற்றும் சுவர் பகுதிகள் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அவ்வோவியங்கள், வட்ட வடிவங்கள், பூக்களாலும், கருவறை மற்றும் இடைநாழி சுவர்களை எண்ணற்ற புத்தர் ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. ஜாதககதைகள் எனப்படும் புத்தரின் கடந்த பிறவிகளின் நிகழ்வுகள் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.       

The Mahayana monastery ( 35.7 X 21.6 m ) is one of the best caves at Ajanta. On the basis of paleography it belongs to 6th - 7th   century CE. It consists of a verandah, a hypostyle hall, an antechamber, sanctum with two sub shrines, chapels and a group of cells. Lord Buddha is enshrined in the sanctum flanked by celestial nymphs and Bodhisattvas. The Western sub-shrine of the sanctum houses the figures of Shankha nidhi-Padma nidhi ( Gods of Prosperity ), while the Eastern sub-shrine of the sanctum contains the figures of Hariti-Panchika ( symbol of Motherhood ). The massive pillars and door frames are elaborately caved with designs and decorated with paintings. Extensively painted, it is famous for its ceiling painting in the hall, antechamber, verandah and chapels. The paintings contain some of the finest circle designs drawn in contrasting colors, which still retain their brightness and lustre. The wall of the sanctum and antechamber are painted with countless figures of Lord Buddha, while those of the halls are painted with illustrations of the former births of Lord Buddha, known as Jatakas.
Archaeological Survey of India, Aurangabad Circle.






A part of ceiling decoration
A part of ceiling decoration
Budhha Jataka stories 
Budhha Jataka stories 
Budhha Jataka stories 
Budhha Jataka stories 

Part of scenes of the life of Buddha.
The scene, consisting of monotonously-reproduced figures of Buddha in various mudrās, represents the Miracle of Śrāvasti, wherein Buddha multiplied himself to the bewilderment of his critics.


CAVE NO. 16
கல்வெட்டின்படி பொயு ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இக்குடைவரை 19.5 22.25 x 4.6 மீட்டர் என்ற அளவில் வகாடக பேரரசின் அரசர் ஹரிசேனாவின் ( பொயு 475 – 500 ) மந்திரி வராகதேவரால் குடையப்பட்டது. மடாலயமாகக் கருதப்படும் இக்குடைவரை பெரியதும், பல புத்தரின் அழகான நிலைகள் படிமங்களாகவும், ஓவியங்களாகவும் காணப்படுகின்றது. பிரகாரசுற்றுப்பாதை, கருவறை, முகமண்டபம், ஆகியவற்றுடன் குடையப்பட்டுள்ளது.

கருவறையில் புத்தர் போதனை செய்யும் முத்திரையில் / தர்மசக்கரம் சிம்மாசனத்தின் மீது அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். புத்தரின் தலைக்கு மேலே தேவர்கள் மற்றும் போதிசத்வர்கள் சாமரதாரிகளாக காட்டப்பட்டு உள்ளனர். மஹாமண்டப விதானத்தில் காணப்படும் ஓவியம், சாமயானாவை ஒத்து காணப்படுகின்றது. மேலும் புத்தரின் ஜாதக கதைகள், இளவரசரின் இறப்பு, மாயாவின் கனவு, அஷிட்டாவின் கணிப்பு, Sravasti and Sujata கீர் என்ற பானத்தைக் கொடுக்கும் காட்சி, ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது

This is the largest and certainly the finest and most interesting monastery ( 19.5 X 22. 25 X 4.6 m ) at Ajanta, famous for portraying the various episodes of Buddha's life. An inscription found on the wall of verandah, records the gift of this cave by Varahadeva a minister of Vakataka King Harisena. ( 475-500 CE. )

It consists of a Verandah, hypostyle hall, sanctum, chapels and cells. The sanctum has a circumambulatory and houses Lord Buddha on Lion throne, in preaching posture. Lord Buddha is flanked by Bodhisattvas as fly whisk-bearers and celestial nymphs carrying garland. The pillars are tall, devoid of any carvings, but once contained beautiful paintings. The previous births of Buddha known as Jatakas are artistically and ingeniously drawn on the walls. The ceilings are filled with floral, faunal and a geometrical designs and the whole ceiling creates an impression of fluttering shamiyana. It has masterpieces of paintings like death of princess, Asita's prediction, conversion of Nanda, Maya's dream, Miracle of Sravasti and Sujata offering kheer. Some of the paintings here are also inscribed.





Pothyal Sculptures - போதியல் சிற்பங்கள் 
Pothyal Sculptures - போதியல் சிற்பங்கள் 
Pothyal Sculptures - போதியல் சிற்பங்கள் 
Buddha Jataka stories 



Buddha's Jataka stories

CAVE NO. 17
நேர்த்தியாகவும், பிரமிக்கத்தக்கதுமான இக்குகை புத்தமதத்தின் மஹாயான பிரிவு மடலயத்திற்காக  குடையப்பட்டது. இக்குகையில் உள்ள பிராமிக் கல்வெட்டுக்களின் படி இக்குகை மடாலயம் வகாடகா பேரரசின் மன்னர் ஹரிசேனாவின் ஆட்சிக்காலத்தில் ( 475 - 500 CE.), முக மண்டபம், மகாமண்டபம் இடைநாழி, கருவறை என்ற அமைப்பில் குடையப்பட்டு உள்ளது. மகாமண்டபத்தில் 20 எண்பட்டைத் தூண்கள் ஓவியங்களுடன் மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. வாயில் மிகவும் நேர்த்தியாக சிற்பங்களுடனும், கதவிற்கு மேலே 7 புத்தர் மற்றும் பிற்காலத்தில் வரப்போகும் மைத்ரேயரின் ஓவியங்கள் காணப்படுகின்றன.  

கருவறையில் புத்தர் வியாக்கியான முத்திரையுடன் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். புத்தரின் தலைக்கு மேலே, தேவதூதர்கள் பறக்கும் நிலையிலும், மற்றும் போதிசத்துவர்களும் காட்டப்பட்டு உள்ளனர்.  

வாகாடக பேரரசு காலத்தைச் சார்ந்த ஓவியங்கள் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு உள்ளது. புத்தரின் மிகஅதிகப்படியான ஜாதகக்கதை சிற்பங்கள் இக்குகையில்தான் காணப்படுகின்றன. முகமண்டப சுவற்றில் ஜோதிடத்தில் வரும் 12 ராசிகள் பெரிய அளவில் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. அதனால் இக்குகை ராசிக்குடைவரை என்றும் அழைக்கப்படுகின்றது.

This is one of the finest and magnificent Mahayana monasteries, known for its display of the greatest number of Jatakas. A Brahmi inscription, on the wall of the courtyard records the excavation of this cave by a feudatory prince under Vakataka King Harisena ( 475 - 500 CE. ) The monastery is also called the zodiac cave from a circular piece of gigantic wheel, also painted on verandah wall. It consists a verandah, hypostyle hall, sanctum with an antechamber, chapels and cells. The sanctum houses a huge image of Lord Buddha, flanked by Bodhisattvas and flying figures hovering above them.

The cave consists some of the well-preserved paintings of the Vakataka Age. Twenty octagonal pillars mostly painted devoid of any carving, support the hall. The doorframe is lavishly carved and painted. The lintel of the main door portrays seven Mortal Buddhas along with the future Buddha 'Maitreya'.

Archaeological Survey of India, Aurangabad Circle.

A part of ceiling decoration
A part of ceiling decoration
Epiphany of Buddha, a thousand images showing the Enlightened one in various attitudes of contemplation, fearlessness, preaching, gifting the three jewels and moving the Wheel of Dharma
A part of ceiling decoration
Entrance to the monastery.
Over the door are eight compartments, each with a yaksha-couple. Above it is a row of the seven Past Buddhas and Maitreya, the Future Buddha. A sculptured figure of a deity on makara flanks each side of the doorway.

Part of a scene of the worship of Buddha. Along with other celestials, a nymph moves to worship Buddha with effortless ease through the aerial region, the strong wind swaying her ornaments and tassels

A Game of Sheep / Goats fight 
A Game of Cocks fight 
Buddha Jataka stories Connected with white elephant
Buddha Jataka stories 
Buddha Jataka stories 
Part of the story of the Sibi-Jataka.
Warriors, with weapons, flags and buntings, rejoicingly return to the capital with king Sibi (not included in the plate) after his reputation as a peerless donor has been vindicated.






Ref:
1. Display boards at the entrance of the caves.
2.  UNESCO World Heritage, Convention web site                        https://whc.unesco.org/en/list/242/
3. Ajanta Murals by Archaeological Survey of India ( ASI )

NOTE
The caves will kept open from 6.00 hrs to 18.00 hrs 
The cave is closed on Monday

HOW TO REACH
The Ajanta Caves are  about 8 KM from Ajanta, 103 KM from Ellora Caves,  268 KM from Nashik and 414 KM from Mumbai.  
Nearest Railway Station is Mukundwadi.
Nearest airport Aurangabad

LOCATION OF THE CAVES    : CLICK HERE






 --- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment