The
Visit to this Sri Kailasanathar Temple at Sembiyanmadevi was a part of the “Visit
to Shiva, Murugan, Divya Desams, Buddha, and Jain Temples around Nagapattinam”
on 4th September 2024. This place is being called in the name of
Sembianmadevi the Queen of Gandaraditya Chozha, who had constructed Many Shiva
Temples and reconstructed brick temples as a Stone temple. This is one of the
Shiva temples built by her.
Moolavar : Sri Kailasanathar
Consort : Sri Brahan Nayagi / Periya Nayagi
Some
of the salient features of this temple are…..
The
temple faces east with a mottai gopuram. The temple tank is in front of the
temple. A Subramaniar Sannidhi is on the right side of the Rajagopuram with
Stucco dwarapalakas. The Rajagopuram is of 3 tiers. Dwajasthambam, balipeedam,
and Rishabam are after the Rajagopuram. Dwarapalakas are at the entrance of
Sanctum Sanctorum. Moolavar is small on a round avudayar.
In
koshtam, Agasthiyar, Natarajar, Vinayagar, Dakshinamurthy, Maha Vishnu,
Arthanareeswarar, Durgai, and Pichadanar.
In
praharam, Somaskandar, Sembiyanmadevi ( installed by Rajendra Chozha-I),
Vinayagar, Sri Valli Devasena Subramaniar, Saptamatrikas, Chandikeswarar,
Vinayagar, Aiyyanar with Poorna & Pushkala, Amirtha Lingam, Maha Lakshmi,
Gandaradithar, Jyeshtadevi, and Natarajar Sannidhi.
ARCHITECTURE
The
temple consists of Sanctum Sanctorum, antarala, ardha mandapam and maha
mandapam. The sanctum sanctorum is on a lotus peedam, adhistanam with jagathy,
Vrudha kumudam, and pattikai. The Bhitti starts with Vedikai. The pilasters are
of Vishnukantha pilasters with kalasam, kudam, mandi, palakai and tharanga
pothyal.
The
prastaram consists of valapi with bhuta ganas, kapotam with nasi kudus, and
Viyyalavari. The Superstructure Vimanam was built with bricks. The Vimanam is
of 2 tiers vesara style. Shiva, Dakshinamurthy, Maha Vishnu, and Brahma are on
the tala and Greeva koshtams.
The
ardha mandapam is supported by Vrudha pillars with kalasam, kudam, palakai and
tharanga pothyal.
All
the mandapas are constructed in Vavvalnethi style during Nayakas / Maratas.
HISTORY
AND INSCRIPTIONS
As per the
inscription this Kailasamudaiya-Mahādēva Temple, was built and consecrated by
Udaiyapirātțiyār
Madhurāntakan-Mādēvadigaļār alias Sembiyan-Mahādēviyār at Sembiyamahādēvi
chaturvēdimangalam a brahmadēya Village. The temple also received contributions from Pandyas and Vijayanagaras.
Rajaraja-I’s
period inscription, ( SII Vol-13, No 78, AR No 497 of 1925 ), on the south wall
of the Sanctum Sanctorum, records a list of the several articles presented to
the temple of Kailāsam-udaiya- Mahādēva at Sembiyanmahādēvi-chaturvēdimangalam
in Ala-nādu by Sembiyan Mahādēvi alias Parāntakan Mādēvadigaļār, the mother of
Uttama-Chola, in the month of Mina of the year. These comprised a golden pot
(weight 190 kalanju), two golden forehead plates (90 kalañju), 3 gold flowers
(11 ¼ ) kalanju), 21 gold flowers (79 ¾ kalanju), and two more gold flowers (5
½ ) kalañju). This is a record of Rājarāja-I.
Uttama-Chōla’s 12th
reign year inscription ( SII Vol-19, 311, AR 494 of 1925) on the South wall of
the Sanctum Sanctorum, records an endowment in money made by Battan
Dānatongiyar Malapādi Tennavan-Mahādēviyār, Vänavan-Mādēviyār daughter of
Irungōlar and two others the daughters of Vilupparaiyar and Palavēttaraiyar
(chiefs)-all queens of Uttama-Chōla for social worship and offerings in the
temple on the days of Kõttai (asterism) in Chittirai month, that being the
natal star of their mother-in-law (queen Sembiyan-Mahādēvi). The amounts are
said to have been entrusted for the Chaturvējibhatta-Tanapperumakkal which
seems to be meant by the committee of management who were bound by obligation
(sāsana-biddha). The inscription is built in at the right end and bottom.
Uttama-Chōla’s ( Gandan Madhurāntakadēvar )15th
reign year inscription on the base of the west side ( SII Vol-19, No. 379. (A.
R. No. 485 of 1925), records an endowment of land made after purchasing the
same from several individual owners, by queen Urattayan Sõlabbaiyar alias
Tribhuvana-Mahādēviyār to provide for the conduct of the sacred bath of the god
on the days of sankranti, for burning a perpetual lamp, and for feeding a
hundred Brahmanas on the day of Uttarāyana-sankranti, in the temple of
Kailasamudaiya-Mahādēva built and consecrated by Udaiyapirātțiyār
Madhurāntakan-Mādēvadigaļār alias Sembiyan-Mahādēviyār at Sembiyamahādēvi
chaturvēdimangalam a brahmadēya in Ala-nādu on the southern bank of the river
which was also founded by the same queen-mother. The inscription is incomplete
and hence further details of the land are lost. Mention is made in the middle
of the record of some land purchased by Deviyar Ārüran Ambalattadigaļār
(another queen).
Uttama-Chōla’s ( Gandan Madhurāntakadēvar ), 15th
reign year inscription ( SII Vol-19, Sl No. 380, A. R. No. 488 of 19250), on
the west and South adhistanam, is a supplement to the record No. 379 above and
gives a detailed schedule of the several items of requirements of worship,
sacred bath, lamps and feeding in the temple, with their value in paddy, which
was provided by the endowment registered in that record.
Uttama-Chōla’s ( Gandan Madhurāntakadēvar ), 15th
reign year inscription ( SII Volume-19, Sl No. 381, A. R. No. 490 of 1925.) on
the South side of the adhistanam, records the gift of a gold forehead plate for
god Sri Kailāyamudaiya-Mahādēva by Pattan Dānatongiyar another queen of Uttama Chōļa.
Uttama-Chōla’s ( Gandan Madhurāntakadēvar ), 15th
reign year inscription ( SII Vol -19, No. 382. A. R. No. 491 of 1925.) on the
South side adhistanam records a gift of a flywhisk with a golden handle
weighing 30 kalañju by Pañchavan Mahādēviyār still another queen of
Uttama-Chola
Uttama-Chōla’s ( Gandan Madhurāntakadēvar ), 15th
reign year inscription ( SII Vol – 19, No. 383 A. R. No. 492 of 1925.), on the
same wall records an endowment of 507 kalañju of gold deposited with the Chaturvedi-
bhattattānapperumakkal of Sembiyanmahādēvi - Chaturvēdimangalam by
Kannapparaśiyar alias Sonna (Svarņa) Mahādēviyar (a queen of Uttama-Chola?), to
provide with the interest thereon for special offering to the god and its
distribution, on the day of Kettai (Jyeshtha) asterism in Chittirai month,
which was the natal star of the queen- mother Sembiyan-Mahādēviyar the founder
of the temple and of the village. S. I. I. Vol. XIX..51.
Uttama-Chōla’s ( Gandan Madhurāntakadēvar ), 16th
reign year inscription, ( SII Volume -19, No. 405, A. R. No. 496 of 1925)
inscription on the South wall of the Sanctum Sanctorum has been left incomplete,
records an endowment of Sl No- 143 and odd and SL No 145, 16th regnal
and odd kalañju of gold made respectively by Arūran Ambalattadigaļār and
Uratyem, tayan Sõrabbaiyār two of the queens of Uttama-Chola for the same
purpose as is mentioned in Nos. 311 and 383 above, of providing for offerings
to the god on the day of Kettai in Chittirai month the birthday asterism of
Sembiyan-Mahādēviyar the mother of Uttama-Chōla and founder of the temple. The
money was deposited with the Sasanabaddha-chaturvēdi-bhattat-tānapperumakkal
(committee), which was also appointed by the queen's mother.
Uttama-Chōla’s ( Gandan Madhurāntakadēvar ), 16th
reign year inscription, Uttama-Chōla’s ( Gandan Madhurāntakadēvar ), 16th
reign year inscription, ( SII Vol-19, Sl No 458, A. R. No. 489 of 1925.) on the
South wall of the Sanctum Sanctorum, records an endowment, left with the
Chat-Bhatta of Sembiyanu hilēvi-chatarvõlimangalam in Ala-nādu, of 158 kalanju
of gold with the interest on which offerings were to be made to god
Kailasamudaiya - Mahadeva on the day Mettei in Chittirai month of every year,
being the natal star of Parantakan-Madivades Sembiyan nahādēviyar, the queen
mother of Uttama-Chula. The donor whose name is not clear in the inscription,
seems to have been a queen of Uttama-Chola himself and hailed from
Pangala-nādu.
கல்வெட்டுக்கள் தமிழில் இக்கட்டுரையின் கடைசியில் கொடுக்கப்பட்டு உள்ளது.
Ref:
1. South
Indian Inscriptions, Volume -13, Sl. No 78.
2. South
Indian Inscriptions, Volume -19, Sl. Nos. 311, 379-83, 405, and 458.
3. Nagapattina Mavatta kalvettukkal
Maha
Kumbhabhishekam was conducted on 13th May 1959, for which the
thirupani was started in 1956.
POOJAS
AND CELEBRATIONS
Apart
from the regular 4 kala poojas, special poojas are conducted on Pradosham, Maha
Shivaratri, Vinayagar Chaturthi, Deepavali, New Year Days, Thai Pongal, Deepavali,
etc.
TEMPLE
TIMINGS
The
temple be kept open between 06.00 hrs to 12.00 hrs and 16.00 hrs to 19.30 hrs.
CONTACT
DETAILS
HOW
TO REACH
To
reach Sembiyanmadevi, from Nagapattinam to Velankanni Road, turn left after 7 km on Paravai Road. Sembiyanmadevi is 8 km from there.
The
temple is 15 KM from Nagapattinam, 13 KM from Velankanni, 25 KM from
Thiruvarur, and 10 KM from Kilvelur on Nagapattinam to Thiruvarur Road.
Nearest
Railway Station is Velankanni and the junction is Nagapattinam.
LOCATION
OF THE TEMPLE: CLICK HERE
Saptamatrikas ( Left side )
Spatamatrikas ( Right Side )
Jyeshta devi
AiyyanarAmbal Temple
Chandikeswari at Ambal Temple
Entrance Rajagopuram base.
Temple tank
---
OM SHIVAYA NAMA ---
கல்வெட்டுகள் தமிழில்
பொயு. 10 ஆம் நூற்றாண்டு சோழர்கள் காலத்தைச் சார்ந்த, கைலாய நாதர் கோயில் அந்தராளத் தெற்கு, மேற்கு,
வடக்குப் பட்டிகையில் உள்ள கல்வெட்டு பல்வேறு
ஆண்டுகளில் கொடையாக அளிக்கப்பட்ட பல்வேறு அணிகலன்களின் பட்டியலாக உள்ளது. மிகவும்
சிதைந்துள்ளது. தொடர்ச்சியாகத் தெரிந்து கொள்ள இயலவில்லை. முதலில் சிறுபகுதி
சமஸ்கிருதத்திலும், பிற்பகுதி தமிழிலும் உள்ளது.
பொயு 10 ஆம் நூற்றாண்டு சோழர்கள் காலத்தைச் சார்ந்த கையிலாய நாதர் கோயில் கருவறை, இடைக்கட்டு
(அந்தராளம்) வடசுவரில் உள்ள கல்வெட்டு பெரிதும் சிதைந்தும்,
கட்டடத்தினுள் மறைந்தும் விட்டது அருமொழி
அறிஞ்சிகைப் பிராட்டியார் சாசன பந்தப் பெருமக்களிடம் 220 பொன்
கொடையளித்ததைக் குறிக்கிறது. சித்திரைக் கேட்டை நாளில் செய்யப்பட வேண்டிய
வழிபாட்டுக்காக இக்கொடை வழங்கப்பட்ட தென்ற தெளிவினைக் கல்வெட்டு ஆண்டறிக்கை மூலம்
பெறமுடிகிறது.
முதலாம் இராசேந்த்திரனின் கைலாசநாதர்
கோயில் கருவறை, இடைக்கட்டு (அந்தராளம்), வடபுறக் குமுதத்தில் உள்ள கல்வெட்டு துர்க்கை கோட்டக் கட்டடத்தினுள் மறைந்துள்ளது.
செம்பியன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்கள் வசம், திருநந்தவனம் அமைப்பதற்காக நிலம்
அளித்ததைக் குறிக்கிறது. நிலத்தின் எல்லைகளும், அளவுகளும்
குறிக்கப்படுகின்றன. சிம்ம நாயற்று (ஆவணி மாதம்) செவ்வாய்க்கிழமையும், கேட்டை நட்சத்திரமும் கூடிய ஒருநாளும், துலா நாயற்று
(ஐப்பசி மாதம்) சனிக்கிழமையும், ஆயில்ய நட்சத்திரமும் கூடிய
ஒருநாளும் குறிப்பாகச் சொல்லப்படுகின்றன.
இராஜகேசரி வர்மனின் ( முதலாம் இராஜராஜன் ) 7 ஆம் ஆட்சி
ஆண்டு கைலாசநாதர் கோயில் கருவறை வடபுற ஜகதியில் உள்ள கல்வெட்டின்
பிற்பகுதி சிதைந்துள்ளது. பராந்தகன் மாதேவடிகளான ஸ்ரீ செம்பியன்
மாதேவியார், தென்கரை அளநாட்டுப் பிரம்மதேயமான செம்பியன்
மாதேவிச் சதுர்வேதி மங்கலத்தில் எடுப்பித்த கைலாசமுடையார் கோயிலில் உள்ள சாசனபந்த
சதுர்வேதிபட்டதானப்பெருமக்கள் வசம், உத்தம சோழர் தேவியார் உறட்டையன்
சோரப்பயரான திரிபுவன மாதேவியார், செம்பியன் மாதேவியார்
பிறந்த நாளான சித்திரை மாதம் கேட்டைநாளில் செய்தற்குரிய சிறப்பு ஏற்பாட்டினைச்
செய்ததைத் தெரிவிக்கிறது. 100 காசுகளைக் கொடுத்து அதன் வட்டியிலிருந்து
சிறப்பு வழிபாட்டுக்கு வகை செய்தார் என்பது ஆண்டறிக்கை மூலம் தெரியவருகிறது.
உத்தமச்சோழரின், கைலாசநாதர் கோயில்
கருவறை வடபுற மற்றும் மேற்கு ஜகதிப் படைகளில் உள்ள கல்வெட்டுக்கள், முன்னும் பின்னும் மிகவும் சிதைந்துள்ளது. செம்பியன்
மகாதேவியார் எடுப்பித்த ஸ்ரீகைலாசமுடைய மகாதேவர் கோயிலில், ஒவ்வொரு
மாதப்பிறப்பு (சங்கராந்தி) நாளிலும், 100 பிராமணர் உணவுண்ண
உத்தம சோழனின் மனைவி திரிபுவன மாதேவியார் செய்த நிலக்கொடையைக் குறிக்கிறது.
கொடையளிக்க வாங்கப்பட்ட நிலம், தாயும் மகளுமான இருபெண்களின்
ஸ்ரீதனமான நிலம் என்ற கூடுதலான செய்தி கல்வெட்டு ஆண்டறிக்கை மூலம் தெரிய வருகிறது.
கோப்பரகேஸரி உத்தமசோழரின், கைலாசமுடையார்
கோயிலின் கருவறை மேற்கு, தெற்கு ஜகதியில் உள்ள கல்வெட்டின் தொடக்கம் சிதைந்துள்ளது. உத்தம சோழதேவரின் மூத்த அரசியான
உறட்டயன் சோழப்பையனாரான திரிபுவன மாதேவியார், மாதப் பிறப்பு
நாள்களில், கைலாசமுடையார்க்குத் திருநீராட்டு
செய்வதற்காகவும், பெருந்திருவமுது படைப்பதற்காகவும், உத்தராயன, தக்ஷிணாயன சங்கராந்தி நாள்களில் நாள்
ஒன்றுக்கு 100 பேர் வீதம் 200 பேர்
பிராமணர் உண்பதற்கும் தேவையான செலவாக நெல்லளிக்க ஏற்பாடு செய்ததைக் குறிக்கிறது.
திருநீராட்டுக்கு அதிவாசனை, பாலிகைக்கு பயிறு, எள், புடவை, நூல், கலசம், திருவமிர்துக்கு அரிசி, பருப்பு, நெய், தயிர், இவற்றை வழங்கும் பரிசாரகர்கள் உள்ளிட்டோர் படி ஆகிய அனைத்துச் செலவுகளும்
விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
இராஜகேசரி வர்மனின் ( இராஜராஜன் ), கைலாசமுடையார்
கோயில் கருவறை அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டின் பிற்பகுதி
பெரிதும் சிதைந்துள்ளது. செம்பியன் மகாதேவிச் சதுர்வேதி மங்கலத்து மஹாசபையார்கள்
முடிவு செய்து கொடுத்த ஆவணம் இது.
பரகேசரிவர்மனின் ( உத்தம சோழன் ) 15 ஆம் ஆட்சி ஆண்டு,
பொயு 986 கைலாசமுடையார் கோயிலின் கருவறைத் தெற்குச் சுவரில் உள்ள
கல்வெட்டு, பராந்தகன் மாதேவடிகளான செம்பியன் மாதேவியார் தான்
நிறுவிய செம்பியன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்தில் அவர் எடுத்த கைலாசமுடையார்
கோயில் சதுர்வேதிபட்ட தானப் பெருமக்களிடம், இவரது பிறந்த
நாளான சித்திரைக் கேட்டை நாளில் உண்பதற்காக, உத்தம சோழரின்
மனைவியார் கண்ணப்பரசியான, சொன்ன மாதேவியார், ஊர்க்கல் நிறைப்படி 507.5 கழஞ்சுப் பொன் அளித்ததைக்
குறிக்கிறது. இதன் முதலழியாமல், பொலிசை பயன்படுத்தப்படுதல்
வேண்டுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
10 ஆம் நூற்றாண்டு மன்னர் யார் என்று அறியமுடியாத 4 ஆம்
ஆட்சி ஆண்டு, கைலாசமுடையார் கோயில் கருவறை தென்புறப் பட்டிகை யில்
உள்ள பெரிதும் சிதைவடைந்த கல்வெட்டு. செம்பியன் மாதேவிச் சதுர்வேதி
மங்கலத்துச் சபையார் கைலாசமுடையார் கோயிலுக்குரிய நிலங்களுக்கான வரியினைக் கட்டுவதைத்
தெரிவிப்பதாக உள்ளது என்ற விளக்கம், கல்வெட்டு ஆண்டறிக்கை
மூலம் பெறப்படுகின்றது. அரசன் பெயர், ஆட்சியாண்டு, பிற வானிலைக் குறிப்புகளையும் அதன் மூலம் அறியமுடிகிறது.
Rajakesarivarman - 4th Year, simha, Monday, Punarvasu -
Portions at the end of the inscription are lost. Seems to record the remission
of taxes on some lands belonging to the temple by the assembly of the village.
இராஜகேசரி வர்மன் ( 5 ஆம் ஆட்சி ஆண்டு ) கைலாசமுடையார் கோயில் கருவறை தென்புற அதிட்டானத்தில் உள்ள துண்டுக் கல்வெட்டு. ஊர்வாரியப் பெருமக்கள் செய்த ஏற்பாட்டினைக்
குறிக்கிறது. வேட்கோவன் நாராயணன் ஆன. குறிக்கப்படுகிறான்.
பரகேசரிவர்மன் ( உத்தம சோழர் ) 15 ஆம் ஆட்சி ஆண்டு பொயு
986, கல்வெட்டு கைலாசநாதர் கோயில் கருவறை தென்புற ஜகதியில் உள்ள
கல்வெட்டு உத்தம சோழனின் தாயான செம்பியன் மாதேவியார் எடுத்த
செம்பியன் மாதேவி சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீ கைலாசமுடையார்க்கு உத்தம சோழனின் மனைவி
பட்டன் தான தொங்கியார் பொன்னால் ஆன பட்டம் கொடுத்ததைக் குறிக்கிறது.
பரகேசரிவர்மன் ( உத்தம சோழர் ) 15 ஆம் ஆட்சி ஆண்டு பொயு
986, கல்வெட்டு கைலாசநாதர் கோயில் கருவறை தென்புற ஜகதியில் உள்ள
கல்வெட்டு உத்தம சோழரின் தாயும், பராந்தகன்
மாதேவடிகளும் ஆன செம்பியன் மாதேவியார் உருவாக்கிய செம்பியன் மாதேவிச் சதுர்வேதி
மங்கலத்தில் அவர் கட்டுவித்த கோயில் ஸ்ரீ கைலாயமுடைய மகாதேவர்க்கு, உத்தம சோழரின் மனைவியார் பஞ்சவன் மாதேவியார் பொன் பிடியுடைய வெண்சாமரையினை
அளித்ததைக் குறிப்பிடுகிறது. இதன் எடை 30 கழஞ்சு என்றும்
குறிக்கப்படுகிறது. இதனைத் தெரிவிக்கும் திருமுகப்படி (அரச ஆணை).
பரகேசரிவர்மன் ( உத்தம சோழர் ) 12 ஆம் ஆட்சி ஆண்டு பொயு
983, கைலாசநாதர் கோயில் கருவறை தென்புற ஜகதியில் உள்ள கல்வெட்டு
உத்தம சோழனின் மனைவியர்களான பட்டன் தானதொங்கியார், மழபாடி தென்னவன் மாதேவியார், இருங்கோளர் மகளார்
வானவன் மகாதேவியார்,விழுப்பரையர் மகளார், பழுவேட்டரையர் மகளார் ஆகிய ஐவரும், உத்தம சோழரின்
தாயாரான செம்பியன் மாதேவியார் பிறந்த நாளான சித்திரைக் கேட்டை நாளில், ஸ்ரீ கைலாசமுடையார் கோயில் சாசனபந்தச் சதுர்வேதிபட்ட தானப்பெருமக்களிடம்,
905 கழஞ்சுப் பொன்னை அளித்து பிராமணர் உணவுண்ணச் செய்த
ஏற்பாட்டினைக் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு வரியிலும், இறுதியிலும்
சில பகுதி கட்டடத்துள் மறைந்து விட்டது.
பரகேசரிவர்மன் ( உத்தம சோழர் ) … ஆம் ஆட்சி ஆண்டு பொயு
…., கைலாசநாதர் கோயில்
கருவறை தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, பங்கள நாடுடையார்
மகளான? உத்தமசோழரின் தேவியார் ஒருவர், செம்பியன்
மாதேவியாரால் எடுப்பிக்கப்பட்ட கைலாசமுடையார் கோயில் இறைவனுக்கு, அவர் பிறந்த நாளான சித்திரைக் கேட்டை நாளில் திருவமுதுக்காக, 158 கழஞ்சுப் பொன்னினைச் சதுர்வேதி பட்டர்களிடம் அளித்து அதன் பலிசையிலிருந்து
செலவு செய்யச் செய்த ஏற்பாட்டினைக் குறிக்கிறது.
பரகேசரிவர்மன் ( உத்தம சோழர் ) 16 ஆம் ஆட்சி ஆண்டு பொயு
987, கைலாசநாதர் கோயிலின் கருவறை தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, பராந்தகன் மாதேவடிகளான செம்பியன் மாதேவியார் தான் செய்த அளநாட்டுப்
பிரமதேயம் செம்பியன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்தில் அவரே எடுப்பித்த ஸ்ரீ கைலாசமுடையார்
கோயிலில் அவர் அமைத்த சாசனபந்தச் சதுர்வேதிபட்ட தானப்பெருமக்கள் என்ற குழுவிடம்,
உத்தமசோழ தேவரின் மனைவி ஆரூரன் அம்பலத்தடிகளார் 143 கழஞ்சுப் பொன்னையும், மற்றொரு மனைவியான உறட்டயன்
சோரப்பையரான திரிபுவன மாதேவியார் 145 கழஞ்சுப் பொன்னையும்
கொடுத்து, உத்தம சோழரின் தாயார், செம்பியன்
மாதேவியார் பிறந்த சித்திரைமாதம் கேட்டை நாளன்று வழிபாடு செய்து உண்ண ஏற்பாடு
செய்ததை பதிவு செய்கின்றது.
இராஜகேசரி வர்மன் ( இராஜராஜன் ) 3 ஆம் ஆட்சி ஆண்டு பொயு 988, கைலாசநாதர் கோயில் அர்த்த மண்டபத் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு,
உத்தமசோழ தேவரின் தாயாரான செம்பியன் மாதேவியார், 190 கழஞ்சு எடையுள்ள கலசம் ஒன்றினையும், 190 கழஞ்சு
எடையுள்ள இருபொற் பட்டங்களையும், பல்வேறு எடையுள்ள 30க்கு மேற்பட்ட பொற்பூக்களையும் ஸ்ரீகைலாசமுடைய மகாதேவருக்கு அளித்ததை
இக்கல்வெட்டுக் குறிக்கிறது.
பொயு 14 ஆம் நூற்றாண்டு மன்னர் பெயர் அறியப்படாத கைலாசநாதர் கோயில் மகாமண்டபத் தென்சுவரில் உள்ள கல்வெட்டு உத்தமவேதப் பெருமாள் கோயில் திருப்பணிக்காக (பராமரிப்பு) பெரிய நாட்டார்
வேலி ஒன்றுக்கு ஆண்டு ஒன்றுக்கு 1 கலம் வீதம் நெல்கொடுக்க
ஒப்புக் கொண்டதைத் தெரிவிக்கிறது.
பரகேசரிவர்மன் ( உத்தம சோழர் ) 15 ஆம் ஆட்சி ஆண்டு பொயு
986, கைலாசநாதர் கோயிலின் கருவறை வடக்கு, மேற்கு அதிட்டானத்தில்
உள்ள கல்வெட்டு, உத்தமசோழரின் தாயும், ஸ்ரீமதுராந்தகன்
மாதேவடிகளும் ஆன செம்பியன் மாதேவியார். அளநாட்டுப் பிரமதேயம் ஆன செம்பியன்
மாதேவிச்சதுர்வேதிமங்கலத்தில் கட்டுவித்த கைலாயமுடைய மகாதேவர் கோயிலில்
மாதப்பிறப்பு தோறும், இறைவனுக்குத் திருநீராட்டு (ஸ்னபனம்)
செய்யவும், திருநந்தா விளக்குகள் எரிக்கவும், உத்தராயன நாளில் பிராமணர் உண்ணவும் ஆகிய செலவுகளுக்காக உறட்டயன்
சோழப்பையரான திருபுவன மாதேவியார் பலரிடமும் விலைக்கு வாங்கி அளித்த
நிலநிவந்தங்களைக் குறிக்கிறது. நிலத்தின் அளவுகளும், எல்லைகளும்
விரிவாகக் கூறப்பட்டுள்ளன. செம்பியன் மாதேவி வாய்க்கால், கண்டராதித்தன்
வாய்க்கால், பழுவூர்நக்க வாய்க்கால், பராந்தகன்
மாதேவி வாய்க்கால், மாதேவடிகள் வாய்க்கால் ஆகிய
வாய்க்கால்களும், உத்தமசோழவதி, த்ரைலோக்ய
சுந்தரவதி, செம்பியன் மாதேவிவதி, கண்டராதித்தவதி,
மாதேவடிகள் வதி ஆகிய வதிகளும், செம்பியன்
மாதேவிச்சேரி ஆகியனவும் எல்லைகளில் குறிப்பிடப்படுகின்றன.
சடையவர்மன் வீரபாண்டியனின் 9 ஆம் ஆட்சி ஆண்டு, கைலாசநாதர் கோயிலிந் சண்டிகேஸ்வரர் கோயில் வடசுவரில் உள்ள கல்வெட்டு
தச்சர் தேர்வு செய்த (சமுதாயம்) உத்தமவேதப் பெருமாள் ஆசாரியனுக்கு
கோயிலின் தென் திருவீதியில் வீட்டுமனை, அதன்பின்னுள்ள கொல்லை
ஆகியவை கோயில் தானத்தாரால் வழங்கப்பட்ட செய்தியைத் தெரிவிக்கிறது.
மூன்றாம் இராஜராஜனின் ( 17+1 ) 18 ஆம் ஆட்சி ஆண்டு பொயு
1234, கைலாசநாதர் கோயில் சண்டிகேஸ்வரர் சன்னதி மேற்புறச் சுவரில்
உள்ள கல்வெட்டு, செம்பியன் மாதேவிச் சபையார் பகலிலும், இரவிலும் அம்பலத்தில் கூடி கிராமகார்யங்கள் நடத்தி வந்தனர். அவ்வாறு
செய்வதால், இரவில் விளக்கெண்ணெய்க்கான செலவு சபை
விநியோகத்திற்கென ஒதுக்கப்பட்ட தொகையைவிட மிகுதியாவதைக் கருத்தில் கொண்டு இனி
இரவில் கூட்டம் தவிர்த்துப் பகலில் கூடலாம் என்று தீர்மானித்ததைத் தெரிவிக்கிறது.
சோழர்கள் காலத்தைச் சார்ந்த, கைலாசமுடையார்
கோயிலின் கருவறை வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டுக்கள், கட்டத்தினுள்
மறைந்து விட்டது. எனவே கல்வெட்டு ஆண்டறிக்கையில் உள்ளபடி தரப்படுகிறது.
483/1925 - Parakesarivarman alias Rajendra - chola [deva]-
Bharani - Tamil - Beginning built in. Records the decision of the assembly
which had met in the Sembian Mahedevi - Periya mandapam in the village, to
utilize the vellanvetti tax derived from the devadana lands of the temple of
Adityesvaram udaiya Mahadeva at Mohanur, the western hamlet of the village for
burning a twilight lamp in that temple.
484/1925-In the above same location - Rajadhiraja I -
10thyear - Tamil - Built in at the beginning - commences with the introduction
etc. Seems to record the remission by royal order, of the taxes on some lands
belonging to the temple of Tiruvelirukkai - Mahadeva for a lamp payment of 100
kasu made to the assembly of Sattiyakkudi. In the same place is another long
introduction of an inscription ending with the regnal year of King Vijaya-Rajendra.
--- Om Shivaya Nama---
No comments:
Post a Comment