Wednesday 16 March 2016

Sri Paaleeswarar Temple /அருள்மிகு திருப்பாலீசுவரர் திருக்கோயில் / பாலீஸ்வரர் கோவில் / அருள்மிகு லோகாம்பிகை உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோவில், திருப்பாலைவனம் , Thirupalaivanam, Pazhaverkadu / Pulicat, Tiruvallur District, Tamil Nadu

 16th March, 2016.
We proceeded towards our next destination of  Thirupalaivanam, which is about 15 KM from Pazhaverkadu  on the way to Minjur.  I was very happy  on seeing the temple tank with Rajagopuram & Rajara Chozha period inscription  around the sanctum wall and at last realized the worth of my Visit. During our visit the temple was preparing for the annual 10 days  Panguni Tamil month’s  festival  scheduled  between 12-03-2016 to 24-03-2016. On 22nd Theppa urchavam will be held in a grand manner and the temple authorities invited all the Shiva Devotees.

SRI PAALEESWARAR TEMPLE


Moolavar     : Sri Paaleeswarar, Sri Palliswarar, Sri Amrutheswarar
Consort       : Sri Logambigadevi

Some of the  important features of this temple are….
The temple is facing east with a Temple tank, a 16 pillar mandapam and a 5 tier Rajagopuram. Dwajasthambam, balipeedam and Rishabam are  after the Rajagopuram in the outer prakaram. In koshtam Vinayagar, Dakshinamurthy, Vishnu in place of Lingothbavar, Brahma and Durgai. 

In the inner prakaram sannadhi for Vinayagar, Naalvar, Viswanathar, Markandeyar Shiva Lingam, Veerabhadrar, Naagas, Pichadanar  Valli Devasena Subramaniyar and Chandikeswarar.

In the outer prakaram sannadhi for Sthala viruksham Paalai tree with Nagar, Natarajar Saba, Sri Arunachaleswarar Siva sannadhi, Chandikeswarar,  Bhairavar and Suryan.

Ambal sannadhi is like a temple facing east on the left side of main sanctum with an inner prakaram.  The Simha vahanam is  in the outer prakaram. 

ARCHITECTURE
The temple consists of Sanctum Sanctorum, antaralla, ardha mandapam, maha mandapam and a mukha mandapam. The sanctum is of semi circular in shape to match the Gajabirushta vimanam, on a simple pada bandha adhistanam. 
  
 Gajabirushta Vimanam 

HISTORY & INSCRIPTIONS: 
The sanctum walls has 71 inscriptions of which  65 are in Tamil,  3 are in Telugu, 2 are in Sanskrit and 1 is in Kannada.  These are published in the 1929 epigraphic list via  ( sl no 307 to 377). The inscriptions are from 11th century to 18th century.  Some the Kings who had done thirupani and mentioned in the inscriptions are Veera Rajendra  ( 1064 – 1069 CE ), Kulothunga Chozha I ( 1070-1122 CE ), Vikarama Chozha ( 1122-1135 CE ), Kulothunga Chozha II ( 1135-1150 CE ), Rajaraja Chozha  II ( 1146-1173 CE ), Rajathi Raja II ( 1163 – 1179 CE), Kulothunga Chozha III ( 1178-1218 CE ), Rajara Chozha III ( 1216 – 1246 CE ), Sadyavarman Sundara Pandyan ( 1251 – 1271 CE ),  Small chozha Kings ruled Nellur, Rajanarayana Sambuvarayar, Vijayanagara Kings Sayana Udayar, Kumara pukarayar and Kakathiya King Pirathaba purithira thevar.

These Inscriptions are recorded in Tami Nattukkalvettukkal Thoguthi-XVII, Thiruvallur Mavatta Kalvettukkal thoguthi-1. Since 74 inscrptions are recorded from this temple, only few are written here and the balance are attached after the photographs.  

முதலாம் குலோத்துங்கனின் 24வது ஆட்சி ஆண்டு ( 1064 CE ) கல்வெட்டு திருமுனைப்பாடி நாட்டுப் பனையூர் நாட்டுச் சாத்தனூருடைய இந்தம்பேடு கிழான், திருப்பாலைவனம் உடையார் கோயிலுக்கு ஆலால சுந்தரன் என்ற பெயரில் நந்தவனம் ஒன்று ஏற்படுத்தி, இதன் பராமரிப்புக்காக 5 புஜபல மாடையை வழங்க, கோயில் தானத்தார் இத்தொகை கொண்டு 1100 குழி நிலம் சிவப்பிராமணரிடமிருந்து வாங்கி, குடிமை என்ற வரியுட்பட பல வரிகளை நீக்கி நந்தவனத்திற்கு வழங்கினர் என்பதைப் பதிவு செய்கின்றது. தெலுங்குச் சோழர் வெளியிட்ட காசு புஜபல மாடையாகும்.
Kulothunga Chozha-I’s 24th reign year ( 1094 CE ) inscription on the north wall of the ardha mandapa in Tiruppālēśvara temple at Tiruppalaivanam in Ponneri taluk, records the  grant of land in the village by purchase by Kilan (headman) of Indampēdu in Sättanur, a village in Panaiyur nadu a subdivision of Naduvilnadu alias Rājārājan- valanādu, for the formation of a flower garden under the name Alälasundaran, to the temple of Tiruppalaivanam Udaiyar in Payyur kōṭṭam, a mandalam of Jayangonda Solamandalam. Pujapala madai (name of gold coin) is mentioned in this inscription.

பாலீஸ்வரர் கோயில் அர்த்தமண்டப வடபுறச் சுவரில் உள்ள சுந்தரபாண்டியனுடயை 11 வது ஆட்சி ஆண்டு கல்வெட்டு திருப்பாலைவனம் பெருந்தெருவில் வாழ்ந்த சூரிய தேவனின் மனைவி சிவனம்மை, கோயிலில் ஒரு விளக்கு வழங்கி தொடர்ந்து, எரியவேண்டி 40 காசுகளை அளித்துள்ளார். ஸ்ரீ மற்றும் சீ இரண்டும் கல்வெட்டில் உள்ளது. அகமுடையாள் - மனைவி.
Sundara Pandya’s 11th  reign year ( 1263 CE )  inscription on the ardha mandapam north wall records the gift of 40 money and a lampstand by the wife of Suryadeva residing in the big street at Tiruppalaivanam for burning a perpetual lamp in the temple. Donor name is Sivanammai. anrādu narpanam means current money

பாலீஸ்வரர் கோயில் மகாமண்டப வடபுறச் சுவரில் உள்ள திருக்காளத்தியாண்ட அல்லுந்தேவ கண்டகோபாலனின் 3 ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு திருப்பாலைவனம் உடையார் மார்கழி திருவாதிரையன்று திருமஞ்சனம் ஆடி.அமுது செய்ய, திருப்பாலைவனம் பெருந்தெருவில் வாழ்ந்த வணிகன் பரணியன் குமாரந்தை என்பவன் 6 பொற்காசுகளை முதலீடாக வழங்க, இதன் வட்டி கொண்டு விழாவும் திருவமுதும் நடைபெற்றது என்பதைப்ப்திவு செய்கின்றது.
The Gandagoplan’s 3rd reign year inscription on the north wall of the mahamandapa  north wall records the gift of six Gandagopalan madai by a merchant of Tiruppälaivanam to the temple of Tiruppalaivanamudaiya Nayanar, for sacred bath, offerings and festival on the day of Arudra in the Tamil month of Margali. The donor namely Baraniyan lived at Big street in Tiruppälaivaam. Allundi Deva Gandagopalan. Telugu Chōla was the chieftain of this locality.

பாலீஸ்வரர் கோயில் கருவறை வடபுறச் சுவரில் உள்ள மூன்றாம் குலோத்துங்கனுடைய  கல்வெட்டு, அவரின் சிற்றரசன் பொத்தப்பிச் சோழனுடைய மனைவி சித்தரை சீதேவியார் நுங்கமாதேவியார் திருப்பாலைவனமுடையார் கோயிலில் விளக்கு ஒன்று வைக்க 10 மாடை பொன்னை முதலீடாக அளித்துள்ளார். சித்ரா என்பதே சித்தரை போலும். ஆந்திர மாநிலம் நந்தலூர் கல்வெட்டு (இதுவும் மூன்றாம் குலோத்துங்கனுடைய சாசனம் 601/1907) இப்பெண்ணின் பெயராக நுங்க மாதேவி என்று கூறுகிறது. சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் இப்பெண்ணின் பெயரில் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஆசங்கை எழுகிறது.
Kulothunga Chozha-III’s 18th reign year ( 1096 CE ) inscription on the north wall of the central shrine,  records a gift of money to the Sivabrahmanäs of the temple by Nungamadeviyar wife of Madurantaga Pottapi Chōla-Siddharaisar for burning a lamp in the temple. Chennai Nungampakkam name is related to Nungamadēviyār?.

பாலீஸ்வரர் கோயில் கருவறை வடக்கு முப்பட்டைக் குமுதத்தில் உள்ள இரண்டாம் இராஜாதிராஜனுடைய 11 ஆம் ஆட்சியாண்டு (C.E. 1174  ) கல்வெட்டு பையூர்க் கோட்டத்துக் கோளூர் நிலை உடையார் என்பவர் கோயிலில் சந்தி விளக்கு வைக்க திருமடை விளாகத்தில் இருக்கும் தீபகத் தீவகோ வசம் முதலீடு அளித்துள்ளார். திருப்பாலைவனமே கோளூர் ஆகும்.
Rajathirajan-II’s 11th reign year  1174 C.E. inscription on the sanctum sanctorum adhisthanam kumudam is  found incomplete. Seems to provide for a lamp to the temple of Tiruppalaivanamuaiyär at Kölür in Payyürköṭṭam.


 Rajaraja Chozha  inscription 
 Rajaraja Chozha  inscription 
 Rajaraja Chozha  inscription 

LEGENDS 
Moolavar is swayambhu with a scar on his head. The story behind this was, Rajendra Chozha I, stayed in this Palai vanam with his warriors after a war. The elephant tied to a paalai tree got fainted.  On seeing this Rajendra ordered to cut the tree.  Blood oozed out from the axe hitting point.  So stopped cutting the tree and excavated that place and found Shiva Lingam with a scar on it’s head.  So he built this temple.

The temple is little big with full of water ( No frogs can be found in the tank there is a story behind this. After drinking the amirtham the devas washed their hands in the tanks and  the asuras took the form of frog and drank the nectar/ amirtham mixed in the water. On seeing this the Devars  cursed, that   no frog should grow in the temple tank ).  

TEMPLE TIMINGS :
The temple is kept open between 07.00 Hrs to 12.00 Hrs  and 16.30 Hrs to 20.00 Hrs.

CONTACT DETAILS :
The temple can be contacted on the landline 044-27978667 and mobiles 93802 12536 and 94451 76390 for further details.

HOW TO REACH:
City buses from Ponneri to Pazhaverkadu passes through this place.
Buses also available from Moolakadai (558B), Thiruvotriyur ( 595 A), and Tollgate ( 595)

LOCATION OF THE TEMPLE :CLICK HERE

 16 pillar mandapam with 5 tier Rajagopuram

 Urchavar is readying for 10 day Panguni brahmotsavam



2nd day of Brahmotsavam







 Sthala vruksham Palai tree 

 An old mandapam
 Vahana used for the Brahmotsavam 
 Urchavar is readying for 10 day Panguni brahmotsavam
 The temple tank where there is no frog  and preparing for the theppa urchavam
 Stucco images ready for installation
--- OM SHIVAYA NAMAHA:---

HISTORY AND INSCRIPTIONS CONTINUED

பாலீஸ்வரர் கோயில் கருவறை வடக்கு முப்பட்டைக் குமுதத்தில் உள்ள மூன்றாம் ராஜராஜனின் 15 ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு, ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக் கோட்டத்து குன்ற நாட்டு இறையூரில் வாழ்ந்த பலகண்ணந் திருவேங்கடமுடையான் நல்ல நாயன் என்பவன் கி.பி.1231 - இல் கோயிலில் சந்தி விளக்கு ஒன்று வைக்க புஜபல மாடை என்ற பொற்காசு ஒன்றினை அளித்துள்ளான் என்பதைப் பதிவு செய்கின்றது.
An incompleter  Rājarāja-III’s 15th regnal year (1231 CE ), inscription records a gift of gold by a resident namely Palkannan Thiruvegambamudaiyan alias Nallanayan of Iraiyur in Kunra nādu a sub- division of Urrukkattu Kōṭṭam a district of Jayangonda Chōlamandalam, for burning a lamp in the temple. Bujabala madai coin is mentioned in this inscription.

பாலீஸ்வரர் கோயில் கருவறை வடபுறச் சுவரில் உள்ள பிற்காலச் சோழர் ஆட்சியின்போது வெட்டப்பட்ட இக்கல்வெட்டில் மன்னன் பெயரும் ஆட்சி ஆண்டும் கூறப்படவில்லை. மன்னனின் நேர்முக ஆணையாகும். ஈக்காடு கோட்டத்துக் காக்கலூர் நாட்டுச் சிற்றத்தூரில் தொண்ணூற்றைஞ்சே முக்காலே அரைமா முந்திரிகை நிலம் கோயில் நிவந்தம் பொருட்டு வழங்கப்பட்டது. கோயில் தேவகன்மி மாஹேஸ்வர கண்காணி, ஸ்ரீகாரியம் செய்வார் ஆகியோர் வசம் நிலக்கொடை வழங்கப்பட்டது. இறுதிப்பகுதி வெட்டப்படவில்லை. சாசனத்தில் இடம்பெறும் காக்கலூர் தற்போதும் உள்ளது.
The 12-13th century C.E, incomplete inscription without King’s name and year on the sanctum sanctorum north side wall, records a gift of land to the temple for offerings. The king's name is not mentioned in this inscription. But it is king's direct order. ( Kōnērinmai kondan ).

பாலீஸ்வரர் கோயில் அர்த்தமண்டப வடபுறச் சுவரில் உள்ள மூன்றாம் இராஜராஜனுடைய 15 ஆவது ஆட்சி ஆண்டு ( 1231CE ) கல்வெட்டு அரசூர் அமணிபாக்கிழான் மகள்கள் குண்டியாளும், அம்மையாண்டாளும் தங்கள் கணவன்மார்கள் நலமாக இருக்கவும், தாங்களும் நலமாக இருக்கவும் வேண்டி, திருப்பாலைவனமுடையார் கோயிலில் இரண்டு விளக்குகள் வைத்து தொடர்ந்து எரிய 8 பழங்காசுகளை வழங்கினார்கள் என்பதைப் பதிவு செய்கின்றது. பெண்பிளை பெண்பிள்ளை என்பதின் இடைக்குறை. கொடை வழங்கிய சகோதரிகளின் தந்தை பெயர் இடம் பெறினும் கணவர்மார்களின் பெயர்கள் கூறப்படவில்லை. பக்தாக்கள் -கணவன்மார்கள். ஒரு விளக்கு எரிய 4 பழங்காசுகள் முதலீடாகும்.
Rājarāja III’s 15th regnal year (1231 CE) inscription on the north wall of the ardha mandapam records the gift of 8 palankāsu by the daughters of Amanipäkkilän of Arasur for lamps in the temple for the welfare of their husbands and themselves.

பாலீஸ்வரர் கோயில் அர்த்தமண்டப முப்பட்டைக் குமுதத்தில் உள்ள மூன்றாம் இராஜராஜனுடைய ஆட்சியின் கல்வெட்டு  குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர் சேக்கிழான் பத்தியதேவன் ஆட்கொண்டான் என்பவன் கோயிலில் விளக்கெரிக்க வேண்டி 90 ஆடுகளைத் திருமயிலார்ப்பில் வாழும் இடையன் நம்பன் பட்டனிடம் வழங்கினான். இடையனும் தினமும் நெய் வழங்க உடன்பட்டான் என்ற விபரங்களைப் பதிவு செய்கின்றது. மயிலார்ப்பில் என்பதே மயிலாற்பில் என உள்ளது. தானம் வழங்கியவன், குன்றத்தூர் சேக்கிழான் மரபில் வந்தவன் போலும். எனவே இவன் பெயரும் சேக்கிழான் என்றுள்ளது. ஆடுகளை மட்டுமின்றி விளக்கினையும் கொடையாளன் கோயிலுக்கு வழங்கியுள்ளான்.
Chöla king Rājarāja III’s 1228 CE year inscription on the ardhamandapam adhisthanam kumudam inscription records a gift of 90 sheeps by one Sekkilan Pattiya devan Atkondan of Kunrattür in Kurattur nadu a division of Puliyur köttam which was a district of Jayangonda Chozha mandalam. This donor's surname Sekkilär is associated with saint Sekkilar. That is one of the 63 nāyanmārs

பாலீஸ்வரர் கோயில் கருவறை வடக்கு பட்டியில் உள்ள மூன்றாம் இராஜராஜனுடைய 18 ஆம்  ஆட்சியாண்டு கல்வெட்டு ஆதங்கூர் வியாபாரி ஆதங்கூருடையான் பெருமான் கூத்தாடும் பிள்ளையான் தருமபாலன் மூன்று நிலைக் குத்தி விளக்கு வழங்கியதுடன் தொடர்ந்து கோயிலில் விளக்கெரிய வேண்டி 27 நற்பழங்காசுகளைச் சிவப்பிராமணரிடம் வழங்கினான். மேலும் இவன் கோயிலில் காரைக்கால் அம்மையைப் பிரதிஷ்டை செய்துள்ளான் என்பதைப் போன்ற விபரங்களைப் பதிவு செய்கின்றது. திருப்பாலைவனத்திற்கு அருகில் உள்ள திருவாலங்காட்டிலும் காரைக்கால் அம்மைக்குச் சிலையுண்டு.
Rajaraja III’s 18th reign year  (1234 C.E.) inscription on the northwall of the central shrine, records the gift of gold coins and a lampstand for burning a lamp in the temple, by a merchant of Adankūruaiyan in Solamandalam who had also set up an image of Käraikkäl Ammai in the temple. The lampstand shape is 3 nilai. The gold coin's name is Narpalankasu. Karaikkal Ammai is one of the 63 nāyagmar's of Saiva religion.

பாலீஸ்வரர் கோயில் கருவறை வடக்கு பட்டியில் உள்ள மூன்றாம் இராஜராஜனுடைய 12 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு சிற்றரசனாகிய பொத்தப்பிச் சோழன் கண்ட கோபாலன், திருப்பாலைவனமுடையார் கோயிலுக்குத் திருச்சாந்துபட்டியாக 3 வேலி நிலம் வழங்கினான். வல்லத்துக் குன்றங்கிழான் சொக்கநாயன் மாதேவரிடம் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. சந்தனம், கற்பூரம், மேற்பூச்சு போன்றவையும் கோயிலுக்கு வழங்கப்பட்டன என்பதைப் பதிவு செய்கின்றது.  6000 குழி = 3 வேலி என்க.
Rājarāja III’s – 12th reign year ( 1228 CE ) inscription on the north wall of the central shrine, records a gift of land by Madhurantaka Pottapi Cholan Gandagopalan as Thiruchchanduppatti for providing unguents to the god. Pottappi Chōla was one of the chieftains of third Rājarāja.

பாலீஸ்வரர் கோயில் தண்டபாணீஸ்வரர் சன்னதி கருவறை மேற்குச் சுவரில் உள்ள மூன்றாம் குலோத்துங்கனுடைய 15ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டு சோதிவடுகன் ஐயங்கொண்ட சோழக் கிடாரத்தரையன் என்பவன் திருக்கற்றளித் திருப்பணி மேற்கொண்டான். கொத்தனார் இன்றி திருப்பாதிரிபுலியூரில் இருந்த ஒரு வடுகக் கொல்லனைக் கொண்டு திருப்பணி முடித்தான். அந்தக் கொல்லனுக்கு சில ஊர்களில் செம்பாதி நிலங்களை வழங்கினான். தன் இரு மருமகப்பிள்ளைகளுக்கு 2/3 பாகம் நிலங்களைச் சீதனமாக வழங்கினான் என்பது போன்ற விபரங்களைப்பதிவு செய்கின்றது. திருப்பாலைவனம் மட்டுமின்றி வேறு சில ஊர்களின் நிலங்களும் திருப்பணிக்கு வழங்கப்பட்டதால் பலரும் கோயில் திருப்பணியில் பங்கு கொண்டனர் எனலாம். இக்கல்வெட்டில் இரண்டு வடுகர்களின் திருப்பணி ஈடுபாட்டினைக் காண்கிறோம். கொத்தன் சேவை கட்டடத்திற்குத் தேவை என்று கூறலாம்.
Kulottunga – III’s 15th reign year (1193 C.E.) inscription on the west wall of the Dhandabani shrine,  States that Vadugan Devan gave a sidhanam (dowry) to his two sons - in - law two-thirds of his rights in several villages which had been assigned to him towards the cast of constructing a stone temple to Tiruppalaivanam Udaiyar undertaken by Sodi Vadugan alias Jayangonda Sōla Kiārattaraiyan. Vadugan - Teluguman.

பாலீஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவரில் உள்ள கோயிலில் விளக்கெரிக்க வேண்டிய போது பொருள் போதாத நிலையில் சில நபர்கள் 2 எருமை மற்றும் 3 கன்றுகளை மன்றாடியிடம் வழங்கினர் என்ற விபரத்தைப் பதிவு செய்கின்ரது. மேலும் கொடை தந்தவர் மற்றும் மன்றாடிகளின் பெயர்கள் சாசனத்தில் உள்ளன. சாசனத்தில் சில ஊர்ப்பெயர்கள் உள்ளன. மேல்படை அதிட்டானத்திற்கு மேல் உள்ள கால் எனப்படும் சுவர்.
On the north wall of the Paleisvara temple, records a gift of money to burn a lamp in the temple by an individual. The money was not sufficient. Some persons gifted 2 buffaloes and 3 calves. Also Vadugadevan donated five villages to temple.

பாலீஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவரில் உள்ள தெலுங்குச் சோழ மன்னனான அல்லந்திருக்காளத்தி தேவன் கண்ட கோபாலனுடைய மூன்றாவது ஆட்சியின் போது புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டு ஞாயிறான ஜெயங்கொண்ட சோழ நல்லூரைச் சேர்ந்த ஞாயிறு கிழவன் திருச்சிற்றம்பலமுடையான் வாழ வந்தான் என்பவன் திருப்பாலைவனமுடையார் கோயிலில் ஒரு விளக்கு வழங்கி தொடர்ந்தெரிய ஒரு வேலி நிலம் வழங்கியுள்ளான். அரசூரில் துரவுக்கருகே இருந்த நிலம் கோயிலுக்கு வழங்கப்பட்டது. என்பது போன்ற விபரங்களைப் பதிவு செய்கின்றது. துரவு - கிணறு. ஊர்ப்பெயர். கிழவன் - உள்ளுர்த் தலைவன் எனலாம். ஞாயிறு-ஓர் செல்வந்தனான வேளாளன் என்க.
A 13th century C.E. inscription on the north wall  of the  temple records a gift of land by the headman of Nayiru alias Jayangonda Solanallur in Nayirunadu, a subdivision of Pularkōṭṭam of Jayangondasōla mandalam for burning a lamp in the temple.

பாலீஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவரில் உள்ள மூன்றாம் குலோத்துங்கனின் 19ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு புலியூர்க் கோட்டத்துப் பேறூர் நாட்டுப் பேறூர் தட்டார் மரபில் வந்த அம்மையப்பன் திருவாய்க்குலமுடையான் பெரிய நாட்டுத் தட்டான் கோயிலுக்கு நந்தவனம் ஏற்படுத்த 15 பழங்காசுகள் தந்து வெளிப்பாக்கத்தில் நிலம் வாங்கி நந்தவனப்பட்டியாக விட்டுள்ளான் என்பதைப் பதிவு செய்கின்றது. பேறூர் தற்போது போரூர் என வழங்கப்படுகிறது. மேனிரு தலைவாய் என்பதே மேநடங்கின சிருதலைவாய் என இதில் உள்ளது.
Kulōttunga Chozha -III’s 19th reign year (1192 C.E.) inscription on the north wall, records the gift of land by purchase by a goldsmith of Pērür in Perurnau a subdivision of Puliyur Kōṭṭam, a district of Jayangonda Sōla mandalam for a flower garden to the temple.

பாலீஸ்வரர்
கோயில் கருவறை வடபுறச் சுவரில் உள்ள  மூன்றாம் குலோத்துங்கனின் 18ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு திருப்பாலைவனமுடையார். சித்திரைத் திருவிழாவிற்குப் பேறூர் ( போரூர் என்க) அம்மையப்பன் திருவாய்க்குலமுடையான் பெரிய நாட்டுத் தட்டான் ஸ்ரீ பண்டாரத்திடம் வழங்கியிருந்த 15 காசுகள் கொண்டு, மாதேவி நங்கையில் நிலம் விலைக்கு வாங்கி இறையிழிச்சு, சபை விற்றுக் கொடுத்துள்ளது. கோயிலுக்கு வாங்கப்பட்ட நில எல்லையும், 1000 குழி நில உரிமையும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. முன் கல்வெட்டிலும் இத்தட்டான் கூறப்பட்டுள்ளான். மேனிரு தலைவாயே மேநடங்கின சிருதலைவாய் என முன் கல்வெட்டில் கண்டோம்.
Kulöttunga Chozha- III’s 18th reign year (1197 C.E.) inscription on the north wall of the same shrine, records the sale of land to the temple by the assembly of Perumpettunilai Tattmañjiyur to conduct the festival of Tiruppalaivanam Udaiyar in the month Chittirai for the money received by them from a goldsmith. The goldsmith (the donor) Ammaiappan - Thiruvāikkulamudayān Periyanattu thattan lived in Perür (now Pörūr).

பாலீஸ்வரர் கோயில் கருவறை மேற்குச் சுவரில் உள்ள மூன்றாம் இராஜராஜனுடைய 13 ஆவது ஆட்சி ஆண்டு கல்வெட்டு எழுத்துக்கள் சிறிய வடிவில் அழகாக உள்ளன. ஒரு சொல் இருபத்தஞ்சாறு தவறாக எழுதப்பட்டதால் அப்பகுதியைச் சற்றுச் சிதைத்துவிட்டு தவறின்றி எழுதப்பட்டுள்ளது. சிவப்பிராமணர் என்ற சொல் ஓரிடத்தில் கிரந்தத்திலும் மற்றோர் இடத்தில் தமிழிலும் வெட்டப்பட்டுள்ளன. குமண அரசன் சீதரன் என்பவன் 2/4 வேலி அதாவது 4500 குழி நிலம் விட்டதுடன் நந்தா விளக்கு எரிக்க 26 காசுகளையும் அளித்துள்ளான்.
Rajaraja-III’s 13th regnal year (1229 C.E.) inscription on the west wall, records the gift of money for a lamp by Kumana Arasag Sridharan of Menmudala Mēdu in Paiyür Köttam.

பாலீஸ்வரர்
கோயில் கருவறை மேற்குச் சுவரில் உள்ள மூன்றாம் இராஜராஜனுடைய 23 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு திருப்பாலைவனமுடையார் கோயில் கணக்கராக இருந்த மெதுவூருடையான் அம்மையப்பன் பாற்பதிபாகன் நாற்பத்தெண்ணாயிர வேளான் என்பவன் கோயிலில் விளக்கெரிக்க 2 புதுமாடைகளை வழங்கினான் என்பதைப் பதிவு செய்கின்றது. பாற்பதிபாகன் என்பது உமையொருபாகன் போல் ஒரு பெயராகும்.
Rajaraja III’s 23rd reign year (1239 C.E.) inscription on the west wall of the same shrine records the gift of money by Ammaiyappan Parpadhibagan alias Närpattennayira vēlān of Maduvür for burning a lamp in the temple.

பாலீஸ்வரர் கோயில் கருவறை மேற்குச் சுவரில் உள்ள மூன்றாம் குலோத்துங்கனின் 29 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு பையூர் நாடாழ்வான் வளையமழகியார் ஒற்றி அரசர் நந்தா விளக்கு வைக்க 32 பசுக்களை அளித்துள்ளார் என்பதைப் பதிவு செய்கின்றது. திருத்தணி செப்பேட்டில் ஒற்றிக்கோ என்ற அரசனைக் காண்கிறோம். விஜயாலயன் தந்தை என்பார் இரா.நாகசாமி. கி.பி.12-ஆம் நூற்றாண்டிலும் ஓர் ஒற்றி சிற்றரசர் இருந்துள்ளார். ஒரு வெற்றியின் பொருட்டு இவர் விளக்குக் கொடை தந்துள்ளார்.
Kulothunga Chozha-III’s 29th reign year inscription on the west wall of the same shrine, records the  gift of 32 cows by Valaiyamalagiyar-Orri Arasan the Nadalvan of Kulottunga Chōlan, Paiyyür, for burning a perpetual lamp in the temple.

பாலீஸ்வரர் கோயில் கருவறை மேற்குச் சுவரில் உள்ள முதலாம் குலோத்துங்கனுடைய 14 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு பையூர் கோட்டத்துத் திருத்தேத்துறைத் திருப்பாலைவனமுடையார் கோயிலில் ஒரு விளக்கினை அளித்த முனையதரையன் திருவரங்கமுடையான் 32 பசுக்களையும் 4 சுரபிகளையும் கொடையாக அளித்துள்ளான் என்பதைப் பதிவு செய்கின்றது. பசுவும் சுரபியும் வெவ்வேறு இன மாடுகள் ஆகும்.
Kulottunga Chozha-I’s 14th reign year (1092 CE ) inscription on the west wall of the same shrine, records  the gift of cows by Munaiyadaraiyan, Tiruvarangamuaiyan - Malaiyaraiyan of Naduvilmalai to the temple for a lamp.

பாலீஸ்வரர் கோயில் கருவறை மேற்குச் சுவரில் உள்ள முதலாம் குலோத்துங்கனின் 12 ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டு திருத்தேத்துறை எனத் திருப்பாலைவனம் அழைக்கப்பட்டுள்ளது. ஆவூர் மன்றாடி என்பவன் அரைவிளக்கு எரிக்க 45 ஆடுகளைக் கோயிலுக்கு வழங்கியுள்ளான் என்பதைப் பதிவு செய்கின்றது. திருப்பாலைவனம் அருகே காட்டூர் என்ற ஊர் உள்ளது. காட்டூரிலும் சாசனங்களுடன் கூடிய புராதனக் கோயில் உண்டு.
Kulottunga Chola –I’s 12th  regnal year (1090 C.E.) inscription on the west wall of the same shrine records the gift of 45 sheeps by a shepherd of Avür, for burning half a lamp in the temple of Tirutteturai Tiruppalaivaam Udaiyār.

பாலீஸ்வரர் கோயில் கருவறை மேற்கு ஜகதியில் உள்ள மூன்றாம் இராஜராஜனுடைய 15 ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டு நெல்லூர் மன் மசித்தீஸ்வரமுடைய நாயனார் கோயில் தேவரடியார் பனையாண்டியாகிய கண்ட கோபால மாணிக்கம் என்பவள் திருப்பாலைவனம் ஊரில் மடம் ஏற்படுத்தி இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்குச் சோறிட வேண்டி 2200 குழி நிலம் வழங்கினாள். கண்டகோபாலன் என்ற சிற்றரசன் கடமைவரி, காசுகடமை, அனைத்தாயமும் நீக்கி நிலத்தை இறையிலியாகத் தந்தான் என்பன போன்ற விபரங்களைப் பதிவு செய்கின்றது. சித்தம்மை தேவி தங்கையே தேவரடியார் ஆவார்.
Rājarāja Chaozha-III’s 15th regnal year 1231 C.E, inscription on the north wall of the same shrine, records a grant of land by Gandagopala as the gift of Panaiyandi alias Gandagopala Manikkam, the sister of Sittammaideviyar, a dancing - girl attached to the temple of Manumasiddhiśvaram Udaiya-Nayanār at Nellür for feeding devotees in the Gandagopala Manikka matha at Tiruppalaivanam and for the maintenance of a flower garden.

பாலீஸ்வரர் கோயில் கருவறை வடக்கு அதிட்டான ஜகதியில் உள்ள மூன்றாம் இராஜராஜனுடைய 17 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு மங்கை நாயகன் மழவராயன் கோயிலில் இரண்டு நந்தா விளக்குகளை வழங்கியதுடன் தொடர்ந்து எரிய 12 மாடை பொன் வழங்க இப்பொன் கொண்டு விளக்குப் பட்டியாக வாயலூரில் நிலம் வாங்கப்பட்டது என்ற விபரத்தைப் பதிவு செய்கின்றது. .
Rājarāja Chozha-III’s 17th regnal year, 1233 C.E, incomplete inscription on  the west wall of the central shrine, records the gift of land by purchase by Mangaināyakan -malavarayan, from the assembly of vayalur alias Satrubhayankara Chaturvedimangalam, a district of Jayangonda Sōla mandalam for burning lamps in the temple.

பாலீஸ்வரர் கோயில் கருவறை வடக்கு அதிட்டான ஜகதியில் உள்ள 
விக்கிரம சோழனுடைய 11 ஆவது ஆட்சியாண்டு 1129 CE கல்வெட்டு பையூர்க் கோட்டத்துக் கோளூர் நிலைத் திருப்பாற்றுறைத் திருப்பாலைவனமுடையார் கோயிலுடன் இணைந்த தன்மதாவள மடத்தன்மமாகச் சோழிய வாணியன் திருவேகம்பமுடையான் ஒடுக்கிய பொன் கொண்டு பூவரம்பியான குஞ்சரமல்லி சதுர்வேதி மங்கலத்தில் 3000 குழி நிலம் 45 காசுகளுக்கு இறையிழிச்சி விலைக்கு வாங்கப்பட்டது என்பதைப் பதிவு செய்கின்றது. .

Vikkirama Chōla’s 11th regnal year, 1129 C.E, inscription engraved on the Jagadhi of north and west basement of the same temple, records the sale of land free of taxes by the assembly of Puvarambi alias Kuñjiramalla - Chaturvedimangalam to the Danmadavalavan - Tirumandapam attached to the temple of Tiruppälaivanam Uaiyar of Tirupparrurai in Kölürnilai, for the money endowed by Tiruvēgambamuaiyar Närpattenayira Nambi. 3000 kuli land was worth 45 kasu.

பாலீஸ்வரர் கோயில் கருவறைமேற்குச் சுவரில் உள்ள தெலுங்குச் சோழ மரபில் வந்த அல்லூன் திருக்காளத்தி கண்ட கோபாலனின் 4வது ஆட்சியாண்டு ( 13 ஆம் நூற்றாண்டு ) கல்வெட்டு ஞாயிறு கிழவன் பொன்னம்பலக் கூத்தன் என்பவன் கோயிலில் விளக்கு வைத்ததுடன் தொடர்ந்து எரிய நிலக்கொடையும் அளித்துள்ளான் என்பதைப் பதிவு செய்கின்றது. நாயிறு என்ற ஊர் ஐயங்கொண்ட சோழ நல்லூர் என்றும் வழங்கப்பட்டுள்ளது. சுந்தரமூர்த்தி நாயனாரை மணந்த சங்கிலி நாச்சியார் பிறந்த ஊர் இதுவாகும். நில எல்லைகள் கூறும் போது சீகயிலாசமுடையார் கோயில், பிடாரி கோயில் போன்றவை கூறப்பட்டுள்ளன.
Telugu Chola clan Tirukkalathi Gandagopaladevar’s 4th reign year, 13th century inscription on  the west wall of the same shrine, records the gift of land by the headman namely Ponnambalaküttan of Nayiru alias Jayangondasōlanallur for burning a lamp in the temple.

பாலீஸ்வரர் கோயில் கருவறை தென்புறச் சுவரில் உள்ள மூன்றாம் இராஜராஜனுடைய 29வது ஆட்சியாண்டு கல்வெட்டு விற்பேடு கிழான் சூரிய தேவன் நம்பி பூவரன் என்பவன் கோயிலில் இரண்டு சந்தி விளக்கு எரிய, இரண்டு மாடை பொன் தந்துள்ளான். அம்மன் பெயர் பெரிய நாச்சியார் என இதில் சுட்டப்படுகிறது என்ற விபரங்களைப் பதிவு செய்கின்றது.
Rajaraja-III’s 29th reign year 1245 CE inscription on the south wall of the central shrine of the same temple, records the gift of money by a vaniya of the village, for burning a lamp before the goddess periya Nachchiyar in the temple of Tiruppalaivanam Udaiyar. The donor Suryadevan Nambiyar Püvaran lived in of Virpēdu.

பாலீஸ்வரர் கோயில் கருவறை தென்புறச் சுவரில் உள்ள முதலாம் குலோத்துங்கனின் 33வது ஆட்சியாண்டு கல்வெட்டு இக்கோயில் சிவப்பிராமணன் காஸ்யபன் ஸ்ரீ பண்டாரத்தில் பொன் ஒடுக்கி வைத்திருந்தான். குஞ்சரமல்ல சதுர்வேதிமங்கல மகாசபை, பொன்னைப் பெற்றுக்கொண்டு நிலத்தை இறையிலியாக்கித் தேவதானமாக விற்றுத் தந்துள்ளது. நில எல்லை விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு ஆங்காங்கே சிதைந்துள்ளது. திருவொற்றியூர் தேவரடியார் நந்தவனம் அமைத்ததாகக் கல்வெட்டு ஆண்டறிக்கையில் உள்ளது.
Kulothunga Chozha-I’s 33rdb regnal year inscription engraved on the south wall of the central shrine records the sale of land named Alala Sundara Vilagam to the temple of Kumarimülai Näyanär by the assembly of Püvarambi alias Kuñjaramalla Chathurvédimangalam for the money received by them from a Sivabrähmană of the temple of Tiruppälaivagammudaiya Nāyanār.

பாலீஸ்வரர் கோயில் தண்டபாணீஸ்வரர் சன்னதி கருவறை தென்புறச் சுவரில் உள்ள வீரராஜேந்திரன் என்ற மூன்றாம் குலோத்துங்கனின் 6 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டில் பஞ்சாங்கக் குறிப்பு உள்ளதால் மத்திய அரசு கல்வெட்டுத் துறை நாள் மாதத்துடன் கி.பி. ஆண்டைக் குறிப்பிட்டுள்ளது. நாடாள்வான் வளையம் அழகியான் ஒற்றி அரசன் கோயிலில் நந்தா விளக்கு வைக்க 32 பசுக்களையும் ஒரு ரிஷபத்தையும் கொடையாகத் தந்துள்ளான் என்பதைப் பதிவு செய்கின்றது.
Kulothunga Chozha-III’s 6th reign year inscription engraved on the south wall of the Dhandabaniśvarar shrine, records the date of the inscription as 28.11.1184 and a gift of cows by Valaiyamalagiyan Orri Arasan.

பாலீஸ்வரர் கோயில் கருவறைத் தென்புறம் முப்பட்டைக் குமுதத்தில் உள்ள விசைய கண்ட போபாலனுடைய 18 வது ஆட்சியாண்டு கல்வெட்டு திருப்பாலைவனம் கோயிலில் விளக்கொன்றை எரிக்க வேண்டி பெருங்கலத்து வாணிகன் பெரிய நகைக்கினியன் பொன்னன் என்பவன் இரண்டு பொன்னை வழங்கியுள்ளான் என்பதைப் பதிவு செய்கின்றது. பெருங்கலத்து வாணிகன் - பெரிய கப்பலில் சென்று வியாபாரம் செய்யும் வியாபாரி நகைக்கினியன் - சிரித்த முகத்துடன் இருப்பவன்.
Vijayakanda Gopala’s 18th reign year 1277 CE inscription engraved on the south wall of the same temple, records the gift of 2 gold (madai) for a lamp by a Perungalathu vānigan This merchant might be foreign trader. Perungalam means a big ship. At that time Vijaya Gandagopaladeva was the king. Trader name is Periyanagaikkiniyan Ponnan.

தண்டபாணீஸ்வரர் கோயில் கருவறைத் தென்புற ஜகதியில் உள்ள மூன்றாம் இராஜராஜனுடைய 7 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு எயினூர் நிலை புதுவாயல், புதுவாயில் உடையான் 4 பசுக்களை வழங்கி நெய் விளக்கேற்றுமாறு வேண்டுகிறான். பசுக்களைப் பெற்ற ஆமூர் மன்றாடி வெள்ளைக்கிளி சித்திரமேழிக்கோன் திருவெளி அபயன் 2 நாழி நெய் வழங்க உடன்படுகிறான் என்பதைப் பதிவு செய்கின்றது. எயில் + ஊர் = எயிலூர் என்க. எயினூர் என மாறும். விச்சாதிரன், விஜ்யாதிரன் என இருவகையாக எழுதப்பட்டுள்ளது. கொண்டுவந்து என்பது கொடுவந்து என வந்துள்ளது. இது இலக்கணத்தில் இடைக்குறை என்பர். புதுவாயில் கிராமத்தின் தலைவனாக விஜ்யாதிரன் இருந்துள்ளான்.
Rajaraja-III’s 7th regnal year 1223 CE, inscription on the same wall of the shrine, records the gift of 4 cows for a lamp by vijyädiran of Puduvayil in Eyinür, situated in Paiyyur Köttam a district of Jayangondasola mandalam Amur shepherd received the cows and made an agreement. His name is Vellaikili Chitramēlikōn Tiruvēli Abaiyan.

பாலீஸ்வரர்
கோயில் கருவறை தென்புறச் சுவரில் உள்ள வீரராஜேந்திர சோழன் என்ற மூன்றாம் குலோத்துங்கனுடைய 5 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு திருப்பாலைவனமுடையார் கோயில் தேவரடியார் வஞ்சியான வல்லாளை வென்றி மாணிக்கம் ஒரு விளக்கு வைக்க ஒன்றரை மாடை அளித்துள்ளார். என்பதைப் பதிவு செய்கின்றது.
Kulothunga Chozha-III’s 5th regnal year 1175  CE, inscription records the gift of money by a dancing girl namely Vañjiyana Vallala Venri Manickam for a lamp in the temple.

பாலீஸ்வரர் கோயில் முன்மண்டபச் சுவர் விநாயகர் கோஷ்டத்தின் வலப்புறம் உள்ள கல்வெட்டில் அரசர் பெயருள்ள ஒரு வரி தற்போதில்லை. கல்வெட்டாண்டறிக்கையில் மூன்றாம் இராஜராஜன் என்று இருப்பதால் இவன் கல்வெட்டு எனலாம். ஈக்காட்டுக்கோட்டம் திருப்பாச்சூர் பிருதிமாணிக்க தெரு நகரத்தான் மாரட்டன் அறமுடையான் அபயம் புக்கான் மூன்று நிலை குத்து விளக்கும் தொடர்ந்து எரிய 27 ½ காசுகளும் அளித்துள்ளான் என்பதைப் பதிவு செய்கின்றது. .
Rajaraja –III’s 22nd regnal year 1221 CE  inscription on the front mandapa in the Vinayakar shrine, records the gift of money and a lamp-stand by Märattan Aramudaiya Abhayampukkan a merchant of Piridi- Mänicka peruntheruvu in Tiruppasur situated in Ikkaṭṭukōṭṭam a district of Jayangondasõlamandalam for a lamp in the temple

பாலீஸ்வரர் கோயில் கருவறை தென்புறச் சுவரில் உள்ள மூன்றாம் இராஜராஜனுடைய 28ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டு திருப்பாலைவனப் பெருந்தெருவில் வாழ்ந்த குமாரந்தை வேளேரிநாகன் செட்டியண்ணன் ஒரு விளக்கு வைக்க 2 மாடை பொன் தந்துள்ளான் என்பதைப் பதிவு செய்கின்றது. அதாவது ஒரு விளக்கு வைக்க இரண்டு பொற்காசுகள் தரப்பட்டுள்ளது.
Rajaraja Chola-III’s 28th regnal year 1244 CE inscription on the south wall of the central shrine, records the gift of 2 madai (money) by a merchant Kumaranthai vēlēri Nagan chettiannan for twilight lamp in the temple.

பாலீஸ்வரர் கோயில் முன்மண்டபம் விநாயகர் கோஷ்டம் அருகில் உள்ள மூன்றாம் குலோத்துங்கனாகிய திருபுவன வீரதேவன் ஆட்சியின் 36 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு செங்காட்டுக் கோட்டத்து சேத்துறையூர் கங்கமாதேவி திலக வானுதலி என்பவர் கோயிலில் 1/2 விளக்கு வைக்க புஜபல மாடை ஐஞ்சரை அரைக்கால் வழங்குகிறார். கோயில் சிவப்பிராமணர் இம்மாடை கொண்டு 45 சாவா மூவா ஆடுகள் வாங்கி, தவயோகி வாரணக்கோன் கங்கன் அனுக்கன் என்ற இடையனிடம் தருகின்றார். அவன் நெய் வழங்க உடன்படுகிறான் என்ற விபரங்களைப் பதிவு செய்கின்றது. .
Kulottunga Chola-III’s  36th regnal year (1206 C.E.) inscription on the front mandapa of the central shrine near Vinayakar statue, records the gift of money by Gangamadevi Tilaka Vänudali of Chetturai, in Sengättu Kōṭṭam, a district of Jayangondasōlamandalam for a lamp in the temple. The shepherd name was Varaakkōngangan.

பாலீஸ்வரர் கோயில் முன்மண்டபம் விநாயகர் கோஷ்டம் அருகே.உள்ள முற்றுப்பெறாத மூன்றாம் குலோத்துங்க சோழனின் 39 ஆவது ஆட்சிஆண்டு 1217 CE, கல்வெட்டு புழல் கோட்டத்துத் திருவொற்றியூர் கோயில் தேவரடியார் காந்தாளி மகள் நாச்சி என்பவள் 13 பழங்காசுகளைத் திருப்பாலைவனமுடையார் கோயிலுக்கு வழங்க, அத்தொகை கொண்டு விற்பேட்டு நிலைப் பெரும்பேடான விக்கிரம சோழ நல்லூரில் சபை நிலம் விலைக்கு வாங்கி விட, பெரும்பேடு மகாசபை நந்தவனப்பட்டியாக நிலத்தை மாற்றித் தந்துள்ளது என்பன போன்ற விபரங்களிப் பதிவு செய்கின்றது.
Kulothunga Chozha-III’s 39th reign year 1217 CE incomplete  inscription on the same place. Kulottunga III. Regnal year 39 (1217 C.E), records the sale of land by the assembly of Perumpedu alias Vikramasõla Chaturvedimangalam in Paiyür köttam for the money ( 13 Palankäsu) received by them from a dancing girl (Nächi daughter of Kanthali) of the temple of Tiruvorriyüruaiya Nayaār in Pularkōṭṭam, a district Jayangondasōlamandalam for the maintenance of the servants tending the flower garden endowed by her.

பாலீஸ்வரர் கோயில் அந்தராளம் தென்புறச் சுவரில் உள்ள சிதைந்த தெலுங்குச்சோழ மன்னன் விசய கண்ட கோபாலனுடைய 16 ஆம் ஆட்சியாண்டு 1266 CE, கல்வெட்டு பையூர்க் கோட்டத்து ஆரணியைச் சேர்ந்த பேரம்பலக் கூத்தன் வண்ணக்கன் வேட்டையழகியான் ஒரு விளக்கு கோயிலில் வைக்க 90 காசினை முதலீடாக வழங்கியிருந்தான், கடாரங்கொண்ட சோழக்கோன் உலகளந்த சோழக்கோன், காட்டுக் கணபதி கோன், வேங்கடக் கோள் போன்ற இடையர்கள் ஆடுகளைப் பெற்றுக் கொண்டு நெய் வழங்க உடன்படுகின்றனர் என்ற விபரங்களைப்பதிவு செய்கின்றது. கல்வெட்டின் இறுதியில் மாணிக்க பரிகலம் மற்றும் முதலியார் ஒருவர் பெயர் உள்ளது.
Visaya Gaṇḍagōpāla Dévar’s 16th regnal year(1266 C.E), inscription on the south wall antharalam of the same temple records the gift of sheep by Armi Vannakan Perambalakküttan Vettaialagiyãn for a lamp in the temple. 90 nar porkasu (90 current gold coins) was given by the donor. Arani village is located Ponneri taluk.

பாலீஸ்வரர் கோயில் அந்தராளம் தென்புறத்தில் உள்ள திருக்காளத்தி தேவ கண்டகோபால தேவரின் 3-ஆம் ஆட்சியாண்டு 1253 CE, கல்வெட்டு ஆரணி வண்ணக்கன் காவுடையான் சூரியதேவன், கோயில் தினசரி செலவுகளுக்காக வேண்டி இரண்டு இடங்களில் மொத்தம் 1 வேலி நிலம் விலைக்கு வாங்கி அளித்துள்ளான் என்ற செய்தியைப் பதிவு செய்கின்றது. முன்னரே ஒரு வண்ணக்கன் கண்டோம். நாணயம் பரிசோதிப்பவராக வண்ணக்கர் இருந்துள்ளனர். திருநாள்கள் என்பது விழா நாள்கள். ஈரோடு மாவட்டம் அரச்சலூர் வட்டெழுத்துக் கல்வெட்டில், வண்ணக்கன் தேவன் சாத்தன் என்ற இசைக்கலைஞன் பெயர் உள்ளது. கல்வெட்டில் இடம்பெறும் ஆரணி திருப்பாலைவனம் அருகே தற்போதும் உள்ளது.
Tirukkalathi Gandagopāladēvar’s 3rd regnal year (1253 C.E.) inscription on the sout of antarala records the gift of land by Arni Vannakan Kāvudaiyān Süryadevan to the temple of Tiruppälaivagammudaiya nayagar for offerings. Thirunal- means festival day.

பாலீஸ்வரர் கோயில் அந்தராளம் தென்புறச் சுவரில் உள்ள சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியின் 14 ஆவது ஆட்சியாண்டு 1264 CE, கல்வெட்டு திருப்பாலைவனம் கோயிலில் திருமதில் பன்னிரண்டாவது ஆட்சியாண்டில் தொடங்கி, பதினாலாவது ஆட்சியாண்டில் முடிகின்றது. மதில் பெயர் சுந்தரபாண்டியன் திருமதில் ஆகும். பைய்யூர்க் கோட்டத்து நாட்டவர் திருமதில் திருப்பணியில் ஈடுபாடு காட்டியுள்ளனர். திருப்பணிக்காகப் பல்வேறு வரிகளும் கோயிலுக்கே வழங்கப்பட்டன. கோட்டம் என்ற சபை உறுப்பினர்களும் நாட்டவர் என்றே அழைக்கப்பட்டனர். திருப்பாலைவனம் கல்வெட்டுகளில் கோட்டமே இடம் பெறுகிறது. நாடு இடம் பெறவில்லை பெருமாள் என்பது அரசன் என்று இங்கே பொருளாகும். பாண்டிய மன்னர் பலர் பெருமான் என வழங்கப்பட்டுள்ளனர்.
Sundara Pandyan’s 14th regnal yaer 1264 CE inscription on th wall of the same place, records the gifts of lands in Alinallur by the assembly of Paiyyur köttam for constructing the Sundra Pandiyan Thirumathil called after the Kings name. Members of Kōṭṭam sabai also called Nätārs.

பாலீஸ்வரர் கோயில் கருவரை தென்புறச் சுவரில் உள்ள மூன்றாம் இராசராசனுடைய ஏழாம் ஆட்சியாண்டின் கல்வெட்டு பத்தர் சித்தத்துறைவான் திருநந்தவனம் ஒன்று ஏற்படுத்த நிலக்கொடை வழங்கப்பட்டது. 5 அடியினால் 16 சாண் கோலால் நிலம் அளக்கப்பட்டது. ஆவூர் கூற்றத்து ஆதாங்கூருடையன் பெரியான் திருச்சிற்றம்பலமுடையான் பண்டாரத்தில் ஒடுக்கி வைத்த 45 அன்றாடு நற்காசு  கொண்டு 2700 குழி நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. நந்தவனம் செய்வதற்கு முன் திருமுறை ஓதப்பட்டது. மடத்தில் உள்ளவர் ஜீவனத்துக்காக நிலம் விற்கப்பட்டது. அன்பர்க்கடியார் மடத்தில் சாதுக்களாக இருந்தவர்களை நிஷ்டாபர்களாயிருந்த ஆண்டார்கள் என்று கல்வெட்டு கூறுகிறது. பல கல்வெட்டுகளில் ஆண்டார்கள் என்ற அடியார்களைக் காணலாம். மனோன்மணியம் நாடகக் காப்பியத்தில் நிஷ்டாபரர் என்ற பாத்திரமும் உண்டு. ஜீவனம் - உயிர் வாழ என்க. கச்சியூர், பாகளூர், வஞ்சிப்பாக்கம் போன்ற ஊர்ப்பெயர்கள் சாசனத்தில் உள்ளன. பத்தர் சித்தத்துறைவான் திருநந்தவனம் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாயன்மார்களின் திருமுறை ஓதும் பழக்கம் மக்கள் மத்தியில் பரவலாக இருந்துள்ளது இக்கல்வெட்டின் மூலம் தெரிகிறது.
Rajaraja-II’s 7th regnal year 1223 CE inscription on the south wall of the central shrine, reords the gift of land made free of taxes, after purchasing from the assembly of medukur alias Keralantaka Chaturvedi mangalam in Kölür situated in Paiyyur Kottam, a division of Jayangondasōlamandalam, by Periyan Tiruchchirrambalamudaiyan - Seliya Velan of Uranür in Avür Kurram a sub-division of Nittavinoda Valanadu, which was a district of Sola mandalam, for the maintenance of andärs of the Anbarkkadiyār matha, who look after the tirukkötti mandapa recite the Tirumurai and cultivate the flower garden called Pattar Chittatturaivan Tirunandavanam.During the Chola period, people respected to Nayanmar's Tirumurai.

பாலீஸ்வரர் கோயில் கருவறைத் தென்புறம் ஜகதியில் உள்ள மூன்றாம் இராஜராஜனுடைய 14-ஆவது ஆட்சியாண்டின் கல்வெட்டு கி.பி.1228-இல் காஷ்மீரபுரத்து ஆர்யன் திருச்சிற்றம்பலமுடையான் பதுமஞன் கட்டமான் என்பவர் ஒரு விளக்கும் 15 எருமைகளையும் அளித்துள்ளார். இவரே திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் கொடை ஒன்றிலும் இடம்பெறுகிறார். (369/1191) கி.பி. 1438-இல் வெட்டப்பட்ட ஒரு கல்வெட்டிலும் ஒரு காஷ்மீர் நபர் இடம்பெறுகிறார் (800/1926).
Rajararaja-III’s 14th regnal year 1228 CE inscription on the south wall of jagathi in the same temple, records the gift of buffaloes by Aryan Tiruchchirrambalamudaiyan Paduman alias Kattimãn, a native of Kaşmirapuram, for a lamp in the temple.

பாலீஸ்வரர் கோயிலில் உள்ள லோகாம்பாள் சன்னதி கருவறை தெற்கு ஜகதியில் உள்ள சுந்தரபாண்டியனுடைய 14ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டு, 01.06.1291 அன்று பையூர் கோட்டத்து உடையார் திருப்பாலைவனமுடைய நாயனார் கோயிலில், திருக்காமக்கோட்டம் யோகிலும் மறையாத நாச்சியார் முன்பாக ஒரு திருநுந்தா விளக்கு எரிக்க வைக்கப்படுகிறது. திருநறையூர் நாட்டு திருநறையூரன் கிழவன் தேவர்களின் தேவன் தொண்டைமானார் என்ற அதிகாரியின் காரியத்துக்குக் கடவனாக அதாவது இட்ட பணி செய்கின்ற அரசு அலுவலனானத் தேவர்கள் தேவன், அம்மன் சன்னதி முன்பாக விளக்கெரிக்கக் கோயில் சிவப்பிராமணரிடம் முதலீடாக 40 பணம் தந்துள்ளான். யோகிலும் மறையாத நாச்சியார் என வழங்கப்பட்ட அம்மனே தற்போது லோகாம்பாள் என வழங்கப்படுகிறார். அம்மன் சன்னதியில் இக்கல்வெட்டே தொன்மை வாய்ந்தது என்பதால் 1.6.1291-க்கு முன்பு அம்மன் சன்னதி கட்டப்பட்டது உறுதியாகிறது. காரியத்துக்குக் கடவ என்பதே விஜயநகர அரசர் கல்வெட்டுகளில் காரியகர்த்தா என மாறியது போலும். போகிலும் பிரியாதது போல் யோகிலும் பிரியாது என வந்துள்ளது. அர்த்தநாரி என்று பொருள். அபின்னதேவி என்க. சம்புவராயர் கல்வெட்டு என்றும் பிரியாத நாச்சி என்று அம்மனைக் கூறுகிறது. கல்வெட்டில் இடம்பெறும் தொண்டைமான் உயரதிகாரியாவான்.
Sundara Pandiyan’s 14th  regnal year, inscription, on the south wall of the Amman shrine dated is 1.6.1291, records the gift of money by Devargal devan the agent of Tonaimänär and the headman of Naraiyur in Tirunaraiyürnādu a subdivision of Kulottungasöļa valanādu which was a district of solamandalam for burning a lamp in the shrine of the goddess. So Amman shrine was constructed before 1.6.1291.

பாலீஸ்வரர் கோயிலில் உள்ள லோகநாயகி அம்மன் சன்னதி அர்த்தமண்டபச் சுவற்றில் உள்ள சம்புவராயர்,சோழர் வீழ்ச்சிக்குப் பிறகு தனியரசு செலுத்தினர். படைவீட்டு இராஜ்யத்தை ஆண்ட இம்மரபில் முதலாவதாக ஆண்ட முதலாம் இராஜநாராயணச் சம்புவராயனுடைய மூன்றாவது ஆட்சியாண்டின்போது இக்கொடை வழங்கப்பட்டுள்ளது. திக்கன் நாயக்கன் என்ற அதிகாரியின் காரியத்துக்குக் கடவ 'ரிஷபத்து...' என்பவர் அம்மன் கோயிலில் அதாவது திருக்காமக்கோட்டத்து நாச்சியார் என்றும் பிரியாத நாச்சியார் சன்னதி திருப்பணிக்காகப் பொருளுதவி புரித்துள்ளார். கல்வெட்டின் இறுதிப்பகுதி சிதைத்துள்ளது. பாண்டியர் காலத்தில் யோகிலும் பிரியாத நாச்சியாரே சம்புவராயர் காலத்தில் என்றும் பிரியாத நாச்சியார் என வழங்கப்பட்டுள்ளார்.
Rājanārāyana Sambuvarāyan I – 3rd regnal year, 14th century C.E, inscription records the provision made by the agent of Tikkama Nayakar for repairs to the shrine of the goddess Yendrum Piriyadha Nächchiyär.

…… to be continued with Shiva & Vishnu Temples at Thathaimanji and Kattur.

No comments:

Post a Comment