06th October 2019.
The visit to this was a part of the Ahimsa Walk organized by the Tamil Jains on 6th
October 2019. During the Ahimsa Walk about 60 Jains and Non-Jains
from all parts of Tamil Nadu and Andhra Pradesh participated. The place
Arungulam was originally called Arugar Kulam (அருகர் குளம்) was corrupted to the present name of Arungulam.
Arugar in Tamil means Jain Tirthankaras. There is a pond ( in Tamil Kulam ), about 50 meters from the
Jinalaya. The Place is also on the banks of river Kosasthalaiyar, which originates
from Ammapalli reservoir & its catchment area of Andhra Pradesh and joins with the Bay of Bengal at Pulicat, in Tiruvallur District.
2019 வருடம் அக்டோபர் மாதம் 6ஆம் நாள் தமிழ் சமண சமய அன்பர்களால் நடத்தப்பட்ட அஹிம்சை நடையின் ஒரு பகுதியே அருங்குளம் ஸ்ரீ 1008 தருமநாத தீர்த்தங்கரர் ஜீநாலயத்திற்குச் சென்றது. முற்காலத்தில் அருகர் குளம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் மறுவி அருங்குளம் என்று அழைக்கப்படுகின்றது. பெயருக்கு ஏற்றார்போல் ஜிநாலயத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் ஒரு குளமும் உள்ளது. மேலும் இவ்வூர் ஆந்திர மாநிலத்தின் அம்மாபள்ளி என்ற ஏரியும் அதன் நீர்பிடிப்பு பகுதில் இருந்து உற்பத்தியாகி வங்கக் கடலில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புலிகேட் என்னும் இடத்தில் கலக்கும் கொசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
2019 வருடம் அக்டோபர் மாதம் 6ஆம் நாள் தமிழ் சமண சமய அன்பர்களால் நடத்தப்பட்ட அஹிம்சை நடையின் ஒரு பகுதியே அருங்குளம் ஸ்ரீ 1008 தருமநாத தீர்த்தங்கரர் ஜீநாலயத்திற்குச் சென்றது. முற்காலத்தில் அருகர் குளம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் மறுவி அருங்குளம் என்று அழைக்கப்படுகின்றது. பெயருக்கு ஏற்றார்போல் ஜிநாலயத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் ஒரு குளமும் உள்ளது. மேலும் இவ்வூர் ஆந்திர மாநிலத்தின் அம்மாபள்ளி என்ற ஏரியும் அதன் நீர்பிடிப்பு பகுதில் இருந்து உற்பத்தியாகி வங்கக் கடலில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புலிகேட் என்னும் இடத்தில் கலக்கும் கொசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
Some of the important details are...
The Jinalaya faces east with a mottai
Rajagopuram (Base without superstructure) with a tall compound wall. There
are two slab stones erected about 200 meters from the Jinalaya sanctum
sanctorum, called Dharma Chakra/Enthirakal (எந்திர கல்). Of the two one is in good shape and the other one was found half broken.
In the good enthirakal, there is a round hole on the top. It was said that the sun's rays will fall on the Moolavar,
two times a year during earth movement
from Uttarayanam (Tamil Month Panguni dates 1,2,3) and in Dakshinayanam (Tamil month Purattasi dates 1,2 & 3). During that time the sun's rays color
will change to Kesar/orange, Kumkum/Maroon, and white.
After entering through the Rajagopuram base, a long
footpath with greenery on both sides up to the Mukha mandapa. A balipeedam is in
front of the mukha mandapam. The regular/common feature of Manasthamba in any Jinlaya is missing here. To
climb Mukha mandapa, steps are provided on the south and north sides with Sanga Nidhi
and Padmanidhi. In the mukha mandapa sannadhi for Dharma Devi on the right and
Brahma Devar on the left. In sanctum sanctorum moolavar Sri 1008 Dharmanatha
Tirthankara is in sitting posture on a simhasana. The whisk bearers are on both
sides. A Prabai is shown on his back. On the top Ashoka creeper with mukkudai/triple umbrella. On his left, a pedestal with Tirthankara images on all four
sides looks like Manasthamba. The lanchanam Vajram ( a Gada may be an opt word to use ) is on the pedestal.
There is also a Dharmanatha Tirthankara idol in the ardha mandapa. Parsvanath Tirthankara is in the koshtam, behind the Moolavar.
ARCHITECTURE
ஜீநாலயத்தின் எதிரே இரண்டு எந்திரக்கற்கள் / தருமச்சக்கரம் நடப்பட்டு
உள்ளது. அதில் ஒன்று பாதி உடைந்த நிலையிலும் மற்றொன்றின் மேல் பகுதியில் வட்டத்துளையுடன்
காணப்பட்டது. உடையாத நிலையில் இருந்த எந்திரக்கல்லின் வட்ட துளையின் ஊடே காலைச் சூரியனின்
கதிர்கள் சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள தருமநாதர் ஜீநாலயத்தின் கருவறையில் உள்ள
பிம்பத்தின் மீது விழும் எனவும், இந்நிகழ்வு தட்சினாயன காலத்தில் மூன்று நாட்கள் (
பங்குனி 1,2,3 தேதிகள் ) உத்ராயன காலத்தில் 3 நாட்கள் ( புரட்டாசி 1,2,3 தேதிகளில்
) நிகழும் எனவும், அப்போது அந்த சூரியக்கதிர்கள் கேசர் நிறம், குங்கும நிறம் மற்றும்
வெள்ளை நிறமாக இருக்கும் எனவும் உபாத்தியாயர் திரு நாககுமார் கூறினார்.
ஜீநாலயத்தின் முன்பு ஒரு மொட்டைக்கோபுரம். அதன் பின்பு நீண்ட நடைபாதை
முடிவில் பலிபீடம். வழக்கமாக காணப்படும் மானஸ்தம்பம் காணப்படவில்லை. முக மண்டபத்திற்கு
செல்ல தெற்கு மற்றும் வடக்கு புறத்தில் சங்கநிதி மற்றும் பத்மநிதியுடன் படிகள் கட்டப்பட்டு உள்ளது. முகமண்டபத்தில் தருமதேவி மற்றும் பிரம்மதேவருக்கான
சன்னதிகள் இருக்கின்றன. கருவறை மற்றும் அர்த்தமண்டபத்தில் இரு தருமநாத தீர்த்தங்கரர்
பிம்பங்கள் வழிபாட்டில் இருக்கின்றது. தருமதேவர் தீர்த்தங்கரர் அமர்ந்த நிலையில் தலைக்குப்
பின்புறம் பிரபையுடன் காணப்படுகின்றார்.. மேலே முக்குடை, அசோகா இலைக்கொடிகள் மற்றும்
சாமரதாரிகளும் காட்டப்பட்டு இருக்கின்றது. கருவறையில் உற்சவ திருமேனிகளும் இருக்கின்றன.
ARCHITECTURE
The temple complex consists of a sanctum sanctorum,
Antarala, ardha mandapa, and a mukha mandapa.
The space in the prakara between mukha mandapa and ardha mandapa forms
the maha mandapa. The Mukamandapa is on a
simple padma bandha adhisthana with Jagathy, virudha kumuda, and vyyalavari. The
sanctum sanctorum is also on a pada bhandha adhisthana. The sanctum sanctorum
walls have three niches/koshtas Parshvanath Tirthankara is on the west side
koshtam and the other two are empty. The prastaram is of Kapota style and the
Karna Koodus have the reliefs of
Tirthankaras. Adhama Padma is in the valapi. Yazhivari is on the prastaram. A
Two-tier Dravida vimana is over the sanctum sanctorum with stucco images of
Tirthankaras.
HISTORY & INSCRIPTION
ஜிநாலயம் கருவறை, இடைநாழி, அர்த்தமண்டபம், மகாமண்டபம் மற்றும் முக மண்டபம் என்ற அமைப்பில் கட்டப்பட்டு உள்ளது. கருவறை
எளிமையான பாதபந்த அதிட்டானத்தின் மீது இருதள விமானத்துடன் காணப்படுகின்றது. கருவறைச்
சுவற்றின் மூன்று கோஷ்டங்களில் மூலவருக்கு பின்புறம் உள்ள கோஷ்டத்தில் மட்டும் பார்ஸ்வநாத்
தீர்த்தங்கரர் நின்ற நிலை சிற்பம் உள்ளது. கபோத அமைப்பு பிரஸ்தரத்தின் வலபியில் அதமபத்மமும்
மேலே யாளிவரியும் காணப்படுகின்றது. பிரஸ்தரத்தின் கர்ணக்கூடுகளில் தீர்த்தங்கரர் புடைச்
சிற்பங்கள் காணப்பட்டன. விமானத்தின் இரண்டு நிலைகளிலும் தீர்த்தங்கரர் சுதைச்சிற்பங்கள்
காணப்படுகின்றன.
HISTORY & INSCRIPTION
It was told that the Jinalaya is more than 1200
Years old. This place and the temple are mentioned in the 10th-century literature Soolamani written by
Tholamozhi Thevar which praises the Payapathi King. A latter-period inscription stone slab is
kept inside the Jinalaya, which may belong to the 14th to 15th
Century.
THE TEMPLE TIMINGS:
இந்த தருமநாதர் ஜிநாலயம் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும்..10ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்த தோலாமொழித்தேவர் இயற்றிய சூலாமணி என்ற காவியத்தில் இந்த ஜீநாலயமும்
இந்த ஊரும் குறிப்பிடப்பட்டு இருப்பதாக திரு நாககுமார் கூறினார். மேலும் பிற்காலத்திய
கல்வெட்டு பலகைக்கல் ஒன்று சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டு இருந்தது. எழுத்துக்களின்
அமைதியைக்கொண்டு அஃது 14 அல்லது 15ஆம் நூற்றண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின்
கருத்து.
THE TEMPLE TIMINGS:
The temple will be kept open between 07.00 hrs to
10.00 hrs and 17.00 hrs to 20.00 hrs.
Since The Upadhyaya/Poojari is staying adjacent to the temple, he may be
contacted.
CONTACT
DETAILS
Upadhyaya Mr. Naga Kumar may be contacted on his
mobile at 9382163302 and 9380794402 for further details.
HOW TO
REACH:
From Tiruttani railway station 45A bus is
available to reach this place Arungulam and autos may be hired.
Arungulam is about 10 KM from Tiruttani and 34 KM
from Tiruvallur
Nearest Railway station is Tiruttani.
LOCATION OF THE TEMPLE: CLICK HERE
Mukha mandapa base / adhistanam
Brahma Devar sannadhi
Dharmadevi Sannadhi
Sanctum Sanctorum with antarala and artha mandapam and the Dharmantha Tirthankara images
Tirthankara with whisk bearers bas-relief on the capital / pothyal
View of the Vimana with Tirthankara stucco images
View of the Vimana with Tirthankara stucco images
View of the Vimanam with Tirthankara stucco images
Parsvanath Tirthankara in the west koshtam / niche
Arungulam pond
Abhishekam with Arathi pooja was done by Mr. Nagakumar. The sun's rays pass through the top round hole and fall on Moolavar Sro Dharmanatha Tirthankara.
---OM SHIVAYA NAMA---
No comments:
Post a Comment