Tuesday 3 April 2018

Velliangiri Andavar Temple / வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் / “THEN KAILAYAM” - Velliangiri Hills, Poondi in Coimbatore District, Tamil Nadu. TREKKING.2018

01st April 2018
It was planned to trek Velliangiri hills this year before Chitra pournami ( Chithirai month’s Full moon day ) on 30th Night March 2018. Two first timers are also joined with us this year. We used to start our trekking around mid night, but this year it was delayed by two hours  due to delay of the train. We could reach Coimbatore around 23.45 hrs and hired a Taxi ( Rs 750 .00 ) and reached Poondi the base of the Hill around 02.00 hrs. After completing forest authorities check, we started our trekking.  in spite of the we could notice plastic wastes scattered on the hill. This my be due to non checking throughout the day and allowing shops to function on the hills. I could manage to trek with out torchlight up to 2nd hill and after that the moon light diminished due to dense forest. Could able to watch both moon set  and sun rise from 7th hill.  Due to speed of walking we got separated and reached the  top  of the 7th hill around 07.30 hrs and had the darshan of Sri Velliangiri Andavar.  

OM SHIVAYA NAMAHA.
 





Due to heavy rush  we are advised not to stay on the top, so we  started to climb down slowly. The fine powder of soil made us difficult to climb down and many people surfed and rolled down.  Thought of reaching the 3rd hill before 10.00 hrs to escape from the hot sun, but could not do so due to tiredness. Since the start time was delayed and this climbing down also got delayed. Had my breakfast on the 5th hill and had butter milk on the way.  The hot sun, the knee and angle pain  delayed further to reach the base of the hill. It took almost  2 hours to climb down the first hill from Vellai Pillayar Temple, which took only an hour to climb up. As the tiredness increased it makes us to feel that the steps to climb down also increasing like a hanuman’s tail. Finally I could reach the base around 15.00 hrs. After Thanking Lord Shiva for the peaceful darshan and safe journey/ trekking, left to Chennai.

The Samadhi of Ottan Siddhar, believed that he constructed the steps of first 3 hills


Some important tips.
*Advised to carry two litres of water, food for two times,  some fruits, -   some sweets like orange mittai.
*Torch light is essential.
*Mobile phones will work only in the first and 7th hill.
*Advised to carry the  regular use tablets.
*From this year on-wards ladies and third gender of all age  groups are    allowed to trek.
*Allowed to trek from Maha Shivaratri to May 31st. Apart from this   every Pournami and Amavasai ( Full moon and No moon days )  also   allowed to trek. 
*Advised not to carry any plastic and polythene bags.

இந்த வருட தென் கயிலாயம் எனும் வெள்ளியங்கிரி யாத்திரை முன்பே தீர்மானித்தபடி, இரண்டு புதிய அன்பர்களுடன் 2018, மார்ச் மாதம் 30ந்தேதி இரவு மேற்க்கொண்டோம். அன்று பங்குனி உத்திரத்துடன் பெளர்ணமி வேறு சேர்ந்து எங்களுடைய யாத்திரை சிறப்பானதாக்கியது. இரயில்  இரண்டு மணி நேரம் காலதாமதமாக சென்னையில் இருந்து  கிளம்பியதால் திட்டமிட்டபடி பூண்டியில் இருந்து இரவு 12 மணிக்கு  பதிலாக இரவு 2 மணிக்குத்தான் மலையேற்றத்தை தொடங்க முடிந்தது. வன அலுவலர்களால் சோதனை இடப்பட்டு பின்பு அனுமதிக்கப்பட்டோம். ஆனாலும் மலையின் மீது ஆங்கங்கே பிளாஸ்டிக் கழிவுகளும் பாலிதீன் பைகளும் குப்பைகளாக கண்களை உறுத்தியது. முழுநேரமும் சோதனை இடாதது, மலை மீது கடைகளை அனுமதித்தது தான் இதற்கு மூல காரணங்களே.. நிலவு வெளிச்சத்தில் இரண்டு மலைகளை டார்ச்லைட் உதவி இன்றி ஏற முடிந்தது.. ஒவ்வொறுவரின் ஏறும் சக்தியின் காரணமாக தனி தனியாக பிரிய நேர்ந்தது. கிளம்புவதில் ஏற்ப்பட்ட காலதாமதம் 7வது மலையை அடைவதிலும் தொடர்ந்தது. 7வது மலை ஏறும் போதே சந்திரனின் மறைவையும் சூரியனின் உதயத்தையும் கண்டது ஒரு மகிழ்ச்சியான அனுபவம், அதுவும் ஒரே இடத்தில் இருந்து. சுமார் 7.30 மணி அளவில் வெள்ளங்கிரி ஆன்டவரின் தரிசனம் கிடைக்கப்பெற்றோம். நாங்கள் சென்ற வேளையில் தான் காலை பூஜைகள் நடக்க ஆரம்பித்தது. மிக நல்ல சுகமான தரிசனம். ஓம் சிவாய நமக.. 

கூட்டம் அதிகமாக இருந்ததனால் தரிசனம் முடிந்த பின்பு மலையில் இருந்து கீழே இறங்கி விட அறிவுறுத்தப்பட்டோம். மெதுவாக கீழே இறங்க ஆரம்பித்தோம். கீழ் இறங்கும் பாதை செங்குத்தாகவும், மண் பவுடர் போல மிருதுவாக இருந்த்தால் கவனத்துடன் இறங்கினோம்.. அப்படியும் சிலர் வழுக்கி / சறுக்கி விழ நேர்ந்தது. காலை சிற்றுண்டி சாப்பிட்ட பின்பு 10 மணிக்குள் மூன்றாவது மலையை அடைந்து விட்டால் சூரியனின்  வெப்ப கதிர்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்து  வேகமாக நடக்க முயற்ச்சி செய்தோம். களைப்பு, முழங்கால், கனுக்கால்,  பாதம் ஆகியவற்றில் ஏற்பட்ட வலி போன்ற காரணங்களால் கீழே இறங்குவது சுலபமாக இருக்கவில்லை. ஒரு மணி நேரத்தில் ஏறிய முதல் மலை, இறங்குவதற்க்கு மேலும் ஒரு மணி நேரம் அதிகமாகப் பிடித்தது. களைப்பு, சோர்வு, தூக்கமின்மை, படிகள் அனுமன் வால் போல நீண்டு கொண்டே இருப்பது போன்ற மாயத்தோற்றத்தை உண்டாக்கியது. வயது ஆகிவிட்டதை நன்றாகவே உணர முடிந்தது. ஒருவழியாக சுமார் மூன்று மணி அளவில் மலையின் அடிவாரம் பூண்டி கோவிலை அடைந்தோம். எங்களுக்கு தரிசனம் அளித்து, எங்களின் பாதுகாப்புக்காக எங்களுடன் பயணித்த எந்தைக்கு நன்றி கூறி சென்னைக்கு கிளம்பினோம். 
ஓம் சிவாய நமக..

சில பயனுள்ள தகவல்கள்.
  • வெள்ளியங்கிரி மலையேற்றம் மகா சிவ ராத்திரியில் இருந்து மே மாதம் 31ந்தேதி வரை அனுமதிக்கப்படுகின்றது.
  • மற்ற சமயங்களில் அம்மாவாசை பவுர்ணமி தினங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றது.
  • ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் வயது வித்யாசம் இன்றி அனுமதிக்கப் படுகின்றனர் ( கடந்த வருடம் வரை பெண்கள் மலை ஏற அனுமதிக்கப்படவில்லை)
  • குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரும், இரண்டு வேளை சாப்பாடும் எடுத்துச்செல்வது மிகவும் நலம்.
  • ஆரஞ்சு மிட்டாய், பிஸ்கட் தேவைப்படும் எனில் எடுத்துச் செல்லலாம்.
  • டார்ச் லைட் மிக மிக அவசியம்.
  • முதல் மலையிலும் கடைசி மலையிலும் மட்டும் கைபேசி வேலை செய்ய வாய்ப்பு உள்ளது.
  • பிளாஸ்டிக், பாலிதீன் பை போன்ற பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகின்றார்கள்.
The Details of my Previous Visits are:  2011, 2012, 2013, 2015, 20162017 , 2019



SUN RISE
---OM SHIVAYA NAMAHA---

1 comment: