17th June 2018.
There was a heavy rush to Talakad on
Sunday, 17th June 2018, due to Ramzan Holidays. Muslims gathered in
large number to take bath in Kavery river. So vehicles are poured in this
small hamlet. At the entrance of the Village from the main road, we were
diverted to cross channel to reach the Village. On the banks of the channel we
could find this Parshvanath tirthankara under the clutches of a peepal tree roots. ( may
not be possible to take it out now). Jain temple might have been destroyed, since
this place was once ruled by the Vishnuvardhan, a Hoysala King, who followed
Jainism.
This tirthankara may belongs to 12th century Hoysala
King Vishnuvardhan period before he converted to Vaishnavam from Jainism. As per the history the
King Bitti Deva converted as Vishnuvardhan under the influence of Vaishnavite
saint Ramanujar.
கடந்த ஞாயிறு 17ந்தேதி ஜூன் 2018, அன்று நாங்கள் தமிழக கருநாடக மாநிலங்களின்
எல்லையில் உள்ள தழைக்காடு சென்று இருந்தபோது இந்த பார்சுவநாதர் சிற்பத்தைக்காண நேர்ந்தது.
முகமதியரின் பண்டிகையான ரம்ஜான் விடுமுறையைத் தொடர்ந்து வந்ததால் அந்த ஞாயிறு வழக்கத்தை
விட கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஊருக்குள் செல்ல பாதை மாற்றி விடப்பட்டு ஒருகால்வாயைக்
கடந்து செல்ல நேர்ந்தது. அப்படி செல்கையில் இந்த பார்சுவநாத தீர்த்தங்கரர் சிற்பம்
ஒரு மரத்தின் அடியில் இருப்பதைக் கண்டோம். அருகிலேயே இரு வீரக்கற்களுடன். சிற்பத்தின்
கால் பகுதி மரத்தின் வேர்களால் விழுங்கப்பட்டு காணப்பட்டது. சிற்பத்தில் பார்சுவநாதருக்கு
மேலே உள்ள பாம்பு மட்டும் சிறிது சேதம் அடைந்து காணப்பட்டது. இது பண்ணிரண்டாம் நூற்றாண்டு போசால அரசன் விஷ்னுவர்த்தன்
காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகின்றது.. இங்கு ஒரு சமண ஜீனாலயம் இருந்து பின்பு
காலவெள்ளத்தால் அழிக்கப்பட்டு இருக்கலாம். ஆனாலும் இந்த பார்சுவநாதர் சிற்பம் மட்டும்
சமணத்தின் எச்சமாக இன்றும் நின்றுகொண்டு இருக்கின்றது.
பிட்டி தேவனாக இருந்த சமண மதத்தைச்
சார்ந்த போசால அரசனை வைஷ்ணவ ஆச்சாரியரான ராமானுஜர் சமணத்தில் இருந்து வைஷ்னவத்திற்க்கு
விஷ்ணுவர்த்தனாக மாற்றம் அடைய வைத்தார் என்பது வரலாறு.
LOCATION: 12.180275 77.030254
---OM SHIVAYA NAMA---
Fantastic sir.
ReplyDelete