Monday 30 July 2018

Hero Stone / Nadukal / Veerakallu / செங்கம் நடுகற்கள் at Eduthanur, Thiruvannamalai / Tiruvannamalai District, Tamil Nadu.


24th July 2018.
LOCATION: Lat:12 7’ 50.32” and Longi: 78 54’ 24.92”

This Vediyappan temple is on the banks of river Pennai in a Village called Eduthanur in Chengam Nadaukarkal group of Tiruvannamalai region. People used to call this hero stone as Uumai Vediappan. The Hero stone is in half buried condition, only above hip is visible. Terracotta / baked clay horses are offered to this Vediappan. The hero stone is applied with turmeric power. Tridents are also erected along with small terracotta horses.

The hero is in standing position with head turned to left. Bow and dagger / Katar are shown in hands. On his left a dog is shown. In addition to this the holy articles like Kendy and Simizh are also shown. Thorana is shown above the image.  Two Inscriptions are inscribed above the hero and the dog. From the inscriptions, this was erected during 7th century, Pallava King Mahendravarman – I, 34th year rule, for Pana king’s son inlaw Potrekkaiyaar's young son Karunthevakathi, who died in the process of recovering buffaloes from the thieves. Along with him his dog is also shown on his right.

ஆநிரைகளைக் கவர்ந்து சென்றவர்களிடம் இருந்து அவற்றை மீட்கும் போது இறந்துபட்ட வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் எடுத்தனூர் எனும் கிராமத்தில் வேடியப்பன் அல்லது ஊமை வேடியப்பன் எனும் தெய்வமாக வழிபடப்படுகின்றது. அவ்வீரனுடன் இறந்த நாய்க்கும் கல்வெட்டுடன் செதுக்கப்பட்டு உள்ளது. நன்றிக்கடனாக,  வழிபடும் மக்களால் அளிக்கப்பட்ட சுடுமண் குதிரைகள் சூழ வேடியப்பன் நடுகல் பாதி மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுகின்றார்.

வீரனின் இடதுபுறம் தலை திரும்பி உள்ள நிலையில் கைகளில் வில்லும் குறுவாளும் ஏந்திய நிலையில் காட்டப்பட்டு உள்ளது.  மங்களச் சின்னங்களான சிமிழும் கெண்டியும் கீழே காட்டப்பட்டு உள்ளது. வலது காலின் அருகே ஒரு நாயும் உள்ளது. இரு தோரணத்திற்கும் மேலே வீரனுக்கும் நாய்க்கும் தனி தனியாக கல்வெட்டுக்கள் வெட்டப்பட்டு உள்ளன.

இந்த நடுகல் கிபி ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவ மன்னன் முதலாம் மஹேந்திர வர்மனின்  34ம் ஆட்சி ஆண்டில் நடப்பட்டது. கல்வெட்டு வாசகத்தின் படி இந்த நடுகல் பாண அரசருடைய மருமக்கள் பொற்றெக்கையாரின் இளமகன் கருந்தேவக்கத்தி எருமைகளை கவர்ந்த கள்ளர்களிடம் இருந்து மீட்கும் போது இறந்து பட்டவனுக்காக எடுக்கப்பட்டது. அவனுடைய  கோவிவன் எனும் நாய் இருகள்ளர்களைக் கடித்துக் காத்தும் நிற்கின்றது.
  
The inscription reads like this…
கோவிசைய மயிந்திர பருமற்கு முப்பத்து நான்காவது வாணகோ அரைசரு மருமக்கள் பொற்றொக்கை ஆர் இளமகன் கருந்தேவக்கத்தி தன்னெருமைப் புறத்தே வாடி பட்டான் கல்.
நாயின் மேற்புரம்…
(கோவிவ)ன்னென்னுந் நாய் இரு கள்ளனைக் கடித்துக் காத்திருந்த வாறு..




---OM SHIVAYA NAMA---

No comments:

Post a Comment