Tuesday 3 July 2018

Tirthankaras of Onampakkam, The remains of Jainism in Tamil Nadu, Chengalpattu District, Tamil Nadu. AHIMSA WALK.

01-06-2018.
This is the third Ahimsa walk by the Tamil Jains and my second visit to this Hill. This hill is about 3 km away from the Village Onampakkam. This hill is called in different names like Karuppangundru, Kurathi Malai, Kuravan Malai,  Nagamalai, etc.. During our first visit with the members of the R.E.A.C.H Foundation, we found very difficult to locate this hill. Also we could not see the beds and medicine grinding pit during my first Visit.

After having our breakfast, the 55th Ahimsa walk was flagged off and lead  by  Sri Lakshmi Sena Padaraka Swamikal, the head of Mel Sithamur Jain mutt. The Walk passed up to the Venmani road junction (Koot) and from there reached through Van. Students, Scholars  of Tamil Jain’s community and members of other religions also participated in this walk. A small function was organized at the foothill under a  temporarily erected shamiyana. The Speakers expressed their views on Jainism and stressed the need for saving this rich heritage value hill with the Tirthankaras from the illegal / legal quarrying.  Had our lunch and started our return journey to Chennai after thanking the organizers Mr Sridharan, Dr Ajitha dass, Mr Rajendra Prasath and Mrs. Sasikala

The Details of the Tirthankaras are…
The steps are constructed by the Jain Community during 2011.  Sri Parshvanath was chiseled on a boulder like a small shrine, facing east. Yaksha and Yakshi are clearly shown. Two samara are also shown above. On the above boulder we could find the Tamil vattezhuthu inscription, which speaks about the person who chiseled this image.

Little above this Parshvanath, there is a Tirthankara image facing west. This Tirthankara image is in sitting posture in  artha pariyanga asanam. A parabai with jwala is shown above his head. Two samaratharis are also shown. Without the lanchanam, we couldn’t identify this Tirthankara.

Little above, on the same boulder, we could see the Mahavir image, the 24th Tirthankara. Two samaratharis and two angels are also shown. On the base 7 small simha reliefs are carved.

On the top of the hill, beds are chiseled on a boulder. Usually the herbal medicine grinding pit must be available near the beds, but here the same available at the base of the hill, about 50 meters from the hill. It was told that there is a remains of brick structure on the hill, believed to be built for the Jain monks to run a school.
LOCATION:CLICK HERE

தீர்த்தங்கரர்கள் – ஓணம்பாக்கம் மலையின் சமணரின் தொல்லியல் எச்சங்கள் – 55வது அஹிம்சை நடை.
01, ஜூலை 2018.
இம்மலைக்கு அஹிம்சை நடையின் சார்பாகச் செல்வது மூன்றாவது முறையாயினும் எனக்கும் இது இரண்டாவது முறை ஆகும். இம்மலை ஓணம்பாக்கம் கிராமத்தில் இருந்து சுமார் 3 கிமி தூரத்தில் இருக்கின்றது. ஓணம்பாக்கம் மலை கருப்பங்குன்று, குரத்திமலை, குரவன் மலை, நாகமலை என பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. நான் கடந்த முறை R.E.A.C.H foundation  மூலமாக கல்வெட்டு பாடம் பயிலும் போது சென்று இருந்தேன். மிகவும் சிரமப்பட்டுத்தான் இம்மலைக்கு செல்ல வேண்டி இருந்தது. கடந்த முறை சமணர் படுக்கைகளையும், மருந்து அரைக்கப் பயன்படுத்தப்பட்ட குழியையும் காணாததால், இம்முறை காண வேண்டிய ஆவலே அதிகமாக இருந்தது.

இந்த அஹிம்சை நடையை சென்னையில் இருந்து மூன்று சிற்றுந்துகள் மூலம் சுமார் 40 பேரும் மற்ற ஊர்களில் இருந்து சுமார் 60 பேரும் வந்து இருந்து சிறப்பித்தனர். இதில் மாணவர்கள், அறிஞர்கள், தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் சமணர் அல்லாது வேற்று மதத்தவரும் அடங்குவர். காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு  மேல் சிதாமூரின் தலைமை ஸ்ரீ லக்ஷ்மி சேன பட்டாரக சுவாமிகள் கொடி அசைத்து துவக்கி வைத்து அவரும் வழி நடத்த அஹிம்சை நடை மலையை நோக்கி சென்றது. அஹிம்சையையும், சமணமதத்தின்  கொள்கைகளையும், ஓணம்பாக்கம் சமண தொன்மை சின்னங்களை பாதுகாக்க வலியுறுத்தியும், அதில் அவ்வூர் மக்களின் பங்களிப்பையும் பாராட்டி கோசங்கள் எழுப்பிய வண்ணம் ஊர்வலம் வெண்மணி கூட்டு சாலையை அடைந்தது. பின்பு அங்கு இருந்து வாகனங்களில் மலையை அடைந்தோம்.

மலை மீது செதுக்கப்பட்ட தீர்த்தங்கரர்கள் மற்றும் பார்சுவநாதரையும் வணங்கிவிட்டு மலை உச்சியில் பெரிய கற்பாறை மீது வெட்டப்பட்ட சமணத் துறவிகளுக்காக வெட்டப்பட்ட படுக்கைகளைக் காணச் சென்றோம். வழி சிறுது குறுகலாகவும் ஓரிடத்தில் பாறையின் அடியே தவழ்ந்தும், உடலைக்குறுக்கியும் செல்ல வேண்டி இருந்தது. இதுவரை கண்ட சமணர் படுக்கைகளில் மருந்து அரைக்கப் பயன்படும் குழிகள் படுக்கைகளின் அருகிலேயே வெட்டப்பட்டு  இருக்கும், ஆனால் இங்கோ மலையின் அடிவாரத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இருந்த பாறையில் வெட்டப்பட்டு இருந்தது. அடுத்து மலையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டு இருந்த பந்தலின் கீழ் ஒரு கூட்டம் அக்கூட்டத்தில் அறிஞர் பெருமக்கள் சமணம் சார்ந்து உரை ஆற்றிய பின்பு கவுரவிக்கப்பட்டனர். இடையே சுவாமிகள் உரை நிகழ்த்தி ஆசிவழங்கினார். மாணவ மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டன. மதிய உணவுக்குப்பிறகு இந்த 55வது அஹிம்சை நடாத்திய திரு ஸ்ரீதரன், திரு அஜிததாஸ், திரு தனஞ்ஜயன், திரு ராஜேந்திரபிரசாத்,  இவர்களுடன் திருமதி சசிகலா அவர்களுக்கும் நன்றி கூறி சென்னையை நோக்கித் திரும்பலானோம்.

மலையின் மீது இருந்த தீர்த்தங்கள் பற்றி..
முதல் நிலையில் சன்னதி போன்ற அமைப்பில் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் பார்சுவநாதர். இருபுறமும் இயக்கனும் இயக்கியும். மேலே சாமரம் மட்டும் காட்டப்பட்டு இருந்தது. இதை வெட்டியவரின் பெயர் வட்டெழுத்தில் வெட்டப்பட்டு இருந்தது.

சிறிது மேலே பெரிய பாறையில் மேற்கு நோக்கி தீர்த்தங்கரர் அமர்ந்த நிலையில் வெட்டப்பட்டு இருந்தது. தீர்த்தங்கரர் தலையின் பின்புறம் பிரபையில் தீ ஜுவாலையும் செதுக்கப்பட்டு இருந்தது. இரு சாமரதாரிகளும் காட்டப்பட்டு இருந்தனர். லாஞ்சனம் எதுவும் காட்டப்படாததால் இவர் யார் என இனம் காணக்கூட வில்லை.

இன்னும் சிறிது மேலே உயரத்தில் மஹாவீரர் புடைச்சிற்பம் சாமரதாரிகளுடன். பீடத்தின் கீழே சிறியதாக 7 சிம்மங்கள் வெட்டப்பட்டு இருந்தன.   

அமைவிடம்: CLICK HERE

 Tirthankara - Mahavir
 Tirthankara
 Parshvanath
 The Tamil  inscriptions. The content is -  Sri Vasutheva padaram seivitha uruvaram.....parivaram...
 Mountain view with medicine grinding pit
 Sri Lakshmi sena Padaraka swamiji of Mel sithamur Jain Mutt addressing before Ahimsa walk 
 Swamiji flagging of the 55th ahimsa walk
 Swamiji leads the walk 
 Ahimsa walk ends  at Venmani koot road


 Swamiji handing over a cheque for the beneficiary 
 Mr Sridhar preparing for the TV Telecast.

---OM SHIVAYA NAMA---

1 comment: