Tuesday 31 July 2018

Hero Stone / Nadukal / Veerakallu / செங்கம் நடுகற்கள் at Mothakkal, Thiruvannamalai / Tiruvannamalai District, Tamil Nadu.

24th July 2018.
LOCATION: Lat 12 4’ 43.55” and longi: 78 44’ 25.79”

These two Nadukals or Hero stones belongs to the Chengam Nadukarkal group, in a village called Mothakkal in Thiruvannamalai region. The Hero stone place is called as Aatrangkarai Vediyappan temple, standing in the midst of field completely applied with oil and butter. Thiruman is also applied on the Nadukals considering they belongs to Vaishnavam. The inscriptions are not legible. There are stucco/ sudhai statues of Vediappan shooting a tiger with arrow and a Horse rider ( Hero ) are installed in the recent years. Regular poojas are conducted apart from annual pooja during Tamil Adi month.


The first Nadukal on the left is a hero stone, whose head is turned on the left side. The hero holds a bow and dagger / Katar. The holy article kendi is shown. Arrows holder is shown on his left hip. As per the inscription this hero stone was erected during 7th Century, Mahendra Varman –I’s 32nd year rule for  Akkanthaikkodan, who died in the process of recovering cattle from the thieves.

இந்த மோதக்கல் கிராமத்தில் உள்ள நடுகற்கள் திருவண்ணாமலை பகுதியைச் சார்ந்த "செங்கம் நடுகற்கள்" தொகுதியைச் சார்ந்தது. இது ஆற்றங்கரை வேடியப்பன் கோவில் என அழைக்கப்படுகின்றது. இங்கு கல்வெட்டுக்களுடன் கூடிய ஒரு வீரக்கல்லும் ஒரு புலிக்குத்திக் கல்லும் உள்ளது. இவர்களை வைனவ மதத்தைச் சார்ந்தவர்களாகக் கருதி வெண்ணை மற்றும் நாமம் சாற்றி உள்ளனர். கல்வெட்டுக்கள் படிக்க முடியாத அளவிற்கு எண்ணை பூசப்பட்டு உள்ளது. சமீப காலத்திய குதிரைமீது அமர்ந்து புலி ஒன்றை அம்பால் கொல்லும் காட்சியும் குதிரை, நாய் முதலியன சுதை வடிவில் முன்புறம் உள்ளது. தின பூசையைத் தவிர்த்து, வருடாந்திர கொண்டாட்டங்கள் ஆடி மாதம் நடைபெறுகின்றது.  ஆடு, கோழி போன்றவைகள் வேடியப்பனுக்கு படைக்கப்படுகின்றது.

முதலாவது உள்ளது வீரக்கல். வீரனது தலை இடப்புறமாகத் திரும்பி கைகளில் குறுவாளும், வில்லும் காட்டப்பட்டு உள்ளது. அம்புத்தூணி வீரனின் இடுப்பிலும், மங்கலச் சின்னமான கெண்டியும் காட்டப்பட்டு உள்ளது.  கல் வெட்டின் படி இந்த வீரக்கல் கிபி ஏழாம் நூற்றாண்டு பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மனின் 32ம் ஆட்சி ஆண்டில் எடுக்கப்பட்டது. இந்த வீரக்கல் பொன்மோதனாரின் சேவகன் அக்கந்தைக்கோடன் ஆநிரைக்களை மீட்கும் போது  அடைந்த வீர மரணத்திற்ககாக எடுக்கப்பட்டது.
   
The inscription in 6 lines reads as..
கோவிசைய ம…..ந்திரபரும(ற்கு மு)ப்பத்திரண்டாவது….யை தொறுக்கொண்ட ஞான்று பொன்மோதான்னார் சேவகன் அக்கந்தைகோடன் தொறு விடுவித்துப் பட்டான் கல்.

Pulikuthi Nadukal.
The Second Nadukal is the Pulikuthi Nadukal.  It is rare to see a Pulikuthi hero stone, where there is no dense forest. In this hero is shown fighting with a Tiger. His left hand is shown in tiger’s mouth and holds a dagger / Katar in his right hand. This Pulikuthi Nadukal was erected during 7th century,  Pallaava King Mahendra Varman-I’s, 32nd year rule for a soldier called Vinranvadukan, who worked under a small king Ponmothanar. The Hero died in the process of killing a tiger, most probably to save the cattles or people.

இரண்டாவது நடுகல் ஒரு புலிக்குத்தி வீரக்கல் ஆகும். அடர்ந்த காடுகள் இல்லாத பகுதியில் கிடைக்கும் ஒரு அரிதான புலிக்குத்தி நடுகல். வீரனின் இடது கை புலியின் வாயிலும் வலது கையில் குறு வாளும் காட்டப்பட்டு உள்ளது. கல்வெட்டின் படி இந்த புலிக்குத்திக்கல் கிபி ஏழாம் நூற்றாண்டு பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மனின் 32வது ஆட்சியாண்டில் எடுக்கப்பட்டதாகும். பொன்மோதனாரின் சேவகனான வின்றண்வடுகன் புலியுடன் போரிட்டு அடைந்த வீர மரணத்திற்காக எடுக்கப்பட்டது.
  
The inscription in 6 lines reads like this…
கோவிசைய மாயேந்திர பருமற்கு முப்பத்திரண்டாவது பொன்மோதனார் சேவகன் வின்றண்(வ)டுகன் புலி குத்திப் பட்டான் கல்.






---OM SHIVAYA NAMA---

No comments:

Post a Comment