Thursday 31 December 2020

Hero Stone / Veeragallu / நடுகற்கள் / தாளவாடி பன்றிகுத்திப்பட்டான்கல், / Bommanahalli, Thalavadi, Erode District, Tamil Nadu.

காலம் : 16ம் நூற்றாண்டு

இடம்: தமிழக- கர்நாடக எல்லை பொம்மனஹள்ளி , தாளவாடி

கல்வெட்டுக்களில் ஒடுவங்க நாட்டைச் சேர்ந்த பொம்மனஹள்ளி என குறிப்பிடப்படும் இவ்வூர்,  அக்காலத்தில்  கொங்கு மண்டலத்தின் 24 பிரிவுகளில் ஒன்றாக திகழ்ந்ததாக அறிகிறோம்.

மூன்று  அடுக்கு நிலை சதி நடுகல்லில் முதல்நிலையில் உள்ள வீரன் காட்டு பன்றியுடன் சண்டையிட்டு வீர மரணம் எய்தவன். அருகில் உள்ளது அவனது  மனைவி அவனுடன் சதியேறியவர் . அடுத்தநிலையில் மொத்தம் ஆறுபேர் உள்ளனர்.  இறந்த வீரன் மற்றும் அவன்  மனைவியை மேலுலகத்திற்கு அழைத்துச் செல்லும்  தேவகன்னிகள் கையில் வெண்சாமரத்துடன்.

மேலே உள்ள இறுதிநிலையில் வீரனும் அவனது  மனைவியும் இறைவனடி சேர்ந்து இறைவனை வணங்கியபடி உள்ளனர்.




No comments:

Post a Comment