Monday 10 June 2024

Sri Thiruchitrambala Nathar Temple / Sri Vinai Theertha Vinayagar Temple / அருள்மிகு வினைதீர்த்த வினாயகர் கோயில் / திருச்சிற்றம்பல நாதர் கோயில், Arumbakkam, Chennai, Tamil Nadu.

12வது குருமூர்த்திகள்
அருள்திரு திருச்சிற்றம்பல தேசிகர் துதி

புராதனமாய்ப் பூரணமாய்ப் புண்ணியமாய்ப்
பொலிவாய் ஒன்றாய்
நிராமயமாய் நிட்களமாய் நித்தியமாய்
நிரஞ்சனமாய் நிமலமாகிப்
பூராபரமாய் நிறைந்தருளும் பெருங்கருணைப்
பிழம்புமொரு படிவமாகித்
தாரதலத்தில் அவதரித்த திருச்சிற்றம்பல
குருவின் தாள்கள் போற்றி


This Shiva and Vinayagar temple are on south side of the Thiruvaduthurai Adheenam madam. Since Thiruchitrambala Desikar the 12th Sannidhanam belongs to this place Arumbakkam, the moolavar may be named after him.

Moolavar   : Sri Thiruchitrambala Nathar
Consort     : Sri Thiruchitrambala Nayagi

Some of the special features of this temple are…
The temple facing west with and entrance arch. Stucco image of Shiva with Parvati and may be Thiruchitrambala Desikar are above the entrance. Shiva Lingam is installed on an elevated level. Vinayagar is just back side of Shiva Lingam. On South and North are Maha Lakshmi and Saraswati. Dwarapalakas are at the east side of the temple with an access from west side. There is a small sannidhi for Durgai and small Impon idol of Vinayagar

Ambal Thiruchitrambala Nayagi is on the right side of Shiva and facing South. Ambal is in standing posture with abhaya and varada hastam.

Sri Thiruchitrambala Nathar
Sri Thiruchitrambala Nayagi



ARCHITECTURE
This temple is constructed only with Sanctum sanctorum, similar to parivara sannidhis of any Shiva temple, without any formal style of Construction. A Nagara Vimanam is on the vinayagara sanctum sanctorum.


 Durgai
HISTORY AND INSCRIPTIONS
சிவமயம்
திருவாவடுதுறை கோமுத்திபுரம்‌, முத்திப்பதி, தேனு முத்திபெறும்புரம்‌ என்றெல்லாம்‌ போற்றப்படுகிறது திருவாவடுதுறை ஆதீனம் 12வது குருமூர்த்திகள் அருள்திரு திருச்சிற்றம்பல தேசிகர் ( கி.பி.1730 -1770 ) சென்னை அரும்பாக்கத்தில் அவதரித்தவர்கள், திருச்சிற்றம்பலவரின்‌ உருவத்‌ தோற்றத்தைச்‌ சனிப்‌ புலவர்‌ நம்‌ கண்முன்‌ நிறுத்துகிறார்‌. தலையில்‌ அஞ்சு கொத்தாகிய அக்கமாலையும்‌ நெற்றியின்‌ மீது ஒளிவீசும்‌ திருநீற்றுப்‌ பூச்சும்‌ கருணையே கூடிய பார்வையும்‌ புன்னகையும்‌ செவிகளில்‌ குண்டலங்களும், கழுத்தில்‌ மணிமாலையும்‌ கைகளில்‌ செபவடங்களுமாகக்‌ காட்சியளித்துள்ளார்‌, இவர் புரிந்த அருட்செயல்கள் ஏராளம். இவருடைய காலம் தான் திருவாவடுதுறை ஆதினத்தின் பொற்காலம் எனலாம். ஆனி பரணியில் திருவாவடுதுறையில் சிவப்பேறு எய்தருளினார்கள்.

இவர்கள் அருளாட்சியில் சைவத்தமிழ் தழைத்தோங்கியது. மாதவ சிவஞான சுவாமிகள், தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர், சாத்திரம் சாமிநாதமுனிவர், சீனிப்புலவர் முதலானோர் பல இலக்கியங்களைத் சைவத் தமிலுலகிற்கு வழங்கியுள்ளனர்.

உருத்திரகோடி தேசிகருக்குப் பிறகு திருச்சிற்றம்பல தேசிகர் காலத்தில்தான் அதிக அளவில் கிராமங்கள் இறையிலியாக திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வழங்கப்பட்டதைக் ஏறக்குறைய 14 செப்பேடுகள் தெரிவிக்கின்றன. அவற்றுள் சில செப்பேடுகளின் விபரங்கள் மட்டுமே கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

திருச்சிற்றம்பல தேசிகர் அருட்செயல்கள்
இராமநாதபுரம் சேதுபதி, மக்கள் மழையின்றி வருந்திய போது அங்கு சென்று தம் ஆன்மார்த்த மூர்த்தியை வழிபட்டு மேகராகக் குறிஞ்சிப் பண்ணமைந்த தேவாரங்களை ஓதச்செய்து மழையை வருவித்தவர்கள். அருள்திரு திருச்சிற்றம்பல தேசிகர் அவர்கள் நிட்டையில் இருந்தபோது பாடிய பாடல் இது..

சைவ சமயம் சமயமெனின் அச்சமயத்
தெய்வம் பிறைசூடும் தெய்வமெனின் - ஐவரைவென்
றானந்த இன்பில் அழுந்துவது முத்தியெனின்
வானங்காள் பெய்ம்மின் மழை

இதற்காக 10.11.1733 அன்று சேதுபதி மன்னர் திருவாவடு ஆதீன மகேஸ்வரர் பூஜைக்காக திருப்பொற்கோட்டை கிராமத்தை ஆதீனத்திற்கு தானமாக வழங்கினார். ஆப்போது பின்வரும் பாடலை பாடினார்

நதியாம் விரிசிலை நன்னகர் பொற்கோட்டைப்
பதியாம் துறைசைப் பதிக்கு - விதியாகத்
தானமிட்டான் சேதுபதி தாரணிதா னுள்ளளவும்
ஊனமில்லை யெந்தநா ளும்.

மேலும் வியாபாரிகள் துறைசை ஆதீனத்திற்கு மகமை வழங்க வேண்டும் என்றும் சேதுபதி மன்னர் ஆணையிட்டுள்ளார்.

மூட்டை ஒன்றுக்குப் பணம் ஒரு மாகாணி; சுமைக்கு அரை மாகாணி; சில்லறைக் கடைகளுக்கு மாதம் அரைக்கால்; துறைமுகத்தில் நெல் ஒரு கண்டிக்கு மூன்று மாகாணி; சுமைக்கு அரை மாகாணி; படகு ஏற்றுமதிக்குப் பத்துப்பணம், தீர்வைபட்டால் அரைப்பணம்; உப்பளத்தில் ஒரு பொதிக்கு ( மூட்டைக்கு ) அரைக்கால் பணம்; நாணயச் சாலையில் 100 பொன்னுக்குக் கால்பணம், என மகமை நிர்ணயிக்கப்பட்டது.

நன்செய் ஒரு மா நிலத்துக்கு நெல் குறுணி. புன்செய் ஒரு மா நிலத்துக்கு மூன்றுபடி என மகமை வரையறை செய்யப்பட்டது. தற்போதும் திருப்பொற்கோட்டையில் மடத்திற்குக் கிளைமடம் உள்ளது. 

ஆவுடையார் கோயிலில் இருந்த சேது மன்னரின்  சத்திரம் ஆதீனமே நிருவகிக்கவேண்டும் எனக்கேட்டுக்கொண்டதிற்கினங்க திருவாவடுதுறை பண்டாரச் சன்னதி மடம் என்று அழைக்கப்பட்டதாக செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

01-09-1731, தேதியிட்ட பொசுக்குடி செப்பேடு திருபொற்கோட்டை வழங்கப்படுவதற்கு முன்பாகவே பொசுக்குடி கிராமம் ஆதீனத்திற்கு சேதுபதி மன்னரால் தானமாக வழங்கப்பட்டதைக் கூறுகின்றது.

அறந்தாங்கிப் பகுதியில் சிற்றரசனாக இருந்த வணங்கா முடித் தொண்டைமான் என்பவர் திருவாவடுதுறை பண்டாரமவர்களுக்கு மாகேசுர பூசைக்கு வேண்டி 'தப்பாதான் வயல்' என்ற நிலத்தைச் சர்வமர்னியமாக அளித்துள்ளார். இச்செப்பேடு 20-10-1737 அன்று வெளியிடப்பட்டது. திருப்பெருந்துறை என்ற பெயர் ஆவுடையார் கோயில் எனச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

பொயு 1738 இல் கூடிய திருப்பைஞ்ஞீலிச் செப்பேடு ஆயிரவைசியர், கோமுட்டிச் செட்டியார், கார்குடியர் ஆகியோர் ஒன்றுகூடி திருப்பைஞ்ஞீலி இறைவன் நீலிவனநாத சுவாமி மற்றும் விசாலாட்சி அம்மன் அர்த்தசாம கட்டளை அபிஷேக பொருட்களுக்காக வேண்டி மகமை வழங்க உடன்படுகின்றனர். அம்மகமையைக் கொண்டு கட்டளையை நிறைவேற்ற வேண்டி, திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாணத் தம்பிரானிடம் செப்பேடும் வெட்டித் தருகின்றனர்.

'முத்துவணங்காமுடி தொண்டைமானார்' என்ற குறுநில மன்னரால் வழங்கப்பட்ட 07-1-1741 தேதியிட்ட செப்பேடு 'அழுஞ்சியேந்தல்' என்ற ஊரைச் சர்வமான்யமாகத் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வழங்கியுள்ளதை ஆவணப்படுத்துகின்றது. மாகேஸ்வர பூசைக்காக இவ்வூர் வழங்கப்பட்டது. தொண்டைமானார் என்ற மரபினரின். கீர்த்தி இச்செப்பேட்டில் விரிவாக உள்ளது. 'திருவாவடுதுறைப் பண்டாரச்சந்நிதகள்' என்று திருச்சிற்றம்பல தேசிகர் குறிக்கப்பட்டுள்ளார்.

பொயு 1784இல்‌ வேங்கடதேவ மகாராயர்‌ ஆட்சியின்‌ போது இராமேஸ்வரம்‌ கிரிதனுஷ்கோடி சாஸ்திரி  அவர்களுக்கு சதுர்த்த கோத்திரம்‌ செட்டிக்குளம்‌ பல்லகுல நல்லப்ப ரெட்டியார்‌ பேரன்‌, இலிங்க ரெட்டியார்‌ மகன்‌ வெங்கடாசல ரெட்டியார்‌ அன்னதான தர்மத்திற்காக அபிநவமங்கலம்‌' என்ற ஊரைத்‌ தானமாக அளித்துள்ளார்‌. இதற்கு ஒரு செப்பேடு திருப்பனந்தாள்‌ காசிமடத்தில்‌ உள்ளது.  

மைசூர்‌ கிருஷ்ணராஜ உடையார்‌ ஆட்சியின்போது இவருடைய தளவாயாகவும்‌ காரியகர்த்தாவாகவும்‌ வீரராசய்யன்‌ என்பவர்‌ இருந்துள்ளார்‌. அப்போது கோயம்புத்தூர்‌ பகுதியில்‌ வரி வசூல்‌ செய்யும்‌ அதிகாரியாகக்‌ குறிக்கார மாதய்யன்‌ என்பவர்‌ இருந்துள்ளார்‌. இவரின்‌ கீழ்‌ இருந்த 'ராசஸ்ரீசங்கரய்யன்‌' என்பவரின்‌ மனைவி 'இலிங்கம்மன்‌' காசிமாநகரில்‌ அன்னதான சத்திரம்‌ ஏற்படுத்தித்‌ தந்தார்‌. சத்திரத்தில்‌ அன்னதானம்‌ இடை விடாமல்‌ நடைபெறக்‌ கோவையைச்‌ சுற்றி பல ர்களில்‌ உள்ள வணிகர்கள்‌ மகமை தர மூடிவு, செய்து செப்பேடாகவும்‌ வழங்கியுள்ளார்கள்‌. காலம்‌ 3-12-1765 ஆகும்‌. அதாவது, திருவாவடுதுறை ஆதீனகர்த்தராக அப்போது திருச்சிற்றம்பல தேசிகர்‌ இருந்துள்ளார்‌. இச்செப்பேட்டைத்‌ தயாரித்தவர்‌ தானப்ப முதலியார்‌ குமாரன்‌ நீலகண்டன்‌ ஆவார்‌. மதுரை தானகோனேரியப்ப முதலியார்‌ மடத்தில்‌ தானப்ப முதலியார்‌ பெயர்‌ கல்வெட்டில்‌ இடம்‌ பெற்றுள்ளது. எனவே அம்மரபில்‌ வந்தவராக இவர்‌ இருக்கலாம்‌. செப்பேட்டில்‌ திருவாவடுதுறை ஆதீனம்‌ என்ற பெயர்‌ இல்லை. எனினும்‌ செப்பேடும்‌ காசியில்‌. உள்ள மடமும்‌. திருவாவடுதுறை ஆதீனத்திற்குச்‌ சொந்தமாக உள்ளன. காசிவிசுவநாதர்‌, விசாலாட்சியம்மன்‌ பெயரில்‌ அன்னதானம் வழங்கப்‌ பட்டது. செப்பேட்டில்‌ விசுவநாதர்‌, விசாலாட்சி ஓவியமாகக்‌ காட்சி தருகின்றனர்‌. அன்னதானச்‌ சத்திரமே பிற்காலத்தில்‌ கண்ணப்பசாமி மடமாயிற்று. சைவகந்தப்ப முதலியார்‌ அன்னதானச்‌ சத்திரத்தை விரிவுபடுத்தி திருவாவடுதுறை ஆதீனத்திடம்‌ வழங்கியதற்கு மடத்தில்‌ வடமொழியில்‌ கூடிய ஒர்‌ ஆவணம்‌ உள்ளது.

காசிமடத்தின்‌ கிழக்கு நுழைவாயிலின்‌ இருபுறமும்‌ தனித்தனியாகப்‌ பார்சி மற்றும்‌ தமிழில்‌ கண்ணப்பசாமி வெட்டி வைத்த கல்வெட்டுகள்‌ உள்ளன. இரண்டின்‌ காலமும்‌ 18-4-1787, பார்சி மொழியில்‌ கல்வெட்டின்‌ காலம்‌ குறிக்கப்பட்டுள்ளது. தமிழ்க்‌ கல்வெட்டில்‌ காலம்‌ குறிக்க வில்லை. எனினும்‌ இரண்டின்‌ செய்தியும்‌ ஒன்றேயாகும்.

29-5-1767 இல்‌ 'முத்துவடுக உடையாத்தேவர்‌' என்பவர்‌ திருவாவடுதுறை பண்டாரச்‌ சந்நிதியில்‌ அம்பலவாண சுவாமி பூசைக்கும்‌ மாகேஸ்வர பூசைக்குமாகக்‌ 'காளத்தி ஏந்தல்‌என்ற ஊரை வழங்கியுள்ளார்‌. அரண்மனைக்‌ கட்டுக்‌ குத்தகை மட்டும்‌ செலுத்திவிட்டு உரிமையை அனுபவிக்கலாம்‌ என்று செப்பேட்டில்‌ பொறிக்கப்‌பட்டுள்ளது.

திருவெண்ணெய்‌ நல்லூர்‌ திருவாவடுதுறை ஆதீனத்திற்குச்‌ சொந்தமான திருவெண்ணெய்‌ நல்லூர்‌ மெய்கண்டார்‌ கோயில் கும்பாபிசேகம் சக ஆண்டு 1708, ஐப்பசி மாதம் 26ந் தேதி நடத்தப்பட்டது. கல்வெட்டில் பன்னிரண்டாவது தேசிகரின்‌ பெயரும்‌ பதிமூன்றாவது தேசிகரின்‌ பெயரும்‌ உள்ளன.

தற்போதைய நிலவரத்தின் படி திருவாவடுதுறை ஆதீனத்திற்கு தானமாக வழங்கப்பட்ட பெரும்பாலான கட்டிடங்கள், வீட்டுமனைகள், நிலங்கள் செப்புப்பட்டயத்தில் மட்டுமே உள்ளது. சொத்துக்கள் ஆதீனத்தின் அனுமதி இன்றி ஆக்கிரமிக்கப்பட்டு, அனுபோகத்திலும், வரி, குடக்கூலி, சந்தா வசூல் செய்ய முடியாத நிலையில், நீதித்துறையை ஆதீனம் நாடியுள்ளது.

குறிப்பு
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், சு கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுத்தப்பட்ட திருவாவடுதுறை ஆதீன வரலாறு என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

Maha Kumbhabhishekam of this temple was conducted 16th February 2011, ( Meikandar year 788 and Thiruvalluvar 2042 ) in the presence of 23rd Guru maha sannidhanam Sri La Sri Sivaprakasa Desika Paramacharya Swamigal. 



The banner was there few years before, which gives the details of encroachment of Adheenam's property, sale, registration, non payment of taxes etc,.   

POOJAS AND CELEBRATIONS
Apart from regular Poojas, special poojas are conducted on pradosham and maha Shivaratri days.

TEMPLE TIMINGS
The temple will be kept opened between 07.00 hrs to 10.00 hrs and 17.00 hrs to 20.00 hrs.
CONTACT DETAILS

HOW TO REACH
This Thiruchitrambanathar temple is in Ambedkar Nagar a part of Arumbakkam.
This temple is about 1 KM from Arumbakkam post office stop on Poonamallee High Road, 1 KM from 100 feet Road & Chennai Corporation Jainagar Park, 1.5 KM from Koyambedu Bus Terminus, 1.6 KM from Anna Arch, Annanagar, 9 KM from Chennai Central.
Nearest railway station Koyambedu metro station.

LOCATION OF THE TEMPLE : CLICK HERE



--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment