The
Visit to this Pallava period Saptamatrikas Temple at Seemapuram was a part of the “Shiva, Maha Vishnu, Saptamatrikas and Jain Tirthankara Temples Visit”, in and
around Gummidipoondi and Minjur on 13th May 2023. This Saptamatrikas
Temple is a little away from the human habitation, on the banks of river
Kosasthalaiyar River. In this place, the river changes its direction from north
to south.
Moolavar
: Sri Mayilathamman, ஸ்ரீ மயிலையம்மன்
Some
of the salient features of this temple are….
The
temple faces east in a newly built salakara Vimana temple. The sanctum
sanctorum is in rectangular shape to accommodate the Saptamatrikas,
Yogeswarar, and Vinayagar.
The
Saptamatrikas belong to the latter Pallava period. It is believed that these
Saptamatrikas are brought from Mylapore a part of Chennai, hence called as Mayilaiamman
Temple.
The Pallava Period Maheswari….
This
Maheswari is measuring 45 cm high and 27 cm wide. The Stone is green in color.
Maheswari is sitting on padra peedam holding antelope and mazhu in the upper
hands and lower right hand is in abhaya hastam and the left hand is on the thigh.
The third eye is on the forehead. The Yagnopaveetha passes between the
breasts and on the hand. The dress on the hip runs up to the leg pada.
All
the Saptamatrikas are in a sitting posture with 4 hands. Holding the respective
weapons in their hands, in the upper hands. The lower right hand is in abhaya
hastam and the left is on the thigh. The respective Vahanas are also shown on
the base. Some differences in the weapons and vahanas can also be seen in these Saptamatrikas from the usual weapons.
Yogeswarar
and Vinayagar are in sitting posture. A Bull / Rishabam is below Yogeswarar.
Holding Accamala and Trishul.
Indrani holds a Vajra and Chakra instead of Sakthi and Vajram. An elephant is shown
on the base.
Varahi holds Pasa and Kalappai / er/ plough instead of the usual weapons of Chankha
and Chakra. On the base, a sheep is shown instead of Simham.
Kaumari holds Sakthi and Vajram. A peacock is shown on the base.
Maheswari holds Antelope and Mazhu in the upper hands and lower right hand is in
abhaya hastam and the left hand is on the thigh. The third eye is shown on the
forehead.
Brahmi holds Accamala and Kendigai, and Anna Vahana is shown on the base. Vaishnavi
is holding Chakra and Chankha.
Chamundi holds Kapala instead of Damaru. On the Peedam instead of buffalo, a ghost
is shown.
Vaishnavi holds Chakra and Chankha and Garuda vahana is shown on the base.
Vinayagar holds Angusam and Pasam in the upper hands.
சீமாவரம்
சப்தமாதர்கள்
சுப்பாரெட்டிபாளையத்திற்கு மேற்கே
இரண்டு கி.மீ. தூரத்தில் சீமாவரத்தில் மயிலையம்மன் கோயில் உள்ளது. கோயில் தற்காலத்தியது.
கருவறை கீழக்கு நோக்கியுள்ளது. இக்கோயிலில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த மாஹேஸ்வரி சிலையும்,
பிற்காலப் பல்லவர் கலைப்பாணியைச் சார்ந்த தாய்மார் எழுவர் சிலைகளும், யோகேஸ்வரர், விநாயகர்
போன்றோர் சிலைகளும் காணப்படுகின்றன. இச்சிலைகள் யாவும் சென்னை மயிலையிலிருந்து இங்கு
கொண்டு வந்து வைத்ததாகக் கூறப்படுகிறது. எனவேதான் இக்கோயில் மயிலையம்மன் கோயில் என்று
அழைக்கப் பெறுகிறது.
பல்லவர்
கால மாஹேஸ்வரி
இச்சிலை 45 9௪.மீ. உயரமும்
27 செ.மீ. அகலமும் கொண்டு சிறிய அளவினதாகக் கண்கவர் அழகுடன் காணப்படுகிறது. சிலை வடிக்கப்பட்டுள்ள
கல் பசுமையாக உள்ளது. பத்ர பீடத்தில் அமர்ந்து மேலிருகரங்களில் மானும் மழுவும் கொண்டு,
கீழ் வலது கரத்தினை அபய முத்திரையிலிருத்தி, இடது கரத்தினைத் தொடைமீது வைத்துள்ள நிலை
பரவசமூட்டக் கூடியதாக உள்ளது. நெற்றியில் நெற்றிக்கண் உள்ளது. மார்பினில் காணப்படும்
புரிநூல் வலது கைமீது ஏறிச் செல்கிறது. அரையில் அணிந்துள்ள ஆடை பாதம் வரை நீண்டுள்ளது.
சீமாவரத்தில் காணப்படும் சப்தமாதர்களின்
சிலைகள் அனைத்தும் அமர்ந்த நீலையில் நாற்கரங்களுடன் காணப்படுகின்றன. மேற்கரங்களில்
அவர்களுக்குரிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளார்கள் .கீழ்க்கரங்கள், வலதுகரம் அபயமுத்திரையிலும்,
இடதுகரம் தொடைமீது வைத்த நிலையிலும் உள்ளன. திருத்தணி வீரட்டானேஸ்வரர் கோயிலில் காணப்படும்
சப்த மாதர்களைப் போன்று பீடங்களில் அவரவர்களுடைய வாகனங்கள் காணப்படுவது இச்சிலைகளின்
சிறப்பாகும்.
சில சப்தமாதர்கள் மேலிருகரங்களில்
வழக்கமாக கொண்டிருக்கும் ஆயுதங்களுக்குப் பதிலாக வேறு ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, வராகி சங்கு சக்கரத்திற்கு பதிலாக, பாசமும் கலப்பையும் தாங்கியுள்ளாள்.
பீடத்தில் சிம்மத்திற்குப் பதிலாக ஆட்டினை வாகனமாக கொண்டுள்ளாள். இந்திராணி சக்தி வஜ்ரத்திற்குப்
பதிலாக வச்சிரம் சக்கரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளாள். சாமுண்டி மேல் இடது கரத்தில் உடுக்கைக்குப்பதிலாக
கபாலத்தினை ஏந்தியுள்ளாள். பீடத்தில் எருமைக்குப் பதிலாகப் பேய் காணப்படுகிறது.
சப்த மாதர்களுடன் வழக்கமாக காணப்படும்
யோகேஸ்வரர் விநாயகர் போன்ற சிலைகளும் அமர்ந்த நிலையில் உள்ளன. யோகேஸ்வரர் சிலையின் ஆசனத்தின் கீழே ரிஷப வாகனம்
காணப்படுகிறது. இவைகளும் பிற்காலப் பல்லவர்
காலத்தவையே.
LOCATION OF THE
TEMPLE: CLICK HERE
No comments:
Post a Comment