14th
May 2018.
When
Mr A T Mohan asked me to join with them for the trekking to Bhodha Malai to see
the dolmens and Neolithic tools, I readily accepted, since I love to trek the hills. This is the second hill trekking on 13th
May 2018 after Velliangiri Hills with a
gap of one month. It was learnt that the
name of Bhohar Hill was turned to Bhodha hills ( Malai ). The
Bhodha Malai is the part of eastern ghats, with moderate height , temperature
and weather. The main cultivation is millets.
There are three villages Melur, Keelur and another small Village has the population of about 2500. During our visit we could hardly see
a very few people, since most of the villagers migrated to near by towns like
Namakkal, Salem in search of livelihood. Due to this the villages bears deserted look.
சேலம்
A T மோகன் அவர்கள் மே மதம் 13ந்தேதி போத மலைக்கு வருகின்றீர்களா, அங்கு கல்திட்டைகள்
நிறைய இருக்கின்றன எனக்கூறியது தான் தாமதம். உடனே, தயங்காமல் நானும் வருகின்றேன் என்று
ஒத்துக்கொண்டேன். இது நடந்தது ஒரு வாரத்திற்கு முன்பு, ஆனாலும் அந்த 12ந்தேதி ஞாயிற்றுக்கிழமையை
ஆவலுடன் எதிர் பார்த்து தான் காத்திருந்தேன். வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்க்குப் பிறகு
இந்த வருடத்திய இஅண்டாவது மலையேற்றம் இது.. போதமலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1200 மீட்டர் உயரமும், மிதமான தட்ப வெட்ப
நிலையையும் கொண்டது. இம்மலையில் மேலூர், கீழூர் என இரு கிராமங்கள் சுமார் 2500 மக்கட்
தொகையைக் கொண்டது. ஆனால் இக்கிராமங்களில் வசதிகள் எதுவும் பெரியதாக இல்லாததால், பெரும்பாலோர்
பிழைப்புக்குவழி தேடி சேலம் நாமக்கல் என புலம் பெயர்ந்து விட்டனர். மிக குறைந்த மக்களே
மலை மீது ஆடு மாடு வளர்த்துக்கொண்டும் விவசாயத்தை கவணித்துக் கொண்டும் இருக்கின்றனர். பகலிலேயே ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஒரு பலைவனத்தைப்
போலத்தான் காட்சி அளித்தது
On
reaching Salem through Yercaud Express from Chennai, Mr Siva picked me up from Salem Junction and we went to the assembling point of
Panamarathupatti Bus stop. After
ensuring the arrival of all participants
including local Villagers Mr Murthy, the
organiser for Lunch & breakfast, Solan and Kumaresan, we headed towards the Village Vedapatti, the
starting point at base of the hill.
After head count ( 23 participants and 5 villagers including the organiser Mr
Murthy ) started our trekking. The Villagers carried our food for the breakfast
and groceries for preparing the Lunch. They lead us to the hill and the path was
very narrow with stones strewn on the way.
Most of the stretch the path went through the rainwater route. The
stones are the mixture of ordinary and iron ore stones.
ஏற்காடு
எக்ஸ்பிரஸ் இரயிலில் சென்னையில் இருந்து சேலம்
பயணம். நண்பர் சிவா எனக்காக இரயில் நிலையத்தில் 5 மணியில் இருந்தே காத்து இருந்தார்.
அவருடன் வந்த திரு ராஜ்பன்னீர் செல்வத்துடன் போத மலையின் அடிவாரத்து கிராமம் பனைமரத்துப்பட்டியை
சென்றடைந்தோம். இங்கு இருந்துதான் மலையேற்றம் துவங்குகின்றது என்று கூறினர். மேலூர்
கிராமத்தைச் சார்ந்த திரு மூர்த்தி மற்றும்
அவருடன் அவர் கிராமத்தைச் சார்ந்த சோலனும் குமரேசனும், எங்களுக்கான காலை உணவு, மதிய
உணவுக்கு அரிசி பருப்பு என சமையல் சாமான்களைச் சுமந்துவர, எங்கள் மலையேற்றம் ஆரம்பித்தது.
முதலில் பாதை சுமாராக இருந்தாலும், மலை ஏற ஏற, வழியெங்கும் சாதாரண மற்றும் இரும்புதாது
மிகுந்த பாறைகள் மற்றும் கற்கள் சிதறிக்கிடந்தன. அவற்றின் ஊடே நடந்து செல்வது ஒரு சவாலாகவே
இருந்தது. மலையேற்றப் பாதை பெரும்பாலும் ஒற்றையடிப் பாதையாகவும் ஆடுமாடுகள் மேச்சலுக்குச்
சென்ற பாதைகளுமாகவே இருந்தது, சில தொலைவு மழை நீர் வழித்தடங்களில் நடக்க வேண்டி இருந்தது.
Around
08.30 hrs stopped our trekking for breakfast under a tamarind
tree. A packet of Tamarind rice was served to every one ( tamarind rice under a Tamarind tree....what
a coincidence!!!). After a brief rest, we continued our trekking. The trekking path
was not so steep. We could not see any body trekking down from the Village.
After an hour of trekking further, we
happened to see a well with water,
boundary stone walls for the land
and heard the sound of dogs barking, which indicated that we are nearing the village. Again took rest under a jackfruit
tree for about 15 minutes and headed towards the Village.
சுமார்
8.30 மணியளவில் வழியில் இருந்த புளியமரத்தின் அடியே அமர்ந்து காலை உணவாக புளி சாதத்தை
சாப்பிட்டோம். ( தொட்டுக்கொள்ள ஊறுகாயும், மிக்சரும் மெதுவாக மலையேறிய பின் தங்கிய
நண்பர்கள் எடுத்து வந்ததால் அவர்களை மனத்திற்குள் திட்டிக்கொண்டே சாப்பிட்டோம் !!!) இத்துடன் எனக்குப் பிடித்த புளியமரத்தின்
கொழுந்து, பூ இவைகளையும் விட்டு வைக்கவில்லை..யாரோ
கூறியது புளியின் கொழுந்து சாப்பிட்டால் தண்ணீர் தாகம் அதிகமாக இருக்காது என்று. அது
சரியாகவே இருந்தது. மேலே ஏற ஏற சிறிது குளுமையும் மலைகளுக்கே உரித்தான மரம் செடி கொடிகளில்
மாற்றங்களும் தெரிந்தன. வழியெங்கும், பலா, தேக்கு, நெல்லி, புளி என பலவகையான மரங்கள்
கண்களுக்கு ஒரு சொர்கத்தையே காட்டியது. சென்னை போன்ற நகரத்தை ஒப்பிடும் போது இது சொர்கமே...
வண்டுகளின் ரீங்காரத்தின் ஊடே எழுந்த பலவித பறவைகளின் சப்தங்கள் இனிமையான சங்கீதமாகவே இருந்தது. தண்ணீருடன் ஒரு கிணறு, தங்கள்
நிலத்தின் எல்லையில் கட்டப்பட்ட சுவர்கள், நாய்களின் குரைப்பு, ஆடு மாடுகள் கழுத்தில்
கட்டி இருந்த மணியின் ஒசை முதலியவை நாங்கள்
மலையின் உச்சியை அடைந்து விட்டோம் என்பதை உணர்த்தியது. மலையின் குளுமை, லேசாக வீசிய
தென்றல் காற்று மனதை வருடி உற்சாகப்படுத்தியது..
Initially
I thought the Village must be big, but to my surprise there are about 20 houses,
spread here and there on the plain area of the hill. Had seen only three
children playing and understand that they also came to the village for school
vacation from plains. Some of the huts were paved with forest grass as roof and
a few are covered with meta colour sheets ( may be rich people !!!). It was learnt that, for giving power
connection the transformers and the other materials were moved to the Village from the base of the hill,
by the villagers themselves. The open lands are under preparation for
cultivation and for water crops depends
on monsoon rain. After Visiting Vinayagar temple where the Neolithic tools are
kept and worshiped, we went to a house of Mr Pallipurathar & Ammani, who
hosted us in the Melur Village. A hot tea made of “koththamalli” / dhaniya was served without milk. ( This Kothamalli tea reminds my
mother who used to offer me during my visits ). It was learnt that the
Villagers do not use milk and will not milking
the cows also. The milk will be fed to the calf.
சமவெளியை
அடைந்த உடன் நாங்கள் கண்ட மேலூர் கிராமம் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுமார் இருபது வீடுகளே.. பெரும்பாலான வீடுகள் காட்டில்
கிடைக்கும் புல்லைக்கொண்டே கூரை வேயப்பட்டு இருந்தது. ஒரு சில வீடுகள் மட்டும் புல்
வேய்ந்து அதன் மீது தகர சீட்டுகள் பொருத்தப்பட்டு இருந்தது. முதலில் கண்டது அம்மன்
கோவிலும் வினாயகர் கோவிலும் கிராமத்து பாணியில். வினாயகர் கோவிலில் சுமார் 3000 –
10000 வருடங்கள் பழமையான கற்கால கல் ஆயுதங்கள் வழிபாட்டில் வைக்கப்பட்டு இருந்தது.
அதன் அருகே பலாமரம் காய்களுடன். மூர்த்தி அவர்கள்
எங்களை பள்ளிபுரத்தார் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். சிறிது நேரம் ஓய்வுக்குப் பிறகு
அம்மனி அம்மா தயாரித்துக் கொடுத்த கொத்தமல்லி
காபி பால் இல்லாமல் அருந்தியது, என் அம்மாவை நினைவூட்டியது... மிக அருமை. இந்த மலைக்
கிராமத்தில் ஆடு மாடுகளிடம் பால் கறப்பது இல்லை எனவும் அதன் குட்டிகளுக்கும் கன்றுகளுக்குமே
விட்டு விடுகின்றனர் எனக் கேள்விப்பட்டது மிக மகிழ்ச்சியாக இருந்தது..
Amman temple
Pillayar Temple
Pillayar with Neolithic tools
Pillayar with Neolithic tools
The place looks great. Could you please add more information reg the tools that are half buried and the shrine itself?
ReplyDelete