27th May 2018.
During my visit to the Jain cave at Valli Malai, when
I asked about another Jain Tirthankaras sculptures place on the same hill to a Sadhu. He directed us to this hill after
crossing the cremation ground and we couldn’t find the hill and right path to trek. Ventured
twice in to the forest and climbed up to the top of the hill, to our bad luck,
we couldn’t locate the cave with Tirthankaras.
When we are about to loose our hope, decided to get help from the local
herder. Mr Ramesh picked up a herder
near the temple and he showed us the steps cut on the rock.
Since Mr Ramesh couldn’t climb, I started my
trekking alone. Throughout the trekking route arrow marks are painted. The
route was steep on some places and found difficult to trek on the pathless
route. Finally reached the 3/4th of the hill where the Tirthankaras bas-reliefs are carved. Amazing.. couldn't believe my eyes, such a wonderful carvings.. wow.. An unforgettable day in my life...Thrilled to see the
Yakshi, Mahavir, Parshvanath and Tirthankaras in three groups. Since the carved places are not easily
accessible by the human beings, the bas-reliefs are found in excellent condition
even after 1200 years.
A group of three bas-reliefs are carved on a rock
facing east. In the first group bas-relief an Yakshi is shown sitting in sukhasana under a
tree with samaratharis on both sides. The samarathari on the left side was found damaged. In the Middle group bas-relief Mahavir with Yakshan, Yakshi, Samaratharis and
devars / angels are shown. In the third group bas-relief, Parshvanath is
standing at the centre, 4 Tirthankaras are shown on both sides. And on the top
two devas with garlands are shown. On
the south side there is a Mahavir bas- relief and a miniature bas-relief of Parshvanath
are carved. In side the cave there are
beds and bas-relief of Pon Iyaki / Yakshi very much similar to the Yakshi of
Thirupanmalai.
வள்ளி மலையின் கீழ் நிலையில் இருந்த சமண
தீர்தங்கரர் புடைப்பு சிற்பங்களையும், சமனர் படுக்கைகளையும் கண்ட பின்பு, அங்கு இருந்த
ஒரு சாதுவிடம், இதுபோல சமணர் குகையும் சமனர் சிற்பங்களும் இதே மலையில் வேறு எங்காவது
இருக்கின்றதா என்ற என் வினாவிற்க்கு விடையாக இதே மலையில் சுடு காட்டைத்தாண்டி உள்ள
மலைமீது உள்ளது என்று கூறினார். நானும் ரமேசும் இரன்டு முறை தேடி மலை உச்சிவரை சென்று
ஏமாற்றத்துடனே திரும்பினோம். சரி இன்றைய இப்பயணத்தை இத்துடன் முடித்துக்கொள்ள வேண்டியது
தான் என்று முடிவுக்கு வந்தோம். ஆனாலும் வலைத்தளத்தில் வேலூர் வரலாற்று குழுவின் பதிவில்
கண்ட தீர்த்தங்கரர் சிற்பங்கள் மனதை உறுத்திகொண்டே இருந்தது. காணாமல் செல்ல மனமும்
ஒப்பவில்லை. கடைசியாக ஆடு மாடு மேய்பவர்கள் மூலமாக வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்,
கோவிலின் அருகில் இருந்த இடையர் ஒருவரை அணுகி வழி கோர, அவர் கருணையுடன் வந்து வழி காட்ட, நன்றி தெரிவித்து விட்டு நான் மட்டும்
மீண்டும் மாலை ஏறத் தொடங்கினேன்.
மலையின் உச்சிவரை சுண்ணாம்பால் அம்புக்குறி
வரையப்பட்டு இருந்தது. பாறை சில இடங்களில் செங்குத்தாக ஏறுவதற்க்கு சிரமமாகவும் சோதனையாகவும்
இருந்தது. மலையின் முக்கால் பகுதியை அடைந்த உடனே நான் கண்ட காட்சி, மேலே ஏறி வந்த சிரமம்,
பசி, தாகம் அனைத்தையும் மறக்கடிக்கச்செய்தது. ஒரு நிமிடம் அப்படியே என்னை நகர விடாமல் உறைய வைத்தது. வார்தைகளால் வர்ணிக்க
முடியாத கண்கொள்ளாக் காட்சி அது. வாவ்.. அமேசிங்...!!! கண்களையே நம்ப மறுக்கச் செய்த காட்சி எனலாம்.,. என் வாழ்வில் மறக்க முடியாத.. மறக்கக்கூடாத தருணங்களில் இதுவும் ஒன்று....
மூன்று தொகுதி தீர்த்தங்கரர் புடை சிற்பங்கள்
செங்குத்தான பாறையில் கிழக்கு நோக்கி செதுக்கப்பட்டு இருந்தது. முதற் தொகுதியில் யக்ஷி ( தரும தேவி ஆக இருக்கலாம் ) மரத்தின் அடியில் சுகாசனத்தில் அமர்ந்த நிலையில் செதுக்கப்படு இருந்தது. இருபுறமும்
சாமரதாரிகள் காட்டப்பட்டு இருந்தனர். அடுத்துள்ள சிற்பத்தொகுதியில் மகாவீரர் அமர்ந்த நிலையிலும், இருபுறமும் இயக்கன்
இயக்கியரும், சாமரதாரிகளும், மேலே தேவ தூதர்களும் செதுக்கப்பட்டு இருந்தனர். கடைசி
சிற்பத்தொகுதியில் நடுவே பார்சுவநாதரும் இருபுறமும்
4 தீர்த்தங்கரர்களும் மேலே இரு தேவர்கள் மாலையுடன் செதுக்கப்பட்டு இருந்தனர். தெற்குப்புற செங்குத்தான பாறையில் மகாவீரர் முக்குடையுடன்
அமர்ந்த நிலையிலும், அருகே குறுஞ்சிற்பமாக பார்சுவநாதர் புடை சிற்பமாக செதுக்கப்பட்டு
இருந்தது.. இந்த புடைசிற்பங்கள் மனிதர்களால்
சுலபமாக அணுகமுடியாத இடத்தில் செதுக்கப்பட்டு இருந்ததால் சுமார் 1200 வருடங்கள் கடந்த பின்பும் மிகவும் நல்ல நிலையிலேயே உள்ளன..
குகையில் யக்ஷி ( தருமதேவியாக இருக்ககூடும் ) அமர்ந்த நிலையில் திருபான் மலையில் கண்டது போலவே செதுக்கப்பட்டு
இருந்தது. குகையின் உள்ளே சமண முனிவர்களுக்கு படுக்கைகளும் வெட்டப்பட்டு இருந்தன.
சமூக விரோதிகளால் குகையின் மேற்கு புறமும், கிழக்குபுறமும் கற்கள்கொண்டு சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. இந்த இடம் சமணர்களும், வரலாற்று ஆர்வளர்களும் அவசியம் காண வேண்டிய ஒன்று. இது யாருடைய பாராமரிப்பிலும் -- மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறை -- இல்லை போலக் காணப்படுகின்றது. இனிமேலாவது பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தால் வரும் சந்ததியினர் நமது சமண மத பாரம்பரிய சின்னங்களை அறிந்துகொள்ள ஏதுவாகும்.
சமூக விரோதிகளால் குகையின் மேற்கு புறமும், கிழக்குபுறமும் கற்கள்கொண்டு சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. இந்த இடம் சமணர்களும், வரலாற்று ஆர்வளர்களும் அவசியம் காண வேண்டிய ஒன்று. இது யாருடைய பாராமரிப்பிலும் -- மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறை -- இல்லை போலக் காணப்படுகின்றது. இனிமேலாவது பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தால் வரும் சந்ததியினர் நமது சமண மத பாரம்பரிய சின்னங்களை அறிந்துகொள்ள ஏதுவாகும்.
Mahavir with Yakshan,
Yakshi, samaratharis and Devas
Mahavir
Parshvanath
Yakshi
Beds
herbal Grinding pit
--- OM SHIVAYA NAMA---
மிக அருமை ஐயா. இதற்கு சற்று மேலே உள்ள பாறையில் ஒரு பார்சுவநாதர் சிற்பம் உள்ளது
ReplyDeleteநல்லது ..மா. தனியாக சென்றதால்..வழிகாட்ட யாருமில்லை மா..
Delete