19th May
2018
The sculptures on
display in this Chennai (Madras) Museum ( established in the year 1851 AD ) are
grouped in to three categories via 1. Brought from North Arcot district of Tamil
Nadu, 2. Present Andhra Pradesh and 3. Present Karnataka State. ( During the British period all the three
states are under Madras Presidency ).
These are brought to this museum during 19th and 20th
Century.
சென்னை அரசு அருங்காட்சியகக் கூடத்தின் சமணச் சிற்பங்களை கீழ்காணும்
மூன்று வகைகளுக்குள் அடக்கலாம்.
- தற்காலத் தமிழ்நாட்டுப் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட சமணச்சிற்பங்கள்
- தற்காலக் கர்நாடகப் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட சமணச் சிற்பங்கள் மற்றும்
- தற்கால ஆந்திரப் பகுதியிலிருந்து பெறப்பட்ட சமணச் சிற்பங்கள்.
தமிழ்நாடு மாநிலம்: இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள
சமண தீர்தஙகரர் சிற்பங்கள் பெரும்பாலானவை வட
ஆற்காடு மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்டவைகளே. அது தவிர மூன்று சிற்பங்கள் சென்னைக்கும் சென்னைக்கு அருகில்
இருந்தும், மேலும் மூன்று சிற்பங்கள் தஞ்சாவூருக்கு அருகிலிருந்தும் கொண்டு வரப்பட்டது. பெரும்பாலான சிற்பங்கள் வயல் வெளிகளிலும், வயல்களைச்
சீர் செய்தபோது அகழ்ந்து எடுக்கப்பட்டவைகளே ஆகும். சமீப காலங்களில் வெளிப்படுத்தப்பட்ட
தீர்தங்கரர்கள் ஆங்கங்கே அதே ஊர் மக்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
ANDHRA PRADESH: The majority of the statues and the heritage sculptures are brought from a Village called Dhanavulappadu of Kadapa district of Andhra Pradesh. These Tirthankara statues are unearthed from the Village while excavating for the bricks protruding from the place where a 10th century Jinalaya exists. This was mentioned in a Devakudi village temple inscription. The Sculptures belongs to 10th century Rashtrakuta King Nithyavarsh Indiran period and 14th century Nishitha Pillars with and without inscriptions.
ஆந்திர மாநிலம்: இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெரும்பாலான சிற்பங்கள் ஆந்திரப்பிரதேசம் கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு வட்டத்தில் பெண்ணையாற்றின் இடது கரையின் உயர்ந்த விரிவான மேட்டின் மீது அமைந்துள்ள தானவுலப்பாடு எனும் குக்கிராமத்திலிருந்து கொண்டுவரப்பட்டவையாகும். ஆந்திர மாநிலம் தானவர் அல்லது இராட்சசர் என இந்துக்களால் குறிப்பிடப்பட்ட புத்த / சமண சமயத்தினர் வாழ்ந்த ஊர் எனும் பொருளில் இவ்வூர் தானவுலபாடு எனப்படுகிறது. இவ்வூரை அடுத்துள்ள தேவகுடி எனும் ஊரில் உள்ள 13ம் நூற்றாண்டுக் கோவில் கல்வெட்டு தானவுலபாடு கிராமத்தில் சமணக் கோவில் இருந்ததைச் சுட்டுகின்றது.
இப்பகுதியைச் சார்ந்த சில நில உரிமையாளர்கள் இங்கு செங்கற்கள்
புதைந்துள்ளமையை அறிந்து அவற்றைத் தோண்டியெடுக்கத் தலைப்பட்டபோது வெளிப்பட்டதே 10ம்
நூற்றான்டைச் சார்ந்த ஜீனாலயமும் அதன் தொடர்பான தீத்தங்கரர் சிற்பங்களும். இவற்றுள்
சில இராஷ்டிரகூட அரசரான மூன்றாம் நித்யவர்ஷ் இந்திரன் ( கிபி 10ம் நூற்றாண்டு ) காலத்திய இராஷ்டிரகூட
கலைப்பாணியையும், : எழுத்துப் பொறிப்புடைய தூண்கள் கிபி 14ம் நூற்றாண்டைச் சார்ந்த
விஜயநகர் கலைபாணியை சார்ந்தவையாகக் கருதப்படுகின்றது. இவற்றுள் சில சமண தீர்தங்கரர்
தொடர்புடைய யக்ஷிகள் மற்றும் பக்தர்கள் உருவங்களைக் காட்டுகின்றன.
NISHITHA PILLARS ( SALLEKHANA PILLARS): These Pillars are erected in memory of the person who undertook the
sallekhana. As per the Jain’s Vedha
scripts to attain mukthi Jain’s used to practice this Sallekhana – fast until
death. From the inscription of these pillars, the
temple excavated was constructed for
Santhi Nath and Parshvanath Tirthankara.
நிஷீதி தூண்கள் – ஆந்திரா
மாநிலம் : நினைவுக்கல்
தூண்கள் நிஷீதி வகையைச் சார்ந்தவை. முக்தி அடைவதற்கென அறிவறுத்தப்பட்டுள்ள அறநூல்களின்படி உண்ணா நோண்பிருந்து
உயிர் துறந்த சமணர்களுக்காக எழுப்பப்பட்ட நினைவுக் கற்களே நிஷீத தூண்கள். பேரளவிலான
சமயச் சடங்குடன் சல்லேகனை விரதம் ( சாகும் வரை உண்ணா நோன்பு) கடைப்பிடித்து இந்தச்
சமணர்கள் ஒழுகினர். சிற்பத் தொகுதிகளையும்
கல்வெட்டுப் பொறிப்புக்களையும் நிஷீதிகை தூண்கள் கொண்டுள்ளன. இந்தக் கல்வெட்டுப் பொறிப்புகளிலிருந்து
சாந்திநாதர் மற்றும் பார்சுவநாதர் தீர்த்தங்கரர்களுக்குக் கட்டப்பட்ட கோவில்களே இந்த
இடத்தில் புதையுண்டுள்ள கோவில்கள் என அறிகிறோம்.
KARNATAKA STATE: The 10th
century Tirthankara sculptures brought
brought from Mysore belongs to Rashtrakuta heritage style and the Vijayanagara
sculptures matches with the Shravanabelagola heritage style.
கர்நாடக மாநிலம் : கர்நாடகத்திலிருந்து திரட்டப்பட்ட சிற்பங்கள், குறிப்பாக மைசூரிலிருந்து பெறப்பட்ட கிபி 10ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இராஷ்டிரகூட வேலைபாட்டினை வெளிப்டுத்துகின்றன. பிற்கால விஜயநகர் காலச்சிற்பங்களோ தென் கனரா மையங்களுடன் ஒன்று கலந்த சிரவணபெலகோலா மரபுத் தொடர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட கூட்டுருவாக்கத்தைக் காட்டுகின்றன.
--- OM SHIVAYA NAMA---
For More Photographs on
GOOGLE+:CLICK HERE
Fantastic Sir
ReplyDelete