...a
continuation post to -
Jain Tithankaras & Mahavir at Keelakuilkudi Samanar Hills- 53rd Ahimsa Walk
05th
May 2018.
PERUMAL MALAI.
After
breakfast, our next destination was to Perumal
malai, which is a part of rocky hills in ‘Thiruvurivagam” cluster near
Keelakuilkudi. The path has many ups
and downs and was not tar topped. Thorny
bushes ( seemai karuvelan ) grown on both side of the road.
There are about 20 Jain's beds in a natural rock
shelter, which is about 20 feet from the
ground level. Considering the number of
beds, it is presumed that this Rock shelter might have been used as a learning
centre. There is a Mahavir statue with damaged pedestal kept in between the beds under the canopy of the
shelter. The Canopy has 7th
century two bas-reliefs of Tirthankaras with Thamizhi inscriptions. In addition to this there is Brahmi inscription inscribed under the canopy. The
protruding canopy of the rock shelter was shaped such that the rain water will not enter in to the shelter. The dripping water
also channeled to go outside through carving on the rock floor. In addition to
the group of beds there is a platform, might have been used by the head of the
monks during preaching. We could find a place for grinding of herbs used for medicine. It is evident that the Jain monks extended the medicinal service also.
Illegal
quarrying is a threat to these Jain beds
and Tirthankaras bas reliefs, which already destroyed part of the hill.
LOCATION:CLICK HERE
...
To be continued .. Kongar Puliyankulam
சமண
தீர்தங்கரர்களும், படுக்கைகளும் - பெருமாள் மலை, மதுரை – 53வது அஹிம்சை நடை,
பெருமாள்
மலை.
காலை
சிற்றுன்டிக்கு பின்பு எங்கள் அஹிம்சை நடை கீழகுயில்குடிக்கு அருகே உள்ள பெருமாள் மலையை
நோக்கி. சுமார் மூன்று கிலோமீட்டர் வரை சாலை வசதி கிடையாது. இரு புறமும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து குண்டும்
குழியுமான குறுகிய பாதையின் வழியே செல்ல வேண்டி இருந்தது. சீமைக்கருவ முற்கிளைகள் அவ்வப்போது
நாங்கள் சென்ற வண்டியின் கண்ணாடி வழியே வந்து பயத்தை உண்டாக்கியது. தண்ணீர் வற்றிய
ஏரியின் ஊடே சென்று சமண தீர்த்தங்கரர் மற்றும் சமணர் படுக்கைகள் இருந்த பகுதியை அடைந்தோம்.
20க்கும்
மேற்பட்ட படுக்கைகள் இயற்கை குகையின் தரை தளத்தில் வெட்டப்பட்டு இருந்தது. படுக்கைகளின்
எண்ணிக்கைகளைக் கணக்கில் கொண்டால் இங்கு ஒரு சமணர் பள்ளி இயங்கி இருக்க வாய்ப்பு அதிகம்.
தனியாக ஒரு சமதள மேடையும் காணப்பட்டது. இது
ஆச்சாரியார்க்கானது என்றும் பாடம் நடத்தும்போது இருக்கையாக பயன்படுத்தி இருக்கலாம்
என்றும் கூறினர். அத்துடன் தரையில் மருந்து அரைக்க உபயோகப்படும் குழி ஒன்றும் காணப்பட்டது. இதிலிருந்து சமண துறவிகள் மக்களுக்கு மருத்துவ சேவையும்
ஆற்றி இருக்கின்றனர் என்பது தெளிவு.
தரைத்தளத்தில்
சிறிது பின்னமான மஹாவீரர் சிற்பமும், அதற்கு கட்டப்பட்ட பீடமும் உடைந்து காணப்பட்டது. குகையின் மேற்கூரை பாறை சிறிது நீண்டு காணப்படுகின்றது.
அதில் இருந்து வழியும் மழைநீர் தங்குமிடத்திற்க்கு செல்லாமல் இருக்க பாறையை குழைவாக
வெட்டி இருந்தது ஒரு சிறப்பு அம்சமாகும். அந்த நீட்டிய கூரைப் பாறையில் இரண்டு தீர்த்தங்கரர்
புடைசிற்ப்பங்கள், மற்றும் அதன் கீழ் 7ம் நூற்றாண்டு தமிழ் வட்டெழுத்துக்கள் அதை செய்வித்தவரின் விபரத்துடன் வெட்டப்பட்டுள்ளது.
இத்துடன் இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ் பிராமி கல்வெட்டும் உள்ளது.
இம்மலையின்
சில பகுதிகள் கட்டிடங்கள் கட்டும் கற்களுக்காக
உடைக்கப்பட்டு விட்டது. இது தொடரும் பட்சத்தில் இந்த சமண பாரம்பரிய சின்னங்களுக்கு
அச்சுறுத்தல் அதிகமாகவே இருக்கும்.
அமைவிடம்.:இங்கே சொடுக்கவும்..
அகிம்சை நடை பதிவு மேலும் தொடரும்... கொங்கர் புளியங்குளம்..
No comments:
Post a Comment