Wednesday 8 August 2018

Jain Beds with Tamizhi Inscriptions at Velayuthampalayam / Arnattar malai /Pugalur Malai / Pugali Malai, in Karur District, Tamil Nadu.

31st July 2018.
Once this place Velayuthampalayam, near Karur in Tamil Nadu (Aarnattar Malai or Pugalur Malai) was ruled by the Cheras, keeping Karur as Capital.  There is a Sri Subramaniya Swamy Temple on the top of the hill, which may be of 500 to 600 years old ( renovated during recent years ). Sri Arunagirinathar, has sung hymns in praise of Sri Subramaniya Swamy of this temple. One level below the Temple,  the hill has natural caves. There were about 60 beds  chiseled for the Jain monks by the individuals, business people. The Chera Kings and the names of those who had done these beds are inscribed in Tamizhi ( Tamil brahmi ) inscriptions.


சேரமன்னர்கள், வலிமையுடன் இருந்த காலத்தில், கரூரைத் தலைநகராக் கொண்டு ஆட்சி செய்தனர். கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம் எனும் ஊரில், மரம் செடி கொடிகள் அதிகமாக இல்லாத குன்று ஆற்நாட்டார் மலை அல்லது புகழூர் மலை என அழைக்கப்படுகின்றது. மலையின் உச்சியில் அருணகிரிநாதரால் பாடப் பெற்ற ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோவிலின் ஒரு நிலைக்கு கீழே மலையைச் சுற்றிலும் இயற்கையாக அமைந்த குகைகளில் சமண துறவிகளுக்காக வெட்டிக் கொடுக்கப்பட்ட படுக்கைகள் சுமார் 60 இருக்கின்றது. படுக்கைகளின் அருகே அதை வெட்டுவித்தவர்களின் பெயர்களும் தமிழ் பிராமி  மொழியில் வெட்டப்பட்டு உள்ளது.

INSCRIPTION - 1.
In this inscription the names of Three generation  Chera Kings ie, Grand father Ko Athan Sollirumporai and the father PerunKadungo and the Son IlanKadungo are inscribed. As per the experts, the names mentioned are in the Sangam literature and these beds are  made during 01 to 02nd Century AD. 

இந்த கல்வெட்டு மூன்று தலைமுறை சேர அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது. கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ, இவரது மகன் இளங்கடுங்கோ என்பவர் இந்த படுகையை அமைத்துக் கொடுத்ததைக் கூறுகின்றது..
கல்வெட்டு வாசகம்
......தா அமணணன யாறறூ செஙகாய பன உறைய
கோ ஆதன செலலிரும பொறை மகன 
பெருங கடுங கோன மகனனங்
கடுங கோளஙகோ ஆசி அறுதத கல

INSCRIPTION - 2.
This inscription speaks about a person by name  Senkayappan,  who was converted to Jainism and also mentioned as elder  samanan, which means he might be a head of the monks.

இந்த கல்வெட்டு யாற்றூரைச் (ஆத்தூராக இருக்கலாம் )  சார்ந்த செங்காயன் என்பவன் சமணத் துறவியாக மாறியதன் பொருட்டு வெட்டப்பட்ட படுக்கை எனவும், மூத்த அமணன் என்று குறிப்பிடப்படுவதால், அங்கிருந்த துறவிகளுக்கு தலைமையாக செயல்பட்டு இருக்கலாம் எனக் கருத வாய்ப்புள்ளது.
கல்வெட்டு வாசகம்
யாறறூ செஙகாய பன ..றறிடடா டடானம 

INSCRIPTION – 3.
This inscription speaks about a lime merchant, who had done a bed for a monk. From this we can understand that lime business exists in Karur region during 1 – 2nd Century itself.

இந்த கல்வெட்டு வாசகத்தின் படி இப்படுக்கை, சுண்ணாம்பு வணிகரால் வெட்டுவிக்கப்பட்டது என்று அறிய முடிகின்றது. இப்பகுதிகளில் சுண்னாம்பு வியாபாரம் நடந்து இருப்பதையும் இதன் மூலம் அறியலாம்.
கல்வெட்டு வாசகம்…    
(சு)ணண வாணணிகன வேள ஆதன அதிடடானம

INSCRIPTION - 4
As per the inscription this bed was done by a gold merchant, which means that gold and gold ornaments  flourished in Karur area during 1-2nd Century itself.  

கல்வெட்டு வாசகத்தின் படி ஒரு பொன் வணிகன் இந்த படுக்கையை வெட்டுவித்ததாக அறிய முடிகின்றது. மேலும் அக்காலத்திலேயே தங்கமும் தங்கம் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடைந்திருந்ததையும் அனுமானிக்க முடிகின்றது.
கல்வெட்டு வாசகம்…..
கருஊர பொன வாணிகன நநதி அதிடடானம

INSCRIPTION – 5.
This inscription speaks about the bed was made for the female monks. Which means that female monks also involved in teaching along with male monks. 

கல்வெட்டில் குறிப்பிட்டு இருக்கும் பிட்டன் குறுமகள் என்ற வாசகத்தின் படி பெண்துறவிகளும் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது.
கல்வெட்டு வாசகம்….   
நமபி ஊர அபிடன குறும மகள கீரனனேறி செயி பித பளி

From the Tamil Brahmi inscriptions,  not only the kings, common people, merchants also helped for the growth of Jainism. Conversion  to Jainism also happened during 1 to 2nd century itself. In addition to this we can understand that lot of business houses like, Gold, Gold ornaments, Construction materials, Textiles flourished in Kongu regions.  It is an opportunity to know the Sangam period names as Pittan, Kotran, Keeran, Ori, etc.. 

These Jain beds are protected by the Archaeological  Survey of India (ASI). The Care taker Mr Chandran may be contacted before visiting the cave through his mobile 9976098300.  I extend my sincere thanks to Erode Mrs Sakthi Prakash for providing me the inscription details.

LOCATION:CLICK HERE











---OM SHIVAYA NAMA---

No comments:

Post a Comment