05th August
2018.
It was planned to Visit
Mottai Anadavar Temple Tirthankara at Kanakkuvelanpatti and Omandur Tirthankara in this 56th Ahimsa walk scheduled
on 05th August 2018. The Sukkalikaradu Jain beds, and Tirthankaras of Puliyur &
Kundangal are also added to our list since
these places are on the way to Chennai.
Started from Adambakkam, Chennai Sri Adinath Bhagwan Jinalaya with 10
Tamil Jains in a bus and 30 more added on the way from Tindivanam and
Villupuram. Reached Aravakurichi around 03.00 hrs. After a brief rest near
Aravakurichi, had our bath and reached Kanakkuvelampatti Mottai Andavar Temple
around 08.00 hrs.
56வது அஹிம்சை நடை கடந்த ஆகஸ்டு மாதம் 5ந்தேதி,2018 அன்று கரூர்
அரவக்குறிச்சி அருகே கணக்குவேலன்பட்டியில் இருக்கும் தீர்த்தங்கரரை மொட்டை ஆண்டவர்
( வள்ளி தெய்வானையுடன் முருகனாக ) எனக்கருதி மக்களால் வழிபடும் கோவிலில் நடத்துவதாக
திட்டம் இடப்பட்டு இருந்தது. சென்னையில் இருந்து சென்றுவர ஆகும் காலத்தையும் தூரத்தையும்
கருத்தில் கொண்டு சனி மாலை சுமார் 6.30 மணி அளவில் சென்னை ஆதம்பாக்கம் ஜீனாலாயத்தில்
இருந்து கிளம்பினோம். வழியில் திண்டிவனம் மற்றும் விழுப்புரத்தில் மற்றவர்களும் பேருந்தில்
ஏறிக்கொள்ள சுமார் 3 மணி அளவில் அரவக்குறிச்சி சென்று சேர்ந்தோம். சிறிது நேர ஓய்வுக்குப்
பிறகு குளித்து விட்டு சுமார் 8.00 மணிக்கு பண்டிட். கௌதம் அவர்களின் பிரார்த்தனைப்
பாடலுடன் மொட்டை ஆண்டவர் கோவிலை அடைந்தோம்.
MOTTAI ANDAVAR TEMPLE AT KANAKKUVELANPATTI.
This Mottai Anadavar was identified as Tirthankara by Mr. Durai Sundaram, a retired Official of BSNL who also joined us. The standing
image of a Tirthankara with two Samaratharis on both sides is carved on a
boulder facing west to a height of 7 feet on a Padma peedam. The Locals worship these Tirthankara and attendants as Mottai Andavar, Sri Subramaniar / Murugan
with Sri Valli Devasena. Panguni Uthiram festivals are celebrated in a grand manner.
The images are about 15
feet high from the ground level. First, it was identified as Bahubali with his
sisters. Since creepers are not found on the leg and body, the idea was changed
to Adhinathar and his daughters Brahmi & Sundari. This was posted on the
websites and published in newspapers also. When we went near the reliefs and
found that the center image was only Sri
Adinath Tirthankara and the side images were males holding samara. Hence they are not
Brahmi and Sundari as claimed. They may be royal attendants with samara. This
may be compared with the royal attendant’s dress and the standing posture shown at Kundangal Mahavir relief. Experts
are requested to throw some light on these images. A pali, and unfinished beds are found about 50 feet from this place. Considering this evidence, we may consider that a full-fledged Jain school with monks
might have functioned in this place. Experts of the opinion this may belong to the 7th to 8th Century.
மொட்டை ஆண்டவர் என இன காணப்பட்ட கோவையைச் சார்ந்த கல்வெட்டு
ஆய்வாளர் திரு துரை சுந்தரம் அவர்கள் அவருடைய நண்பர்களுடன் கோவிலில் எங்களுடன் இணைந்து
கொண்டார். மொட்டை ஆண்டவர் எனக் கருத்தப்படும் புடை சிற்பம் தரையில் இருந்து சுமார்
15 அடி உயரத்தில் ஒரு பாறையில் புடைச் சிற்பமாக
வெட்டப்பட்டு இருக்கின்றது. கிராமத்தார் இவர்களை முருகன் எனவும் இருபுறமும் இருப்பவர்கள்
வள்ளி தெய்வானை எனக் கருதி வழிபட்டு வருகின்றனர். திரு துரை சுந்தரம் அவர்கள், முதலில் மொட்டை ஆண்டவர்
பாகுபலி எனவும் அவருக்கு அருகே இருப்பவர்கள் அவருடைய சகோதரிகளாக இருக்கலாம் என கருதினார்.
அதுவே முக்குடையும், உடலில் கொடிகள் இல்லாத காரணத்தால் அவர் ஆதிநாதராகவும் அருகே இருப்பவர்கள்
அவருடைய மகள்களான பிராமியும் சுந்தரியாகவும் இருக்கலாம் எனக் கருதி செய்தித்தாள்களிலும்
ஊடகங்களிலும் பதிவு செய்து இருந்தார். நாங்கள் அருகே சென்று கவனித்த போது இருபுறமும்
இருப்பவர்கள் ஆண்கள் எனவும் சாமரம் இருப்பதால் சாமரதாரிகள் என கருத வேண்டி இருந்தது.
ஆய்வாளர்கள் மேலும் ஆராய்ந்து இனம் காண வேண்டுகின்றோம். மொட்டை ஆண்டவர் இருந்த பாறைக்கு
அருகே இரண்டு பாறைகளில் ஒரு பாளியும், சமணர் படுக்கைகளும் வெட்டப்பட்டு இருந்தது. இவற்றைக்
காணும் போது இவ்விடத்தில் அக்காலத்தில் ஒரு சமணப்பள்ளி இயங்கி இருக்கலாம் எனக் கருத
வாய்ப்புள்ளது. அறிஞர்களின் கணிப்பு இது 7 அல்லது 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்பது.
LOCATION: CLICK HERE
After breakfast, we assembled under a tree. Experts shared their experiences related to Jainism and stressed the urgent need to preserve our old heritage and Jain culture. Post lunch, we said good-bye to Mr Durai Sundaram and his friend and started our return journey to Chennai. On the way, we planned to visit Jain’s beds at Sukkalikaradu and Tirthankaras at Puliyur, Kundangal, and Omandur. The details are…..
காலை உணவிற்குப் பிறகு மொட்டைஆண்டவர் கோவிலிலேயே அஹிம்சை நடைக்
கூட்டமும் நடத்தப்பட்டது. அறிஞர்களும் ஆய்வாளர்களும் சமண சமயத்தின் கொள்கைகளையும் கருத்துக்களையும்
வலியுறுத்தி பேசினர். மேலும் அவர்கள் தங்களுடைய அனுபவகங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
மதிய உணவுக்குப் பிறகு திரு துரை சுந்தரமும் அவர்கள் நண்பர்களும் கோவைக்குத் திரும்ப
விடைபெற நாங்கள் மட்டும் சென்னையை நோக்கி புறப்பட்டோம். சென்னை திரும்பும் வழியில்,
சமணத் தடையங்கள் காணப்படும், சுக்காலியூர்கரடு, புலியூர் திர்த்தங்கரர், குண்டாங்கல்
மகாவீரர், ஓமந்தூர் திர்த்தங்கரர் ஆகியோரை தரிசித்துவிட்டு செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
JAIN BEDS AT SUKKALIKARADU
Our first stop to Chennai was at Sukkalaikaradu, about 7 KM from Karur. Already granite quarrying was in progress on this
karadu. Due to this, the boulder above the beds was toppled and only one bed is
visible from outside. It has 5 beds and
4 are found under the boulder through the gap. Local people worship this
place, as the Pancha Pandavas beds, the hero's Pancha Pandavas of epic
Mahabharat. They also believed that Pancha Pandavas stayed here before going to
war against Duryodhana.
சென்னை திரும்பும்
வழியில் நாங்கள் முதலில் சென்ற இடம் சுக்காலியூர் கரடு. இங்கு 5 சமண படுக்கைகள் வெட்டப்பட்டு
இருக்கின்றது. குன்றில் பாறைகள் உடைப்பால் ஏற்பட்ட அதிர்வால் பாதிக்கப்பட்ட ஒருபாறை
படுக்கைகள் மீது விழுந்து 4 படுக்கைகள் மறைக்கப்பட்டு கிடக்கின்றது. இந்த படுக்கைகளை கிராமத்தார் மகாபாரதக் கதையில் வரும்
பஞ்சபாண்டவர்கள் துரியோதனனுடன் போருக்குச் செல்லும் முன்பு இங்கு தங்கிச் சென்றதாகக்
கருதி வணங்குகின்றனர்.
LOCATION: Lat: 10 deg 55' 35.24" and Long : 78 deg 3' 3.19"
TIRTHANKARA ( CHETTIYARAPPICHI) – PULIYUR
Our next destination
was Puliyur, where a Tirthankara meditates under a neem tree
facing east. The local people worship him as Chettiyarappichi, applying
vibhuti and kungum.
Mukkudai, Samaratharis,
prabai mandalam, ashoka viruksham and srivatsam are shown on the image. It was
said that this Tirthankara may belong to the 3rd to 4th
century AD.
அடுத்து நாங்கள் சென்ற இடம் புலியூர் கிராமத்தில் மக்களால் செட்டியாரப்பிச்சி
என அன்போடு அழைக்கப்பட்டு வழிபடப்படும் தீர்த்தங்கரரைக் காண. தீர்தங்கரர் கிழக்கு
நோக்கி ஒரு வேம்பு மரத்து அடியில் தியானத்தில் உடம்பு முழுவதும் விபூதிப் பட்டை அணிவிக்கப்பட்டு
அமர்ந்து காணப்படுகின்றார். முக்குடை, சாமரதாரிகள், அசோக இலைகள், பிரபை, ஸ்ரீவத்சம்
ஆகிவற்றுடன் காணப்படுகின்றார். இவர் மூன்றில் இருந்து நான்காம் நூற்றாண்டைச் சார்ந்தவராக
இருக்கலாம் என்பது அறிஞர்களின் கணிப்பு.
LOCATION OF THE TIRTHANKARA : CLICK HERE
Lat 10deg 56' 27.37 and Long: 78deg 8' 22.09
MAHAVIRA TIRTHANKARA AT KUNDANKAL.
This popularly known
Kundangal Paarai is near the Iyyar Malai, Kulithalai. 5 KM from Kulithalai on
Kulithalai to Manapparai route. This
monument is under the control of the Archaeological Survey of India ( ASI),
providing a fence around this monument is in progress.
This Mahavira
Tirthankara relief was carved as a relief on an oval-shaped boulder sitting on a
rock, about 15 feet from the ground level. Devas, Samaratharis, and four royal
attendants ( two male and two females ) in standing posture on both sides are
shown. The male royal attendants hold flowers in their hands. As per the experts, this relief belongs to the 2nd century. Beds are
also made on the rock. It was told that inscriptions are there, which we
couldn’t identify.
குளித்தலை அருகே குளித்தலையில் இருந்து மனப்பாறை செல்லும் வழியே
குண்டாங்கல் என அழைக்கப்படும் இடம் அடுத்து நாங்கள் சென்றது. இங்கு ஒரு குண்டு போன்ற
பாறை சிறு கரட்டின் மீது கிடக்கின்றது. அக்குண்டு போன்ற பாறையில் சுமார் 15 அடி உயரத்தில்
மகாவீரர் புடைச்சிற்பம் கிழக்கு நோக்கி வெட்டப்பட்டு உள்ளது. இச்சிற்பத்தில் தேவர்கள்,
சாமரதாரிகள், இருபுறமும் ஆண் பெண் என நான்கு பேர் கட்டப்பட்டு உள்ளனர். ( இதில் ஆணுடைய
உடை, நிற்கும் தோரணை கணக்குவேலன்பட்டியில் இருக்கும் சிற்பத்தை ஒத்து இருப்பது கவணிக்கத்தக்கது.)
இவர்கள் அரச சேவகர்களாக ( Royal attendants )
இருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து. இருவர் கைகளில் மலர் காட்டப்பட்டு உள்ளது
மிகவும் சிறப்பு. கீழே படுக்கைகளும் வெட்டப்பட்டு உள்ளது. ( படுக்கைகளின் மீது விஷகிருமிகளால்
கிறுக்கப்பட்டு இருப்பது மனதில் வலியை ஏற்படுத்துகின்றது ). இந்த இடம் இந்திய தொல்லியல்
துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி நடந்து கொண்டு
இருக்கின்றது.
LOCATION: CLICK HERE
TIRTHANKARA AT OMANDUR.
Our next destination
was to Omandur to see Tirthankara. This Tirthankara is installed on the north
side wall of a Shiva Sannadhi in a Masi Periyanna Swamy & Sri Anna Kamakshi
Amman Temple Complex. This temple is very unique and the details will be posted
separately.
The local people
worship this Tirthankara as “Omarishi”. This image was sculptured in the form
of a triangular shape. The face is not clear and may be eroded due to age or
defaced. Except mukkudai nothing is visible.
As per the experts, this Tirthankara may belong to the 8th century.
Mr Mahatma Selvapandiyan, who identified this Tirthankara also came and explained to us the salient
features of this unique temple. Thank you very much, Sir.
கருவரையில் பிம்பத்திற்குப் பதிலாக தீபம் மட்டுமே ஏற்றப்படும்
ஸ்ரீ மாசி பெரியண்ண சுவாமி மற்றும் ஸ்ரீஅன்னகாமாக்ஷி என அழைக்கப்படும் கோவிலில் இருக்கும்
தீர்தங்கரரைக் காணச் சென்றது இன்றைய காணலின் கடைசி இடமான ஓமந்தூர். இந்த தீர்த்தங்கரர்
ஓமரிஷி என்று அழைக்கப்படுகின்றார். இவர் இங்கு உள்ள சிவன் கோவிலில் வடக்குப்புற சுவற்றில்
வைக்கப்பட்டு உள்ளார்.முக்கோன வடிவ கல்லில் புடைச் சிற்பமாக செதுக்கப்பட்ட இத்தீர்த்தங்கரரின்
உருவத்தின் மீது முக்குடை மட்டும் காட்டப்பட்டு உள்ளது. முகம் காலத்தால் தேய்ந்தோ அல்லது
சேதப்படுத்தப்பட்டோ இருக்கலாம். இவரை இனம் கண்ட முனைவர் திரு மகாத்மா செல்வபாண்டியன்
வந்து இருந்து இந்த தீர்தங்கரர் சிற்பம் மற்றும் கோவிலைப் பற்றி விளக்கிக் கூறியது
மிகவும் சிறப்பு. நன்றி அய்யா.
LOCATION: CLICK HERE
After early dinner at this temple, we continued our return journey
to Chennai, thanking the organizers of
this 56th Ahimsa walk, Mr Perani Sridhar Appandairaj, and Dr Kanaka
Ajitdass. Mr Rajendra Prasad, Mr Soumenthar
and Mr Sukumar Dhananjayan. Thanks to Pandit Gowtham Sagarji, who sang the
prayer songs at each heritage site / Monument.
சமண சமயத்தினரின் வழக்கப்படி மாலையே இரவு உணவை முடித்துக்கொண்டு
இந்த 56வது அஹிம்சை நடையை நடத்திய திரு பேரணி ஸ்ரீதர் ஆப்பான்டைராஜ், முனைவர் கனக அஜிததாஸ்,
திரு ராஜேந்திரபிரசாத், திரு தனஞ்சயன், திரு சௌமேந்தர் மற்றும் சமண பாடல்கள் அதற்குரிய
இடங்களில் பாடிய பண்டிட் கௌதமன் சாகர் அவர்களுக்கும் நன்றி கூறி தொடர்ந்தது சென்னையை
நோக்கி எங்கள் பயணம். 56வது அஹிம்சை நடையில்
கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த
நன்றிகள்.
---OM SHIVAYA NAMA---
Ayya, YOU ARE GREAT IN RECORDING ALL THE SITES SOON AFTER YOUR VISITE. I NEED GOOGLE COORDINATES FOR MOTTAIANDAVAR TEMPLE, KANAKKUVELAMPATTI AYYA. I SEARCHED COUNDNOT FIND. CAN YOU GIVE AYYA?
ReplyDeleteகூகுல் மேப் லிங்க் கொடுத்துவிட்டேன்... மா... இப்போது பாருங்கள்
Delete