Saturday 15 April 2023

Arjuna's Penance, Mahabalipuram / Mamallapuram, an UNESCO World Heritage Site, Chengalpattu District, Tamil Nadu.

This Second (....?) visit to this Arjuna’s Penance Panel at  Mamallapuram,  one of the UNESCO Heritage sites of Tamil Nadu, was a Part of “Mamallapuram Heritage Visit” under the title – “Known Mamallapuram, Unknown places - தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள்” organised by SASTRA & Chithiram Pesuthada Groups on 19th March 2023.


This magnificent carving is on the back side of the Thala sayana Perumal Temple is a unique of its kind. The is the largest in the world carved sculptures between two boulders with a narrow fissure measuring to a width of 100 feet and 40 feet high. The narrow fissure have been chosen a series of gods, goddess like Shiva, Chandra, apsaras, pairs of Kinnars and Siddhas, Gandharvas rushing towards central point near the cleft where a sage stands on his left foot deeply engaged in penance involving physical mortification. There are two different opinions of this sage.. he may be Arjuna ( to get pasupata astra from Lord Shiva  to fight with Duryodhana in Mahabharat war ) or may be Bhagiratha ( Bhagiratha had done his penance to bring Ganga from the heaven to earth to cleanse his ancestor's athmas to enable them to reach heaven ).

 Shiva and Bhagiratha doing Penance ( The theme of the total Sculpture panel )
A Routine life 
 A Maha Vishnu's Shrine and Headless Devotees ( Might have been damaged ). As per the experts  the person looking at the sky, is to see the time for rituals. 
 
To his right of the sage, four armed Shiva carrying a spear and Mazhu with his dwarf ganas. Apart from the celestial there are hunters, sages, disciples and wild animals like Lion, Tiger, Elephant and boar. The group of elephants seems like real from small to large towards cleft. The cleft is occupied by the gracefully carved figures of Nagas and Naginis with hands in adoration. A temple of Vishnu where number of sages  in deep meditation with yoga patti. And sages, their disciples carrying water in a pot keeping it on their shoulder. The radiation of peace and calm by the sages is reflected in a meditating cat, around which a number of rats are frolicking about. The same way the deer and Lion very close to each other resting fearlessly.

A Naga King
A Routine Life of lifting load

அர்ச்சுனனின் பெருந்தவம்
மாமல்லையின் சிறப்பம்சமான இந்தப் பாறைச் சிற்பத் தொகுதி, அர்ச்சுனன் தவம் என்றும் பகீரதன் தவம் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் இது பேச்சு வழக்கில் அர்ச்சுனன் தவம் என்றே உள்ளது. இது தான் உலகத்திலேயே மிகப்பெரிய திறந்தவெளி புடைப்பு சிற்பத்தொகுதி ஆகும். இது 100 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட இப்பாறைச் சிற்பம் பல தெய்வ, மனித, மிருக உருவங்களைத் தன்னுள் உள்ளடக்கியது.


 Gandharvars and Kinnaras

இச்சிற்பம் இரு பெரும் பாறைகளில் நடுவில் உள்ள பிளவை மையமாக வைத்து ஒரு நதி பாய்ந்து வரும் அமைப்பாகக் கொண்டு இருபுறத்தும் உள்ள பாறைகளில் எழில் வாய்ந்த சிற்பங்கள் உருவக்கப் பட்டுள்ளது. ஆகாயத்தில் தோன்றி பூவுலகை நோக்கிப் பாய்ந்து, அதையும் தாண்டி கீழுலகுக்கு ஊடுருவிச் செல்லும் நதியாக இப்பிளவைச் சிற்பி அகக் கண்ணால் கண்டு, படைத்து விட்டான். ஆகையால் மூவுலகையும் இணைக்கும் இழைபோல் இந்தச் சிற்பத் தொகுதி காணப்படுகின்றது.



இந்த தொகுதியில் சுமார் 150 உயிர் படைப்புக்களைக் காணலாம். வின்னிலே வாழும் தேவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், சித்தர்கள், காடுகள், மரங்கள் அவற்றின் சூழலுக்கேற்ப வாழும் சிங்கம், மான், யானைகள், குரங்குகள் ஆகியவை உள்ளன. கோவில், அங்கு தொழுதுகொண்டு இருக்கும் பக்தர்கள், முனிவர்கள், நீரோட்டத்தில் நாகர்கள் மற்றும் நாகினிகள் இச்சிற்பத்திற்கு உயிரோட்டத்தை கொடுக்கின்றது. கணங்கள் அருகில் இருக்க கம்பீரமாக சிவனும், தொழுது கொண்டு இருக்கும் முனிவர்கள் தான் இந்த சிற்பத்தின் உயிர்நாடிகள்.



மேற்புறத்தில் உள்ள உருவம் சிவனுடையது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் தவம் செய்பவர், அர்ச்சுனன் பாசுபத அஸ்திரம் வேண்டி புரியும் தவமா அல்லது பகீரதன் கங்கையைக் கொண்டு வர இயற்றும் தவமா என்ற கருத்து வேற்றுமை உள்ளது. நமது புராணங்களில் காணும் எல்லா உருவங்களும் இச்சிற்ப்பத் தொகுதியில் உள்ளன என்பதும், இங்கு காட்டப்பட்டு உள்ள பொய்தவப் பூனையும் கூட மகாபாரதத்தில் வருவதும் குறிப்பிடத்தக்கது. இதில் காட்டப்படும் மிருக உருவங்கள் அனைத்துமே மிக்க கவனத்துடன், அந்தந்தச் சூழ்நிலைக்கேற்ப வாழும் உயிரினங்கள் என்றும் ஆகையால் தான் அவை அங்கே காட்டப்பட்டுள்ளன என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

A Cat is also doing penance - பொய்தவப் பூனை


 The monkeys picking up the lice at Arjuna’s Penance Panel belongs to this Mukuntanayanar temple place, where it was unearthed during excavation.
Kinnaras

Cock & Hen along with Gandharvas
 Nagar and Nagini

Ref :  1. Mamallapuram by ASI and Mamallapuram 
         2. A Book on Mamallapuram by S Swaminathan 
         3. காஞ்சிபுரம் மாவட்ட தொல்லியல் கையேடு

LOCATION OF THE ARJUNA'S PENANCE PANEL    :    CLICK HERE

08th June 2017.
... to be continued Mahishamardini and Seshasayi Vishnu mandapam, Mahabalipuram, A Heritage Visit – Part -6.
---OM SHIVAYA NAMA---

No comments:

Post a Comment