The visit to this AtiranaChanda Mandapam, was a
Part of “Mamallapuram Heritage Visit”, under the title – “Known Mamallapuram,
Unknown places – தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள்” organised by SASTRA & Chithiram
Pesuthada Groups on 19th March 2023. This
is one of the group of monuments of Mamallapuram a UNESCO Heritage site of
Tamil Nadu.
March 2023
A 19th Century picture ( PC: Chithiram Pesuthada FB )
This is a cave Temple dedicated to Lord Shiva. This is in the
same Tiger cave Complex. The Shiva Linga and Nandi are installed at a latter
period. The pillars and pilasters are simple without much carvings. In the
Artha mandapam relief of two Somaskanda of latter Pallava Period is available
in artha mandapa, where as the original mandapa is of 8th century
Pallava Period. Asper the experts, two Shiva Lingas might have been installed
in ardha mandapam in front of these Somaskandar panels. On both sides there are
two inscriptions one side ( south wall ) with Pallava grantha and the
other side ( North side ) with devanagari ( oldest inscription found in south
India ). Both gives the same meaning. From the inscriptions one Athyanthakaman
chiselled this cave temple for Lord Shiva. There is a Chozha period inscription
on the floor also. Based on the other caves
available at Mamallapuram, it may be presumed that this monument might be a
combination of Lord Shiva and Kotravai.
The
reason for this conclusion may be due to the Pallava Kings Mahendran I,
Narasimhan I, Parameswaran and Rajasimhan who are responsible ( Archaeologists
differ this opinion ) for this monuments are ardent devotees of Lord
Shiva and Vishnu. This Atiranachanda mandapa was excavated by Adyanthakaman
alias Rajasimhan also Called as Narasimhavarman-II.
Somaskandar Panel on the back side of the Sanctum sanctroum
Dwarapalakas
Somaskandar Panels in the ardha mandapam walls- As per the old Picture, there are two Siva Lingams installed in front of these Somaskandar Panels.
அதிரணசண்ட மண்டபம்
மாமல்லையிலிருந்து சென்னைக்கு வரும் கடற்கரைச் சாலையில் உள்ள சாளுவக்குப்பம் என்ற இடத்தில் இரண்டு குகைகள் உள்ளன. ஒன்று புலிக்குகை எனப்படுவது. மற்றொன்று, அதிரணசண்ட மண்டபம் என்னும் குகைக் கோவில், இதில் ஆரம்பகாலத்து அம்சங்களும் பிந்தைய அம்சங்களும் கலந்து இருப்பதைக் காணலாம். இவை தவிர, இந்த மண்டபத்தில் இரு முக்கியக் கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன. சிறிய ஆனால் அழகில் சிறந்த மகிஷாசுரமர்த்தினி திறந்தவெளிப் புடைப்புச் சிற்ப உருவம் ஒன்றும் இங்குள்ளது. உள்ளே வைக்கப்பட்டுள்ள சிவலிங்கமும், வெளியில் உள்ள நந்தியும் பிற்காலத்தவை.
இங்குள்ள, அதிக வேலைப்பாடுகள் இல்லாத, தடிமனான, எளிய தூண்கள் பழமையான பல்லவ காலத்தைக் குறிக்கின்றன என்றால். மறுபக்கம், அழகு பொலிந்த சோமாஸ்கந்த உருவங்கள் சற்றே பிற்பட்ட பல்லவ காலத்தைக் குறிக்கின்றன. ஒரே இடத்தில் இருவேறு காலகட்டத்தைச் சேர்ந்த சிற்ப நுணுக்கங்களா?
சோமாஸ்கந்தரின் இரு புடைப்புச் சிற்பங்கள் இக்கோயிலின் அர்த்தமண்டபத்தில் காணப்படுகின்றன. இதுபோல வேறு எந்தப் பல்லவர் காலக் கோவில்களின் அர்தமண்டபத்திலும் இல்லை. இந்த சோமாஸ்கந்தர் புடைப்புச்
சிறப்ங்களுக்கு முன்பு சிவலிங்கங்கள் நிறுவப்பட்டு இருந்தது என்பது மேலே பதிவேற்றப்பட்ட புகைப்படத்திலிருந்து அறிய முடிகின்றது.
HISTORY AND INSCRIPTIONS ( Abstract of the inscription SII Volume XII, Pallavas )
Narasimhavarman-II, period inscription records that the temple (where the inscription 15 found ) was caused to be made for Sambhu (Siva) by the king Atiranacanda and was named after him as ‘Atiranacandesvaragrham.' The king had the following surnames: Atyantakéama, Kamaraga, Srinidhi, Sribhara, Ranajaya, Anugraiila, Kalakéla, Samaradhananjaya and Sangramadhtra.
Another inscription records the name of the same Temple Mentions ‘Atiranacanda-Pallavesvara-grha’. ( i.e. the temple of Atiranacanda- Pallaveésvara ).
கோவிலின் பக்கச் சுவரில் கவர்ச்சிகரமான பாங்கில் எழுதப்பட்டுள்ள இரு கல்வெட்டுகள் பார்க்கவேண்டியவை. ஒரு பக்கத்தில் பல்லவ கிரந்தத்திலும் மற்றொரு பக்கத்தில் தேவநாகரியிலும் வெட்டப்பட்டுள்ளன. தென்னகத்திலேயே மிகப் பழமையான தேவநாகரி எழுத்து என இதைக் கொள்ளலாம். எழுத்துகள் இரண்டு வகையான போதிலும், இரண்டிலும் உள்ள சமஸ்கிருதச் செய்யுள்களின் வாசகங்கள் ஏறக்குறைய ஒன்றே. சமஸ்கிருத கல்வெட்டு வாசகங்கள் கீழே...
- ஸ்ரீ மதோத்யந்த காமஸ்ய தலிஷத்த
- ர்ப்பாப ஹாரிணஹ ஸ்ரீநிதேஹ காம்
- ராகஸ்ய ஹராராத உஸங்கினஹ//
- அபிஷேக ஜலாபூர்ணே சித்ரரத்னாம் பஜாகரே/
- ஆஸ்தே விஷாலே ஸீமூகற்ஹ சிரஸ்ஸரதி சங்கரஹ//
- தேனேதம் காரிதம் சம்போர்பவனம் பூதயே பூவஹ
- கைலாஸ மந்திரநிபம் பூப்ருதாம் மூர்த்னிதிஷ்டதா// பக்திப்ரவீரவேந
- மனஸா பவம் பூஷண லீலையா/ தோஷ்ணா சயோ புவன்தத்தே
- ஜியாத் ஸ ஸ்ரீபரஷ்சிரம்// அதிரண சண்டஹ பதிகநிபு
- ஜாமதிரண சண்டேஸ்வரமிதமகரோத்/ இஹ கிரிதனயா
- குஹகனாஸ்ஹிதோ நியதக்குத்தரதிர்பவது பஷீபதிஹி//
- குர்வீஷான் பத்திம் ச்ரியமதிஷயிதீம்துர்வஹம் பாரமுர்வ்யா
- நிஸ்ஸா மான்யச்ச தானம் சமமதிரண சண்டாக்யயாயோபிபர்த்தி/
- ஸ்தானே நிர்மாபிதேஸ்மீன் விதிதரண ஜெயாக்யாதினா தேனபர்த்தா பூதானாம்
- மஷ்டமூர்த்திஷ்சிரமதிரணசண்டேஸ்வரே யாது நிஷ்டாம் அநுக்ரஷீலஹ//
- யதி ந விதாதா பரதோ யதி ந ஹரிர் நாரதோ நவாஸ்கந்தஹ போத்தும்க இவ
- ஸமர்த்தஸ்சங்கீதம் காலகாலஸ்ய// ஓம்// ஸமரதானஞ்ஜயஹ ஸங்க்ராமதிரஹ//
- ஓம்//
Another inscription records the name of the same Temple Mentions ‘Atiranacanda-Pallavesvara-grha’.
( i.e. the temple of Atiranacanda- Pallaveévara ).
இந்தக் கல்வெட்டுகளிலிருந்து, அத்யந்தகாமன் என்பவன் இந்தக் கோவிலைச் சிவனுக்காகக் கட்டியதாகத் தெரிகிறது. இதேபோல, மேலும் இரு மாமல்லபுரத்துக் கோவில்களில் ஏறக்குறைய இதே பொருள்படும் கல்வெட்டுகள் இருப்பது பெரும் புதிரே.
The
Chozha King Rajaraja-I’s period inscription is on the floor at the entrance. This inscription starts with his meikeerthi / title... This inscription records the endowment of burning a perpetual lamp, for the
same 90 goats are gifted. In that inscription this place was mentioned as
Thiruvizhichchal.
Mahishamardini Panel…
Also there is a Mahishasura Mardini ( Mahishamardini ) panel in front of the Adiranasanda
Mandapam Rock Cut Cave Temple on a boulder.
Compared to other panels available on
the Hill caves, this panel is beautifully done. While Mahishasuramardini is
getting down from Simham, the demon is running to save his life.
Mahishasuramardini is with 6 hands holding various weapons. She is shown slim,
beautiful face, wearing ornaments in the ears, on the neck. She is in fighting
posture holding a bow. A lion cub is also shown bitting Mahishasuran’s hand as
a part it’s share in the war. The demons are shown that they are fleeing from
the war scene with a fear on their faces.
மகிஷாசுரமர்த்தினி திறந்தவெளி புடைப்புச் சிற்பம்
குகைக் கோவிலின்முன், தென்புறத்தில்
இருக்கும் ஒரு சிறு இயற்கைப் பாறையின்மீது தேவி மகிஷாசுரனுடன் போரிடும் காட்சி
சித்திரிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்துச் சிறப்பான மகிஷாசுரமர்த்தினி அதன் தொடரமைப்பு இது என்று கொள்ளலாம். ஆனால்
இது உருவ அமைதியில் மாறுபட்டுள்ளது. அமைப்பிலும் அழகிலும் இது முன்னதைவிட குறைவுதான்.
இதன் சிறப்பு, இதன் உயிரோட்டம்தான். அசுரனை
விரட்டுவதற்குத் தயாராக துர்கை சிங்க வாகனத்திலிருந்து இறங்கிக்கொண்டிருக்க,
அசுரன் புறமுதுகிட்டு ஓடிக்கொண்டிருப்பதைக் காண்கிறோம். தேவி வலது காலைத் தாமரை
மலர்மேல் ஊன்றி, இடது காலை சிம்மத்தின் மீது அமர்த்தி, வில் பிடித்துப்
போரிடுகிறாள். அவள் ஆறு கைகளுடன் விளங்குகிறாள். வெற்றியின் அறிகுறி அவள்
முகத்தில் தெரிகிறது. அவளுக்குப் பின்னால், கணங்கள் போர்க்கோலம் பூண்டு விளங்கு
கின்றன. மிகச்சிறிய அளவிலான ஒரு சிங்கக்குட்டியும் அதன் பங்கிற்காக மாகிசனின் கையைக் கடிப்பது
மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டு உள்ளது. இச்சிற்பம் எழில் வாய்ந்த காட்சியாகும்.
களிப்புடன் மஹிசாசுரமர்த்தினியின் கணங்கள், தப்பியோடும் அசுரப் படைவீரர்கள், அவர்கள் முகத்தில் தெளிவாகத்
தெரியும் பயம் கலந்த சோர்வு, இவையெல்லாம் சிற்பத்துக்கு சிரஞ்சீவித்தன்மையான
உயிரோட்டத்தை அளிக்கின்றன. தேவியை சிற்பி பொலிவுடன் விளங்கும் அழகுருவமாகத்
உருவாக்கியுள்ளார். ஒய்யாரமான உடல்வாகு, மெலிந்த இடை, மேலே பிறையுடன் காணப்படும்
கிரீடம், குண்டலங்கள், கழுத்திலே. முத்து மாலையுடன் மார்க்கச்சை அணிந்து
காணப்படுகிறாள். எடுத்துக்கொண்ட வேலையைக் கச்சிதமாகச் செய்து முடித்த திருப்தி
அவளது முகத்தில் காணப்படுகிறது. வெண்குடை இழந்த அசுரன், தோல்வி காணும் முகத்துடன்,
சிறிதே பிளந்த பெருமூச்சால் விரிந்திருக்கும் நாசியுடன் ஓடும் காட்சியை
உயிரோட்டத்துடன் வடித்துள்ளார் சிற்பி. காட்சி நம் முன் நிஜமாகவே நடந்து கொண்டிருப்பதாகத்
தோன்றி, கண்களுக்கு விருந்தளிக்கிறது.
Mahisan's army fleeing from the war field
The Lion Cub also biting Mahishan's handMahishasuramardini stepping down from Lion Vahana
The Lion Cub also biting Mahishan's hand & others fleeing from the war field
Ref: 1. Kanchipuram
Mavatta Tholliyal Kaiyedu.
2. Mamallapuram by
Prof. Swaminathan
3. SII Volume. XII
LOCATION
OF THE CAVE TEMPLE : CLICK HERE
A Damaged Sand Stone Rishabam in front of the Rock Cut Cave
Somaskandar Panel-another view
A Damaged sculpture - may be Maha Vishnu---
OM SHIVAYA NAMA ---
No comments:
Post a Comment