Thursday 6 April 2023

Kodikal Mandapam / Kottikal Mandapam, An UNESCO Heritage Site, Mamallapuram, Chengalpattu District, Tamil Nadu.

The visit to this Kodikal Mandapam at Mamallapuram, was a Part of “Mamallapuram Heritage Visit”, under the title – “Known Mamallapuram, Unknown places - தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள்” organised by SASTRA & Chithiram Pesuthada Groups on 19th March 2023.  This is one of the group of monuments of Mamallapuram a UNESCO Heritage site of Tamil Nadu.


Kodikal mandapam…This cave is assigned to the earlier years of Pallava King Narasimhavarman –I, Mamalla ( 600 – 638 CE ), but typologically assigned to period II of Mahendra Style. There is a Short title inscription on the southern pillar in the 7th Century Grantha script reads as “Vamangusa”, a title  neither borne by Mahendravarman ( 580 – 630 CE ) or Narasimhavarman-I. It is likely that the title belongs to a chieftain, possibly of Telugu Chozhas. This cave temple has, on plan, a ardha mandapam with two façade pillars and a shrine cut in to the back wall, but projecting in to the former. The Pillars are of Simple variety. The entrance to the shrine has kapota cornice with the usual kudus. On either side of the entrance to the shrine are sculptures of Dwarapalakis in  the form of bas-reliefs. This indicates that the cave may have been dedicated to Durgai.
  

கோடிக்கல் மண்டபம்
மும்மூர்த்தி குகைக்கு மேற்கே தென்புறப் பாறையில் உள்ள குகைக் கோயில் கோடிக்கல் மண்டபம் என்றழைக்கப்படுகிறது. நீண்ட சதுர அமைப்புடன் நடுவில் கருவறை குடைவிக்கப் பட்டுள்ளது. கருவறை வாயிலின் வடக்குப் புறத்திலுள்ள காவற் பெண் வலது கையில் கத்தியுடனும் இடது கையில் கேடயமுடனும் காணப்படுகிறாள். தென்புறத்திலுள்ள காவற் பெண் வலது கையில் வில்லைப் பிடித்துக் கொண்டும் இடது கை இடுப்பின் மீதும் காட்டப்பட்டுள்ளது. இரண்டு காவற் பெண்களும் மார்புக்கச்சணிந்து சடைமுடித்து / சடை மகுடமாக திரிபங்கமாக நின்ற நிலையில் காட்டப்பட்டு உள்ளனர். வாயிலைக் காத்து நிற்பவர்கள் பெண்கள் என்பதைக் கொண்டு இக் குடைவரைக் கோயில் கொற்றவைக்காக எழுப்பப்பட்டது எனக் கருதப்படுகின்றது.

இங்குள்ள தென்புறத் தூணின் மேல் பகுதியில் 'வாமாங்குசன்' என்ற இராஜசிம்மனின் பட்டப் பெயர் பல்லவ கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் மத்திய தொல்லியல் துறையினரால் “வாமாங்குசன்” என்பது மஹேந்திரவர்மன் அல்லது நரசிமவர்மன் ஆகியோருடைய மெய்கீர்த்தியாக இருக்கமுடியாது என்றும், தெலுங்கு சோழ தளபதியின் பெயராக இருக்கலாம் என்று விளக்கப் பலகையில் எழுதி உள்ளனர்.



'வாமாங்குசன்' என்ற இராஜசிம்மனின் பட்டப் பெயர் பல்லவ கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது

வாமாங்குசன் பற்றிய கூடுதல் தகவலாக ஐயா Ramachandran Guruswamy அவர்களின் பதில் என்பதிவில்.. 

மூன்றாம் நந்திவர்மன் தளபதிகளில் ஒருவன் குமராங்குச சோழ மஹாராஜா.‌ ஆகையால் குமராங்குசன் வாமாங்குசன் வழி வந்தவனாக இருக்கலாம்.

கிபி ஐந்தாம் நூற்றாண்டில் முதன் முதலாக தெலுங்கு கல்வெட்டு பதிப்பித்தவன் புண்ணிய குமாரன் என்ற தெலுங்கு சோழ மன்னன். அவன் கல்வெட்டுகளில் காவிரிக்குக் கரை கண்ட கரிகாலன் தவிர நல்லடிக்கோன் குறிப்பிடப் படுகிறது. கோச் செங்கட சோழன் மகன் நல்லிடிக் கோன். இவன் மகன் தனஞ்ஜெயன் என்பவன் தான் தஞ்சை சென்று தனஞ்ஜெயபுரம் என்ற தஞ்சையை நிறுவி மூத்த அரசர் குலம் என்ற பொருளில் முதுராஜா என்று பட்டப் பெயர் பூண்டு முத்தரையர் ஆனார் என்று முதுராஜாக்கள் செய்தி கூறுகிறது.‌இதே போல் பொத்தப்பி நாடு சீட்புலி நாடு என்று அழைக்கப்படும் காளஹஸ்தி பகுதியை ஆண்டவர்கள் ஜடசோட பீமன் என்ற தெலுங்கு சோழர்கள் 

Ref: 1. Kanchipuram Mavatta Tholliyal Kaiyedu.
       2. Mamallapuram by Prof. Swaminathan
       3. SII Volume. XII

LOCATION OF THE CAVE TEMPLE       : CLICK HERE
--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment