Friday, 15 January 2021

Thenkurangaduthurai Temple /Sri Abathsahayeswarar Temple / Sri Apath Sahayeswarar Temple, ஆபத்சகாயேஸ்வரர் கோயில், தென்குரங்காடுதுறை (ஆடுதுறை) / Aduthurai / Thenkurangaduthurai, Thanjavur District, Tamil Nadu.

This is the 148th Thevara Paadal Petra Shiva Sthalam and 31st Sthalam on the south side of river Kaveri in Chozha Nadu. This place is called Thenkurangaduthurai (Then – தென் – தெற்கு ), since there are two places with Paadal Petra Temples as Kurangaduthurai, to differentiate, this place is called as Thenkurangaduthurai ( South) and the other one is called as Vadakurangaduthurai also called as Aduthurai perumal Koil the 49th Paadal Petra sthalam of Chozha Nadu on the south side of river Kaveri. 


In Periyapuranam Sekkizhar records that, Thirugnanasambandar came to this temple after worshiping Lord Shiva of Thiruvidaimaruthur. Thirunavukkarasu Swamigal came to this temple after worshiping Lord Shiva of Thiruvaduthurai. But Sekkizhar didn’t mention this temple Thenkurangaduthurai separately.

மருங்கு உளநல் பதிகள்பல பணிந்து மாநிதிக் கரைபோய்க்
குரங்காடுதுறை அணைந்து குழகனார் குரைகழல்கள்
பெரும்காதலின் பணிந்து பேணிய இன்இசை பெருக
அரும் கலைநூல் திருப்பதிகம் அருள்செய்து பரவினார்
..... திருஞானசம்பந்தர் புராணம்
Thirugnanasambandar, Thirunavukkarasu Swamigal, and Vallalar have sung hymns in praise of Lord Shiva of this temple. 

பரவக்கெடும் வல்வினை பாரிடம் சூழ
இரவிற் புறங் காட்டிடை நின் நெறி யாடி
அரவச் சடை அந்தணன் மேய அழகார்
குரவப் பொழில் சூழ்குரங் காடுதுறையே
...... திருஞானசம்பந்தர்
இரங்கா வன்மனத் தார்க் ளியங்குமுப்
புரங்கா வல்அழி யப்பொடி யாக்கினான்
தரங்கா டுந்தட நீர்ப்பொன்னித் தென்கரைக்
குரங்காடு துறைக் கோலக்க பாலியே
...... திருநாவுக்கரசு சுவாமிகள்
                                                    -“நீக்கமிலா
நன்குரங்காணு நடையோரடைகின்ற
தென்குரங் காடுதுறைச் செம்மலே
....... திரு அருட்பா
Moolavar  : Sri Apath Sahayeswarar
Consort    : Sri Pavazhakodiammai.

Some of the important features of this temple are...
The temple faces east with a three-tier Rajagopuram. Balipeedam and Rishabam are after the Rajagopuram. There is no Dwajasthambam ( Place is there, but might have been removed ). In Koshtam Narthana Vinayagar, Agasthiyar, Dakshinamurthy, Lingothbavar ( Brahma and Vishnu on both sides ), Brahma, Durgai. In Dakshinamurthy’s place Agathiyar, Natarajar. Ganga Vicheschanar / Gangadharar, Pichadanar on both side of Sri Durga. 

In praharam Vinayagar, Sri Valli Devasena Subramaniar, Nalvar, Shiva Lingam, Ambal, Sugrivan worshiped Shiva Linga, Viswanathar, Murugan as Mayil Vahanar, Gajalakshmi, Natarajar, Saneeswarar, Suriyan, Chandran and Navagrahas.  In Navagrahas all the 8 Grahas are facing Suriyan. A stucco image of Sugrivan worshiping Lord Shiva is above the entrance of Mukha mandapam. Bas-reliefs of Chembiyam Mahadevi Karaikal Ammaiyar and Sugrivan worshiping Lord Shiva are there on the sanctum wall.

The 15th Century Arunagirinathar has sung hymns in praise of Lord Muruga of this temple.

செறிந்தமந் தாரை மகிழ்புனை
            மிகுத்ததண் சோலை வகைவகை
            தியக்கியம் பேறு நதியது                      பலவாறுந்
    திரைக்கரங் கோலி நவமணி
            கொழித்திடுஞ் சாரல் வயலணி
            திருக்குரங் காடு துறையுறை             பெருமாளே

ARCHITECTURE
The sanctum sanctorum consists of sanctum, antarala, and artha mandapam. A moat formation is around the sanctum sanctorum, which may be due to the rise of the Ground Level. A 2-tier Vesara Vimana is on the top of Sanctum. Stucco images of Vali and Sugreeva worshiping Lord Shiva are in the Vimana.



HISTORY AND INSCRIPTIONS
Since Thirugnanasambandar has sung hymns in praise of Lord Shiva of this temple, the original temple existed before the 7th Century and Pandyas extended their contributions in the 8th Century. As per the later period inscriptions, this temple was reconstructed with stone by the Queen of Gandaraditya, Sembiyan Mahadevi, and later extended by Chozhas and Vijayanagara.

As per the inscriptions this place Kurangaduthurai was in “Thenkarai Thiraimurnattu thirukurangaduthurai”, Poobalakulavalli Valanattu Thiraimurnattu Thirukurangaduthurai, Uppakondavalanattu Thiraimur Nattu Thirukurangaduthurai and Lord Shiva was called as Thiru kurangaduthurai Mahadevar.

8 ஆம் நூற்றாண்டு பாண்டிய மன்னர் மாறஞ்சடையனின் 4+1+1+1, ஆட்சி ஆண்டு, அர்த்தமண்டப வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு தஞ்சாவூர் நாட்டு துறையூர் ஸபைப் பெருமக்கள் திருக்குரங்காடுதுறை மகா தேவருக்கு விளக்கிட தினமும் எண்ணெய் உரி அளக்க ஏற்பாடு செய்ததைக் குறிக்கிறது. நடுவில் சிமெண்ட் பூசப்பட்டுவிட்டதால் சில வரிகளைப் படிக்க இயல வில்லை.
The Pandya King Ko Maranjadaiyan’s (8?)6th ( 4+1+1+1) reign year inscription records the endowment of burning a perpetual lamp with the supply of one Uri oil daily by the Sabhai / Village assembly, to this temple Mahadevar of Thirukurangaduthurai in Thiraimur Nadu.

பொயு 8 ஆம் நூற்றான்டு பாண்டிய மன்னர் கோமாறன் சடையனின் 4+1+1+1+1 ஆம் ஆட்சியாண்டு கருவறை மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு திருக்குரங்காடு துறை மகாதேவருக்கு மருத்துவக்குடி சபையார். திருவிளக்கு இட்டதையும், அதற்கென நாள்தோறும் அட்டவேண்டிய எண்ணெயின் அளவினை யும் இக்கல்வெட்டுக் குறிக்கின்றது. எனினும் கல்வெட்டின் பெரும்பகுதி அழிந்து விட்டது.
Another Pandya King Ko Maranjadaiyan’s 8th reign year ( 4+1+1+1+1 ) inscription records the endowment of burning a perpetual lamp and a provision of supply of oil was made by the Sabhai / Village assembly of Maruttuvakkudi in Thiraimur Nadu.

செம்பியன் மாதேவியின் 10 ஆம் நூற்றாண்டு, அர்த்தமண்டப தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு திரைமூர் நாட்டுத் திருக்குரங்காடுதுறை மகாதேவர் கோயிலை, உத்தமசோழர் அன்னையான மாதேவடிகள் செம்பியன் மாதேவியார் கட்டியதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

பொயு 10 ஆம் நூற்றாண்டு செம்பியன் மாதேவியாரின், கருவறை, அர்த்தமண்டப வடபுறப் பட்டிகையில் உள்ள கல்வெட்டின் ஒருபகுதியே உள்ளது. உத்தம சோழரைத் திருவயிறு வாய்த்த உடைய பிராட்டியார் செம்பியன் மாதேவடிகளார், மேற்படி ஆலய நந்தவனப் புறமாக நிலம் கொடையளித்ததைக் குறிக்கிறது.

10-11 ஆம் நூற்றாண்டு, மன்னர் பெயர் சேதமடைந்த 14 ஆவது ஆட்சி ஆண்டு, கர்ப்பகிரகத்தின் மேற்குக் குமுதத்தில் உள்ள கல்வெட்டு உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரைமூர் நாட்டுத் திருக்குரங்காடுதுறை உடையார் கோயிலில் இரண்டு சந்திவிளக்கு எரிப்பதற்கு, நந்தாவிளக்குப் புறமாக நிலம் கொடையாக அளிக்கப்பட்டதைக்குறிக்கிறது.

13 ஆம் நூற்றாண்டு (குலோத்துங்க) சோழனின்  5 ஆம் ஆட்சி ஆண்டு அர்த்தமண்டப வடக்குச் சுவரிலுள்ள கல்வெட்டு திருக்குரங்காடு துறையுடைய மகாதேவர்க்கு விளக்கிட நிலம் கொடையளித்ததைக் குறிக்கிறது.

முதலாம் குலோத்துங்கனின் 3 ஆம் ஆட்சியாண்டு பொயு 1073, கருவறை மேற்குச் சுவரில் உள்ள மிகவும் சிதைந்த கல்வெட்டு திருக்குரங்காடுதுறை மகாதேவர் கோயிலில் மூன்று திருமஞ்சனக் குடங்களும். மூன்று சந்தி விளக்குகளும் எரிக்க வகை செய்ததைக் குறிக்கிறது.  

முதலாம் குலோத்துங்கனின் 44ஆவது ஆட்சி ஆண்டு பொயு 1114, கருவறை, அர்த்தமண்டப வடபுறப் பட்டிகையில் உள்ள கல்வெட்டு ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தைச் சேர்ந்த காநூர்க் கோட்டத்து அகையன் திரு அகத்தீஸ்வரன் ராஜமாணிக்க மூவேந்தவேளான் என்பவனுக்குத், திருக் குரங்காடுதுறைக் கோயிலைச் சார்ந்த நிலம் விற்றுக் கொடுக்கப்படுகிறது. அந் நிலத்தினைத் திருத்தி, வேலி முதலியன இட்டுத் திருநந்தவானம் செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகிறது என்ற செய்தியை இக்கல்வெட்டு பதிவு செய்கின்றது.

முதலாம் குலோத்துங்கனின் 28 ஆவது ஆட்சியாண்டு, பொயு 1098, கருவறையின் மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு உய்யக்கொண்ட சோழவள நாட்டுத் திரைமூர் நாட்டுத் திருக்குரங்காடுதுறை மகாதேவர்க்கு அம்பர் நாட்டு அம்பரூருடையான் என்பார். மேற்படி கோயில் சிலப்பிராமணர் வசம், திருநந்தாவிளக்கு ஒன்று கோயிலில் எரிப்பதற்காக இரண்டு கழஞ்சு பொன் கொடையாக அளித்ததைக் குறிக்கிறது.

சோழமன்னர் ராஜகேசரியின் 3 ஆம் ஆட்சி ஆண்டு பொயு 10 ஆம் நூற்றாண்டு, அர்த்தமண்டப தெற்கு ஜகதியில் உள்ள கல்வெட்டு தென்கரைத் திரைமூர் நாட்டுத் திருக்குரங்காடுதுறை மகாதேவர்க்குப் பராந்தகத் தெரிஞ்ச கைக்கோளர் படையைச் சார்ந்த அசுவத்தான் என்பான் பத்து மா நிலம் கொடையளித்ததைக் குறிக்கிறது.

முதலாம் குலோத்துங்க சோழனின் 5 ஆம் ஆட்சியாண்டு, பொயு 1075, மகாமண்டபத் தென்புறச் சுவரிலுள்ள கல்வெட்டு, உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரைமூர்நாட்டுப் பள்ளியூரான விக்கிரம சோழச் சதுர்வேதிமங்கலத்தைச் சார்ந்த யக்ஞ நாராயணபட்டன் என்பார் திருக்குரங்காடுதுறை மகாதேவர் கோயிலில் நந்தாவிளக்கு ஒன்று எரிக்கக் கொடையளித்ததைக் குறிக்கிறது.

முதலாம் குலோத்துங்க சோழனின், பொயு 11 ஆம் நூற்றாண்டு மகாமண்டபத் தென் சுவரில் உள்ள கல்வெட்டு கோயிலில் நந்தாவிளக்கு எரிக்க ஏழரை மாநிலம் கொடையாக அளிக்கப்பட்ட தைக் குறிக்கிறது.

12 ஆம் நூற்றாண்டு இராஜராஜ சோழனின் 16 ஆவது ஆட்சியாண்டு மகாமண்டபத்தின் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரைமூர் நாட்டு உடையார் திருக்குரங்காடு துறை உடையார் கோயிற்கு அதன் அதிகாரி வேளான் விச்சாதிரனான செயங் கொண்ட சோழ பல்லவரையனுக்கு 7 மாநிலம் விற்றுக் குடுத்ததைக் குறிக்கிறது. காசு இருபதும் அளிக்கப்பட்டது.

வீரராஜேந்திர தேவரின் 2 ஆம் ஆட்சியாண்டு பொயு 1065, மகாமண்டப தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு கோயில் பொலிஊட்டுக்கு 14 காசுகள் அளிக்கப்பட்டதைக் குறிக்கிறது. கஞ் சாறன் திருநட்டப் பெருமாளான வந்தொண்ட சாணாலையன் என்பார் இக்குகை செய்வித்ததாகக் குறிக்கப்பட்டுள்ளது.

முதலாம் குலோத்துங்க சோழனின் 10 ஆம் ஆட்சியாண்டு பொயு 1085, மகாமண்டபத் தென்பறச் சுவரிலுள்ள கல்வெட்டு, கோயில் திருமந்திரப் போநகத்துக்கும். திருமஞ்சனத்துக்கும். திருப்பள்ளித்தாமத்துக்கும் கொடை அளிக்கப்பட்டதைக் குறிக்கிறது.

பொயு 10-11 ஆம் நூற்றாண்டு கருவறை மேற்குச் சுவரில் உள்ள மிகச்சிதைந்த கல்வெட்டு விளக்கிட்டதைக் குறிப்பதாகத் தெரிகிறது.  

சோழ அரசர் ராஜகேசரி பொயு 10-11 ஆம் நூற்றாண்டு கருவறையின் மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு திருக்குரங்காடுதுறை மகாதேவருக்கு ஆபரணங்களைச் செய்தளித்ததைக் குறிப்பதாகத் தெரிகிறது. கல்வெட்டு பெரிதும் சிதைந்து விட்டது. (இதுவும் மருத்துவக்குடி சபையார் செய்ததாக இருக்கலாம் ஊர்க்கல்வெட்டு ஊர்க்கல்வெட்டு எண் 15 பார்க்க.)

மன்னர் யார் மற்றும் ஆட்சியாண்டு அறிய இயலாத கருவறையின் வடக்குச் கவரில் மிகவும் சிதைந்த கல்வெட்டின் ரு பகுதியே உள்ளது. கோயில் சிவப்பிராமணர் வசம் நிலம் கொடையாக அளிக்கப்பட்டதைக் குறிக்கிறது. அதுகொண்டு, சிறுகாலைச் சந்தியும், திருமந்திரப்போனகமும் நிறைவேற்றி வைக்க வகை செய்ததைக் குறிக்கிறது.

மன்னர் யார் மற்றும் ஆட்சியாண்டு அறிய இயலாத கருவறையின் வடக்குச் கவரில் மிகவும் சிதைந்த நிலையில் உள்ள கல்வெட்டு பாண்டியூர் தேவன் திருவைய்யாற்றுப் பிச்சன் என்பானுக்கு மேற்படி கோயில் நிமந்தங்களுக்காக நிலம் விற்றுக் குடுத்ததைக் குறிக்கிறது.

மன்னர் யார் மற்றும் ஆட்சியாண்டு அறிய இயலாத அர்த்தமண்டப வடபுற ஜகதியில் மிகவும் சிதைந்த நிலையில் உள்ள கல்வெட்டு, நிலத்தின் எல்லைகளைக் குறிப்பதாக உள்ளது.

மன்னர் யார் மற்றும் ஆட்சியாண்டு அறிய இயலாத அர்த்தமண்டப வடக்குக் குமுதத்தில்  மிகவும் சிதைந்த நிலையில் உள்ள கல்வெட்டு ஒன்றரை மாநிலம் கொடையாக அளிக்கப்பட்டதை குறிப்பதாக உள்ளது. 

Rajaraja-I’s 9th reign year inscription records the gift of 10 Sei ( ma.?) land purchased from the temple Sabhai for burning of one perpetual lamp and 9 ordinary lamps by Sattan Aruvattaran od Pirantaka Therinja Kaikolar, a regiment of the King. 

Kulothunga Chozha-II’s 10th reign year inscription records the endowment of supplying 6 pots of river water for thirumanjanam / sacred path and bringing flowers for garland from nandhavanam by Muppiral Dakshinamurti Bhattar. For the same Paddy of 10 kalam and Nandavanam measuring 30 kuzhi were gifted. At the end of the inscription, it records that some Siva Brahmins agreed to burn 4 lamps during the service, and for the same, a gift was received from Pichchadeva Bhatta a resident of the place. The Owner of the land purchased by the donor is said to have been a resident of Vikrama Chozha Chaturvedi Mangalam, which is called a Thiruppallipadai – the last resting place of – obviously Vikrama Chozha.

Ref    : 
1. Annual Report on South Indian Epigraphy Year 1907.
2. குடந்தைக் கல்வெட்டுகள்

Maha Kumbhabhishekam was conducted on 28th April 1955 and 21st April 2000. 


LEGENDS
This place is called Then Kurangaduthurai since it is located on the south side of river Kaveri. It is believed that Sugriva worshiped Lord Shiva of this Then Kurangaduthurai and Vali worshiped Lord Shiva of Vada Kurangaduthurai temple.

It is believed that Suriyan worshiped Lord Shiva of this temple. Sun Rays fall on moolavar on 3 days ie the 5th to the 7th of the Tamil month Chithirai ( April ).

POOJAS AND CELEBRATIONS
Apart from Regular poojas, special poojas are conducted on Vinayagar Chathurthi in the month Avani ( Aug – Sept ), Annabhishekam in the month Aippasi ( Oct- November ), Thiruvathirai in the month Margazhi ( Nov – Dec ), Maha Shivaratri in the month Masi ( Feb – March ) and every month pradosam.

TEMPLE TIMINGS
The temple will be kept open between 07.00 hrs to 12.00 hrs and 16.30 hrs to 20.30 hrs.

CONTACT DETAILS :  
Mobile numbers +91 94434 63119 & + 91 94424 25809 may be contacted for further details.

HOW TO REACH : 
The temple is in Aduthurai on the bus route from Kumbakonam to Mayiladuthurai. Town buses are available from Kumbakonam.
The temple is at the beginning of Aduthurai from Kumbakonam before Bus stand.  There is a Small Murugan temple – right turn – walk about 200 meters - Opposite Kumaraguru Dasa Melnilaipalli. ( School ).
The Place Aduthurai is 4 KM from Thiruvidaimaruthur, 13 KM from Kumbakonam, 22 KM from Mayiladuthurai, 56 KM from Thanjavur, and 300 KM from Chennai.
The nearest railway Junction is Kumbakonam.

LOCATION OF THE TEMPLE: CLICK HERE






--- OM SHIVAYA NAMA ---

4 comments:

  1. Thenkurangaduthursi visit write is v v good contact no same?? What time temple opens. plans to visit from Kumbakonamstay siva chennai93

    ReplyDelete
  2. Ji Iam touti g Padalpetra sivasthalangalso250+ over leftover Thenkurangadithurai, Thiru Pullamangai& Penuperunthurai. Gurukkal Contact no pl stay@ kumbakonam. Iam from Chennai 93 sivasankar

    ReplyDelete
    Replies
    1. When you are going please get the same and pass on to me... Will update the same..

      Delete