Tuesday, 4 February 2025

Stoneage Astronomy Stone Arrangements/ பெருங்கற்கால வானியல் கல் அமைப்புகள் மற்றும் ஈம சின்னங்கள், புரசடை உடைப்பு/Purasadai Udaippu, காளையார் கோயில், Sivaganga District/சிவகங்கை மாவட்டம், Tamil Nadu.

கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கத்தினரால் 2024, டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அன்று ஏற்பாடு செய்யப்பட்ட காரைக்குடி மரபு நடையின் ஒருபகுதியே சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே உள்ள இந்த புரசடை உடைப்பு என்ற இடத்தில்  அமைந்துள்ள பெருங்கற்கால வானவியல் கல் அமைப்புகள் மற்றும் ஈமச்சின்னங்களின் பதிவு. . 


The visit to this Purasadai Udaippu Astronomy Stone arrangement, was a part of Karaikudi Heritage Walk, on 14th December 2024, organised by Kumbakonam Vattara Varalatru Aayvu Sangam. This original article in Tamil was written by Mr. Bala Bharathi Sir. I extend my sincere thanks for explaining to us, even standing in the heavy rain

This astronomical calendar was created with four stones, installed by calculating the movement of the sun from South to North and North to South, depending on the inclination of the earth. The Sun moves from South to North from 21 December to 21 June, called Uttarayana, and again from North to South from 21 June to 21 December, called Dakshinayana. This helps to calculate the weather and climate conditions to decide on manufacturing and shifting to various places through land and sea.


பெருங்கற்காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள், இரும்பு பொருட்கள், அபூர்வ கல் ஆபரணங்கள், ஆகியவைகளின் உற்பத்தியாளர்களாகவும், அவற்றை உலக சந்தைக்கு கொண்டு செல்ல சிறந்த வணிகர்களாகவும், கடலோடிகளாகவும் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் நமக்கு கிடைக்கின்றன. அவ் வணிகத்திற்கு ஏற்ற காலத்தையும், பருவத்தையும் துள்ளியமாக அறிய தங்களுக்கென நாட்காட்டியை உருவாக்கினர். இந்நாட்காட்டி சூரியனின் நகர்வைக் கொண்டே கணிக்கப்பட்டது. அவ்வாறு அமைக்கப்பட்ட நாட்காட்டி கற்கள் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே புரசடை உடைப்பு என்ற பகுதியில், பெருங்கற்கால ஈம சின்னங்களுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ளதை சமீப காலத்தில் அப்பகுதி ஆய்வாளர் திரு K ரமேஷ் மற்றும் திரு பாலபாரதி அவர்களாலும் வெளி உலகத்திற்கு அடையாளப் படுத்தப்பட்டது.

சூரியனின் வட தென் செலவுகள்
சூரியன் தினமும் கிழக்கு திசையில் உதிக்கும். ஆனால், சூரியன் தினமும் ஒரே புள்ளியில் உதிக்காமல் பூமியின் சாய்வுக்கு ஏற்ப ஆறுமாதம் தெற்கு வடக்காகவும், ஆறுமாதம் வடக்கிலிருந்து தெற்காக உதிக்கும். பூமியின் அச்சாய்வு கோணத்தை துள்ளியமாக கணக்கிட்டு ஒரு வட்ட வடிவ கல் நிலையாகவும் அதன் எதிரே பூமியின் சாய்வு கோணத்தில் மூன்று கற்கள் அமைக்கப்பட்டது தான் இந்த நாட்காட்டி.
 
ஒவ்வொரு நாளும் உதிக்கும் புள்ளி மாறிக்கொண்டே இருக்கும். டிசம்பர் 21/22ஆம் தேதி நமக்கு வலது கோடியில் அதாவது தென்கிழக்கே உதிக்கும் சூரியன் அடுத்தடுத்த நாள்களில் உதிக்கும் போது இடதுபுறமாக நகர்ந்து கொண்டே வந்து மார்ச 21ஆம் தேதி இப்புள்ளி சரியான கிழக்கில் அமையும். இதற்கு ஆகும் காலம் மூன்று மாதங்கள். பிறகு மீண்டும் இவ்வுதிக்கும் புள்ளி நமக்கு இடதுபுறமாக அதாவது வடக்கு நோக்கி நகரந்துக் கொண்டே வந்து ஜூன் 21 அன்று வடகிழக்கேயுள்ள இடது கோடியை அடையும். இதற்கு மேலும் மூன்று மாதங்கள் ஆகிறது. டிசம்பர் 21 அன்று வடக்கே பயணத்தை தொடங்கி ஆறு மாதங்களில் ஜூன் 21 அன்று சூரியன் தனது வட பயணத்தை முடித்துக் கொள்கிறது. இதையே வட செலவு (உத்தராயணம்) என்கிறோம். மீண்டும் ஜூன் 21 இல் தெற்கு நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறது. மூன்று மாதங்கள் கழித்து செப்டம்பர் 21 அன்று சரியாகக கிழக்கே உதிக்கும். மீண்டும் உதிக்கும் புள்ளி தெற்கே நகர ஆரம்பித்து டிசம்பர் 21 அன்று தென்கோடிக்கு வந்து சேரும். இதையே தென்செலவு (தட்சிணாயணம்) என்கிறோம். வடசெலவுக்கும் தென்செலவுக்கும் தலா ஆறு மாதங்கள் என ஓர் ஆண்டின் சூரியனின் பயணம் அமைகிறது. இங்கு ஒரு செய்தியைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உண்மையில் சூரியன் தெற்கு, வடக்கே பயணிப்பதில்லை. உதிக்கும் புள்ளிகளை ஓர் ஆண்டு முழுவதும் நோக்கும் போது அவ்வாறு தெற்கு வடக்கே பயணிப்பதுப் போலத் தெரியும்.

இந்நாட்காட்டியை கொண்டே காலம் மற்றும் பருவம் ஆகியவற்றை பெருங்கற்கால மக்கள் கணித்து அதற்கு ஏற்ப அந்நாட்காட்டியை உற்பத்தி, வணிகம் மற்றும் நிலம் & கடல் பயணங்களுக்கு உபயோகப்படுத்திக் கொண்டனர்.


கணக்கீடு
சரியான கிழக்கில் உள்ள கல்லுக்கு இடது, வலது புறங்களில் கற்கள் மையக் கல்லுடன் ஏற்படுத்தும் கோணத்தை கணக்கிடுவோம்.

PC & Calculations  
கா.பாலகிருட்டிணன் (பாலா பாரதி) M.Sc., M.Ed., DIAE..  

LOCATION OF THE ASTRONOMY STONE ARRANGEMENT: CLICK HERE









--- OM SHIVAYA NAMA---

No comments:

Post a Comment